சனி, நவம்பர் 17, 2007

சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்

சென்ற மாதம் ரகுமானின் அழகிய தமிழ் மகன் பாடல்கள் வெளிவந்திருந்தாலும், அதனை மதிப்பீடு செய்ய இயலவில்லை. ஆடியோ சி.டியே பதினைந்து நாட்கள் கழித்து தான் கைக்கு கிடைத்தது. அதன் பிறகு அதனை நானகைந்து முறைகளுக்கு மேல் கேட்க முடியவில்லை. நேரம் கிடைக்கவில்லை என்ற அர்த்தம் இல்லை. கேட்பதற்கு சுவாரசியமாக இல்லை; இரண்டு பாடல்களைத் தவிர. ஆனால் அவ்விரண்டு பாடல்களைத் தவிர, மிக ஆச்சர்யப்படும் விதத்தில், இன்னும் மூன்று பாடல்கள் மிகவும் பிடித்துப் போயின. அவற்றின் பட்டியல். இவை சிறிது பழைய பாடல்களும் கூட. நீங்கள் ஏற்கனவே கேட்டிருக்க 99% வாய்ப்பிருக்கிறது.

1. அழகு குட்டி செல்லம்

படம்: சத்தம் போடாதே
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: சங்கர் மகாதேவன்

இயக்குநர் வசந்த்தின் படத்தில் பாடல்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆசை, நேருக்கு நேர். ரிதம் முதலிய படங்களைக் குறிப்பிடலாம். சாதாரண தேவாவையே, நல்ல பாடல்கள் இயற்றவைத்தவர் (அவை பிற மொழிப் பாடல்களின் நகல்களாக இருந்தாலுமே). ஆனால் இப்படத்தின் பாடல்களைப் பற்றி பெரிய எதிர்ப்பார்ப்பு எனக்கு எதுவும் இல்லை. காரணம் யுவன் சங்கர் ராஜா. யுவன் இவ்வருடத்தில் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துவிட்டார் என்று நினைக்கிறேன். அவரின் சமீபத்திய படங்களில் ஒரு பாடல் அல்லது இரு பாடல்கள் மட்டுமே சிறப்பாகவும் மற்றவை மிக சாதாரணமாகவும் அமைந்திருந்தது. வேல் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்த படம். ஆதலால் ஓர் தயக்கம் இருந்தது.

'அழகு குட்டி செல்லம்
உனை அள்ளித் தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
என் நெஞ்சம் உடைந்து போனேன்

.....'

என்று இப்பாடல் ஒலிக்க ஆரம்பித்த சில நொடிகளுக்கு எவ்விதமான நல்ல எண்ணமும் ஏற்படவில்லை. ஆனால் 00:36-ல்

அம்மு நீ என் மொம்மு நீ
மம்மு நீ என் மின்மினி

உனக்கு தெரிந்த மொழியிலே
எனக்கு பேசத் தெரியலை

எனக்குத் தெரிந்த பாஷை பேச
உனக்குத் தெரியவில்லை

இருந்தும் நமக்குள்
இது என்ன
புதுப் பேச்சு
இதயம் பேச
எதற்கிந்த ஆராய்ச்சி

வரிகளின் ராகமும், அதன் பின்னணியில் மெல்லிய 'கொட்டு' போன்ற இசையும், எனது எண்ணத்தை முழுவதுமாக மாற்றின. அதுவும் சங்கர் மகாதேவன் 'இருந்தும் நமக்குள் இது என்ன', என்று குரலை உயர்த்தி பாடுவதை கேட்பதற்கே மிகவும் இனிமையாக இருக்கிறது.

இது பாதி தான். சரணத்தில், 2:29-ல்

எந்த நாட்டைப்
பிடித்து விட்டாய்
இப்படி ஓர்
அட்டினக்கால் தோரணை
தோரணை

வரிகளில் ராகமும், சங்கர் மகாதேவன் அதனை பாடிய விதமும் அற்புதம். அதனைத் தொடர்ந்து மீண்டும் அந்த மெல்லிய 'கொட்டுடன்', 'மஞ்சரிஞ்ச மஞ்சரிஞ்ச', என்று தொடர்வது மிக இனிமை.

மொத்தத்தில் யுவன் மற்றும் சங்கருக்கு ஓர் பெரிய சபாஷ். இதே படத்தில் இடம்பெற்றுள்ள, 'ஓ இந்த காதல் என்னும் பூதம் வந்து ஏன்', என்ற பாடலும் மிக சிறந்த பாடல். அது இன்னுமொரு 'துள்ளுவதோ இளமை' ('கண் முன்னே'), 7G ரெயின்போ காலனி ('நாம் வயதுக்கு வந்தோம்') வகை பாடல் போல் ஒலித்தாலும், சில இடங்களில் மிக அற்புதமாக வந்துள்ளது. முக்கியமாக அத்னன் சாமியின் குரல், இப்பாடலுக்கு பெரிய பலம். மிக அருமையாகப் பாடியுள்ளார்.

பல நாட்களாக, இப்பாடலில் இடம்பெற்ற 'காதலே காதலே நிம்மதி கொடுக்கின்றது' (00:25) வரிகளை என்னையுமறியாமல் உச்சரித்துக்கொண்டிருந்தேன்.


2. புத்தம் புது காத்து தான்


படம்: கண்ணாமூச்சி ஏனடா
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ், சங்கர் மகாதேவன்

ப்ரியா, தனது 'கண்ட நாள் முதல்' படத்தின் மூலமாக பலரையும் கவர்ந்தவர். அது மட்டுமல்லாமல், அப்படத்தின் பாடல்கள் மிகவும் பிரபலம். அவரது இசை ரசனையை, அப்படத்தின் பாடல்கள் மூலம் அறிய முடிந்தது. அப்படத்தின், 'மேற்கே மேற்கே', பாடல் எனக்கு எப்போதும் பிடித்த பாடல்களில் ஒன்று. எப்போது கேட்க வாய்ப்பு கிடைத்தாலும், 'Forward', செய்யாமல் கேட்பேன்.

அதே ப்ரியா + யுவன் கூட்டணி. அதன் காரணமாக, 'கண்ணாமூச்சி ஏனடா', படத்தின் பாடல்களை 'வேல்', போல் இருக்கும் என்று என்னால் கருத முடியவில்லை. முதல் பாடலில் இருந்து அனைத்துப் பாடல்களும் என்னைக் கவர்ந்தது. யுவனின் ஒரு பாடல், இரு பாடல் சூத்திரத்தை இப்படம், நீண்ட நாட்களுக்குப் பிறகு உடைத்துள்ளது. இப்படத்தில் மூன்று பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. அவற்றில் மிக மிகப் பிடித்த பாடல், 'புத்தம் புது காத்து தான்' பாடல். ஏன், இந்தப் பட்டியலில் எனக்கு மிகவும் பிடித்த பாடலே இது தான்.

என்னவொரு அற்புதமாக பாடல். பாடல் முழுவதுமே.

'ஹே ஹே', என்று ஒலிக்கும் ஆரம்பம் முதலே. இது தான், அழகு; அது தான் அழகு என்று சொல்ல முடியாது. பாடல் முழுவதுமே இனிமை. சங்கர் மகாதேவனும், விஜய் ஜேசுதாஸ் இருவருமே அற்புதமாக பாடியிருக்கிறார்கள்.

புத்தம் புது காத்து தான்
என்னை வாவான்னு அழைக்கிறதே
ஒத்து ஊதும் நெல்லு தான்
அட ஆமான்னு சிரிக்குறதே...

என்று ஆரம்ப வரிகளிலேயே ராகம் அழகு.

அதனைத் தொடர்ந்து, 0:27-ல் விஜய் பாடியுள்ள இவ்வரிகள் தான் என்னை மிக மிகக் கவர்ந்தவை.

தென்னம் இளம் நீரால்
என் வாயெல்லாம் ஈரம்
எட்டு வச்சு எட்டு வச்சு
தேரோடும் ஊராகும்

அற்புதம்! மிகவும் உணச்சிவயப்படச் செய்த வரிகளா?. என்ன சொல்வது? நல்ல இசை கேட்ட ஆனந்தப் பெருக்கு என்பார்களே. அது! யுவனுக்கு நன்றி.

இது போதாதென்று, அதனைத் தொடர்ந்து, சங்கர் மகாதேவன் தன் பங்கிற்கு,

சாமி வரும் தேரிலே
சந்தனங்கள் மார்பிலே
ஹே
சாற்றுகிற போதிலே
இங்கு யாருக்கும் யாரோடும்
எப்போதும் பகையில்லையே
ஹே
புத்தம் புது....

நீண்ட நாட்களுக்குப் பிறகு, பல்லவி முழுவதுமே சிறப்பாக அமைந்த அற்புதமான பாடலை கேட்கிறேன். யுவனுக்கு பாராட்டுக்கள். சென்ற பதிவில், சங்கர் மகாதேவனை, யாரும் சரியாக பயன்படுத்துவதில்லை என்று குறைபட்டிருந்தேன். அதைப் போக்கும் விதமாக, சென்ற பாடல், இந்த பாடல், மற்றும் அடுத்த பாடல் என மூன்று அற்புதமான பாடல்கள் சங்கருக்கு கிடைத்திருக்கிறது. அதுவும் யுவனிடமிருந்து. 2:27-ல் ஒலிக்கும் இசை, 'அறிந்தும் அறியாமலும்', படத்தின் 'ஏலே ஏலே', பாடலின் நடுவில் வரும் இசையை ஒத்திருக்கிறது.

இப்பாடலை எத்தனை முறை கேட்டிருக்கிறேன என்ற கணக்கே இல்லை.

3. மேகம் மேகம்

படம்: கண்ணாமூச்சி ஏனடா
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: ஹரிச்சரண், சுவேதா

இப்பாடலும் கண்ணாமூச்சி ஏனடா படத்திலிருந்து தான். பொதுவாக, Shuffle-ல் வைத்து பாடல்கள் கேட்கும் வழக்கம் எனக்கிருந்தாலும், இப்படத்தின் பாடல்கள் ஒன்று வந்தாலும், இந்தப் படத்தில் இம்மூன்று பாடல்களை முழுவதுமாக கேட்டு விட்டு தான் அடுத்த பாடலுக்குத் தாவுகிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு, இப்படி ஒரே படத்தில் மூன்று, நான்கு பாடல்கள் பிடித்திருக்கிறது.

பாடலின் ஆரம்பம், ஏதோ ஓர் ஹிந்தி பாடலினைப் போல் தான் ஒலிக்கிறது. ஆனால் அதே இசை 00:11-ல் மிக அற்புதமாக மாறுகிறது. சுவேதா மிக அருமையாக பாடியிருக்கிறார். கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கிறது. முதலாம் சரணத்தில் பாட ஆரம்பித்து, சரணம் முழுவதுமே இவரே பாடுவதற்கு கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. இவரது குரல், சுஜாதாவின் குரலை ஞாபகப்படுத்துகிறது.

பாதையின் ஓரத்தில் நடந்து
நானும் போகையில்
முகத்தை காட்ட மறுத்திடும்
ஒற்றைக் குயிலும் கூவுதே
காலையில் எழுந்ததும்
ஓடிச்சென்று பார்க்கிறேன்
நேற்று பார்த்த அணில்களின்
ஆட்டம் இனறும் தொடருதே
முதன் முதலில் வாழ்வில் தோன்றும்
வண்ணக்குழப்பம் வானவில் தானா
நதிகளில் வாழ்ந்தே பழகி
கடலைக் கண்டால் தாவிடும் மீனா
போதும் போதும் என்று உள்ளம்
எச்சரிக்கை செய்யும் போதும்
வேண்டும் வேண்டும் என்று கேட்கும்
மனதின் உள்ளே இன்னோர் உள்ளம்

சரணம் முழுவதும் வரும் ராகமும், சுவேதாவின் குரலும் மிக இனிமை. அதே போல், சுவேதாவின் குரலில், பல்லவி (2:42; 4:16) இன்னும் இதமாக இருக்கிறது. 'கூவுதே', என்று உச்சரிக்கும் இடமும், 'சென்று பார்க்கிறேன்', வார்த்தைகள் புன்சிரிப்புடன் உச்சரிப்பதும், 'வானவில் தானா', வரிகளை உச்சரிக்கும் இடமும், 'போதும் போதும்', வரிகளை உச்சரிக்கும் இடமும் இனிமையோ இனிமை.

முதலாம சரணத்திற்கு முன்பு வரும் (1:28) இசையும், இரண்டாம் சரணத்திற்கு முன்பு வரும் கிடார் இசையும் அருமை.

4:38-ல் சுவேதாவின் குரலுடன், குழுவினரின் குரலை சேர்த்து, 'நெஞ்சில் ராட்டினம், எனைச் சுற்றித்தான் தூக்க', ஒலிக்க வைத்திருப்பது, மிக அழகு. அற்புதமான பாடல்.

4. சஞ்சாரம் செய்யும் கண்கள்

படம்: கண்ணாமூச்சி ஏனடா
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: சங்கர் மகாதேவன், மதுஸ்ரீ

இன்னுமொரு நல்ல பாடல்; இப்படத்திலிருந்து. இப்பாடலில் மிக அழகானது என்று இரண்டு விசயங்களைக் குறிப்பிடுவேன்.

1. முதலாம் சரணத்திற்கு முன்பு, 1:03 முதல் 1:24 வரை ஒலிக்கும், வயலினிசை. இனிமையோ இனிமை. யுவனுக்கு மட்டும் எப்படி இவ்வளவு சிறப்பான வயலினிசைகள் அமைகின்றன.

2. மதுஸ்ரீயின் குரல். எனக்கு மதுஸ்ரீயின் குரல், சில பாடல்களில் முற்றிலும் பிடிக்கவில்லை. அவை அனைத்துமே ரகுமானுக்கு பாடியவை. மயிலிறகே, வாஜி வாஜி பாடல்கள் உதாரணம். ஆனால் அவர் பிற பாடகர்களுக்குப் பாடிய பாடல்கள் அனைத்துமே அற்புதமானவை. அவரது குரல், அப்பாடல்களுக்கு வளம் சேர்த்தவை. உதாரணம். ஜி படத்தில் இடம் பெற்ற 'டிங் டாங் கோயில்' பாடல், 'பீமா' படத்தில் இடம் பெற்ற 'ரகசிய கனவுகள்', பாடல். 'ரகசிய கனவுகள்', பாடலில் அவரது குரல் அவ்வளவு அற்புதமாக இருக்கும். அதுவும், 3:52-ல் வரும்

'எனது இரவினில் கசிகிற
நிலவொளி நீயே
படர்வாயே

நெருங்குவதாலே
நொறிங்கி விடாது
இருபது வருடம்'

இடத்தில் அவரது குரல், வாவ்! அதே போல், இப்பாடலுக்கும் இவரது குரல் வளம் சேர்த்துள்ளது. மற்ற இரு பாடல்களை போலவே, இப்பாடலிலும் யுவனின் இசை அற்புதம். சில இடங்களில் ராகம் மிக அருமை. 1:55-ல் வரும் இவ்வரிகளை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

'நதிவோடிட நீ அங்கே
நான் இங்கே என
நின்று நின்று விட

படகாகிடும் பார்வைகள்
ஒன்றே சேர்க்காதோ?

5. கேளாமல் கையிலே

படம்: அழகிய தமிழ் மகன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள்: சைந்தவி, ஸ்ரீராம் பார்த்தசாரதி

இப்படத்தின் பாடல்கள் மேல் ஆரம்பத்திலிருந்தே எவ்விதமான எதிர்பார்ப்புமில்லை எனக்கு. காரணம் விஜய் படம் என்பதால். அதனை உறுதி செய்வது போல், 'மதுரைக்குப் போகாதடி', 'வலையப்பட்டி தவிலே', 'மர்லின் மன்றோ', பாடல்களும் அமைந்தன. விதிவிலக்காக, 'எல்லா புகழும்', பாடலும், 'கேளாமலே கையிலே', பாடலும் அமைந்துள்ளன. ஆனால் இப்பாடல் தான் படத்தின் ஒரே சிறந்த பாடல்.

சில இடங்களில் ராகமும், வரிகளும் ஒத்திசைக்கவில்லை. உதாரணத்திற்கு, 3:59-ல்

'பார்வை ஒன்றால் உனை அள்ளி
என் கண்ணின் சிறையில் அடைப்பேன்
அதில் நிரந்தமாய நீ இருக்க
இமைகள் வேண்டும் என்பேன்'

குறிப்பிடலாம். கேட்பதற்கு இனிமையாக இல்லை.

ஆனால், சில இடங்களில், அது மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

'கேளாமல் கையிலே', என்று சைந்தவி பாடும் அனைத்து இடங்களுமே இனிமையாக இருக்கின்றன. ஆரம்பத்தில் அவர் 'கேளாமல்', என்று பாடியபிறகு, வரும் வயலின் இசையும், அதனைத் தொடர்ந்து, 'கேட்டு ரசித்த பாடலொன்றை', என்று மீண்டும் பாடுவதும் நன்று.

அதே, 'கேளாமல்'-ஐ, 1:42-ல் சிறிது வித்தியாசப்படுத்தி பாடுவதும், 3:25-3:51 வரை குழுவினருடன் இணைந்து பாடுவதும் மிக மிக அருமை. அற்புதம்!

அதே போல்,

'மேற்கு திசையை நோக்கி நடந்தால்
இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா' ,என்ற இடத்தில் ராகம் மிகவும் அற்புதம்.

இப்படத்தின் பாடல்கள் மீது எனக்கு எதிர்ப்பார்ப்பு எதுவும் இல்லையென்றாலுமே, ஒரு சில பாடல்கள் இந்த அளவிற்கு மோசமாக இருக்கும் என்று எண்ணிப் பார்க்கவில்லை. அதிலும், மர்லின் மன்றோ பாடலில் வரும் பெண் குரலும், அதன் ராகமும் சுத்தம்!

ஹே சாட்டர்டே நைட்
பார்ட்டிக்கு போகலாம்
வாறியா?

ஆண்டவா? என்ன குரல் இது; அது பாடப்பட்ட விதம்! சில யுவன் சங்கர் பாடல்களில் (செல்வராகவன் படங்களில்) வரும் பெண் குரல் போல் ஒலிக்கிறது. ரகுமான் சார்! யுவன் ('கற்றது தமிழ்', 'கண்ணாமூச்சி ஏனடா', 'சத்தம் போடாதே'), ஒரு பக்கம் அடிப் பின்னியெடுத்துக் கொண்டிருக்கும் போது, ரகுமான் இது போன்ற பாடல்கள் தருவது மிகவும் வருத்தம்.

வியாழன், அக்டோபர் 11, 2007

தேவையற்ற ஓர் பதிவு

பொதுவாக, எனது பின்னூட்டத்தை பதிவாக எழுதியதில்லை (இவர் பெரிய மேதை). பதிவர் ஒருவரின் பதிவிற்கு பின்னூட்டமிட ஆரம்பித்த பிறகு அது பெரியதாக செல்லவதை தாமதாக உணர்ந்து அதனை வேறு வழியில்லாமலும், இதனால் எனக்கு மற்ற தமிழ்மணக் குழுவினரிடமிருந்து பலத்த அடி விழும்; அதற்கு பின்னொரு காலத்தில் ஆதாரம் வேண்டும் என்ற காரணத்தினாலும் (அடிக்கிறவன் வீரன் இல்லை. எவ்வளவு அடி கொடுத்தாலும் தாங்கிட்டு இருக்கான் பார்த்தியா அவன் தான் வீரன் :)) அதனை இங்கே பதிகிறேன். தாமதாக உணர்ந்த காரணத்தினால் இது பின்னூட்டம் போல் இல்லாமாலும், பதிவினைப் போல் இல்லாமலும் இருப்பதை உணர முடிகிறது.

மேலும் நான் ஏற்கனவே இதனைப் பற்றி ஒரு வருடத்திற்கு முன்பாக என்னுடைய பதிவொன்றில் மேலோட்டமாக தொட்டு விட்டு சென்றிருந்தேன்.

பின்னணி தெரிய முதலில் மலர்கள் பதிவினைப் படிக்கவும்,

அவரின் பதிவிலிருந்து நான் புரிந்து கொண்டவை.

1. பெண்களுக்கு இன்னும் - ஆண்கள் போல் - சுதந்திரம் வேண்டும்
2. ஆண்கள் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். (ஒழுக்கம் என்பது பெண்களுக்கான மட்டுமே என்பதை மீறி, அதை ஆண்களுக்கும் புகுத்த வேண்டும்)

ஏன் நீங்கள் ஒழுக்கம் கெட்ட ஆண்களை மாத்திரம் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்கிறீர்கள்? ஒழுக்கத்தினைப் போற்றும் ஆண்களும் சரிக்கு சமமாய் இருக்கிறார்கள். நீ பெரிய ஒழுக்கமுள்ளவனாக்கும்; அதை இங்க சொல்லுறீயாக்கும் என்று நினைக்க வேண்டாம். நானே தான் சரிக்கு சமமாய் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளேன். நீங்கள் எப்படி வேண்டுமாலும் என்னை எடுத்துக் கொள்ளலாம். மேலும், ஒழுக்கம் என்பது பெண்களிடம் ஆணின் நடத்தை / அல்லது ஆண்கள் விசயத்தில் பெண்ணின் நடத்தை என்று மட்டுமே பார்க்கப்பட வேண்டியதல்ல. அது பலவற்றை குறிக்கிறது.

1. பெற்றோரை மதித்தல் / காப்பாற்றுதல்
2. குடும்ப பொறுப்பினை உணர்ந்து நடந்து கொள்தல்
3. நேர்மையாக இருத்தல்; சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது
4. மற்றவர்களுக்கு தேவைப்படும் (அவர்களுக்கு) போது உதவுதல்
5. மனிதன் உட்பட மற்ற ஜீவ ராசிகளுக்கு தீங்கில்லாமல் வாழ்தல்
6. நல் எண்ணங்களைப் போதித்தல்
7. எதிர்பாலரை மதித்தல்

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆதலால் மற்ற பெண்களை போகப்பொருளாக நினைப்பவன் மட்டும் கெட்டவன் அல்ல. ஒருவரிடம் பணம் வாங்கிக் கொண்டு, அதனை இல்லை என்று மறுப்பவன் கூட ஒழுக்கம் கெட்டவன் தான். ஆனால் இங்கே எப்போதும் பெண்களிடம் முறையாக (மனதால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்!) நடப்பவன் / மது அருந்தாதவன் ஒழுக்கமுள்ளவன் என்றாகி விட்டது. இவ்விசயத்தில் ஒழுக்கமாக இருந்துவிட்டு, மற்ற விசயங்களில் அவன் தேர்ச்சியடையா விட்டாலும் அவன் ஒழுக்கம் கெட்டவன் தான்.

சரி, உங்களது பிரச்சினைக்கு வருகிறேன்.

1. ஆனால் அழகாக கவர்ச்சியாக உடையணிவது பெரிய தவறொன்றுமில்லை.

தவறில்லை தான். அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. எப்படி, உடற்பயிற்சி செய்து தனது உடற்கட்டை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்று ஓர் ஆண்மகன் ஆசைப்பட்டு, பிடிப்பான ஆடை அணிகிறானோ அது அது போல் தான் இதுவும். ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகளையும் பெண்கள் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். காரணம் - சமூகத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகள் (உங்கள் பாஷையில் ஒழுக்கமுள்ளவர்கள் - ஒழுக்கமற்றவர்கள் கலவை). மிக எளிமையாக, குனிந்த தலை நிமிராமல் செல்லும் பெண்களுக்கே நிறைய சிக்கல்கள் (முன்பு போல் மோசமில்லை).

இது போன்று உடையணிந்து வருபவர்களை - சில தெளிவானவர்கள் - சரி மற்றுமொரு பெண் என்று கண்டுகொள்ளாலாமல் போய் விடலாம். என்னைப் போன்றவர்கள் 360 கோணத்தில் தலையைத் திருப்பி பார்த்துக் கொண்டே நகர்ந்து விடலாம்; மற்ற ரகத்தினர் சீண்டலாம். ஆக நீங்கள் உங்களை இந்த மூன்று ரகத்தினருக்கும் ஏற்ற மாதிரி எப்படி வேண்டுமானாலும் அழகுபடுத்திக் கொள்ளலாம். விளைவுகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு. இங்கே 'நடந்து கொள்ள வேண்டும்' என்று கூறுவதெல்லாம் நீங்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று பெண்களுக்கு கட்டளை இடவில்லை. கவர்ச்சி என்பதே ஓர் ஆணோ அல்லது ஓர் பெண்ணோ எதிர்பாலை கவர்வதற்காக பயன்படுத்தும் ஆயுதம் தான். ஓர் மானை போல்; மயிலை போல். 'நான் மற்றவர்களை கவருமாறு உடையணிவேன். ஆனால் அவர்கள் ஓர் எல்லைக்குள் எனது கவர்ச்சியை ரசிக்க வேண்டும் என்பது சரியா? ஆனால் இது நடைமுறை சாத்தியமாகி இருக்கிறது.

2. நான் எளிமையாக உடையணிந்து இருப்பதால் மட்டும் சில பெரிய கடைகளுக்கு போகும் போது எவராவது "தவறுதலாக அணுகும்"

மற்றவர்கள் தவறாக நினைக்கிறார்கள் என்பதற்காக நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதும், உங்களுக்குப் பிடிக்காததை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

3. தனிமை, குடும்பத்தை விட்டு நீண்ட தொலைவில் பிரிந்திருப்பதாலான சுதந்திரம், கை நிறைய சம்பளம் என்று பல காரணங்கள் இருந்தாலும் இது நல்லதா, கெட்டதா என்று தெரியவில்லை.

தனிமையினால் கூட பெண்களுக்கு சிகரெட் பழக்கம் வரும் என்பது இப்போது தான் கேட்கிறேன். இதில் நல்லது என்பது எங்கிருந்து வரும் என்று தெரியவில்லை? பொருளாதாரம் முன்னேறி விடுமா? உடல் நலம் மேம்படுமா? சுற்றுச் சூழல் மேம்படுமா? தெரியவில்லை.

'நாமளும் செஞ்சு பார்த்தா என்ன என்ற எண்ணம் தான்', இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொருந்தும்.

சரி அப்படியானால், இப்போது புகைப்பிடிக்கும் பெண்கள், உங்களது கூற்றுப்படி, ஒழுக்கம் கெட்டவர்களாகி விடுவார்களா? அல்லது புகைப்பிடிக்கும் ஆண்கள் ஒழுக்கமுள்ளவர்களாகி விடுகிறார்களா?

4. நான் 4 நாள் சுற்றினாலோ, 4 தடவை பேசினாலோ போது எப்படிப்பட்ட பெண்களையும் மடக்கிவிடுவேன்" என்ற ஒன்றை நிறைய கேட்டிருக்கின்றேன்...

'பாரேன் இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்து... 'ஹவ் ஆர் யூ ரேகா',-ன்னு வந்து வழிவான்னு சொல்லும் பெண்கள் இருக்கிறார்களா இல்லையா? 'எனக்கு எத்தனை புரோபசல்ஸ் வந்திருக்கு தெரியுமா', என்று பெருமை பேசும் பெண்கள் இருக்கிறார்களா இல்லையா?. இது பெண்கள் ஹாஸ்டல் மிகவும் சாதாரணமாக பேசப்படும் விசயம் தானே?

எல்லாமே மனித குணம் தான்.

5. நானே கியர் வண்டி ஓட்டும் போது வண்டியைத் தொடக்கூடப் பயப்படும் ஒருவனை என்னால் எப்படி ரசிக்கமுடியும்?

இயல்பு தான். தவறொன்றும் இல்லை.

6. கலாச்சாரமென்பது பெண்களை மட்டும் சார்ந்த ஒரு நடப்பு என்பதால், பாதிப்புக்குள்ளாகுவது பெரும்பாலும் பெண்களாகவே உள்ளனர்...! இவை அனைத்தையும் ஒரு ஆண் செய்தால் பெரிதாக எடுத்துக்கொள்ளாது இந்த சமுதாயம்.., ஏன் பெண்களிடம் இந்த எதிர்பார்ப்பு..?

ஏனென்றால் (சில) ஆண்கள் ஆண்டாண்டுகாலமாக அப்படித்தான் இருந்து வருகிறார்கள். சமூகத்தின் அடிப்படையே பெண்கள் தான். பெண்களுக்கான கட்டுப்பாடுகள், பெரும்பாலும், தன் வீட்டுப் பெண்களை மற்ற ஆண்களிடமிருந்து பாதுகாப்பதற்கு இயற்றப்படுபவை தான் என்பது என் கருத்து. அது நல்ல எண்ணத்தில். சமயங்களில் அது கெட்டவர்கள் / அறியாமையில் வீழ்ந்தவர்களின் கையில் சிக்கி பெண்களுக்கு எதிராக மாறி விடுகிறது. அதற்காக தலிபான்களை நான் ஆதரிக்கிறேனா என்ன என்று கேட்காதீர்கள். அங்கு கல்வி கூட மறுக்கப்பட்டது. அது வேறு இது வேறு. உங்களால் மற்ற (தவறு செய்யும்) ஆண்களைத் தடுத்து, அடக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் இது போன்ற கட்டுப்பாடுகளை உடைத்து விட்டு பெண்கள் இஷ்டம் போல் இருக்கலாம்.

பெண் சுதந்திரம் (கல்வி, சொத்துரிமை, நண்பர்கள் வைத்துக் கொள்தல், பேச்சுரிமை, அரசியல், வேலை வாய்ப்பு) என்பது இப்போது இந்தியாவில் பெண்களுக்கு தேவையான அளவு உள்ளது. வீட்டிற்கு வீடு சிற்சில ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். அது நாட்டின் மீதான தவறல்ல.

சுதந்திரத்திற்கும், ஆடை மற்றும் ஆண்சார் சுதந்திரத்திற்கும் நிறைய வேறுபாடு உண்டு. இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

குறிப்பு: இது உங்களுக்கு எதிரான தனிப்பட்ட கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டாம். மேலும், இப்பதிவு பல பெண்களையும் / பெண்ணுரிமை காக்கும் சில ஆண்களையும் கோபமுறச் செய்தால் நான் ஆச்சர்யப்பட மாட்டேன்.

குறிப்பு எண் 2: தேவையற்ற ஓர் பதிவு என்று எனது பதிவிற்கு தான் பெயரிட்டுள்ளேன்.

செவ்வாய், அக்டோபர் 09, 2007

வெறுத்து ரசித்த பாடல்கள்

சில பாடல்களை கேட்டவுடனே பிடித்து விடும்; பல கேட்டுக்கொண்டே இருந்தால் பிடித்து விடும்; சில பாடல்கள் பார்த்த பிறகு பிடித்து விடும்; சில பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் / பார்த்தாலும் பிடிக்காது. அப்படி ஆயிரக்கணக்கான பாடல்கள் இருக்கின்றன.

ஆனால் சில பாடல்களை மிகவும் வெறுத்து, கேட்காமல் தவிர்த்து, சில மாதங்களுக்குப் பிறகு கேட்கும் போது, அதிசயமாக, மிகவும் பிடித்து விடும். அது போன்ற அனுபவம் எனக்கு நான்கைந்து முறை ஏற்பட்டுள்ளது. அதனைப் பட்டியலிட்டால் என்ன என்று தோன்றியது. இப்பாடல்கள் நீங்கள் மிகவும் வெறுத்த பாடல்களாக இருக்க வாய்ப்பிருக்கிறது. ஆதலால் உங்களுக்குப் பிடிக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

இதோ பட்டியல்.

1. யம்மாடி யாத்தாடி

பாடல்: வல்லவன்
பாடியவர்கள்: டி. ராஜேந்தர், சிம்பு, சிசித்ரா, மஹதி
இசை: யுவன் சங்கர் ராஜா

வல்லவன் படம் வருவதற்கு முன்பும், வந்த பிறகும் அப்படத்தில் மிகவும் வெறுத்த பாடல். சன் மியுசிக்கில் நேயர்கள், இப்பாடலை கேட்கும் போதெல்லாம் அவர்களைத் திட்டியிருக்கிறேன் (எவ்வளவு நல்ல பாடல்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் விட்டு விட்டு, எதற்காக இதனை கேட்கிறார்கள் என்று!). குத்து பாடல் என்பதனால் பிடித்திருக்கலாம் என்று நினைத்துக் கொள்வேன்.

ஆரம்பத்தில் வரும் நாதஸ்வரமும், டி.ஆர், சிசித்ராவின் குரலும் என்னை பலமுறை வெறுப்பேத்தியிருக்கின்றன.

இப்பாடலை ஒரு நான்கு மாதங்களுக்கு முன்பாக தற்செயலாக கேட்டுக் கொண்டிருந்தேன். இப்பாடலின் இரு பகுதிகள் என்னை மிகவும் கவர்ந்தது. ஒன்று மஹதியின் குரல். இப்பாடலில் மஹதியின் குரல் ஒளிந்திருந்தை நான் ஆரம்பத்தில் கவனிக்கத் தவறியிருந்தேன். பின்பு மீண்டும் கேட்ட போது, இப்பாடலில் கூட மஹதியின் குரல் நன்றாகயிருக்கிறது என்று வியந்தேன். ('நல்லவனே வல்லவனே', 'வெட்கம் எனும் வில்லனைத் தான்', 'வாழும் வரை வாழும் வரை'). ஏனோ மஹதியின் குரல் மீது எனக்கு அவர் பாட ஆரம்பத்திலிருந்தே ஒரு விதமான ஈர்ப்பு.

அதனை விட என்னை மிகவும் கவர்ந்த இன்னுமொரு இடம் சிம்புவும், சுசித்ராவும் பாடும் ஒரு சிறிய பகுதி.

அது 3:00-ல் டப்பாங்குத்து டிரம்ஸிலிருந்து, 3:08-ல் மிக அருமையாக நாதஸ்வரமாக மாறி, அதிலிருந்து 3:14-ல் மேளத்திற்கு மாறி, 3:26-ல் மீண்டும் டப்பாங்குத்திற்கு மாறுவது கேட்பதற்கு அற்புதமாக இருக்கும்.

அதனைத் தொடர்ந்து சிம்புவிம், சுசித்ரா மிகவும் அற்புதமாக பாடியிருப்பார்கள்.

ஆதாராமா அவதாரமா
ஆயிப்புட்ட நெஞ்சுக்குள்ள

உன்னை விட்டால் என்னை விடும்
உயிர்தானமா உள்ளுக்குள்ள

உன் வாசம் தான் என் மூச்சில் வீசும்
உயிருக்குள் உயிர் வாழுது

நம் பேரைத் தான் ஊரெல்லாம் பேசும்
ஊமைக்கும் மொழியானது

அற்புதமான ராகம். அருமையான குரல்கள். பின்பு தான் தெரிந்தது. அதனைப் பாடியது வேறு யாருமல்ல - சுசித்ரா தானென்று. சிம்புவும் நன்றாக பாடியிருக்கிறார். எவ்வளவு அருமையாக 'ஆதாரமா', 'உன்னை விட்டால்', 'உன் வாசம்', வரிகளைப் பாடியிருக்கிறார்கள். இப்பகுதிக்காக 3:00-லிருந்து பல நூறு முறைகளுக்கு மேல் கேட்டிருக்கின்றேன். அற்புதம்!

சுசித்ராவின் பாடல்கள் ஒன்று கூட பிடித்ததில்லை. அவரை டப்பாங்குத்து பாடல்களுக்கு மட்டும் பயன்படுத்துவதால், அவர் பாடிய பாடல்களுக்கென்று ஒரு முத்திரை இருக்கிறது. ஆனால் அவராலும் நன்றாக பாடமுடியும் என்பது இப்பாடலில் தான் நான் உணர்ந்து கொண்டேன். என்ன... யாரும் அவருக்கு அவ்வாறு பாடுவதற்கு வாய்ப்பு தான் கொடுப்பதில்லை.

இப்பாடலிலும் கூட இவ்விரண்டு வரிகளில் தான் நன்றாக பாடியிருப்பார். அதிலும் 'உயிர் வாழுது', என்ற இடத்திலேயே சுசித்ரா வழக்கமான சுருதியில் பாட ஆரம்பித்து விடுவார். அது 'நீதாண்டா நீதாண்டா ஜல்லிக் கட்டு', என்று மாறும் போது இன்னும் வெறுப்படைய வைக்கும்.

2. ஏஞ்சல் வந்தாளே

படம்: பத்ரி
பாடியவர்கள்: தேவி ஸ்ரீபிராசாத், சித்ரா
இசை: ரமணா கோகுலா

இப்பாடல் வந்ததும் இதனை வெறுத்த முதல் நபர் நானாகத் தானிருப்பேன். விஜய்யின் படங்கள் எனக்குப் பிடிக்காது. அதிலும் இப்பாடலின் ஆரம்பம், அது பாடப்பட்ட விதம், வரிகள் சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இப்படத்தினை ஓர் நாள் சன் டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது இப்பாடலை மீண்டும் கேட்கும் (பார்க்கும்) வாய்ப்பு கிடைத்தது. ரசிக்க ஆரம்பித்தேன். ஆனாலும் இன்னும் கூட அதன் ஆரம்பம், வரிகள், ஆண் குரல், பாடப்பட்ட விதம் சுத்தமாக பிடிக்கவில்லை. பிடித்ததெல்லாம் பாடலின் பிற்பாதியில் சித்ரா பாடும் பகுதி தான். அவர் பாடிய இவ்வரிகளும் (3:07), அதன் ராகமும், பின்னணியில் வரும் இசையும் மிக இனிமை.

நீருக்குள் பூத்திருந்த பூவொன்றை
நீந்தி வந்து அறிந்தாயே
நன்றி உயிரே

நெஞ்சுக்குள் வைத்திருந்த உறவொன்றை
சொல்லுமுன் அறிந்தாயே
நன்றி உயிரே

உந்தன் மார்பில் படர்ந்து விடவா
உந்தன் உயிரில் உறைந்து விடவா
உறவே உறவே

ஆஹா அற்புதம்!

சித்ராவினைப் பற்றி கூற வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் இப்பாடலில் அவரின் குரல் அவ்வளவு அற்புதமாக வந்திருக்கிறது. அது முதல் இப்பாடலின் மீது ஓர் மயக்கம் தான். இது போன்ற மிக சாதாரணமான ஆரம்பம் மற்றும் முடிவும் இருக்கும் இப்பாடலில் இது போன்ற சிறந்த பாடல் வரிகளும், இசையும் ஒளிந்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

3. தச்சுக்கோ தச்சுக்கோ

படம்: பொன்னியின் செல்வன்
பாடியவர்கள்: மாதங்கி, அனுராதா ஸ்ரீராம்
படம்: வித்யாசாகர்

பாடலின் ஆரம்பத்தில் வரும் இசை, 'ஊமை விழிகள்' படத்தில் வரும் 'ராத்திரி நேரத்து பூஜையில்' பாடலினைத் தான் எப்போதும் ஞாபகப்படுத்துகிறது. இப்பாடலை எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. இப்பாடல் சில ஆண்டுகளாக என்னிடம் இருக்கின்றது. இது எப்போதும் என்னைக் கவர்ந்திதில்லை. சில நொடிகளில் மாற்றி விடுவேன். இது வரை இப்பாடலைப் பார்த்ததில்லை. இரு மாதங்களுக்கு முன்பாக தற்செயலாக ஒலிக்கவிட்டேன். ஏனோ மாற்ற வேண்டும் என்று தோன்றவில்லை; அல்லது மாற்ற முடியாத சூழ்நிலை.

'கிருஷ்ணா', என்று மாதங்கி ஆரம்பித்து, 'தச்சுக்கோ தச்சுக்கோ', என்று பாடிய பிறகு, அனுராதா ஸ்ரீராம், 'கண்களிலே தீ', என்று மாதங்கியுடன் இணைந்து பாட ஆரம்பிப்பது அழகு!. இது போல் இப்பாடலில் சிற்சில அருமையான இடங்கள் இருக்கின்றன. அவற்றுள் 1:27-ல் வரும் புல்லாங்குழலும், 2:40-ல் வரும் வயலின் இசையும் அடங்கும்.

முக்கியமானது அனுராதாவின் ஸ்ரீராம்.

'கண்களிலே தீ... கன்னத்திலே பாய்... அங்கத்திலே பூ...' என்று அனுராதா ஸ்ரீராம் பாடும் ஒவ்வொரு இடமும் (0:36, 3:45) அற்புதம்.

'சுமை நான் தாங்கதான் சுகம் நீ வாங்க தான்' (1:55), என்று முதலாம் சரணத்தில் மாதங்கி பாடுமிடத்தில் ராகம் அழகு. ஆனால் இரண்டாவது சரணத்தில், அதை அனுராதா, 'விண்ணில் ஒற்றை நிலா மண்ணில் கூடல் விழா', (3:06) பாடுவது இன்னும் சிறப்பு. அற்புதம்! அதிலும் நிலா, விழா வார்த்தைகளை அனுராதா உச்சரிப்பதே அழகு. இவர் பாடிய வரிகள் என்னையறியாமல் புன்சிரிப்பை வரவழைத்தன; நல்ல இசை கேட்ட சந்தோஷத்தில். மிக அருமையான; திறமை வாய்ந்த பாடகர். சந்தேகமே இல்லை.

இப்பாடலில் பல இடங்களில் வரிகள் மோசமாக இருப்பதை அறிவேன். எனக்கு பல முறை ஏற்படும் சந்தேகம் இது. இது போன்று பாடுவதற்கு பாடகிகளுக்கு கூச்சமாக இருக்காதா? அல்லது அவ்வாறு பாடலை எழுதி ஓர் பெண்ணிடம் பாடச் சொல்லி கொடுக்கும் கவிஞருக்கு (?) அசிங்கமாக இருக்காதா?

4. வருது வருது

படம்: பிரம்மா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
இசை: இளையராஜா

இப்பாடலை ஆரம்ப காலத்தில் ஓர் வயதானவரும், இளம்பெண்ணும் பாடும் பாடலாகத் தான் அறிவேன். அப்போதெல்லாம் எந்த விருப்பமான பாடலையும் கேட்கமுடியாது. எப்போதாவது ரேடியோவிலோ, டி.வி.யிலோ ஒலி/ஒளிபரப்பினால் தான் உண்டு. ஆனாலும் எப்போதும் இப்பாடலை விரும்பிக் கேட்டதில்லை.

பின்பு பல ஆண்டுகளுக்குப் பிறகு பலமுறை இப்பாடலைக் கேட்க வாய்ப்பு கிடைத்த போது, மிகவும் பிடிக்க இரண்டு காரணங்கள். ஒன்று. கேட்பவரை உற்சாகம் அடையச் செய்யும் வகையில் இப்பாடலின் பீட் அமைந்திருப்பது. அதுவும் பாடல் முழுவதுமே தொடர்ந்து இருப்பது மிக நன்று. இதனைத் தவிர எஸ்.பி.பி. மிக அற்புதமாகப் பாடியிருப்பார். ஜானகியைப் பற்றிக் கூறத் தேவையில்லை. முதல் சரணத்திற்கு முன்பு வரும் இசையில் பாடலின் பீட் மறைந்து புல்லாங்குழல், வயலின் போன்ற வாத்தியங்கள் ஒலிக்கத் துவங்கியிருக்கும். அது முடிந்ததும் 1:54-ல் எஸ்.பி.பி.

நாடி எங்கும்
ஓடிச் சென்று
நாளும் ஒரு
சூடேற்றும் ரூபமே

என்று குரலை ஏற்றி அற்புதமாகப் பாடியிருப்பார். அவர் அப்படிப் பாட ஆரம்பிக்கும் போது, பாடலின் பீட் மீண்டும் ஒலிக்கத் துவங்கியிருக்கும். கேட்பதற்கு அற்புதமாக இருக்கும். இதற்காக இன்னும் இப்பாடலை விரும்பிக் கேட்பதுண்டு.

எஸ்.பி.பி. போன்ற அற்புதமான பாடகர்களை இப்போதெல்லாம் இசையமைப்பாளர்கள் அதிகமாக உபயோகப்படுத்தாமலிருப்பது அவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் பெரிய இழப்பு தான். மனிதர் என்ன அழகாக தமிழ் பேசுகிறார் (மேடை, பேட்டிகள் அடங்க). இங்கிருக்கும் தமிழ் நடிகர்களால் கூட அவ்வளவு கோர்வையாக, அழகாக பேச இயலாது.

5. மச்சக்காரி

படம்: சில்லென்று ஒரு காதல்
பாடியவர்கள்: சங்கர் மகாதேவன், வசுந்தரா தாஸ்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

இப்படத்தில், 'மஜா மஜா', பாடலைப் போல் 'மச்சக்காரி', பாடல் எனக்கு பிடிக்காத பாடலாக இருந்தது. நியூயார்க் நகரம் கேட்காமல், இப்பாடலை நேயர்கள் கேட்கும் போதெல்லாம் அவ்வளவு எரிச்சலாக இருக்கும். இப்போதும் நியூயார்க் நகரம் பாடலை தினமும் மூன்று முறைகளாவது கேட்டு விடுவேன். ஆனால் இப்பாடல் இன்னும் முழுவதுமாகப் பிடிக்காது. ஓரளவிற்குப் பிடிப்பதற்கு முக்கிய காரணம் வசுந்தரா தாஸின் குரல். அதிலும் முக்கியமாக, 'வாழும் வாழ்க்கை யாருக்காக சொல் தலைவா.... இன்பம் வந்தபின் இன்னும் நிற்பதேன் ஏன் தலைவா', என்ற வரிகளை பாடுமிடத்தில்.

இன்னொரு இடத்தில் அவர் பாடுமிடம் அழகாக ஒலிப்பது. (முதலாம் சரணம்: 2:34)

உதடுகள் குவித்தேன்
என் மன்னவா

உன் உதவிக்குத் தவித்தேன்
பெண்ணல்லவா

நீ முதல் முதல் குதித்தாய்
உன்(?) ரத்தமே

நான் மயக்கதில் விழுந்தேன்
என் காதலா............

காதலா என்று அவர் இழுவை கொடுத்து பாடுமிடம் மிகவும் ரசிக்க வைத்தது. 'நாம் இருவரும் இணைந்தே பார்க்கலாம்' (4:13), என்று இரண்டாம் சரணத்தில் சங்கர் பாடுமிடம் இதனுடன் ஒப்பிடும் போது அது அவ்வளவு சுவையாக இருக்காது. வசுந்தரா பாடும் இடங்களுக்காக, இப்போதெல்லாம் இப்பாடலை அடிக்கடி கேட்பதுண்டு.

உங்களுக்கு இது போன்ற அனுபவம் நேர்ந்திருந்தால் தெரிவிக்கவும்.

திங்கள், அக்டோபர் 08, 2007

சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்

1. முதல் மழை எனை நனைத்ததே

படம்: பீமா
பாடியவர்கள்: ஹரிஹரண், மஹதி, பிரசன்னா
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்

இப்படத்தின் பாடல்கள் எனக்கு முதன் முதலில், சன் டி.வி.யில் வந்த விக்ரம், திரிஷா பேட்டியில் தான் எனக்கு அறிமுகம். அப்பேட்டியின் நடு, நடுவே, 'ரகசிய கனவுகள் ஜல் ஜல்', என்ற பாடலின் இரு வரிகளை மட்டும் ஒளிபரப்பினார்கள். மிகவும் பிடித்து விட்டது. அதிலிருந்து இப்படத்தின் பாடல்கள் எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருந்தேன். வந்த பிறகும் இப்பாடலை கேட்டேன். சந்தேகமில்லை. நல்ல பாடல். கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும். குறிப்பாக பல்லவியும், முதல் சரணத்திற்கு முன்பாக வரும் வயலின் இசையும் நன்று. 'இறகே இறகே', என்று குழுவினர் பாடும் இடம் அழகு. ஆனால் சரணம் அவ்வளவாக கவரவில்லை. ஹரிஹரன், மதுஸ்ரீயை விட நன்றாகப் பாடியிருக்கிறார்.

ஆனால் இப்படத்தில் இடம் பெற்றுள்ள முதல் மழை பாடல் தான் என்னுடைய தேர்வு. ஆரம்பத்தில் வரும், 'மெஹூ மெஹூ', என்று புரியாத பாஷையில் பாடல் ஆரம்பிக்குமிடத்திலிருந்தே அழகு தான். ஹாரீஸ் பெரும்பாலும் ஒன்றிரண்டு பாடல்களிலாவது அது போல் வைத்திருப்பார். பெரும்பாலும் அது என்னைக் கவராது. இப்பாடலில் சிறிது வித்தியாசமாக என்னை அது கவர்ந்ததற்குக் காரணம், குரலாக இருக்கலாம் (யாருடைய குரலென்று தெரியவில்லை). அந்த ராகமும் நன்றாக இருந்தது. அதனையே முதல் சரணத்திற்கு முன்பாக இசையாகவும் வைத்திருந்தார்.

ஹரிஹரன், மஹதி (:)) வழக்கம் போல் சிறப்பாக பாடியிருக்கிறார்கள்.

முதல் மழை
எனை நனைத்ததே
முதல் முறை
ஜன்னல் திறந்ததே

பெயரே தெரியாத
பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே

இதயமும் போய்
இதமாய் மிதந்ததே

என்ற அற்புதமான பல்லவி.

இதனை ஹரிஹரண் மீண்டும் முதலாம் சரணம் முடிந்ததும் 2:46-ல் பாடுவார். அப்போது நனைத்ததே, திறந்ததே என்று பாடும் போது மஹதி அருமையாக 'ல ல லா' என்று பாடுவார். இனிமையாக இருக்கும்.

இரண்டாம் சரணம் முடிந்ததும், ஹரிஹரனோ, மஹதியோ இவ்வரியினை பாடுவார்கள் என்று நான் நினைத்திருந்த போது, 4:22-ல், 'உஹூ உஹூ', என்று 'மெஹூ மெஹூ', ஸ்டைலில் அதே பாடகர் பாடுவார். அற்புதம்.

பல பாடல்களுக்கு இது போன்ற சிறு சிறு விசயங்கள் சிறப்பு சேர்க்கின்றன.

இதே படத்தில் இடம் பெற்ற 'எனதுயிரே எனதுயிரே', பாடலும் நல்ல பாடல். ஆனால் அப்பாடலில் 1:42-ல் வரும் 'உன்னைக் காண வருகையில்' என்ற வரி ஏதோ பழைய தமிழ் பாடலினை ஞாபகப்படுத்துகிறது. ஞாபகத்திற்கு வரமறுக்கிறது. அதே போல் 'சிறு பார்வையாலே' பாடல் 'கோவில்' படத்தில் வரும் 'சிலு சிலுவென' பாடலை ஞாபகப்படுத்துகிறது.

2. கனவெல்லாம் பலிக்குதே

படம்: கிரீடம்
பாடியவர்கள்: கார்த்திக், ஜெயச்சந்திரன்
இசை: ஜி.வி.பிரகாஷ்

இப்பாடலில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் நன்றாக வந்துள்ளன. அவற்றுள் சுவேதா, சோனு நிகாம் பாடிய 'விழியில் உன் விழியில்' பாடலும் சாதனா பாடிய 'அக்கம் பக்கம்' பாடலும் மற்ற இரு பாடல்கள். இவ்விரண்டையும் விட 'கனவெல்லாம் பலிக்குதே', பாடல் என்னை கவர்ந்தது.

இப்பாடலில் இது தான் நன்றாக இருந்தது என்று குறிப்பிட்டு சொல்ல என்னால் இயலவில்லை. கார்த்திக்கின் குரல், நல்ல இசை, ராகம்.

மொத்தத்தில் நல்ல பாடல்.

இப்படத்தில் பிரகாஷ் சில இசையையும், ராகத்தையும் மற்ற படங்களிலிருந்து எடுத்திருக்கிறார். ஒன்று 'கண்ணீர் துளியே' பாடல் 'பூங்காற்றிலே' பாடலின் நகல். இன்னொன்று 'விழியில் உன் விழியில்' பாடல். இது எனக்கு இரண்டு பாடல்களை ஞாபகப்படுத்துகின்றன. இசை 'மஜா' படத்தில் இடம்பெற்ற 'சொல்லித்தரவா', பாடலையும், 1:26-ல் வரும் இசை 'தெனாலி' பாடலில் வரும் 'சுவாசமே சுவாசமே', பாடலையும் ஞாபகப்படுத்துகிறது. குறிப்பாக அந்த வீணை இசை.

ஜி.வி.பிரகாஷ் ஓரளவிற்கு நன்றாகவே இசையமைக்கிறார். இன்னும் முயற்சி செய்து, மாமாவின் பாடல்களை லிஃப்ட் செய்யாமல் இசையமைத்தால் நன்றாக வரலாம்.

3. பற பற பட்டாம் பூச்சி

படம்: தமிழ் எம்.ஏ
பாடியவர்கள்: ராகுல்
இசை: யுவன் சங்கர் ராஜா

நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகவும் சிலிர்ப்பான பாடல் கேட்ட உணர்வு இப்பாடல் கேட்ட போது ஏற்பட்டது. உற்சாகமான ஆனால் மென்மையான இசை; வித்தியாசமான குரல்; அற்புதமான ராகம் என அனைத்தும் சேர்ந்து இப்பாடலை சிறந்த பாடலாக்கியுள்ளன.

'பற பற பட்டாம் பூச்சி
தொட தொட பல வண்ணமாச்சே' என்று துவங்கி பாடல் முழுவதும் அந்த சிலிர்ப்பு தொடர்கிறது.

'கண்ணீரைத் துடைக்கும் விரலுக்கு
மனம் ஏங்கிக் கிடக்குதே
தண்ணீரில் மிதக்கும் எறும்புக்கு
நிலை படகு ஆனதே'

வரிகளில் (0:19) ராகம் அற்புதம்; அழுத்தமான வரிகள்.

'எங்கோ எங்கோ ஓர் உலகம்
உனக்காக காத்துக் கிடக்கும்
நிகழ்காலம் நதியைப் போல
மெல்ல நகர்ந்து போகுதே
நதி காயலாம்
நினைவில் உள்ள
காட்சி காயுமா?

ஓ ஓஹோ ஓ ஹோ ஓ ஹோ ஹோ'

இடங்கள் (2:43-3:10) இனிமையாக இருக்கின்றன.

மொத்தத்தில் அற்புதமான பாடல். ஒளிப்பதிவு இப்பாடலுக்கு எப்படியிருக்கும் என்பதனை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். இப்படத்தின் கரு மிகவும் முக்கியமாகவும், அத்தியாசமாகவும் தோன்றுகிறது. அது 'பறவையே எங்கு இருக்கிறாய்', பாடலிலும் ஒலித்ததை கேட்க முடிகிறது.

4. மின்னல்கள் கூத்தாடும்

படம்: பொல்லாதவன்
பாடியவர்கள்: கார்த்திக், பாம்பே ஜெயஸ்ரீ
இசை: ஜி.வி.பிரகாஷ்

இப்படத்தின் பாடல்களில் ஒன்று கூட சரியில்லை இதனைத் தவிர. சங்கர் மகாதேவன் பாடிய குத்துப் பாடல்; 'எங்கேயும்' ரீமிக்ஸ் பாடல் என்று சலிப்படையச் செய்யும் பாடல்கள். 'மின்னல்கள் கூத்தாடும்' என்று ஆரம்பிக்கும் பாடல் காப்பாற்றும் விதமாக அமைந்துள்ளது.

இப்பாடலின் இசைக்கருவியும், ஆரம்ப இசையும் 'சிவாஜி' படத்தின் 'ஸ்டைல்' பாடலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. பல்லவி முடிந்ததும் வரும் இசை, 'மின்னலே' படத்தின், 'வசீகரா' பாடலின் இசையை ஞாபகப்படுத்துகிறது. ஆனால் இப்பாடல் நன்றாக வந்துள்ளதை மறுக்க முடியாது. கார்த்திக் நன்றாக பாடியிருக்கிறார்.

'உடல் கொதித்ததே
உயிர் மிதந்ததே
அய்யோ அதை
எனக்குப் பிடித்ததடி
எடை குறைந்ததே
தூக்கம் தொலைந்ததே'

என்ற இடத்தில் ராகம் நன்று.

ஜெயஸ்ரீ தனக்கே உரித்தான பாணியில் பாடியிருக்கிறார்.

'காதலே ஒரு வகை
ஞாபக மறதி
கண்முன்னே நடப்பது
மறந்திடுமே

வவ்வாலை போல் நம்
உலகம் மாறி
தலைகீழாகத் தொங்கிடுமே'

3:31-ல் ஜெயஸ்ரீ பாடி, அதனைத் தொடர்ந்து 'உடல் கொதிக்குதே' என்று குரலை மாற்றி ஆரம்பிப்பது அற்புதம்.


5. உயிரே உயிரே

படம்: மலைக்கோட்டை
பாடியவர்கள்: ரஞ்சித், ரீட்டா
இசை: மணி சர்மா

இது திருவிளையாடல் படத்தில் வரும்'கண்ணுக்குள் ஏதோ', பாடலை நினைவுபடுத்துகிறது. போதாக்குறைக்கு அப்பாடலை பாடியவரும் ரீட்டா தான். ஆரம்பத்தில் வரும் இசை இனிமை. ஆனால் அந்த இசை, அர்ஜூனின் ஓர் படத்தில் வரும், 'வெளிநாட்டுக் காற்று தமிழ் பேசுதே' பாடலை ஒத்திருக்கிறது.

'உந்தன் கண்ணோரம்
வாழ கற்பூரம் போல
அன்பே நான் கரைந்தேனே'

வரிகளிலும் (0:43),

'நீ என் வாழ்க்கையா
என் வேட்கையா',

என்ற வரிகளிலும் (2:21) ராகம் நன்றாக அமைந்துள்ளது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'தேவதையே வா' பாடலின் ஆரம்பத்தில் வரும் இசை அருமை.

சங்கர் மகாதேவன் எல்லா தமிழ் படங்களிலும் ஓர் குத்து பாடல் பாடிவிடுகிறார். ஏன் வம்படியாக அனைத்துப் படங்களிலும் ஆரம்பத்தில் குத்துப் பாடல் வருகிறது என்றே தெரியவில்லை. ரஜினியில் ஆரம்பித்து, விஜயில் தொடர்ந்து இன்று அனைத்து ஹீரோக்களுக்கும் ஓர் ஆரம்ப பாடல். கமல் மட்டுமே விதிவிலக்கு. 99% பாடல்கள் கேட்பதற்கு சகிக்காது. அதிலும் சங்கர் மகாதேவன் தமிழ் திரையுலகம் பாடாய் படுத்துகிறது. விளையாடு (கிரீடம்), படிச்சு பார்த்தேன் (பொல்லாதவன்), வாழ்க்கை என்பது (தமிழ் எம்.ஏ) என்று இவர் அநியாயத்து குத்து பாடகராகி விட்டாரே! பாவமாக இருக்கிறது. அவரது பாடல் ஒன்றை ஒலிக்கவிட்டு என்ன படமென்று கேட்டால் அவருக்கே தெரியுமா என்று தெரியவில்லை.

திங்கள், செப்டம்பர் 24, 2007

வீழ்வது தமிழாக இருந்தாலும்...

கடந்த சில தினங்களாக, தமிழகத்தில் நடந்து வரும் நிகழ்வுகள் மிகவும் வருத்தமடையச் செய்துள்ளன. முதல்வர் கருணாநிதி இப்படி பேசுவதால் எல்லாம் அவருக்கும் நாட்டு மக்களுக்கும் என்ன நன்மை விளையும் என்று எனக்குத் தெரியவில்லை. மாறாக அவரின் பேச்சு, தமிழகத்தை (மக்களை), இந்தியா அமைப்பிலிருந்து விலக்குவதற்கு வித்திட்டு விடுமோ என்று அச்சமாக இருக்கிறது. அவர் இதனை அறிந்து செய்கிறாரா அல்லது அறியாமல் செய்கிறாரா எனத் தெரியவில்லை.

இதே முதல்வர், காங்கிரஸ் பெரும்பான்மையாக மத்தியில் ஆட்சியில் இருந்திருந்தால் இது போன்று பேசியிருப்பாரா? ஒரு வேளை பேசியிருக்கலாம்; ஆனால் அதற்கான விளைவுகள் எப்படியிருக்கின்றன என்று பார்த்து, சமாளித்து மீண்டும் பேட்டிக் கொடுத்திருப்பார். இத்தனை கால ஆட்சியில், தி.மு.க எத்தனை மதநம்பிக்கையற்ற தொண்டர்களை உருவாக்கியிருக்கிறது? தலைவர் சொன்னால், குங்குமத்தை அழிக்கலாம்; அக்னி இல்லாமல் திருமணம் செய்யலாம். ஆனால் தனக்கு ஒரு சிக்கல் அல்லது தனது குடும்பத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் முதலில் ஆண்டவா காப்பாற்று என்று தான் தோன்றும். 'இந்த சிக்கலிலிருந்து காப்பாற்று, திருச்செந்தூர் வந்து மொட்டையடிக்கிறேன் ஆண்டவா', என்று வேண்டிக் கொள்ளாத தொண்டன் இங்கு எத்தனை பேர்?

சரி. அதனை விட்டு விடுகிறேன். கலைஞர் கூறிய விசயம் சரியா தவறா என்பது கூட இங்கு முக்கியம் அல்ல. நான், கலைஞரை குறை கூறுவதற்காகவும், வேறு யாருக்கும் எனது ஆதரவினைத் தெரிவிக்கவும் இப்பதிவினை எழுதவில்லை.

ஒரு நாட்டினர் (இனத்தினர், மதத்தினர்) மீது மற்றவர்களுக்கு துவேசம் ஏற்படுவதற்கு அந்நாட்டு மக்கள் கெட்டவர்களாக இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. அந்நாட்டு தலைவனின் பொறுப்பற்ற பேச்சே போதுமானது.

அமெரிக்க அதிபர் ஏதாவது ஒரு நாட்டுத் தலைவர் மீது குற்றம் சாட்டும் போது, அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்க அதிபரை மட்டுமா பிடிக்காமல் போகிறது? அமெரிக்க மக்களையும் தானே? ஹிட்லர் மீதான கோபம், ஜெர்மானிய மக்களையும் விட்டு வைத்தது? இன்று வரை ஜெர்மானியர்கள் என்றால் எவ்வகையான எண்ணம் இருக்கிறது?

ஆகவே ஆட்சியில் இருப்பவர்கள் கூறும் கருத்து, அக்கருத்து மற்ற இடங்களில் தனது கருத்தாக மட்டுமே அது பாவிக்கப்படாது; தான் சார்ந்த மக்களின் கருத்தாக அது பாவிக்கப்படும் என்பதனை உணர வேண்டும். தனது மக்களில் அதனை 99.9999% பேர் அத்தலைவனின் கருத்திலிருந்து மாறுபட்டிருந்தாலும் கூட, அக்கருத்து அவ்வாறு தான் பார்க்கப்படும்.

அவர் பேட்டி கொடுத்த இரண்டு தினங்களிலேயே அவரது மகள் வீட்டிலும், அதனை விட முக்கியமானது - தமிழக பேருந்தினையும் ஓர் கும்பல் கொளுத்தவில்லையா? இரு உயிர்கள் பலியாகவில்லையா? ஓர் தலைவனின் மீதான கோபம், அந்நாட்டு மக்கள் மீது திரும்பும் என்பதற்கு இது உதாரணம்.

இது ஏன்? பகுத்தறிவு பாசறையிலிருந்து வந்த தி.மு.க. தொண்டர்களே நேற்று, யாரோ ஓர் முட்டாள் சாமியார் கூறிய கருத்திற்காக, பா.ஜ.க. அலுவலகத்தையும். ஹெச். ராஜா, மற்றும் அவரது மாமியார் வீட்டையும் தாக்கவில்லையா? முதல்வர் மகள் மீது தாக்குதல் நடத்தியத்தியதற்கும், ராஜாவின் வீட்டில் நடந்த தாக்குதலுக்கும், அவர் மாமியார் மீது வீடு நடந்த தாக்குதலுக்கும் என்ன வேறுபாடு?

அது தான் மக்களின் இயல்பு. ஆண்டாண்டு காலமாக அது தான் மனிதனின் உடலில் ஊறியுள்ளது. பின்பு இது போன்று பாதிக்கப்படும் மக்கள், அடுத்த இனத்தினரை எதிரியாக பாவிப்பது இயல்பாக வந்து விடும். ஆனால் காரணம் என்ன? யோசிக்காமல் கூறும் சில வார்த்தைகள் தானே?

உங்களுக்கு வாழ்வதற்கு ஓர் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதே வாய்ப்பு மற்றவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை ஏன் கெடுக்கிறீர்கள்? இரு கழக ஆட்சிகளும் நன்றாக சம்பாதிக்கட்டும். ஆட்சியாளரின் குறைந்த பட்ச வேலை, மக்களை பாதுகாப்பதாகத் தான் இருக்க முடியும். ஊழல் செய்யட்டும்; வரி விதிக்கட்டும்; ஆனால் மக்களின் பாதுகாப்பினையாவது உறுதி செய்யுங்கள். பாதுகாப்பு கொடுக்காமல், இலவச டி.வி. மட்டும் கொடுத்தால் அந்த டி.வி.யினால் என்ன பயன்? இப்போது பாதுகாப்பின்மை இன்னொரு நாடு படையெடுப்பதால் வரவில்லை. இங்கிருந்தே, தேவையில்லாத சமயத்தில், அவசியமில்லாமல் வந்துள்ளது.

கலைஞரின் நம்பிக்கையை பற்றி பேச வரவில்லை. அது முக்கியமும் அல்ல. அதைப் பற்றி பேசிப் பேசி, பலர் சோர்வடைந்து விட்டனர். அவரின் நம்பிக்கை அவருக்கு; மற்றவர்களின் நம்பிக்கை மற்றவர்களுக்கு.

'வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்', என்று கூறுபவர்களின் செயல், 'வீழ்வது தமிழாக இருந்தாலும், வாழ்வது கழகமாக இருக்கட்டும்', என்று ஆகிவிட்டதோ என்று பயமாக இருக்கிறது. தனக்கு காயம் என்றாலே கதறும் இந்த உடல், இன்னொரு உயிர் போனதைப் பார்த்தும் வருந்தாமல் இருப்பது விந்தையல்லவா? பெங்களூருக்கு வேலை தேடிச் சென்ற அந்த நெல்லை தொழிலாளி என்ன தவறு செய்தார்? அவருக்கும், கலைஞர் கூறிய கருத்திற்கும் என்ன சம்பந்தம்? அவர் தமிழகத்தை சார்ந்தவர் என்பதனைத் தவிர?

ஏற்கனவே கர்நாடகத்தில் வாழும் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வது பாதிக்கப்பட்டது கழக ஆட்சிகளில் தான் என்பதனை மறுக்க இயலாது. இன்னும் சில ஆண்டுகளில் அது கேரளாவிலும் நடக்கலாம். இது இந்தியா முழுவதும் கூட உருமாறிவிட வாய்ப்பிருக்கிறது. அதனை கருத்தில் கொண்டு ஆட்சியில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று வேண்டுகிறேன்.

அனைவரும் அவரவர் வேலையை செய்து, இருக்கும் வசதிவாய்ப்புகளை வைத்து கூலி வேலை செய்தோ, அலுவலகங்களில் பணிபுரிந்தோ, பிச்சையெடுத்தோ, ஒரு வேளையோ, இரு வேளையோ உண்டு, நமது உயிர் நாளைக்கு இருக்காது என்ற பய உணர்வு இல்லாமல், நிம்மதியாக உறங்குகிறோம். அதனை, ஏன் கெடுக்கிறீர்கள்?

இன்னுமொரு இலங்கையை, இங்கு உருவாக்கிவிடாதீர்கள்!

வெள்ளி, செப்டம்பர் 21, 2007

திவான் - யா ரயா

இந்த மாத ஆரம்பத்தில் நண்பரை பார்க்க கலிஃபோர்னியா சென்றிருந்தேன். வழக்கமாக விமானத்தில் எனது ஐ-பாடில் பாடல்கள் கேட்டு ஏதாவது படித்துக் கொண்டு வருவேன். விமானம் தரையிறங்க முப்பது நிமிடங்கள் இருக்கும் போது, பயணிகளுக்கான டி.வி. சானலில் ஏதாவது இருக்கிறதா என்று துலாவிக் கொண்டிருந்தேன். படங்கள் பார்ப்பதற்கு நேரமில்லை என்று பாடல்கள் இருக்கிறதா என்று பார்த்தேன். சில ஆடியோ தொகுப்புகள் இருந்தன. Instrumentals சென்று பார்க்கையில் கண்ணில் பட்டது தான் திவான் - 2 பாடல் தொகுப்பு.

என்னடா இந்தியப் பெயர் போல் தோன்றுகிறதே என்று பார்த்தேன். ஆனால் பாடல்களை கேட்கும் போது தான் அவை அராபிக் என்று தெரிந்தது. எந்த ஊர் என்று யூகிக்க முடியவில்லை. எகிப்து அல்லது ஈரான் ஏதாவது ஒன்றாக இருக்கும் என்று நினைத்தேன். சரி கேட்போம் என்று கேட்க ஆரம்பித்தேன். முதல் பாடலே பிடித்து விட்டது. இரண்டாவது பரவாயில்லை. மூன்றாவது பாடல் கேட்பதற்கு மிகவும் பிடித்து விட்டது. இன்னும் சில நிமிடங்களே இருக்க; மீண்டும் சில முறைகள் மூன்றாவது பாடலை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தேன். மறக்காமல் பாடகர், பாடல்கள் தொகுப்பினை பற்றிய விவரங்களை குறித்து வைத்துக் கொண்டேன்.

நமது விக்கிபீடியாவில் தேடி பிறகு தான் அவர் பிரான்ஸ் நாட்டை சார்ந்தவர் என்று தெரிந்தது. பிறந்து வளர்ந்தது அல்ஜீரியா. ஆனால் பாடல் அராபி மொழி தான். இவரது பாடல்களை Rai வகையை சார்ந்தது என்று குறிப்பிடுகின்றனர்.

அமேஸானில் அந்த இசை தொகுப்பினை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்று முயற்சித்தால் அது பட்டியலிலேயே இல்லை. ஆனால் இன்ன பிற வாடிக்கையாளர்கள் அதனை விற்பனைக்கு இட்டிருந்ததால், அதனை ஆர்டர் செய்தேன். ஆர்வம் பொறுக்காமல், YouTube-ல் அந்த பாடல்களை தேடிப் பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. கிடைத்ததோ அவருடைய இன்னொரு பாடல். (திவான் முதலாம் தொகுப்பு)

ஆஹா.... அந்த பாடல் தான் இன்னும் அற்புதம். அது முதல் எத்தனை முறை இப்பாடலை கேட்டிருப்பேன்! அற்புதமான இசை! அதன் மேடைப் பதிவும் காணக் கிடைத்தது. எத்தனையாயிரம் பேர்களை அப்பாடல் கட்டிப் போட்டிருக்கிறது. ஒவ்வொரு இசைக்கருவியிலிருந்து வரும் இசையும் அற்புதம்.ஒவ்வொரு முறை கேட்கும் போதும், என்னையுமறியாமலேயே தலையசைத்து கேட்டிருக்கிறேன். இது புலம்பெயர்ந்தவர்களைப் பற்றி பாடல் என்று படித்தேன். வரிகள் 'Swadesh'-னை ஒத்திருக்கிறது. அதாவது அதே கருத்து இப்பாடலிலும்.

நாம் அனைவருக்கும் எல்லா தமிழ் பாடல்களையும் எப்படியாவது கேட்கும் வாய்ப்பு கிட்டி விடும். ஆனால் ஆங்கில பாடல்கள் அப்படியல்ல. ஆயிரக்கணக்கான பாடகர்கள், இசை குழுவினர் இருக்கின்றனர். முக்கியமாக Indie குழுவினர். எப்போதாவது, ஏதாவது தேடும் போது பல அற்புதமான பாடல்கள் கேட்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. அப்படி கேட்க கிடைக்கும் ஓர் பாடல் மூலமாக அக்குழுவினரின் பல சிறந்த பாடல்களை கேட்கும் வாய்ப்பு உண்டாகியிருக்கிறது. சமயங்களில் தோன்றும், 'இந்த பாடலை மட்டும் கேட்காமலிருந்திருந்தால் எவ்வளவு சிறந்த பாடல்களை இழந்திருப்பேன்', என்று. அதே எண்ணம் இப்பாடலை கேட்கும் போதெல்லாம், அந்த விமான பயணம் தான் ஞாபகத்திற்கு வருகிறது. நல்லது செய்தேன் என்று. Diwan இசைத்தட்டினையும் ஆர்டர் செய்திருக்கிறேன். அந்த இசைத்தட்டும் வந்தால், அதிலிருக்கும் மற்ற பாடல்களையும் கேட்கும் வாய்ப்பு கிட்டும். இன்னும் சில நல்ல பாடல்கள் கேட்க வழியிருக்கிறதா என்று.

உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் இதோ அந்த பாடலின் மூன்று வடிவங்கள்.

ரஷீத் பாடியது:



ரஷீத் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து பாடியது: (அதில் இருப்பவர்களிலேயே வயதில் சிறியவரின் பாவணை (உற்சாகம்; ஆர்வம்) மிகவும் அழகாக இருக்கிறது.



அசல் பாடல்:



பல பாடல்கள், பாடலின் அர்த்தம் புரிய கூட வேண்டாம் - பாடல் வரிகளை உச்சரிக்க முடிந்தாலே சிறிது சலிக்க ஆரம்பித்து விடும். இது அவ்வகையில் சேர அவ்வளவு வாய்ப்பில்லை.

Diwan-2 பாடல்களை நான் பதிவேற்றம் செய்ய இயலாது. ஆனால் அவற்றின் மாதிரி அவரது இணையத்தளத்தில் உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இங்கே சொடுக்கவும்.

முதல் பாடல்: Ecoute Moi Camarade
மூன்றாவது பாடல்: Agatha

குறிப்பு: யா ரயா பாடலின் அடிப்படை இசையை ஏதோ ஓர் தமிழ் பாடலில் கேட்டிருக்கிறேன். சில நாட்களுக்கு முன்பாக நீண்ட நேரத்திற்குப் பிறகு கண்டுபிடித்தேன். இப்போது மறந்து விட்டது. யாராவது யூகிக்க முடிந்தால் தெரிவிக்கவும். ஏதோ வித்யாசாகர் படத்தில் கேட்டது போல் இருக்கிறது.

நன்றி: வாய்ஸ் ஆன் விங்க்ஸ். பதிவில் தவறை சுட்டிக்காட்டியதற்கும். வித்யாசாகரின் 'ஏ சப்பா சப்பா', பாடல் என்று அவரது பதிவில் குறிப்பிட்டிருந்ததற்கும்.

செவ்வாய், ஜூலை 17, 2007

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி (தமிழில்)

சென்ற வருடம், விளையாட்டிற்காக தமிழில் ஓர் புரோகிராம் எழுதினேன். சில மாதங்களுக்கு முன்பாக அறிமுகம் செய்யப்பட்ட Visual Studio 2005-ஐ ஆரம்பத்திலிருந்து உபயோகப்படுத்தி வருகிறேன். அது யுனிகோட் முறையில் Source File-களை சேமிக்க அனுமதிக்கிறது என்பதும் ஆரம்பத்திலிருந்தே தெரியும். ஆனாலும் அவை குறிப்புகள் (Comments) எழுதுவதற்காக மட்டுமே என்று நினைத்திருந்தேன். இன்று ஏதோ யோசித்துக் கொண்டிருந்த போது (?), எடிட்டரில் தமிழில் எதையோ டைப் செய்து '(' கீயை அழுத்தினேன். Visual Studio, Function-அமைப்பை தமிழில் Tooltip-ஆக காட்டியது.

ஆச்சர்யம்!. ஏன் அவ்வாறு இருக்க கூடாது என்று ஓர் மாறிக்கு (Variable)-ற்கு தமிழில் பெயரிட்டு தொகுத்தேன் (Compile). மீண்டும் ஆச்சர்யம். Visual Studio அதனை புரிந்து கொண்டு, முறையாக செயலாற்றியது.

உதாரணத்திற்காக ஓர் புரோகிராமை எழுதிப் பார்த்தேன். சிறிது சிரமத்திற்குப் பிறகு (FormatMessage, %1!d!), பத்து நிமிடங்களில் (பாதி) தமிழில் புரோகிராம் தயார்.

இதோ அந்த புரோகிராம்:



.............................................................................



அதற்கான விடை.



இதனால் என்ன நிறைகள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் சில குறிப்புகள் மற்றும் குறைகள்:

1. இன்னும் குறிப்பு சொற்கள் (Keyword) ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும் (ஆம். அது தானே முறை). அதனால் அவற்றை, #define செய்திருக்கிறேன்.

2. தமிழில், ஆங்கிலத்தில் இருப்பது போல் பெரிய எழுத்து, சின்ன எழுத்து வேறுபாடு இல்லாத காரணத்தினால் புரோகிராம்கள் பார்ப்பதற்கு அழகாக இல்லை.

உ.ம். பொதுவாக ஓர் Function எழுதும் போது

virtual bool EnqueueEvent (MsoEventArgs& args) = 0;

என்று எழுதுவது வழக்கம். இதனை தமிழ் படுத்தினால்

virtual bool நிகழ்வைசேர் (நிகழ்வுகுறிப்புகள்& குறிப்புகள்) = 0;

இன்னும் முறையாக தமிழ் படுத்தினால்,

கானல் ஆம்இல்லை நிகழ்வைசேர் (நிகழ்வுகுறிப்புகள்& குறிப்புகள்) = 0;

என்று வரும். முதலாவதனையும், மூன்றாவதனையும் பார்த்தாலே வேறுபாடு நன்கு தெரியும். படிப்பதற்கு இதமாக இல்லை. ஆதலால், Underscore சேர்க்க வேண்டும்.

கானல் ஆம்_இல்லை நிகழ்வை_சேர் (நிகழ்வுகுறிப்புகள்& குறிப்புகள்) = 0;

Underscore சேர்த்து எழுவது நன்றாக இருக்காது.

4. மேலும் கீவேர்டுகள், நீல நிறத்தில் (ஆங்கில முறையில்) அழகாக தெரிகின்றன. ஆனால் தமிழில் அவ்வாறு இல்லாதது குறை. இதனை ஓர் Script மூலமாக Configure செய்து, சரி செய்ய முடியும்.

5. வேற்று மொழிக்காரர் நமது புரோகிராமை பயன்படுத்த விரும்பினால், உவ்வே! அதுவே நிறையாகவும் இருக்கலாம். மற்றவர்களிடமிருந்து உங்கள் புரோகிராமை நீங்கள் மறைக்க விரும்பினால் இம்முறையை பயன்படுத்தலாம். ஆனால் அதனை கண்டுபிடிப்பது ஓர் பெரிய விசயமல்ல. ஓர் சிறிய Interpreter புரோகிராம் எழுதி, அதன் மூலம் Symbol Table உருவாக்கி அதில் தமிழ் வார்த்தைகளுக்குப் பதிலாக keyword1, keyword2, keyword332 என்று பெயரிட்டு உபயோகிப்படுத்தி விடலாம்.

தமிழில் மாறி, மாறிலி, டைப்கள் (Class, Struct, ...) பெயரிடுவதை Visual Studio 2005 புரிந்து கொள்வது மட்டுமில்லாமல், Tooltip, Error Reporting என்று முழுவதுமாக தமிழ் சப்போர்ட் செய்கிறது.



ஆனால் இதனை "நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி" என்று கூறுவது சரியாகாது. சிலவற்றை அப்படியே விட்டு விடுதல் நலம். தமிழில் புரோகிராம் எழுதுவது நன்றாக இருக்காது; தேவையும் இல்லை என்பது என் கருத்து.

குறிப்பு: யாரும் ஏற்கனவே இதனைப் பற்றி எழுதியிருந்தால், மீண்டும் அதனைப் பற்றியே எழுதுவதற்கு மன்னித்தருளவும்.

திங்கள், ஜூலை 02, 2007

ஐ-ஃபோன் மதிப்பீடு

சென்ற பதிவில், ஐ-ஃபோன் வாங்க போவதில்லை என்றும், ஆப்பிள் சி.இ.ஓ. ஜாப்ஸினை பற்றிய எனது எண்ணங்களையும் (வயித்தெரிச்சலையும்) தெரிவித்திருந்தேன். இன்று (நேற்று தயார் செய்த பதிவிது) நீண்ட நேர யோசனைக்குப் பிறகு, ஐ-ஃபோன் வாங்குவது என்று முடிவு செய்தேன்.

அதற்கு பல காரணங்கள்: சில இங்கே

1. இன்றைய நாளிதழில் வெளியாகி என்னை ஆச்சர்யப்பட செய்தி.

"It's the newest toy. I'm 62 - I don't have much time left to buy toys," said Livingstone, who stood in line with his friend Mark Stevenson, 50. They rented a room across the street and took turns to sleep.

2.மற்றவர்களை போலவே நானும் ஆவலுடன் எதிர்ப்பாத்திருந்த போன். ஏன் மற்றவர்களை விட அதிகமாகவே. ஐ-போன் நன்றாக இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை. எந்த அளவிற்கு நன்றாக இருக்கும் என்று பார்க்கவும் ஆசை.

அந்த MP3.. என்று மனதிற்குள் ஓர் ஓசை அடித்தது. சரி சரி அடங்கு... என்று மனதை தேற்றிக்கொண்டு, AT&T ஸ்டோர் நடந்தேன். இருக்காதோ என்ற ஐயத்துடனேயே உள்ளே சென்றேன். கேள்வியே... 'இன்னும் iPhone இங்கு இருக்கிறதா?', என்பது தான். 'இல்லை', என்று எதிர்பார்த்தபடியே பதில் வந்தது. Apple Store-க்கு சென்றும் பார்க்கும் படியும், 'எங்களுக்கு 300 மட்டுமே வந்தது. Apple Store-களில் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அங்கு சென்றால் கிடைக்கும்', என்றும் கூறினார். சரி என்று சில மைல்கள் தாண்டியுள்ள ஆப்பிள் ஸ்டோருக்கு சென்றேன் (அலுவலகத்திலிருந்து). ஆனால், 4GB போன்கள் மட்டுமே இருப்பதாக கூறியதையும் பொருட்படுத்தாமல் வாங்கி வந்தேன். சென்ற இரண்டாவது நிமிடத்தில் கையில் போன். நானே எதிர்பார்க்கவில்லை.

மனதில் வருத்தம்.

1. MP3 Ringtone இல்லை.
2. 8 GB இல்லை.
3. பழைய கணக்கில் உள்ள 100 டாலர் Talk Time வீணாகி விட்டது.
4. 600 டாலர்கள் மற்றும் சில்லறை செலவு.
5. Apple-ஐ encourage செய்யும் விதத்தில் மற்றுமொரு வாடிக்கையாளரானது.

பற்பல தடைகளை தாண்டி, வெற்றிகரமாக வீட்டில் ஐ-போனை Activate செய்தேன். உண்மையிலேயே இது உபயோகமா என்று ஓர் வருத்தம் இருந்தது. ஆனால் இந்த 3 மணி நேரத்தில் அந்த வருத்தம் போய் விட்டது. மிக சிறப்பு; சிற்சில குறைகளுடன்.

வடிவமைப்பு:

Font, User Interface consistency என அனைத்தும் நன்றாகவே இருக்கிறது. சுலபமாக, Visual Keyboard-க்கு பழகி அடுத்த நிமிடத்திலேயே இரண்டு விரல்களாலும் Type செய்ய ஆரம்பித்து விட்டேன். சமயங்களில் அடிக்கும் எழுத்து மாறி மற்றொரு எழுத்து விழுந்தாலும், T9 Dictionary அதனை சரி செய்து விடுகிறது.

விருப்பமான எழுத்தை அழுத்தும் போது, தெரிவு செய்த எழுத்து பெரிய வடிவில் Display-யாகி Textbox-ல் சேர்கிறது. Cap / Small letter மாறுதல் செய்ய, Shift (^) என்று அழைக்கப்படும் கீயை அழுத்தி விட்டு, விருப்பமான எழுத்தை அழுத்தினால் அது கேப்பிடல் லெட்டருக்கு (vice-versa) மாறுகிறது. ஆனால் அனைத்து எழுத்துக்களையும் Capital லெட்டரிலேயே 'Display' செய்து விட்டு, Textbox-ல் எழுத்து சேர்க்கிறது. இதனால், 'Password' பெட்டிகளில் டைப் செய்யும் போது மட்டும் ஓர் குழப்பம். இப்போது அடித்த எழுத்து, Capital எழுத்தா அல்லது Small எழுத்தா என்று.

Portrait - Landscape:

Portrait(XY) mode-லிருந்து Landscape (YX) வடிவிற்கு மாற்ற நீங்கள், போனை மாற்றிப் பிடித்தாலே போதும். இது ஆப்பிள் கூறியபடியே வேலை செய்கிறது. சமயங்களில் Landscape மாறிய பிறகு, மீண்டும் Portrait mode-ற்கு மாற மறுக்கிறது.

போன்:

ஒரு போனாக இதன் செயல்பாடு பரவாயில்லை. ஆனால் UI Refreshing பிரச்சினை எப்போதாவது ஏற்படுகிறது. இன்னும் Visual Voice Mail சோதனை செய்ய முடியவில்லை.

சிறப்பு வசதி:

உங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் எங்கிருந்து வருகின்றன என நீங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. உ.ம். San Diego, CA என்று தெரிந்து கொள்ளலாம். சமீபத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் இதற்காக ஓர் நிறுவனம், Funding பெற்றது. இப்போது, இது ஆப்பிள் போனிலேயே வந்திருப்பது அவர்களுக்கு ஓர் பின்னடைவு. ஆனால், இதன் மூலம் மற்ற போன்களில் இதே வசதியை பெற வாடிக்கையாளர்கள் விரும்புவார்கள் என்பது அவர்களுக்கு ஓர் நல்ல செய்தி.


இணையம், Safari Browser:

இது வரை வந்த போன்களில் (N95 தவிர்த்து), இணைய உலாவல் இந்த போனில் தான் அருமையாக வந்துள்ளது. Browsing மிக எளிமையாக இருக்கிறது. Gmail போன்ற AJAX தளங்கள் கூட சிறப்பாக இயங்குகிறது. HTTPS புரோட்டாகால் வசதியும் இருக்கிறது. ஒரே நேரத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட Page-கள் திறந்து வைத்து, உலாவ முடியும். ஆனால் Screen அளவிற்கு ஏற்ற மாதிரி, வார்த்தைகள் Wrap-ஆக மறுக்கின்றன. இதனால் ஒவ்வொரு வரியையும் நாமே Scrool செய்து படிக்க வேண்டியிருக்கிறது.

Zoom (Pinching & Unpinching மூலமாக) செய்வது எளிமையாக இருக்கிறது. ஆனால் Textbox-களில் ஏதாவது பல வரிகளில் அடிக்கும் போது, அந்த Textbox Contents-ஐ Scroll செய்து பார்க்க இயலாது.

Wi-Fi & Edge Roaming:

AT&T EDGE சர்வீஸ் மூலமாக, எங்கிருந்தாலும் இணையத்தில் உலாவ முடிகிறது. iPhone வருவதை முன்னிட்டு AT&T 50 மில்லியன் டாலர்கள் அளவிற்கு செலவு செய்து, EDGE வசதியை மேம்படுத்தியிருப்பதாக தெரிகிறது. வாகனங்களில் செல்லும் போது மட்டும் சிறு தடங்கல்
இருக்கிறது.

வீட்டில் இருக்கும் போது, EDGE-ற்கு பதிலாக வீட்டிலுள்ள Wi-Fi தொடர்பை தன்னிச்சையாக தெரிவு செய்து, உபயோகப்படுத்தி கொள்கிறது. இது வேகத்தை அதிகரிக்க உதவுகிறது.

ஆனால், போன் கால்களை இன்னும் Wi-Fi மூலமாக route செய்யும் வசதி இல்லை. சென்ற வாரம் Sprint இதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

மெயில்:

உங்களது Gmail, Yahoo Mail, AOL மெயில் அக்கவுண்ட்களை கொடுத்து, அவற்றை உங்களது போனிலேயே பதிவிறக்கம் (IMAP Headers மட்டும்) செய்து கொள்ளலாம். ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு, தானியங்கி முறையில் Gmail / Yahoo Mail server-ஐ தொடர்பு கொண்டு புதிய மின்னஞ்சல் இருக்கிறதா என்று சோதித்து கொள்ளும். என்னுனுடைய Gmail-ஐ இப்போதெல்லாம், இதில் தான் பார்த்து கொள்கிறேன்.

நேற்று, Microsoft நிறுவனம் Exchange Server 2007-ல் iPhone-ற்காக ஏதோ bug fix-செய்து Patch வெளியிட்டு இருப்பதாக படித்தேன். (Rollover 3) என்று நினைக்கிறேன். எதற்கு என்று தெரியவில்லை. ஒரு வேளை அலுவலக மின்ன்ஞ்சல்களை Sync-செய்வதற்காக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.



குறைகள்:

1. இது வரை இரு முறை Crash ஆகி விட்டது.

2. iPod Music listing, Font-கள் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். அந்த UI-யும் இன்னும் மேம்படுத்தியிருக்கலாம்.

3. Home Screen-க்கு வருவதற்கு மட்டும் Hard Key உபயோகப்படுத்துவதற்கு சிரமமாக இருக்கிறது.

4. கேமரா தரம் மிக குறைவே.

5. 4 அல்லது 8 GB இருந்தாலும், File System-அமைப்பை பார்க்க அனுமதிக்காததை ஏற்றுக் கொள்ள முடியாது. எந்த கோப்பையும் பதியவோ, அழிக்கவோ உங்களிடம் iTunes இருக்க வேண்டும்.

6. iPhone-ற்கான, iTunes 7.3-ஐ Windows 2000- ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நிறுவ முடிந்தாலும், iPhone-ஐ இணைக்க முடியாது.

7. Mailbox-ல் பல Item-களை தெரிவு செய்து மொத்தமாக அழிக்க முடியாது. ஒவ்வொன்றாக தான் அழிக்க வேண்டும்.

8. மெயில் Load ஆகும் பொழுது, அதனை அழிக்க இயலாது. அது ஒரு 1 MB மெயிலாக இருந்தால், அது முழுவதுமாக Download ஆகும் வரை காத்திருக்க வேண்டும்.

9. MP3 Ringtone இல்லாதது.

10. Visual Keyboard-ல் டைப் செய்வது, சில நேரங்களில் எரிச்சலாக இருக்கிறது. பெருவிரலை உபயோகப்படுத்தும் போது சிரமமாக இருக்கிறது. இடது கையில் பெருவிரலை தான் உபயோகப்படுத்துவதற்கு வசதியாக இருக்கிறது.

11. இந்த போனை வேறெந்த Operator-ன் Network-ற்கும் உபயோகப்படுத்த இயலாது.

12. பாடல்கள், மின்னஞ்சல்கள், வீடியோ மற்றும் இன்ன பிற அனைத்திற்கும் 4 GB என்பது மிக குறைவே.

13. இதனை iPod என்பதற்காக மட்டும் வாங்கி உபயோகப்படுத்த நினைத்தாலும், AT&T இணைப்பு பெற வேண்டும். ஆதலால், இதனை மற்றுமோர் iPod என்பதனை ஏற்க முடியாது.

14. iPhone-ல் உள்ள, iPod வசதி, ஒரிஜினல், iPod வசதிக்கு அருகில் கூட வர முடியாது. ஆனாலும் பாடலின் தரத்தில் சிறிது வித்தியாசத்தை உணர முடிந்தது.

14. iTunes பயம்:

தற்போது உங்களது பாடல்கள் அனைத்தும், AT&T Network-ல் தயாராக இருக்கிறது. iTunes ஏற்கனவே பல ரிக்கார்டிங் கம்பெனிகளுடன் தொழில் செய்கிறது. நீங்கள் எந்தெந்த பாடல்கள் வைத்திருக்கிறீர்கள் என்பதனை iPhone மூலமாக, Apple தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. (இதற்கு பெரும்பாலும் வாய்ப்பில்லை). சமீபத்தில் ஓர் பிரபலமான Recording நிறுவனம், University of Washington மாணவர்களுக்கு, Illegal முறையில் பாடல்கள் பதிவிறக்கம் செய்வதற்காக 4000 முதல் 50000 டாலர்கள் வரை நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ஆப்பிள் ஏற்கனவே DRM முறையை ஆரம்பத்தில் Support செய்து வந்தது. பின்னர், மகான் போல, DRM இல்லாத MP3-யை promote செய்தது. அதிலும், யார் இந்த பாடலை வாங்கியது போன்ற விபரங்களை MP3-ல் பதிவு செய்ததற்கு பலத்த கண்டனத்திற்கு உள்ளானது.

15. இணையத்திலிருந்து எந்த கோப்பையும் பதிவிறக்க செய்ய தனியான இடம் கிடையாது.

16. ஆபிஸ் Application-s இல்லாதது. இவ்வளவு இருந்தும், உங்களால் ஓர் TXT file copy செய்து வைத்துக் கொளள இயலாது. ஆனால் இணையத்தில் Google-Documents வசதி உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

17. போன் சிறிது பெரியதாக இருப்பதால், மற்றவர்கள் போன் பேசுவதை பார்க்கும் போது நம்மிடம் ஓர் போன்(?) இல்லையே என்ற குறை ஏற்படுகிறது. iPhone பார்ப்பதற்கு ஓர் போன் போல் இல்லை என்பது ஓர் குறை. எப்போதும் அதனுடன் வரும் Headset-ஐ தான் உபயோகப்படுத்த வேண்டியிருக்கிறது.

18. Development SDK இல்லாதது.

19. மிக முக்கியமானது: Unicode வசதி இல்லாதது. ஆப்பிளின் OS மற்றும் Software, 500+ MB வரை எடுத்துக் கொள்வதாக தெரிகிறது. இன்னும் 2 MB சேர்த்து, Unicode Font வசதியை கொடுத்திருக்கலாம். மிக நன்றாக இருந்திருக்கும்.

User Interaction என்று பார்த்தால், இந்த போன் சந்தையிலிருக்கும் மற்ற போன்களுக்கு எவ்வளவோ மேல். N95 சில நிமிடங்கள் மட்டும் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. இன்னும் முழுமையாக உபயோகப்படுத்தவில்லை. ஆதலால் என்னால் அதனுடன் ஒப்பிட்டு கூறமுடியாது. Qualcomm மீதான தடை நீங்கினால், LG Prada-வை பார்க்கும் வாய்ப்பு கிட்டும். நல்ல வசதிகள் இருந்தாலும், MP3, Camera, AT&T, iPod குறைபாடுகளால் இந்த போனிற்கு 80 மார்க்குகள் கொடுக்கலாம்.

வெள்ளி, ஜூன் 29, 2007

எலி ஃபோன்

கடந்த ஆறு மாதங்களாக அனைத்து இணையத் தளங்களிலும், பத்திரிக்கைகளிலும் அதிகமாக விவாதிக்கப்பட்ட, எழுதப்பட்ட செய்தி ஆப்பிள் ஐ-ஃபோன். ஆப்பிள் போன் இன்று மாலை ஆறு மணி முதல் விற்பனை ஆரம்பிக்கிறது.

இது வரை டெக்னாலஜி வரலாற்றில் எந்த போனுக்கும், ஏன் எந்த ஒரு கணினியிற்கோ, ஆப்பரடிங் சிஸ்டத்திற்கோ, சாஃப்ட்வேருக்கோ இப்படி ஓர் எதிர்பார்ப்பு எழுந்ததில்லை. அப்படி என்ன அதிசயம் இந்த ஐ-ஃபோனில். இதனைப் பற்றி எழுத போவதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. அதனைப் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இதனை வாங்கலாமா, வேண்டாமா என்று பல நாட்களாக யோசித்து வருகிறேன்.

முதலில் ஐ.போனைப் பற்றி:

ஜாப்ஸை பல முறை எனது வழிகாட்டி என்று குறிப்பிட்ட்டதுண்டு. ஆனால் அவரிடம் பிடிக்காத சில விசயங்களும் உண்டு. அவற்றுள் முக்கியமானது, கண்மூடித்தனமாக (அல்லது தெரிந்தே) தனது தயாரிப்புகளைப் பற்றி உயர்வாகவும், அதிமதிப்பீடு செய்தும் பேசுவது.

ஜனவரி மாதம் ஐபோனை பற்றிய அறிமுக கூட்டத்திலேயே, உலகிலேயே இது போன்றதொரு போன் வந்ததில்லை என்று கூறினார். ஐபோனில் பல வித்தியாசமான, நல்ல வசதிகள் உள்ளதென்பது மறுக்க முடியாதது. ஆனால் எல்லாவற்றையும் இவர்கள் தான் கண்டுபிடித்தது போல் கூறுவது ஒப்புக்கொள்ள இயலாதது. முதலில் டச் கீபேடுகள். இது LG Prada போனின் அப்பட்டமான காப்பி என்றும் கூறப்படுகிறது. இதனை நான் முழுமையாக நம்புகிறேன். LG போன்ற நிறுவனங்கள், மொபைல் போன்களில் புதுவசதிகளை புகுத்துவதற்கு புகழ் பெற்றவை (ஆப்பிள் அளவிற்கு ஒரே நாளில் அல்ல என்பது வேறு விசயம்). இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே LG சாக்லேட் என்ற மொபைல் போனை வெளியிட்டது. அதில் பட்டன்களுக்குப் பதிலாக, பட்டன்களை போன்ற அமைப்புகளின் மீது கை வைப்பதனால் ஏற்படும் வெப்பம், உள்ளீடுகளாக மாற்றப்பட்டும் சாப்ட்வேருக்கு கொடுக்கப்பட்டது. இதனால் பொத்தான்களை அழுத்த வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. உபயோகிப்பதற்கு மிகவும் சுலபமாக இருந்தது. இது ஐரோப்பாவில் பெரும் வரவேற்பினை பெற்றது. ஐரோப்பாவில் கிடைத்த வரவேற்பினால், அதே மாடல் சிற்சில மாற்றங்களுடன் வட அமெரிக்காவில் வெளியிடப்பட்டது (ஆனால் CDMA). இதில் கிடைத்த படிப்பினையின் (Learning) விளைவாக, LG, பிராடா ஃபோனை வெளியிட்டிருக்க வேண்டும். உள்ளீட்டிற்கு தனியாக ஓர் இடம் இருப்பதற்கு பதிலாக, ஸ்கிரினீலேயே உள்ளீடு செய்யும் வசதி தான் பிராடாவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை தான் ஐபோனும் கொடுக்கிறது. இதன் புகைப்படங்களை பார்த்து தான் ஐபோன் டிசைன் செய்யப்பட்டது என்று LG நிறுவனம் குற்றம் சாட்டுகிறது. இதனை இது வரை ஆப்பிள் நிறுவனம் மறுக்கவில்லை. மறுக்கவும் செய்யாது என்று நினைக்கிறேன்.

ஐ-பாட் டிவைஸ்கள் மார்கெட்டிற்கு வருவதற்கு முன்பாகவே பல நிறுவனங்கள் MP3 பிளேயர்களை சந்தையில் விற்றுக் கொண்டிருந்தன. அவற்றுள் முக்கியமானவை Creative, மற்றும் iRive. இவை இரண்டும் மிகவும் புகழ்பெற்ற பிளேயர்கள். ஆனால் ஐ-பாட் தான் உலகிலேயே முதல் MP3 பிளேயர் போல் அவர் பேசியது என்னவோ ஏற்றுக்கொள்ள இயலாதது. மற்றவர்களின் தயாரிப்பிற்கு இவர் புகழ் தேடிக்கொள்வது ஒப்புக்கொள்ள இயலாதது. இதில் மைக்ரோசாஃப்டினைப் பற்றி அடிக்கடி, 'எங்களை காப்பி செய்கிறார்கள்', என்று கூறுகிறார்.

சஃபாரியை (Safari) பற்றி இவர் விட்ட கதைகளை இப்போது நினைத்தாலும்......... 300 மில்லியன் iTunes உபயோகிப்பாளர்கள் இருக்கிறார்களாம்... ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

அதே போல், சின்ன சின்ன விசயங்களை கூட, பெரிய கண்டுபிடிப்பாக பேசுவது. அடுத்து வெளிவர போகும், Max Os 10.5 பதிப்பில் கொடுக்கவுள்ள நூற்றுக்கணக்கான வசதிகளில் (?) Top 10 வசதிகளாக அவர் இந்த மாதம் Apple Developer Connection கூட்டத்தில் பட்டியலிட்டார். அவற்றுள் வால்பேப்பர் போன்ற சிற்சில வசதிகளை கூட பெரிய விசயமாக குறிப்பிட்டு கூறியிருந்தார்.அடுத்த ஆண்டு, "10.6 பதிப்பில் புதிய கால்குலேட்டர் புரோகிராம் வெளியிடுகிறோம்', என்பார். அதற்கும் கூட்டத்தினர் கரவொலியெழுப்புவார்கள்.

புதிய wallpaper என்று அவர் கூறிய போது, அந்த வீடியோவினை பார்த்தால், கூட்டத்தில் சிரிப்பொலியினை கேட்கலாம். காரணம், அந்த வால்பேப்பர், Windows Vista Wallpaper-ஐ சிறிது ஒத்திருப்பது. வழக்கம் போல், ஜாப்ஸ் விண்டோஸை கேலி செய்கிறார் என்று நினைத்து கூட்டத்தினர் சிரித்தனர். ஆனால், கடைசியில், அது இல்லை என்று தெரிய வந்து வழக்கம் போல், 'ஆஆஆஆஆஆ, என்று உணர்ச்சிகரமாக கரவொலி எழுப்பினர். என்ன கூட்டம் சார் இது?



இதெல்லாம் இருந்தாலும், இந்த ஐ-போனை கண்டிப்பாக, எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்ற தணியாத ஆவல் இன்று வரை இருந்தது. இன்று கூட அவர்களின் அங்காடிக்கு சென்று விசாரித்து விட்டு வந்தேன். இன்று வந்த தகவல்களின் படி, வாடிக்கையாளர்கள் ஐஃபோனைப் பெற, ஏடி&டி நிறுவனத்துடன் இரண்டு வருடம் ஒப்பந்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக, பிரீபெய்டு இணைப்பு கூட பெற்று கொள்ளலாம் என்று கூறினர். இதனை நாளை வரும் செய்தி தாளை பார்த்து தான் உறுதி செய்ய வேண்டும். நல்லது; வாங்கலாம் என்று நினைத்திருந்தேன்.

ஆனாலும் வேண்டாம் என தடுத்த விசயங்களில் மிக மிக முக்கியமானது (எனக்கு):

MP3 ஃபைலை ரிங்டோனாக அமைத்து கொள்ளும் வசதி இல்லாதது. ஆப்பிள் ஐடியூன்ஸ் தளத்திலிருந்து ரிங்டோன்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால் அவை அனைத்தும் பாடல்களாக இருக்கும். சும்மா இருக்கும் போது, எனக்குப் பிடித்த பாடல்களில் இருந்து இண்ட்ஸ்ட்ருமண்ட் இசையை மட்டும் எடுத்து MP3-யாக அமைத்து கொள்வேன். எப்போதும் அவற்றையே உபயோகப்படுத்துவேன். ஆனால் இவ்வசதி ஐபோனில் இல்லாததால், அதனை வாங்கும் எண்ணம் சிறிதும் இல்லை.இப்போது, பல பத்திரிக்கைகள் மதிப்பீடுகள் எழுத ஆரம்பித்து விட்டன. அவை MP3 Ringtone வசதி இல்லையென்று உறுதி செய்துள்ளன.

கொசுறு:

* முப்பது மில்லியனுக்கும் மேற்பட்டோர்கள் இந்த ஆறுமாதங்களில் ஐ-ஃபோனைப் பற்றி கூகுள் தளத்தில் தேடியுள்ளனர்.
* ஆப்பிளின் மார்க்கெட் மதிப்பு 30 பில்லியன் டாலர்கள் உயர்ந்துள்ளன. அதாவது 50%
* எனது வீட்டிற்கு அருகிலுள்ள ஆப்பிள் ஸ்டோரில் மக்கள் இப்போதே நிற்க ஆரம்பித்து விட்டனர்.

ஸ்டீவ் மீதான வருத்தம் எல்லாம் அவரது வியாபாரத்தின் மீதும், மற்றவர்களின் உழைப்பிற்கு இவர் பெயர் வாங்கி கொள்வதனாலும், மற்றவர்களை மதிக்காமல் பேசுவதும், அதீத தற்புகழ்ச்சியினாலும் தான். ஆனாலும் அவரது உழைப்பும், திறமையும், வாழ்க்கையில் இவர் கண்ட ஏற்ற, தாழ்வுகளை மீறி சாதித்ததும், இவரது தன்னம்பிக்கையும் என்னை எப்போதும் கவர்பவை.

அதே நேரத்தில் இந்த போன், சந்தையில் புரட்சி செய்ய போகிறது என்பதை மறுப்பதிற்கில்லை. ஒவ்வொரு நிறுவனமும் (Motorola, LG, Nokia, Sony, ...), வருடம் முழுவதும் ஏனோதானோவென்று 100 மாடல்கள் வரை வெளியிட்டுக் கொண்டிருந்தன. ஒன்றுக்கொன்று பெரிய வித்தியாசம் இருக்காது. ஒரு நிறுவனம், இரண்டு வருடங்கள் உழைத்து ஒரே ஒரு மாடல் கொண்டு சந்தையில் இறங்குவது புதிது. இனியாவது மற்ற நிறுவனங்கள், இவர்களிடமிருந்து கற்றுக் கொண்டு, தரமான மொபைல் போன்கள் வெளியிடுவார்கள் என்று சிறிது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

------------------------------------------------------------------------------------

சென்ற பத்து நாட்களில் மட்டும் ஆறு படங்கள் தியேட்டரில் பார்த்து விட்டேன் என்று நினைத்தாலே அதிர்ச்சியாக இருக்கிறது.

1. Shrek 3
2. Mr. Brooks
3. Surf's Up
4. சிவாஜி
5. Ocean 13
6. Evan Almighty

நாளையும், நாளை மறுநாளும் இரண்டு படங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். அவற்றுள் ஒன்று 'Evening'. மற்றொன்று.

எலி:

Pixar ஸ்டுடியோவின், அனிமேட்டட் படங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. அனிமேட்டட் படங்கள் பெரும்பாலும் தவறாமல் பார்த்து விடுவேன். Pixar நிறுவனத்திடமிருந்து (வால் டிஸ்னி), வந்துள்ள சமீபத்திய படம் 'ராட்டடூயி' (Ratatouile). ஒரு எலியினை பற்றிய கதை. இன்று (June 29), வட அமெரிக்காவெங்கும் வெளியாகிறது. யாம் இங்குள்ள தியேட்டரில் ஆஜர்.



இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால், ஐ-ஃபோனும், இப்படமும் ஒரே நாளில் வெளியாவது தான். இரண்டுமே ஸ்டீவ் ஜாப்ஸின் தயாரிப்புகள். தெரிந்தே தான் இப்படி செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

------------------------------------------------------------------------------------

சென்ற வாரம் அருகிலுள்ள தியேட்டரில் 'Surf's up' படம் பார்க்க சென்றிருந்தேன். 10 நிமிடங்கள் தாமதமாக தான் சென்றேன். உள்ளே சென்றால் அதிர்ச்சி. திரையரங்கில் யாருமே இல்லை. நான் மட்டும் தான் தனியாக பார்த்தேன். எனக்கே ஒரு மாதிரி உறுத்தலாகிவிட்டது. அதற்கு முந்தைய நாள், 'Mr. Brooks' (நல்ல திரைப்படம்) படத்திற்காவது பரவாயில்லை. நான்கைந்து நபர்கள் இருந்தார்கள்.

எப்பொழுதாவது தியேட்டரில் தனியாக படம் பார்த்த அனுபவம் உண்டா?

செவ்வாய், ஜூன் 19, 2007

லாம்... கலாம்... திரும்பலாம்... திரும்ப வரலாம்....

மூன்றாவது அணி, தற்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களே அடுத்த ஜனாதிபதியாகவும் நீட்டிக்க வேண்டும் என்று கூறி அவரை தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டிருக்கிறார்கள்.

1. கலாம் போட்டியிடுவாரா?
2. அவருக்கு பி.ஜே.பி அல்லது தேசிய முற்போக்கு கூட்டணியினரின் (சில கட்சிகளிடமிருந்து) ஆதரவு கிட்டுமா?
3. தி.மு.கவின் நிலை என்ன?
4. அப்படியே அவர் ஜெயித்தாலும் இந்த ஐந்து வருடங்களில் செய்ய இயலாததை அடுத்த முறை என்ன செய்ய முடியும்?

என்று பல கேள்விகள்.

நேற்றைய செய்திகள் எல்லாம், இரா. செழியன் அல்லது தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி ஆகிய இருவரில் ஒருவர் மூன்றாம் அணியின் சார்பில் நிறுத்தப்படலாம் என்று கூறியிருந்தன. இதற்கு எதற்கு கூட்டம் எல்லாம்? எப்படியும் தோற்க போகிறார்கள். கூட்டத்தோடு கூட்டமாக நானும் நிற்கிறேன் என்று வேண்டுமானால் கூறிக்கொள்ளலாம் என்று நினைத்தேன். இன்றைய செய்தி சற்றும் எதிர்பாராத விதமாகவும், ஆச்சர்யமளிக்க செய்யும் வகையிலும் இருக்கிறது. ஜெ.யிடமிருந்து இப்படி ஓர் அறிக்கையா என்று வியப்பு. தலைப்பை பார்த்ததுமே பல விசயங்கள் புரிந்தது.

1. நல்ல முடிவு (எப்படி இவர்களிடமிருந்து? :))
2. ஜெ. மற்றும் கூட்டணியினர் கருணாநிதிக்கு வைத்த செக்

மூன்றாம் அணியென்று ஒன்று இருக்கிறதா என்று கேட்ட பலருக்கு, இந்த அறிக்கை மூலம் ஓர் நல்ல அறிமுகம் கிடைத்திருக்கிறது. சிறந்த முடிவு.

கலாமினால் சிறப்பாக செயல்பட முடியுமா, முடியாதா என்ற கேள்விகள் ஒரு புறம் இருந்தாலும் கூட நான் கேள்விப்பட்ட விசயம் உண்மையாக இருக்குமெனில் அவர் ஜனாதிபதியாக வருவதற்கு தான் எனது ஓட்டு. (கள்ள ஓட்டு ஜனாதிபதி தேர்தல்ல போட முடியாதோ?. இரு கழகத்தினரும் சிந்திக்க வேண்டிய விசயம்.).

சென்ற பாராளுமன்ற தேர்தலில், சோனியா காந்தி பிரதமராக வரும் வாய்ப்பிருந்த போது அதனை ஏற்க மறுத்து விட்டார் என்பதே. காலையில் அலுவலகம் செல்லும் போது, 'சோனியா தான் பிரதமரா', என்று விரக்தியுடன் சென்ற எனக்கு மாலை வீடு திரும்பும் போது கேட்ட செய்தி இனிப்பாக இருந்தது.

'மன்மோகன் சிங் பிரதமர்; சிதம்பரம் நிதித்துறை (அப்போது கேட்க நன்றாக இருந்தது). மனச்சாட்சியின் படி பதவியை உதறிவிட்டார் சோனியா', என்று இருந்தது.

கலாம் போட்டியிடுவாரா?

கலாம் போட்டியிட வாய்ப்புகள் குறைவு. பி.ஜே.பி செய்தி தொடர்பாளர் சுஷ்மா சுவராஜ், 'இரண்டு மாதங்களுக்கு முன்பே கலாம் தேர்தலில் நிற்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுத்த போது, 'போட்டியில்லாமல் தேர்வானால் சம்மதம்', என்று கலாம் கூறியதாக தெரிவித்திருந்தார். மேலும் பி.ஜே.பி பைரன் சிங் செகாவத்திற்கு தனது ஆதரவை உறுதி செய்தது போல் தெரிகிறது. ஆனால் இன்றைய பேட்டியில் செகாவத், 'கலாம் தேர்வானால் மகிழ்ச்சி', என்று தெரிவித்திருக்கிறார். அவர் உண்மையிலேயே அப்படி விரும்பி இருந்தால் சென்ற மாதமே கூறியிருக்க வேண்டும். பெண் வேட்பாளரிடம் தோல்வியுற பயந்து இப்போது கலாமிற்கு ஆதரவு தெரிவிப்பது போல் தெரிகிறது. சரி, அவர் அப்படியே விரும்பி போட்டியிலிருந்து விலகி, பி.ஜே.பி கலாமிற்கு ஆதரவு தெரிவித்தால் போட்டியிட வாய்ப்பு உண்டு. இரண்டும் நடக்க 50% வாய்ப்பிருக்கிறது. (பி.ஜே.பியும் கலாமின் மீது வருத்தத்தில் இருந்ததாக நினைத்திருந்தேன்.)

அவருக்கு பி.ஜே.பி அல்லது காங்கிரஸ் கூட்டணியினரின் ஆதரவு கிட்டுமா?:

ஷெகாவத் விலகினால். பி.ஜே.பியிடமிருந்து வாய்ப்புகள் கிட்ட பிரகாசம். யு.பி.ஏ அணியில் காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்காது. நான் மேற்கூறிய காரணம் உண்மையாக இருக்கும் பட்சத்தில். (சோனியா பிரதமராவதை கலாம் தடுத்தார் என்பது). என்னதான் மனசாட்சி என்று மழுப்பினாலும், மனக்குறை இருக்க தானே செய்யும். ஆகையினால் கலாம் மீண்டும் ஜனாதிபதியாக வருவதை விரும்ப மாட்டார் சோனியா. கம்யூனிஸ்டுகள் ஆதரவு தரவும் வாய்ப்புகள் குறைவு. (சோம்நாத் சட்டர்ஜி துணை ஜனாதிபதியாக போட்டியிட விரும்புவதாக கேள்வி).

ஷெகாவது தற்போது அடிக்கடி முணுமுணுக்கும் பாட்டு:

'பொறந்தாலும்
ஆம்பளையா பொறக்க கூடாது.
அப்படி பொறந்து விட்டா
பொம்பளைட்ட தோற்க கூடாது.'


3. தி.மு.கவின் நிலை என்ன?

ஜெ. மற்றும் அவரது கூட்டணியினடமிருந்து வந்த அறிவிப்பு நிச்சயம் தி.மு.க விற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பது உண்மை. ஆனால் கருணாநிதி வழக்கம் போல் ஏதாவது கூறி மழுப்பி விடுவார்.

'பெண்கள் இச்சமூகத்தின் கண்கள்;
அவர்கள் இதுவரை ஜனாதிபதி பதவியில் அமரவில்லை என்பது அக்கண்களில் ஏற்பட்ட
புண்கள்'.


மேலும், 'சென்ற முறை கலாம் ஜனாதிபதியாக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்ததே நான் தான்', என்றும் கூறி விடுவார்.

கருணாநிதியும் கண்டிப்பாக கலாமிற்கு ஆதரவு அளிக்க
மாட்டார். சட்டசபை (தன்) பொன்விழாவிற்கு, தான் அழைத்தும் அதில் பங்கேற்க மறுத்து
விட்டார் என்ற காரணத்தினால். மேலும் கருணாநிதி சொல்வதை ஜெ.வும், ஜெ. சொல்வதை
கருணாநிதி ஏற்பதையும் வரலாறு இது வரை கண்டதில்லையே!

'என்ன தலைவரே பேசுறீங்க... இப்படி தான் போன
மாசம் நம்ம இருளப்பன் காட்டிக் கொடுத்தான்.. அப்புறம் அவனை ஓட ஓட சந்தனம் விரட்டி
கொன்னதெல்லாம் நம்ம சோனமுத்து கண்ல வந்து போகும்ல...... இம்ம்... இம்ம்.. சொல்றா
நான் இருக்கேன் பாத்துக்குறேன்... யார் திருடுனான்னு சொல்லு' - வடிவேலு)



4. அப்படியே அவர் ஜெயித்தாலும் இந்த ஐந்து வருடங்களில் செய்ய
இயலாததை அடுத்த முறை என்ன செய்ய முடியும்?

இது முக்கியமானது. இதுவரை ஜனாதிபதியாக ஏதாவது செய்திருக்கிறாரா என்று யோசித்து பார்த்தால், அதிகமில்லை என்று தான் கூற வேண்டும். ஆனால் அப்பதவியில் அமர்ந்து கொண்டு அவ்வளவு தான் செய்ய முடியும் என்பதே உண்மை. பாகிஸ்தான் அதிபர் போல், பாராளுமன்றத்தை கலைத்து விட்டு அதிபராட்சி எல்லாம் இந்தியாவில் தற்சமயம் சாத்தியமில்லை. அது அவசியமில்லாததும் கூட.

கலாமின் ஆர்வம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

1. சியாச்சின் செல்கிறார்.
2. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சென்று மக்களையும், போர் வீரர்களையும் சந்திக்கிறார்.
3. போர் விமானத்தில் பறக்கிறார்
4. ஆயிரக்கணக்கான பள்ளிகளுக்கு சென்று லட்சக்கணக்கான குழந்தைகளை சந்தித்திருக்கிறார்.
5. அறிவியல் மாநாடுகளில் கலந்து கொண்டு அடுத்த பத்து, இருபது வருடங்களில் என்ன செய்ய வேண்டும் என்று விவாதிக்கிறார். அவருடைய Presentation காணும் வாய்ப்பு கிட்டியது.

ஜனாதிபதி என்றாலே தினமும் எழுந்து, உண்டு, பலரை சந்தித்து தூங்கிய பலருக்கு மத்தியில் ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற அவரது ஆர்வம் பாராட்டத்தக்கது. அவரால் முடிந்ததை செய்கிறார். மேலும் மெயில்களுக்கு பதில் எழுதுகிறார். பாதிக்கப்பட்டவர்கள் மெயில்களின் மூலம் அவரை தொடர்பு கொண்டதன் விளைவாக, பல நடவடிக்கைகள் எடுக்க காரணமாயிருந்திருக்கிறார்.

ஆனால் பிரதீபா வருவதற்கு தான் 80% வாய்ப்புகள் இருக்கின்றன.

இப்படி ஒருவர் இருப்பதே பலருக்கு ஏன் மீடியா, அரசியல்வாதிகளுக்கே ஒரு வாரத்திற்கு முன்பாக தெரியவில்லை. அதற்கு முன்பாக, மஹாராஷ்ரா, ராஜஸ்தான் என்று பல இணையத்தளங்களில் வரிந்து கட்டிக்கொண்டு சண்டையிடுகிறார்கள். தமிழனும் தன் பங்கிற்கு முட்டி பார்க்கிறான்.

சிரித்த கமெண்ட்:

Patil as rashtrapatniby khatta
sambhar on Jun 19, 2007 04:02 AM


Jai Maharashtra


RE:Patil as rashtrapatni by Laker on Jun 19, 2007 04:05 AM

Jai Andaman Nicobar Island


RE:Patil as rashtrapatni by kumar on Jun 19, 2007 04:16 AM

Jai Andaman Nicobar Theevu


RE:Patil as rashtrapatni by Adobe on Jun 19, 2007 05:05 AM

jai Goa


RE:Patil as rashtrapatni by Indian Citizen on Jun 19, 2007 05:07 AM

jai jhumri talaiya

இந்த குசும்பு மட்டும் இல்லையென்றால் இந்தியாவும்,
தமிழ்நாடும் (மூன்றாவது எழுதியவர் நம்மவர். Jai Andaman Nicobar Theevu :))..
முதலில் கமெண்ட் எழுதியவரை அதன் பிறகு காணவில்லை.

-------------------------------------------------------


சரி.... எது நடக்கும்னு யார் உங்கிட்ட ஆருடம் கேட்டா? வேலை இல்லை.. ஏதோ
முக்கியமான நிகழ்வை பதிந்து வைப்போம் என்று பதிகிறேன்.

திங்கள், ஜூன் 18, 2007

சிவாஜி என்றொரு குப்பை

நீண்ட நாட்களாக மற்றவர்கள் காத்திருந்தது போலவே, பலத்த எதிர்பார்ப்பிற்கு பிறகு சிவாஜி படத்திற்கு சென்றேன். 'சிவாஜி என்றொரு குப்பை' என்று கூற தான் ஆசை. ஆனால் ரஜினி ரசிகர்கள் என்னை சும்மா விட மாட்டார்கள். அந்த அளவிற்கு படமும் மோசமில்லை. உண்மை தான். படம் நன்றாக தானிருக்கிறது; நன்றாக ஓடுகிறது; ஓட வேண்டும் என்பதே எனது விருப்பமும் கூட - ஏ.வி.எம். நிறுவனத்திற்காகவாவது. எனது வருத்தமெல்லாம், சங்கர் என்றொரு குப்பையான இயக்குநர் மீது தான். பிரம்மாண்டம் எல்லாம் சரி தான். நல்ல பாடல்களை வருவிக்கும் விதத்திலும், நல்ல திரைக்கதை கொண்டு வரும் விதத்திலும், சிறு சிறு விஷயங்களில் கவனம் செலுத்தும் விதத்திலும் சிறப்பாக செயல்பட்டாலும் எவ்விதமான படங்கள் எடுக்கிறார் இவர்? இவருக்கு இந்தியாவில் சிறந்த இயக்குநர் என்றொரு பெயர் வேறு! இவருடைய இரு படங்கள் எப்படிப்பட்ட படங்கள்! (என்று நினைத்திருந்தேன்). ஜென்டில்மேன், இந்தியன். அப்புறம் தான் தெரிந்தது. இவரிடம் இருப்பது எல்லாமே ஒரே மாதிரியான கதைகள் தான் என்று. இது முதல்வன், அந்நியனில் உறுதி செய்யப்பட்டு விட்டது. சிவாஜி மற்றொரு உதாரணம். இவருடைய ஜென்டில்மேன், இன்று வரை, எனக்கு மிகவும் பிடித்தமான படங்களில் ஒன்று. அதில் எவ்விதமான மாற்றமும் இல்லை. எதற்காக, வாஜி வாஜி என்ற பாடலை நான்கு-ஆறு கோடி செல்வு செய்து எடுக்கவேண்டும்? ஒன்றும் புரியவில்லை. 'மன்றம் வந்த தென்றலுக்கு' போன்ற பாடல்களுக்கு, அது ஏன்?

அவருடைய 'என் வீட்டு தோட்டத்தில்', போன்ற பாடல்களுக்கு என்ன செலவு? கதை நன்றாக இருந்தால், எதற்காக இவ்வளவு செலவு? இவருடைய கதைகளில் என்ன இருக்கிறது என்று படங்களையும், படத்தினைப் பற்றி செய்திகளையும் மறைத்து மறைத்து வைக்கிறார் என்று தெரியவில்லை. ஒரு வேளை, படத்தில் கதையென்று ஒன்றுமே இல்லாதது தெரிந்து விட்டால் மக்கள் யாரும் படம் பார்க்க வர மாட்டார்கள் என்பதாலா? :)

சிவாஜி படத்தினை பற்றி:

1. விவேக் மிக நன்றாக செய்திருக்கிறார்; அந்நியன் போலவே. வசனங்கள் அவர் எழுதியதா அல்லது சுஜாதா எழுதியா என்று தெரியவில்லை.

நன்று. அந்நியனில், திருவையாறுக்கு விக்ரம், சதா, விவேக் ரயில் ஏறச் செல்லும் காட்சி:

பின்னணியில் மற்றொரு ரயில் கிளம்பிக் கொண்டிருக்கும். வழியனுப்ப வந்த நபரிடம், ரயிலிருக்கும் நபர் சொல்வார்.

"போனதும் லெட்டர் போடுறேன்'... (வழக்கமாக எல்லோரும் கூறுவது தான்)

அதற்கு விவேக் மெதுவாக, 'போனா லெட்டர் எல்லாம் போட மாட்டாங்கடா... தந்தி தாண்டா கொடுப்பாங்க....'. அருமை!

இது போல சிவாஜி முழுவதும் பரந்து கிடக்கிறது விவேக்கின் ராஜ்யம்.

'தமிழ்நாட்டில், கற்பை பத்தியும் கருப்பை பத்தி மட்டும் பேச கூடாது'
'பால் சாப்பிட்டு வளர்ந்த மாதிரி தெரியலையே.... டிக்காஷன் சாப்பிட்டு வளர்ந்த மாதிரி இல்ல இருக்கு...'

2. ரஜினியின் நகைச்சுவை காட்சிகளும் நன்றாக வந்திருக்கிறது.

'என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே!'

'Mr. தொண்டை சொன்னா தான் வருவேன்'

சிவாஜி மாதிரி, வசந்த மாளிகை பாடலில் முயற்சித்திருப்பது.

'இப்ப எப்படி கமலஹாசன் மாதிரி வர்றேன் பாரு'...

இது போன்ற மெல்லிய நகைச்சுவைகள்...

இப்படத்தில் ரஜினி பேசும், 'பன்னிங்க தாண்டா கூட்டமா வரும்... சிங்கம் எப்பவும் தனியாக தான் வரும்', என்ற வசனம் ஏற்கனவே 'கிரி' படத்தில் அர்ஜூன் பேசியது.

'நான் காசு தர்றேன் படிக்கிறியா', என்ற வசனமும், காட்சியும் அப்படியே 'ஜென்டில்மேன்' படத்தில் அர்ஜூன் பேசியது. பதினைந்து ஆண்டுகள் சென்றும் இன்னும் நிலைமை மாறவில்லையா?

3. பட்டிமன்ற நகைச்சுவையாளர் ராஜாவிற்கு படத்தில் ஒரு வேலையும் இல்லை. ரஜினி, இவரது வீட்டிற்கு வரும் காட்சியில் அவர் அணிந்திருக்கும் பனியன் முதலில் நன்றாக இருக்கும். அடுத்த சில நொடிகளில் கைகளில் வேர்த்துக் கொட்டியும், காட்சி முடியும் வேளையில் தொப்பல் தொப்பலாகி இருக்கும். ஏன்? அவருக்கு கொடுக்க வேறொரு பனியன் இல்லையா? என்னய்யா 80 கோடி போட்டு படம் எடுக்குறீங்க... ரெண்டு பனியன் வாங்க காசு இல்லையா? அல்லது அது அவரது முதல் நாள் ஷூட்டிங்கா?

4. தொண்டைமானாக வரும் பாப்பையா, ராஜாவிற்கு எவ்வளவோ பரவாயில்லை... 'அது தான்யா பண்பாடு...', அழகு!

5. ஸ்ரியா.... இவர் படத்தில் பேசுவதே சில வசனங்கள் தான். அதையும் ஒழுங்காக சொல்லித்தரவில்லையா? வாயசைப்பது ஒரு மாதிரியும் வசனம வேறொரு மாதிரியும் இருக்கிறது. பாடல்களில் இன்னும் மோசம். நடனம் நன்றாக ஆடுகிறார்.

6. கடைசி காட்சியில் கத்தை கத்தையாக பறந்து வரும் பணத்தை பிடிக்க வரும் மாணவன், 'இன்னும் ஆயிரம், இரண்டாயிரம் தான்', என்று ஏன் ஆகாயத்தை பார்த்துக் கொண்டிருக்கிறான்? கீழே கோடி கோடியாக இறைந்து கிடக்கிறது; எதற்காக பறக்கும் பணத்தை பிடிக்க முயற்சி செய்கிறான்? வில்லனின் கழுத்தை மிதிக்க வைப்பதற்காகவா? என்ன சங்கர்?

7. ஏ.ஆர்.ரகுமான் அடக்கி வாசித்திருக்கிறார். அல்லது வாசிக்க மறந்து விட்டாரா?

8. சண்டை காட்சிகள் மிகவும் சுமாராக இருக்கிறது. கிளைமேக்ஸை தவிர்த்துப் பார்த்தால். பின்னி மில்லில் ரஜினி ரவுடிகளை அடிப்பதும், பின்பு அவர்கள் ரஜினியுடன் இணைவது ஒட்டவே இல்லை.

9. கொச்சின் ஹனீபா வழக்கம் போல் கலக்கியிருக்கிறார்.

'வயித்துல கேபிள் கனெக்ஷன் எல்லாம் கலக்கி விட்டுடானே! அங்குட்டு போக வேண்டியது இங்குட்டு போகுது.. இங்குட்டு போக வேண்டியது அங்குட்டு போகுது....'

'உங்ககிட்ட் ஆட்சி இருக்கு... அவன் கிட்ட ஆபிஸ் ரூம் இருக்கே....'

'பிரபஷனல் எதிக்ஸ்'

9. நடன காட்சிகள். மன்னிக்கவும்...

10. இன்னொன்று மிகவும் சிரித்தது: (இரண்டாம் தர வசனம் தான்).

'என்ன ஆச்சுயா?',
'ஆப்பு வச்சாங்க... ஆனா வச்ச ஆப்பை எடுக்க மறந்துட்டாங்கன்னு நினைக்குறேன்'.

சங்கரின் அடுத்த படத்திற்கு சில உத்திகள்: (திரு. தேசிகன்: திருவாளர் சுஜாதா மூலம் சங்கருக்கு தெரிவிக்க உதவவும்)

* கடைகளில் வாங்கும் பொருளுக்கு சரியான ரசீது கொடுக்காமல் வாங்குவோரையும் ஏமாற்றி, அரசாங்கத்திற்கு முறையாக விற்பனை வரி கட்டாமல் ஏய்க்கும் வியாபாரிகளை வழிக்கு கொண்டு வரும் கதை. கருத்து: விற்பனை வரி கட்டச் செய்வதன் மூலம் மக்களுக்கு ஓர் விழிப்புணர்வு
ஏற்படுத்துதல். விளைவு: 2011 ல் இந்தியா வல்லரசு. 2011 என்பது கொஞ்சம் கஷ்டம். இவர் படம் எடுத்து முடிக்கவே இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகலாம்.

* பஸ்ஸில் டிக்கெட் எடுக்காமலும், பெரியவர்களுக்கு இடம் கொடுக்காமலும் செல்லும் நபர்களை தண்டிக்கும் ஓர் கண்டக்கரின் கதை. இதனால் நஷ்டத்தில் இயங்கும் பல பஸ்களை லாபகரமாக இயக்கலாம்.

ஹீரோ: அர்ஜூன். குறிப்பு: இதே கதையில் மல்டி-பெர்சனாலிட்டியை புகுத்தி விக்ரமை ஹீரோவாக போட்டு இன்னொரு படம் எடுத்து விடலாம்.

* விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு அடுக்குமாடி வீடுகளாகவும், தியேட்டர்களாகவும் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதற்கு காரணமான சமூக விரோதிகளை அழிக்கும் ஓர் விவசாயி.

விளைவு: 2019-ல் உலகிலேயே அதிகமாக உணவு பொருள் உற்பத்தி செய்யும் நாடாக மாற்றுதல்.

* வித்தியாசமாகவும், பிரம்மாண்டமாகவும் படம் எடுக்கிறேன் என்று மக்களின் நேரத்தையும், தயாரிப்பாளரின் பணத்தையும் வீணாக்கும் இயக்குநர்களை களையெடுக்கும் ஓர் ரசிகனின் கதை.

விளைவு: இது போன்ற பதிவுகள் வருவதையும், அதனை வேறு வழியில்லாமல் உங்களை போன்றவர்கள் படிக்க வேண்டியதையும் தவிர்க்கலாம்.

இக்கதைகளை வைத்தே இன்னும் 15 வருடங்கள் சங்கர் ஓட்டி விடலாம்.

என்ன, இவரின் பட்ஜெட் அப்போது 300 கோடியை தொட்டிருக்கும். இப்படிபட்ட கதைக்கு பட்ஜெட் 80 கோடி! வெட்ககேடு!

தனது பணத்தை முதலீடு செய்து படம் எடுக்கும் போது மட்டும் பட்ஜெட்: 2 கோடி! இவரின் எண்ணம் நல்ல எண்ணமாகவே இருந்தாலும், தனது இயக்குநர்கள் மீது நம்பிக்கை இருந்தால் இன்னும் சில கோடிகள் கொடுக்க வேண்டியது தானே? ஒரு வேளை நல்ல படம் எடுக்க இரண்டு கோடி போதுமோ? கதை இல்லாமல் படம் எடுக்கும் போது தான் 50 கோடி, 80 கோடி வேண்டுமோ?

ஆண்டவா! எதற்காக இவ்வளவு குறைகள் கூறுகிறாய் என்று கேட்காதீர்கள்.

1. நன்றாக எடுக்க வேண்டும் முயற்சிப்பவனிடம் தான் அல்லது தான் நன்றாக படம் எடுக்கிறேன் என்று நினைப்பவனிடம் தான் குறைகளைக் கூற

முடியும்.

2. 2, 3 கோடி போட்டு ஒரிரு மாதங்களில் படம் எடுப்பவருக்கும், 10 அசிஸ்டெண்ட் இயக்குநர்கள் வைத்து, சுஜாதா, ரஜினி, ரகுமான், கே.வி. ஆனந்த், பீட்டர் ஹெய்ன்ஸ், வைரமுத்து போன்ற குழுவினை உடன் வைத்துக் கொண்டும், இரண்டு வருடங்களை முழுங்கிக் கொண்டும் இப்படி கதையில் கோட்டை விடுவதும், சிறு சிறு காட்சிகளில் கோட்டை விடுவதும் சரியல்ல.

என்ன கொடுமை சரவணன்!

80 கோடி பணத்தை முதலீடு செய்துவிட்டு, இரண்டு வருடங்கள் காத்திருந்து, எடுத்த படத்தை போட்டு பார்த்தால்; அது குப்பை. சங்கர்; ரகுமான்; எல்லாவற்றிற்கும் மேலாக ரஜினி. இப்படி எல்லாமும் இருந்தும், படம் இப்படி. தயாரிப்பாளர் 'ஜெர்க்' ஆவது உறுதி தான். அதனால் தான் சரவணன் ஐயா திருப்பதி சென்று முன்னெச்செரிக்கையாக மொட்டை போட்டு விட்டு, 100 நாட்கள் ஓடினால் லாபத்தில் 25% சிவாஜி பவுண்டேஷனுக்கு கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்.

அவரது வேண்டுதல் நிறைவேறட்டும்!

அது சரி... சிவாஜி பவுண்டேஷனுக்கு தான் 46000 கோடி சொத்திருக்கிறதே... பின்பு ஏன் இன்னும் சில கோடிகள்? :)

குறிப்பு: நான் கமல் ரசிகன் அல்ல.

செவ்வாய், ஜூன் 05, 2007

ஏ.ஆர்.ரகுமானின் சான் பிரான்சிஸ்கோ இசை நிகழ்ச்சி

ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சிகள் வட அமெரிக்காவில் ஆரம்பிக்கவிருக்கின்றன என தெரிந்தது முதல், நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்ய ஆயத்தமாயிருந்தேன். சென்ற சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கு இசை நிகழ்ச்சி. ஒரு மாதத்திற்கு முன்பாகவே விமானத்தில் முன் பதிவு செய்திருந்தேன். வெள்ளிக்கிழமை மாலை 6.25 மணிக்கு விமானம். 5.00 மணிக்கு தான் அலுவலகத்திலிருந்து கிளம்ப முடிந்தது. சரி 15, 20 நிமிடங்களில் விமான நிலையம் சென்று சேர்ந்து விடலாம் என்று நினைத்தேன். போதாத நேரம். செல்லும் வழியெங்கும் சாலை நெரிசல். 6.05 மணிக்கு தான் சென்று சேர முடிந்தது. சில நேரங்களில் வெப் செக்-இன் செய்யும் வழக்கமுண்டு.ஆனால் அன்று ஏனோ செய்ய வேண்டும் என்று தோன்றவில்லை.

விமானத்தை தவற விட்டால் என்னாகும்? அடுத்த விமானம் இருக்குமா? இருந்தாலும் அதில் இடம் காலியாக இருக்குமா? வெள்ளிக்கிழமை வேறு! ஒரு மாத காலமாக காத்திருந்து, காத்திருந்து செல்லும் நிகழ்ச்சி. கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. 6.05 மணிக்கு விமான நிலையத்தை அடைந்ததும். வேகமாக செக்-இன் செய்யுமிடத்திற்கு ஓடினேன்; ஏதோ குருட்டு நம்பிக்கையில் (விமானம் தாமதமாகியிருக்கலாம்). அனைத்தும் முடிந்து விட்டதென்றும், தன்னால் எதுவும் செய்ய இயலாதென்றும் விமான நிறுவன ஊழியர், எதிர்பார்த்தது போலவே, கூறினார். அடுத்த விமானத்திற்கு மாற்றி தருவதாக கூறினார். அடுத்த விமானம் இரவு 9 மணி. சரி, நமக்கு நிகழ்ச்சிக்கு முன்பாக சென்று சேர்ந்தால் போதுமென்று, சரியென்று வேகமாக தலையை ஆட்டினேன். நண்பருக்கு நிகழ்வுகளை தெரிவித்துவிட்டு சில புத்தகங்களை வாங்கி நேரத்தை ஓட்டினேன். கடைசி நேரத்தில் மாற்றி கொடுக்கப்பட்ட டிக்கெட் என்பதால் இருக்கை எண் கொடுக்கப்படவில்லை. போர்டிங்கிற்கு செல்ல சீட்டை நீட்டிய போது, அருகில் இன்னுமொரு முறை சரிபார்த்து போர்டிங் பாஸ் வாங்கி வருமாறு பணிக்கப்பட்டேன். இருக்கை விருப்பம் என்னவென்று ஊழியர் கேட்டார். ஐல் என்று கூறினேன். ஜன்னல் ஓரம் மட்டுமே இருப்பதாக கூறினார். 'பின்ன எதுக்குய்யா விருப்பம் என்னன்னு கேக்குறீங்க', என்று நினைத்து, 'பரவாயில்லை' என்று கூறினேன். 'ஆனால் அது முதல் வகுப்பு பரவாயில்லையா', என்று கூறி சீட்டை நீட்டினார். 'கைப்புள்ள நமக்கு ஏதோ நேரம் ஒர்க் அவுட ஆகுதுடா', என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தேன்.

இரவு 1 மணிக்கு தான் கடைசியாக வீட்டிற்கு செல்ல முடிந்தது.

மறுநாள் இரவு 8 மணிக்கு நிகழ்ச்சி. 12 மணியளவில் எழுந்து, திருப்பதி பீமாஸ் சென்று மதிய சாப்பாட்டை போதும் போதுமென்ற அளவிற்கு கட்டிவிட்டு, மீண்டும் வீட்டிற்கு வந்தோம்மாலல 6.30 மணிக்கு வீட்டிலிருந்து ஆரம்பித்து, 7 மணியளவில் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு சென்று சேர்ந்தோம். (ஆரக்கிள் அரீனா, ஓக்லாண்ட்). இணையத்தில் எடுத்த முன்பதிவு சீட்டினை கொடுத்து, டிக்கெட் பெறும்போது இரவு 8 மணியாகியிருந்தது. வி.வி.ஐ.பி டிக்கெட் எடுத்திருந்தேன். ஆவலுடன் இருக்கை எண்ணை பார்த்தேன். நான்காவது வரிசை என்றிருந்தது. 'ஆஹா.. எப்படியோ முன்னாடி இடம் பிடிச்சாச்சு', என்று மகிழ்ந்து உள்ளே நுழைந்தேன். நேராக முன்வரிசைக்கு செல்ல முயன்ற போது, அரங்க ஊழியர் வலது பக்கமிருந்த வரிசைக்கு செல்லுமாறு காட்டினார். என்னுடையது வி.வி.ஐ.பி என்று சொன்ன போது, அது தான் வி.வி.ஐ.பி வரிசை என்றார். ஏதோ அரங்கிற்கு சம்பந்தமே இல்லாத ஓர் இடத்தை காட்டி அது தான் வி.வி.ஐ.பி என்று சொன்ன போது எரிச்சலாக வந்தது. மேடைக்கு முன்பாக இருந்த வரிசைகள், விளம்பரதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டதாம். இது என்ன கிரிக்கெட் மாட்சா? பெவிலியன் முழுவதும் விளம்பதரதாரர்களுக்கும், கிரிக்கெட் போர்டின் குடும்பத்தாருக்கும் ஒதுக்குவதற்கு? என்ன கொடுமை சரவணன்!








8.20 மணிக்கு அரங்கம் பாதிக்கும் மேல் நிரம்பியிருந்தது. அவ்வளவு தான் கூட்டமா என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையிலேயே, சித்ரா, 'ஜா ஹே' என்று குரு படத்தின் பாடலுடன் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். சில நிமிடங்களில், ரகுமான் அப்பாடலின் தனது பகுதியை பாடியவாறு மேடையில் தோன்றினார். ஒரே ஆரவாரம்! முன்பெல்லாம், 'ஒருவன் ஒருவன் முதலாளி' பாடலுன் ரகுமான் இசை நிகழ்ச்சிகள் துவங்குவது வழக்கம். அதற்கு எஸ்.பி. பாலசுப்ரணியம் இருக்க வேண்டும். பின்னர், சில நிகழ்ச்சிகள், ஆய்த எழுத்து படத்தின் 'ஃபனா' பாடலுடன் துவக்கப்பட்டன. இம்முறையும் அப்பாடலுடன் தான் துவங்குமென்று நினைத்திருந்தேன். மாறாக, 'ஜா ஹே' பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல். தமிழில் பாடியிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும். இப்பாடலைப் பற்றி விரிவாக சென்ற பதிவில் எழுதியிருந்தேன்.

அடுத்ததாக, சுக்விந்தர் சிங், நீத்தி, தாளம் (இந்தி) படத்திலிருந்து பாடலை பாட ஆரம்பித்தார்கள். கீழ்கண்ட படத்திலிருந்து பாடல்கள் பாடப்பட்டன.

1. ஜா ஹே (குரு) - சித்ரா, ஏ.ஆர்.ரகுமான்
2. மய்யா மய்யா - குரு - நித்தி
3. தேரே பினா - குரு - ஏ.ஆர்.ரகுமான்
4. ரூபாரூ - ரங் தே பசந்தி
5. பாத்சாலா - ரங் தே பசந்தி
6. ரங் தே பசந்தி - ரங் தே பசந்தி
7. அதிரடி - சிவாஜி
8. சஹானா - சிவாஜி
9. வா ஜி - சிவாஜி
10. சண்டை கோழி (இந்தி) - யுவா
11. ரம்தா யோகி - தாளம்
12. ஜன் ஜன் - வாட்டர்
13. சா ரீ கா மே - பாய்ஸ்
14. வெண்ணிலவே (இந்தி) - சப்னே
15. காதல் ரோஜாவே (இந்தி) - ரோஜா
16. பர்ஸோரே - குரு
17. த பாஸ் - சிவாஜி
18. பிரே ஃபார் மீ பிரதர்
19. கண்ணாளனே (இந்தி) - பம்பாய்
20. சையா சையா
21. தில் சே ரே - தில் சே
22. ஏய் ஹேரத்தே - குரு
23. வந்தே மாதரம்
24. கல்பலி ஹே - ரங் தே பசந்தி
25. ஹம்மா ஹம்மா

பாடகர்கள்:

சித்ரா
ஹரிஹரண்
சாதனா சர்கம்
மதுஸ்ரீ
நரேஷ்
விஜய் ஜேசுதாஸ்
சயோனரா

மற்றும் குழுவினரெல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாலாலாலாம் வந்திருந்தாங்க....

ஐந்து பாடல்களுக்கு பிறகு பார்த்தால், அரங்கம் 95% நிரம்பியிருந்தது. எப்படியும் 10,000 நபர்களுக்கு மேல் வந்திருப்பார்கள்.

இதன் தொடர்ச்சி அடுத்த பாகத்தில்....

திங்கள், மே 21, 2007

சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்

1. பிரே ஃபார் மீ பிரதர் (Pray for me Brother)

இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான், பிளாசே, மற்றும் குழுவினர்.

இப்பாடலின் காரணத்தைப் பற்றி நான் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. இப்பாடல் இந்தியாவில் வெளிவருவதற்கு முன்பாக பல இணையத்தளங்களில் விற்பனைக்காக இருந்தது. நானும் வாங்கி ஒலிக்க முயற்சி செய்த போது, விண்டோஸ் மீடியா பிளேயர் பழைய பதிப்பினை நான் உபயோகித்த காரணத்தினால் DRM சோதனை செய்ய இயலாமல் தயங்கி நின்றது. அலுவலகத்தில் மீடியா பிளேயரினை புதுப்பிக்க இயலாமல் கஷ்டப்பட்ட போது, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் சென்ற பழமொழி தான் ஞாபகத்திற்கு வருகிறது. இரண்டு மூன்று தினங்களுக்குப் பிறகு தான் பாடலைக் கேட்க முடிந்தது. இது மிகச் சிறந்த பாடல் இல்லாவிடிலும், நீண்ட எதிர்பார்ப்பிற்குப் பிறகு வந்த சிவாஜி பாடலை விட சிறந்த பாடலிது.

2:35-ல் யாஹி யோகோ யாஹி யோகோ என்ற இடங்கள் இனிமையாக ஒலிக்கின்றது. 3:30 குழுவினரின் ஓசை அற்புதம்.

2. மனசு மருகுதே

திரைப்படம்: பள்ளிக்கூடம்
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: சுபிக்ஷா, டாக்டர் நாராயணன்

ஆரம்ப நாட்களிலிருந்தே பரத்வாஜ் பாடல்கள் மீது எனக்கு ஓர் இனம்புரியாத ஈர்ப்பு உண்டு. உணர்வுபூர்வமாக பாடல்களுக்கு இசையமைப்பவர்களில் பரத்வாஜிற்கு எப்போதும் இடம் உண்டு. பல பாடல்களை உதாரணமாகக் குறிப்பிடலாம். காதல் மன்னனில் இடம் பெற்ற 'வானும் மண்ணும் பாடல்', பூவேலியில் இடம் பெற்ற 'இதற்கு பேர் தான் காதலா', வசூல்ராஜாவில் இடம் பெற்ற 'காடு திறந்து கிடக்கின்றது' ஆட்டோகிராபில் இடம் பெற்ற 'நினைவுகள் நெஞ்சினில்' உள்ளிட்ட பல பாடல்களைக் குறிப்பிடலாம்.அவ்வகையில் 'பள்ளிக்கூடம்' படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடலையும் சேர்த்துக்கொள்ளலாம்.

நாராயணன், ரகுமான் குழுவில் சில ஆண்டுகளாக பாடி வருகிறார். தனியாக வித்யாசாகருக்கு சில பாடல்களையும் பாடியுள்ளார். 'பொய்'-ல் மூச்சு விடாமல் ஒரு பாடலையும் பாடியுள்ளார் என்று நினைக்கிறேன். ஒரிரு முறை கேட்ட ஞாபகம். பாடல் நிச்சயமாக வெற்றி பெற்று இவருக்குப் புகழ் தேடி தரும் என்பது எனது எண்ணம்.

எதுக்கு தெரியலை
விவரம் புரியலை
....
மனசு மருகுதே

எதுக்கு தெரியுமா?
எனக்கு தெரியலை...

அற்புதமான ராகம்.

3. காற்றின் மொழி

திரைப்படம்: மொழி
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: சுஜாதா

மொழி சமீபத்தில் வந்த சிறந்த படங்களில் ஒன்று (விஜய் படங்களைத் தவிர்த்துப் பார்த்தால் :)).

'காற்றின் மொழி' என்று ஆரம்பத்திலிருந்து இறுதி வரை சுஜாதாவின் மென்மையான் குரல் பாடலுக்கு வளம் சேர்க்கிறது. வித்யாசாகரின் இசை பெரும்பாலும் சாதாரண இசைக்கருவிகளைச் சார்ந்திருக்கும். அதற்கு இப்பாடல் ஓர் சிறந்த உதாரணம். ரகுமான் கூட சில நாட்களுக்கு முன்பாக, 'கணினியின் உதவியில்லாமல் பாடல்களுக்கு இசையமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறேன்', என்று கூறியிருந்தார். அவ்வகையில், வித்யாசாகர் எப்போதோ தேர்ந்து விட்டார் எனக் கூறலாம். அவருடைய சமீப கால பாடல்கள் அனைத்துமே இது போல மிக எளிமையாக தான் இருக்கின்றன. உ.ம். தம்பி, ஜி.

4. யாரோ யாருக்குள் இங்கு யாரோ

திரைப்படம்: சென்னை - 28
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பி. சரண்

இப்பாடல் ஒரு வகையில், இளையராஜா, கார்த்திக் ராஜா இசையில் பாடிய 'யாரோ யார் யாரோ' பாடலின் கருத்தை சிறிது ஒத்திருக்கிறது.ஆரம்பத்தில் வரும் வயலின் இசை அழகு.

5. காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்

திரைப்படம்: பச்சைக்கிளி முத்துசரம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: நரேஷ் அய்யர்

இவ்வாண்டின் ஆரம்பத்தில் சென்னையில் இந்தியா - ஆஸ்திரேலியா (சரியாக ஞாபகம் இல்லை) விளையாடிய போட்டியைக் காண சேப்பாக்கம் சென்றிருந்தேன். அப்போது ஒவ்வொரு ஓவர் முடிவிலும் இப்படத்தின் டிரைலர் காட்டப்பட்டது. அதிலிடம் பெற்ற இசையால் கவரப்பட்டு இப்பாடல் வந்ததும் ஆவலுடன் இசைத்தட்டு வாங்கினேன். எல்லா பாடல்களையும் ஒரு முறை ஒலிக்கவிட்டு, பிடிக்காமல் வீட்டிலேயே வைத்துவிட்டேன். ஆனால் ஐ.பாடில் மட்டும் ரிப் செய்து வைத்திருந்தேன். ஒரு நாள், மற்ற பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்த போது, இப்பாடலும் ஒலித்தது.

நானும், சரி தான், 'உன்னாலே உன்னாலே' படம் என்று நினைத்து பின்னர் ஒலிக்கவிடலாம் என்று நினைத்திருந்தேன். மறு நாள் மீண்டும் இப்பாடலை ஒலிக்க விட எனது ஐ-பாடில் முயற்சித்த போது, 'உன்னாலே உன்னாலே' ஆல்பத்தில் இப்பாடல் எங்கும் இல்லை. 'பச்சைக்கிளி' கண்ணில் பட்டது. ஆனால் அதில் இருக்காது என்று நம்பி முயற்சி செய்யவே இல்லை. சோர்ந்து போய்விட்டேன். மீண்டும் ஒரு நாள் அதிசயம் நிகழ்ந்தது. அதே போல் மீண்டும் ராண்டமாக பாடல்களை கேட்டுக்கொண்டிருந்த போது இப்பாடல் ஒலித்தது. குறித்து வைக்க படத்தின் பேரைப் பார்த்த போது ஆச்சர்யம். என்னவொரு அற்புதமான பாடலை இத்தனை நாட்களை கையில் வைத்திருந்தும் கேட்காமல் விட்டு விட்டோமே என்று வருத்தமாக இருந்தது. சரி பாடலுக்கு வருகிறேன்.

நரேஷ் அய்யரின் குரலா இது? அற்புதம். ரகுமானுக்குப் பல பாடல்கள் பாடியிருந்தாலும், ஹாரீஸின் இசையில் இவரது குரல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது.

1:26 -ல் வரும்

எதிர்காலம் என்னை வந்து முட்டுமோ..
கொஞ்சம் மிச்சம் உள்ள அச்சம் விடுமோ
அரியாத ஒஉது ஆசான், அகம் இனி வீசும்
அதில் தானே கரைந்தோடும் நம் வாழ்வின் வனவாசம்

ஏ மல்லிச்சரமே .... உன் கண்கள் இன்று...

அற்புதம்! அற்புதம்.

6.முதல் நாள் இன்று எதுவோ ஒன்று

உன்னாலே உன்னாலே..
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கே.கே. மஹாலக்ஷ்மி

நீண்ட நாட்களாக உன்னாலே உன்னாலே பாடல்களை கேட்டு வருகிறேன். ஆரம்பத்தில் 'ஜூன் போனால்' (Blue Rise பாடலின் அச்சு அசலான நகல்) கேட்டுக் கொண்டிருந்தேன். இப்படத்தில் இப்பாடலும், ஹரிணி பாடிய 'உன்னாலே உன்னாலே' பாடலும் சிறந்த பாடல்கள். வழக்கம்
போல், ஹரிணியின் குரல் அற்புதம். அதிலும் 3:05-ல்

'சரியென்று தெரியாமல்,
தவறென்று புரியாமல்
எதில் வந்து சேர்ந்தேன் நான்...'

இனிமை!

'முதல் நாள்' பாடலில்,

2:57 'உதட்டாலே காதல் எனும் சொல்லை
உரைத்தாலே கூட வரும் தொல்லை'

இடத்தில் வரும் ராகம் நன்று. கே.கே. வழக்கம் போல் சிறப்பாக பாடியிருக்கிறார். மஹாலக்ஷ்மி பரவாயில்லை. நிச்சயம் பாம்பே ஜெயஸ்ரீயை விட நன்று.

7. ஒரே கனா

திரைப்படம்: குரு
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான், சித்ரா, மெட்ராஸ் கரோலே குழுவினர்.

இதே பாடலை சென்ற பதிவிலும் தெரிவித்திருந்தேன். இன்னும் இப்பாடல் மீதான மோகம் குறையவில்லை. ஒவ்வொரு முறை கேட்கும் போது, புத்துணர்ச்சி ஊட்டுகிறது இப்பாடல். சோர்ந்திருக்கும் தருணங்களில் புத்துயிர் ஊட்டும் பாடல்களில் இப்பாடலுக்கு, என்னுடைய பிளே லிஸ்டில் இனி எப்போதும் இடமுண்டு. இப்பாடல்களைப் பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன். இந்தி பதிவினை விட, தமிழ் பதிவு பிடிக்க காரணம், தமிழில் பாடலில் அர்த்தம் புரிய முடிவதால் தான்.

சென்ற பதிவில் இவ்வாறு எழுதியிருந்தேன்.

எனக்கு 'தேரே பினா' பாடல் பிடித்திருந்தாலும், 'ஜாகே ஹே' பாடலை நான் மிகவும் விரும்பிக் கேட்பதற்குக் காரணம், இப்பாடலில் இழைந்தோடும் சோகமும், பாடலின் நடுவில் வரும் இசையும், குழுவினரின் குரலும் தான். பாடலின் ஆரம்பத்தில் சித்ராவின் குரலையொட்டி வரும் குழுவினரின் ராகமும், வயலின் இசையும், மீண்டும் 1:50-ல் ஒரு முழக்கத்துடன் குழுவினரின் ராகம் தொடர்வது இனிமை. ரகுமான், மிக மெதுவாக, சித்ராவினைத் தொடர்ந்து பாடிவிட்டு, 3:21-ல் ரகுமான் சுருதியை உயர்த்தி பாடுவதும், 4:28-ல் அதனைத் தொடர்ந்து வரும் குழுவினரின் முழக்கமும் அற்புதம்.

இப்பாடல் தமிழில் இன்னும் அற்புதம். மெட்ராஸ் கரோலே குழுவினர் மிக மிக அருமையாக பாடியிருக்கிறார்கள். சொல்வதற்கு வார்த்தையில்லை.

ஒரே கனா என் வாழ்விலே
அதை நெஞ்சில் வைத்திருந்தேன்
கனா மெய்யாகும் நாள் வரை
உயிர் கையில் வைத்திருப்பேன்

வானே
என் மேலே
சாய்ந்தாலுமே
நான்
மீண்டு காட்டுவேன்

நீ என்னைக்
கொஞ்சம்
கொஞ்சினால்
நிலாவை வாங்குவேன்'

அற்புதமான ராகம், உயிரைக் கொல்லும் வரிகள், உயிரை உருக்கும் குரல்கள்!

குறிப்பு: அடுத்த வாரம் முதற்கொண்டு ரகுமான், வட அமெரிக்காவில் சில மாகாணங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்துகிறார். முடிந்தால் சென்று கண்டுகளிக்கவும்.

செவ்வாய், ஏப்ரல் 10, 2007

சிவாஜி பாடல்கள் மதிப்பீடு

1. வாஜி வாஜி
பாடியவர்கள்: ஹரிஹரன், மதுஸ்ரீ

சிவாஜி பாடல்கள் அதிகாரபூர்வமாக வெளியாவதற்கு முன்பாக இணையத்தில் கிடைத்த மூன்று பாடல்களில் ஒன்று; இப்படத்தில் நான் முதன் முதலாக கேட்ட பாடலும் இதே. பாடலை முதன் முதலாக கேட்ட போது உண்மையிலேயே இது 'சிவாஜி' படப் பாடல் தானா என்று எனக்கு ஒரு சந்தேகம். ஆனால் வைரமுத்து எழுதிய 'வாஜி வாஜி சிவாஜி வரிகள்', கண்டிப்பாக இது சிவாஜி பாடல் தான் என்று உறுதி செய்ததால் ஒரு நிமிடத்திலேயே அடுத்த பாடலுக்கு தாவினேன். ஆனால் பொறுமையாக ஒவ்வொரு பாடலாக கேட்ட போது இப்பாடலில் இரண்டு இடங்கள் எனக்கு பிடித்தது. ஒன்று 00:30 - 00:49 வரை வரும் 'இம்க்கும் இம்க்கும் இம்க்கும் இம்க்கும் ஆம்பல் ஆம்பல்' என்ற குழுவினரின் குரல். அதுவும் ஒவ்வொரு வார்த்தையும் இடம், வலம் என மாறி மாறி வருவது இனிமை. பொதுவாக பிளாசேயின் குரல் எனக்கு எரிச்சலை ஏற்படுத்துவதுண்டு. அபூர்வமாக இப்பாடலில் ஹரிஹரன், மதுஸ்ரீ குரலை விட பிளாசேயின் குரல் கவர்ந்தது. 2:14, 4:30-ல் 'திரிகிடாதா' என்று இடையில் அவர் ஓசையிடம் இடம் அழகு. பாடலில் நிறை என்று சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமில்லை. சாதாரண, பழைய கால இசையும், மதுஸ்ரீயின் பொருத்தமற்ற குரலும், (1:36-ல் 'வ்வாஜி வ்வாஜி' என்று உச்சரிக்கும் இடம், ரஜினியை சாணியிடச் சொல்லும் இடம்) குறைகள். ஆனால் மூன்று வாரங்கள் கேட்ட பிறகும் இன்னும் சலிக்கவில்லை.

2. சஹானா
பாடியவர்கள்: உதித் நாராயணன், சின்மயி

படத்தின் சிறந்த பாடல் இது தான் என்று நினைத்திருந்தேன்; இன்னொரு சஹானா பாடலைக் கேட்கும் வரையில். ஆனால் இப்பாடலிலிருந்து தான் அப்பாடல் பிறந்திருக்க வேண்டும் என்பது என் கருத்து. ஆகையினால் இப்பாடலுக்குத் தான் எனது ஓட்டு. முதன் முறையாக ஒரு தமிழ் பாடலை உதித் நாராயணன் மிகவும் சிரமப்பட்டு பாடியிருக்கிறார் என்று நினைக்கிறேன். வழக்கமாக 'ஸாரல் த்தூவ்வுதோ' என்று பாடியிருக்கக்கூடியவர் இதில் சிறிது தெளிவாக பாடியிருக்கிறார். ஆனாலும் சில இடங்களில் அவரால் அவரையே கட்டுப்படுத்த முடியவில்லை என்பது தெரிகிறது. இப்பாடலுக்கு சின்மயியின் குரல் மிகவும் அழகு. இப்பாடலை முதன் முதலாக கேட்ட பொழுது, பெண் குரல் யாருடையது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் சிறிது நேரம் யோசித்த பிறகு, 'உனக்கு 18 எனக்கு 20' படப் பாடலான 'அந்த சாலையில் போகின்றான்' என்ற பாடலை ஒத்திருந்தது தெரிந்த பின் தான் சின்மயி என்று அடையாளம் தெரிந்தது. அது சின்மயியின் குரலா என்று சின்மயினிடமே கேட்டேன்; பதில் இல்லை. பல்லவி முடிந்ததும் வரும் கிடார் இசையும், அதனைத் தொடர்ந்து ரகுமான், 'தீம் தர தன தீம் தர தன' எனப் பாடுவதும் அற்புதம். 3:19-ல் 'வானுக்கும் நடக்கட்டுமா... ஹோ... ஓராயிரம் ஆண்டுள் சேமித்த காதலிது...' என்று உதித் பாடுவதும், அதே வரியை சின்மயி திரும்ப வேறொரு ராகத்தில்(?. இதன் பெயர் ராகமா?) பாடுவதும் அழகு.

சஹானா, சிவாஜியின் ராணி. (சன் டிவியில் கேட்டது போல் இருக்கிறதா?)

3. ஒரு கூடை சன்லைட்
பாடியவர்கள்: ராக்ஸ், பிளாசே, தன்வி

படத்திலேயே மிக வித்தியாசமான, இந்தியத் திரைப்படத்திற்கு மிகவும் புது வகையான பாடல். பல முறை கேட்டும் பாடல் வரிகள் புரியவில்லை; மற்றவர்கள் பாடல் வரிகளை அனுப்பிய பிறகு தான் தெரிந்தது. 'அப்பத்த பிச்சை கருப்பே. இப்ப நான் செக்க சிவப்பே' என்று. சில ஆண்டுகளுக்கு முன்பு முக்காபுலாவும், சிக்குபுக்கும் இது போல தானிருந்தன. இன்னும் சிறிது நாட்கள் இப்பாடல் பேசப்படும் என்பது நிச்சயம். ஆனால் பாடல் நன்றாக இருக்கிறதா? என்னால் நிச்சயமாக சொல்ல முடியவில்லை. பாடலை வேறு யாராவது பாடியிருக்கலாம். வரிகள் இன்னும் தெளிவாக உச்சரிக்கப்பட்டிருக்கலாம். வரிகள் புரியக்கூடாது என்பது தான் எண்ணம் என்றால் தமிழ் எதற்கு?

4. பல்லேலக்கா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

ரஜினிக்கு படத்தின் அறிமுக பாடல் என்று நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா? முதலில் கேட்ட போது, என்ன இது சந்திரமுகியின் 'அரே அரே' பாடலின் இரண்டாம் பதிப்போ என்று தோன்றியது. ஆனால் பல முறை கேட்ட பிறகு பிடித்துப் போனது. 'பாபா' படத்தில் சங்கர் மகாதேவன் பாடிய பாடலில் செய்த தவறை ரகுமான் மீண்டும் செய்ய மாட்டார் என்று அசாத்திய நம்பிக்கை வீண் போகவில்லை. எதிர்பார்த்தது போலவே எஸ்.பி.பியை பாடச் செய்திருந்தார். எஸ்.பி.பி வழக்கம் போல் மிகச் சிறப்பாக பாடியிருக்கார். 'பல்லேலக்கா... சேலத்துக்கா மதுரைக்கா...' இடங்களும், '...கூரையின் ஓட்டை விரிசல் வழி நட்சத்திரம் எண்ணிப்பாருலே' என்ற இடத்தில் 'லே' என்று எஸ்.பி.பி அழுத்தம் கொடுப்பது அழகு. இப்பாடல் வெற்றி பெறத்தவறி விடும் என்ற கணிப்பு சில நாட்களிலேயே பொய்த்துப் போனது. பாடலில் ரெஹானா பாடும் 'ஆலமரத்திற்கு ஜடையை பின்னி தான்...' என்ற வரிகளை வேறு யாராவது பாடியிருக்கலாம்.

5. சஹாரா
பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், கோமதி ஸ்ரீ

விஜய் ஜேசுதாஸின் குரல் பரவாயில்லை. 'மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவாய்' என்று கோமதி ஸ்ரீ பாடும் திருப்பாவை அற்புதம்! என்னவொரு அற்புதமான படைப்பு. ராகம் அமைத்த விதமும், கோமதி ஸ்ரீயின் குரலும் மிகச் சிறப்பு. இப்பாடலைத் தொடர்ந்து ஒரே நாளில் பல பத்து முறைகள் கேட்டிருக்கிறேன்; கோமதி ஸ்ரீ பாடிய திருப்பாவைக்காக. சிறப்பு திருப்பாவையிலா; அல்லது அதனை கல்நெஞ்சம் படைத்தவரும் கரையும் விதமாக பாடிய கோமதி ஸ்ரீயின் குரலிலா அல்லது அத்திருப்பாவைக்கு ரகுமான் கொடுத்த அற்புதமான ராகத்திலா என்று தெரியவில்லை. இப்பாடலை கேட்ட பிறகு, ராகா.காம்-ல் சுதா ரகுநாதன், டி.கே.பட்டம்மாள் இன்னும் பிறர் பாடிய இதே 'மாலே மணிவண்ணா' கேட்டேன். உண்மையை சொல்வதென்றால் இப்பாடலில் உள்ள அழுத்தம் அப்பாடல்களில் இல்லை. இப்பாடலின் (திருப்பாவை) வரிகள் சோகம் நிறைந்தவை அல்ல. ஆனால் அதற்கு இது போல சோக வடிவம் கொடுத்தது தான் இப்பாடலுக்கு அழகு சேர்த்தது என்று கூறுவேன். சுதா ரகுநாதனும் இன்ன பிற பாடகர்களும் (இப்பாடலின் பிற வடிவங்களைப் பாடியவர்கள்), இப்பாடலை கேட்ட பிறகு, இது போல் ஏன் நமக்கு தோன்றாமல் போய்விட்டது என்று நினைத்திருப்பார்கள் என்பது என் கருத்து. இன்னுமொரு 'குனித்த புருவமும்' (தளபதி). இல்லை; அதனை விட சிறப்பு வாய்ந்தது இது என்று கூறுவேன். எங்கள் ஊருக்கு, இன்னுமொரு திருப்பாவை பாடலின் வழி சிறப்பு. ஏற்கனவே 'ஹே ராம்' திரைப்படத்தில் ஓர் திருப்பாவை பாடல் இடம்பெற்றிருந்தது.

ரகுமான் (மே, 28-ம் தேதி, ரெடிஃப் தளத்தில்) தனது பேட்டியில் கோமதிஸ்ரீயைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மோமதிஸ்ரீ, ரகுமானின் குரு தக்ஷ்ணாமூர்த்தி சுவாமிகளின் மகள் ஆவார்.


"Gomathishree, daughter of Rahman's guru Dakhshinamurthi Swamigal"

"Gomathi is not just a film singer but she has an interesting voice," says Rahman. "I have plans to compose a few songs for her for a non-film album I want to produce"

6. அதிரடி தான்
பாடியவர்கள்: ரகுமான், சயோனரா

'லப்போ லப்போ' என்று பாடலின் ஆரம்பத்திலிருந்து ஒரே அதிரடி தான். சிறந்த பாடல் அல்ல; ஆனால் நல்ல பாடல். நீண்ட நாட்களுக்குப் பிறகு ரகுமான் அதிரடி காதல் பாடலை பாடியிருக்கிறார். 'ஹம்மா.. ஹம்மா', 'ஹலோ டாக்டர்' பாடல்களுக்குப் பிறகு. முதல் சரணத்திற்கு முன்பு வரும் கிடார் இசை அழகு. 2:30 'கண்கள் என் ??? ராஜர் மூர் போல்... ' என்று பாடுமிடத்தில் ரகுமானின் குரல் அற்புதம்.


7. இதனைத் தவிர ஒரு தீம் மியூசிக்கும் இந்த இசை ஆல்பத்தில் உண்டு. ஆனால் அதனைப் பற்றி எழுதும் அளவிற்கு அதில் ஒன்றுமில்லை.

மொத்தத்தில், சிவாஜி ரகுமானின் வழக்கமான ஆல்பம் அல்ல. ரஜினிக்காக நிறைய விட்டுக்கொடுத்திருக்கிறாரோ என்று தோன்றுகிறது. அதே நேரத்தில் 'பாபா' போல கவனக்குறைவாகவும் இசையமைக்கப்பட்டது போல் தோன்றவில்லை. சங்கரும், ரஜினிக்காக மிகவும் விட்டுக்கொடுத்திருக்கிறது போல் தோன்றுகிறது. சங்கர், 'பல்லேலக்கா', 'வாஜி வாஜி' வகை பாடல்களை ஒப்புக்கொள்பவர் அல்ல என்பது என் கருத்து. ஆனால் பாடல்களில் பழைய, புதிய, கேட்டிராத வகை என அனைத்து வகை இசையும், குரலும் உண்டு. இது ஒரு 'இந்தியன்' போன்ற சிறப்பான படைப்பு என்று கூற முடியாவிட்டலும் இந்தியன் போல் வெற்றி பெற வாய்ப்புகள் மிக அதிகம்.

ஸ்ருசல்