திங்கள், ஜூலை 02, 2007

ஐ-ஃபோன் மதிப்பீடு

சென்ற பதிவில், ஐ-ஃபோன் வாங்க போவதில்லை என்றும், ஆப்பிள் சி.இ.ஓ. ஜாப்ஸினை பற்றிய எனது எண்ணங்களையும் (வயித்தெரிச்சலையும்) தெரிவித்திருந்தேன். இன்று (நேற்று தயார் செய்த பதிவிது) நீண்ட நேர யோசனைக்குப் பிறகு, ஐ-ஃபோன் வாங்குவது என்று முடிவு செய்தேன்.

அதற்கு பல காரணங்கள்: சில இங்கே

1. இன்றைய நாளிதழில் வெளியாகி என்னை ஆச்சர்யப்பட செய்தி.

"It's the newest toy. I'm 62 - I don't have much time left to buy toys," said Livingstone, who stood in line with his friend Mark Stevenson, 50. They rented a room across the street and took turns to sleep.

2.மற்றவர்களை போலவே நானும் ஆவலுடன் எதிர்ப்பாத்திருந்த போன். ஏன் மற்றவர்களை விட அதிகமாகவே. ஐ-போன் நன்றாக இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை. எந்த அளவிற்கு நன்றாக இருக்கும் என்று பார்க்கவும் ஆசை.

அந்த MP3.. என்று மனதிற்குள் ஓர் ஓசை அடித்தது. சரி சரி அடங்கு... என்று மனதை தேற்றிக்கொண்டு, AT&T ஸ்டோர் நடந்தேன். இருக்காதோ என்ற ஐயத்துடனேயே உள்ளே சென்றேன். கேள்வியே... 'இன்னும் iPhone இங்கு இருக்கிறதா?', என்பது தான். 'இல்லை', என்று எதிர்பார்த்தபடியே பதில் வந்தது. Apple Store-க்கு சென்றும் பார்க்கும் படியும், 'எங்களுக்கு 300 மட்டுமே வந்தது. Apple Store-களில் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அங்கு சென்றால் கிடைக்கும்', என்றும் கூறினார். சரி என்று சில மைல்கள் தாண்டியுள்ள ஆப்பிள் ஸ்டோருக்கு சென்றேன் (அலுவலகத்திலிருந்து). ஆனால், 4GB போன்கள் மட்டுமே இருப்பதாக கூறியதையும் பொருட்படுத்தாமல் வாங்கி வந்தேன். சென்ற இரண்டாவது நிமிடத்தில் கையில் போன். நானே எதிர்பார்க்கவில்லை.

மனதில் வருத்தம்.

1. MP3 Ringtone இல்லை.
2. 8 GB இல்லை.
3. பழைய கணக்கில் உள்ள 100 டாலர் Talk Time வீணாகி விட்டது.
4. 600 டாலர்கள் மற்றும் சில்லறை செலவு.
5. Apple-ஐ encourage செய்யும் விதத்தில் மற்றுமொரு வாடிக்கையாளரானது.

பற்பல தடைகளை தாண்டி, வெற்றிகரமாக வீட்டில் ஐ-போனை Activate செய்தேன். உண்மையிலேயே இது உபயோகமா என்று ஓர் வருத்தம் இருந்தது. ஆனால் இந்த 3 மணி நேரத்தில் அந்த வருத்தம் போய் விட்டது. மிக சிறப்பு; சிற்சில குறைகளுடன்.

வடிவமைப்பு:

Font, User Interface consistency என அனைத்தும் நன்றாகவே இருக்கிறது. சுலபமாக, Visual Keyboard-க்கு பழகி அடுத்த நிமிடத்திலேயே இரண்டு விரல்களாலும் Type செய்ய ஆரம்பித்து விட்டேன். சமயங்களில் அடிக்கும் எழுத்து மாறி மற்றொரு எழுத்து விழுந்தாலும், T9 Dictionary அதனை சரி செய்து விடுகிறது.

விருப்பமான எழுத்தை அழுத்தும் போது, தெரிவு செய்த எழுத்து பெரிய வடிவில் Display-யாகி Textbox-ல் சேர்கிறது. Cap / Small letter மாறுதல் செய்ய, Shift (^) என்று அழைக்கப்படும் கீயை அழுத்தி விட்டு, விருப்பமான எழுத்தை அழுத்தினால் அது கேப்பிடல் லெட்டருக்கு (vice-versa) மாறுகிறது. ஆனால் அனைத்து எழுத்துக்களையும் Capital லெட்டரிலேயே 'Display' செய்து விட்டு, Textbox-ல் எழுத்து சேர்க்கிறது. இதனால், 'Password' பெட்டிகளில் டைப் செய்யும் போது மட்டும் ஓர் குழப்பம். இப்போது அடித்த எழுத்து, Capital எழுத்தா அல்லது Small எழுத்தா என்று.

Portrait - Landscape:

Portrait(XY) mode-லிருந்து Landscape (YX) வடிவிற்கு மாற்ற நீங்கள், போனை மாற்றிப் பிடித்தாலே போதும். இது ஆப்பிள் கூறியபடியே வேலை செய்கிறது. சமயங்களில் Landscape மாறிய பிறகு, மீண்டும் Portrait mode-ற்கு மாற மறுக்கிறது.

போன்:

ஒரு போனாக இதன் செயல்பாடு பரவாயில்லை. ஆனால் UI Refreshing பிரச்சினை எப்போதாவது ஏற்படுகிறது. இன்னும் Visual Voice Mail சோதனை செய்ய முடியவில்லை.

சிறப்பு வசதி:

உங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் எங்கிருந்து வருகின்றன என நீங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. உ.ம். San Diego, CA என்று தெரிந்து கொள்ளலாம். சமீபத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் இதற்காக ஓர் நிறுவனம், Funding பெற்றது. இப்போது, இது ஆப்பிள் போனிலேயே வந்திருப்பது அவர்களுக்கு ஓர் பின்னடைவு. ஆனால், இதன் மூலம் மற்ற போன்களில் இதே வசதியை பெற வாடிக்கையாளர்கள் விரும்புவார்கள் என்பது அவர்களுக்கு ஓர் நல்ல செய்தி.


இணையம், Safari Browser:

இது வரை வந்த போன்களில் (N95 தவிர்த்து), இணைய உலாவல் இந்த போனில் தான் அருமையாக வந்துள்ளது. Browsing மிக எளிமையாக இருக்கிறது. Gmail போன்ற AJAX தளங்கள் கூட சிறப்பாக இயங்குகிறது. HTTPS புரோட்டாகால் வசதியும் இருக்கிறது. ஒரே நேரத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட Page-கள் திறந்து வைத்து, உலாவ முடியும். ஆனால் Screen அளவிற்கு ஏற்ற மாதிரி, வார்த்தைகள் Wrap-ஆக மறுக்கின்றன. இதனால் ஒவ்வொரு வரியையும் நாமே Scrool செய்து படிக்க வேண்டியிருக்கிறது.

Zoom (Pinching & Unpinching மூலமாக) செய்வது எளிமையாக இருக்கிறது. ஆனால் Textbox-களில் ஏதாவது பல வரிகளில் அடிக்கும் போது, அந்த Textbox Contents-ஐ Scroll செய்து பார்க்க இயலாது.

Wi-Fi & Edge Roaming:

AT&T EDGE சர்வீஸ் மூலமாக, எங்கிருந்தாலும் இணையத்தில் உலாவ முடிகிறது. iPhone வருவதை முன்னிட்டு AT&T 50 மில்லியன் டாலர்கள் அளவிற்கு செலவு செய்து, EDGE வசதியை மேம்படுத்தியிருப்பதாக தெரிகிறது. வாகனங்களில் செல்லும் போது மட்டும் சிறு தடங்கல்
இருக்கிறது.

வீட்டில் இருக்கும் போது, EDGE-ற்கு பதிலாக வீட்டிலுள்ள Wi-Fi தொடர்பை தன்னிச்சையாக தெரிவு செய்து, உபயோகப்படுத்தி கொள்கிறது. இது வேகத்தை அதிகரிக்க உதவுகிறது.

ஆனால், போன் கால்களை இன்னும் Wi-Fi மூலமாக route செய்யும் வசதி இல்லை. சென்ற வாரம் Sprint இதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

மெயில்:

உங்களது Gmail, Yahoo Mail, AOL மெயில் அக்கவுண்ட்களை கொடுத்து, அவற்றை உங்களது போனிலேயே பதிவிறக்கம் (IMAP Headers மட்டும்) செய்து கொள்ளலாம். ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு, தானியங்கி முறையில் Gmail / Yahoo Mail server-ஐ தொடர்பு கொண்டு புதிய மின்னஞ்சல் இருக்கிறதா என்று சோதித்து கொள்ளும். என்னுனுடைய Gmail-ஐ இப்போதெல்லாம், இதில் தான் பார்த்து கொள்கிறேன்.

நேற்று, Microsoft நிறுவனம் Exchange Server 2007-ல் iPhone-ற்காக ஏதோ bug fix-செய்து Patch வெளியிட்டு இருப்பதாக படித்தேன். (Rollover 3) என்று நினைக்கிறேன். எதற்கு என்று தெரியவில்லை. ஒரு வேளை அலுவலக மின்ன்ஞ்சல்களை Sync-செய்வதற்காக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.



குறைகள்:

1. இது வரை இரு முறை Crash ஆகி விட்டது.

2. iPod Music listing, Font-கள் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். அந்த UI-யும் இன்னும் மேம்படுத்தியிருக்கலாம்.

3. Home Screen-க்கு வருவதற்கு மட்டும் Hard Key உபயோகப்படுத்துவதற்கு சிரமமாக இருக்கிறது.

4. கேமரா தரம் மிக குறைவே.

5. 4 அல்லது 8 GB இருந்தாலும், File System-அமைப்பை பார்க்க அனுமதிக்காததை ஏற்றுக் கொள்ள முடியாது. எந்த கோப்பையும் பதியவோ, அழிக்கவோ உங்களிடம் iTunes இருக்க வேண்டும்.

6. iPhone-ற்கான, iTunes 7.3-ஐ Windows 2000- ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நிறுவ முடிந்தாலும், iPhone-ஐ இணைக்க முடியாது.

7. Mailbox-ல் பல Item-களை தெரிவு செய்து மொத்தமாக அழிக்க முடியாது. ஒவ்வொன்றாக தான் அழிக்க வேண்டும்.

8. மெயில் Load ஆகும் பொழுது, அதனை அழிக்க இயலாது. அது ஒரு 1 MB மெயிலாக இருந்தால், அது முழுவதுமாக Download ஆகும் வரை காத்திருக்க வேண்டும்.

9. MP3 Ringtone இல்லாதது.

10. Visual Keyboard-ல் டைப் செய்வது, சில நேரங்களில் எரிச்சலாக இருக்கிறது. பெருவிரலை உபயோகப்படுத்தும் போது சிரமமாக இருக்கிறது. இடது கையில் பெருவிரலை தான் உபயோகப்படுத்துவதற்கு வசதியாக இருக்கிறது.

11. இந்த போனை வேறெந்த Operator-ன் Network-ற்கும் உபயோகப்படுத்த இயலாது.

12. பாடல்கள், மின்னஞ்சல்கள், வீடியோ மற்றும் இன்ன பிற அனைத்திற்கும் 4 GB என்பது மிக குறைவே.

13. இதனை iPod என்பதற்காக மட்டும் வாங்கி உபயோகப்படுத்த நினைத்தாலும், AT&T இணைப்பு பெற வேண்டும். ஆதலால், இதனை மற்றுமோர் iPod என்பதனை ஏற்க முடியாது.

14. iPhone-ல் உள்ள, iPod வசதி, ஒரிஜினல், iPod வசதிக்கு அருகில் கூட வர முடியாது. ஆனாலும் பாடலின் தரத்தில் சிறிது வித்தியாசத்தை உணர முடிந்தது.

14. iTunes பயம்:

தற்போது உங்களது பாடல்கள் அனைத்தும், AT&T Network-ல் தயாராக இருக்கிறது. iTunes ஏற்கனவே பல ரிக்கார்டிங் கம்பெனிகளுடன் தொழில் செய்கிறது. நீங்கள் எந்தெந்த பாடல்கள் வைத்திருக்கிறீர்கள் என்பதனை iPhone மூலமாக, Apple தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. (இதற்கு பெரும்பாலும் வாய்ப்பில்லை). சமீபத்தில் ஓர் பிரபலமான Recording நிறுவனம், University of Washington மாணவர்களுக்கு, Illegal முறையில் பாடல்கள் பதிவிறக்கம் செய்வதற்காக 4000 முதல் 50000 டாலர்கள் வரை நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ஆப்பிள் ஏற்கனவே DRM முறையை ஆரம்பத்தில் Support செய்து வந்தது. பின்னர், மகான் போல, DRM இல்லாத MP3-யை promote செய்தது. அதிலும், யார் இந்த பாடலை வாங்கியது போன்ற விபரங்களை MP3-ல் பதிவு செய்ததற்கு பலத்த கண்டனத்திற்கு உள்ளானது.

15. இணையத்திலிருந்து எந்த கோப்பையும் பதிவிறக்க செய்ய தனியான இடம் கிடையாது.

16. ஆபிஸ் Application-s இல்லாதது. இவ்வளவு இருந்தும், உங்களால் ஓர் TXT file copy செய்து வைத்துக் கொளள இயலாது. ஆனால் இணையத்தில் Google-Documents வசதி உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

17. போன் சிறிது பெரியதாக இருப்பதால், மற்றவர்கள் போன் பேசுவதை பார்க்கும் போது நம்மிடம் ஓர் போன்(?) இல்லையே என்ற குறை ஏற்படுகிறது. iPhone பார்ப்பதற்கு ஓர் போன் போல் இல்லை என்பது ஓர் குறை. எப்போதும் அதனுடன் வரும் Headset-ஐ தான் உபயோகப்படுத்த வேண்டியிருக்கிறது.

18. Development SDK இல்லாதது.

19. மிக முக்கியமானது: Unicode வசதி இல்லாதது. ஆப்பிளின் OS மற்றும் Software, 500+ MB வரை எடுத்துக் கொள்வதாக தெரிகிறது. இன்னும் 2 MB சேர்த்து, Unicode Font வசதியை கொடுத்திருக்கலாம். மிக நன்றாக இருந்திருக்கும்.

User Interaction என்று பார்த்தால், இந்த போன் சந்தையிலிருக்கும் மற்ற போன்களுக்கு எவ்வளவோ மேல். N95 சில நிமிடங்கள் மட்டும் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. இன்னும் முழுமையாக உபயோகப்படுத்தவில்லை. ஆதலால் என்னால் அதனுடன் ஒப்பிட்டு கூறமுடியாது. Qualcomm மீதான தடை நீங்கினால், LG Prada-வை பார்க்கும் வாய்ப்பு கிட்டும். நல்ல வசதிகள் இருந்தாலும், MP3, Camera, AT&T, iPod குறைபாடுகளால் இந்த போனிற்கு 80 மார்க்குகள் கொடுக்கலாம்.

9 கருத்துகள் :

MSATHIA சொன்னது…

ஸ்ருசல்,
விரிவான விளக்கம் மற்றும் அலசல். தமிழில் இதுபோன்ற விளக்கக்கட்டுரைகளும் பொருள்சார்ந்த விமர்சனங்களும் காணக்கிடைப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

பெயரில்லா சொன்னது…

Hi,
Its a good post. By the way, not sure if I am getting the point below right. Are you saying, with a windows pc, iPhone cannot be connected and songs can be loaded thru iTunes? Please clarify.

//6. iPhone-ற்கான, iTunes 7.3-ஐ Windows 2000- ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நிறுவ முடிந்தாலும், iPhone-ஐ இணைக்க முடியாது.
//

ஸ்ருசல் சொன்னது…

/// விரிவான விளக்கம் மற்றும் அலசல்

நன்றி சத்யா...

Nat...

iTunes 7.3, iPhone-ற்காக புதிதாக வெளியிடப்பட்டுள்ள Software. இதற்கு முந்தைய iTunes அனைத்தும் Windows 2000, XP என இரண்டிலும் வேலை செய்தன. iPod device-ஐ இரண்டு OS-யிலும் பயன்படுத்த முடிந்தது.

ஆனால் 7.3-ஐ, Windows 2000-ல் வெற்றிகரமாக Install செய்ய முடிந்தாலும், அதனைக் கொண்டு iPhone-ஐ Sync செய்ய இயலாது. XP-ல் மட்டும் தான் செய்ய முடியும்.

7.3 Windows 2000-ல் நிறுவ முடிந்ததற்கு காரணம், iPod Backward compatability என்று நினைக்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

Excellent Review....

Amazing Effort for this write up...!!!!!!!!

பெயரில்லா சொன்னது…

மிகவும் அருமையாக எழுதி இருக்கிறீர்கள்....

இது போன்றதொரு ப்ராடக்ட் ரிவ்யூவை தமிழில் இதுவரை படித்ததில்லை...

செந்தழல் ரவி

ஸ்ருசல் சொன்னது…

நன்றி அனானி, செந்தழல் ரவி....

ILA (a) இளா சொன்னது…

நல்லதொரு விளக்கம்?(தமிழில்). அதுக்குள்ள பிரிச்சு போட்டாச்சா உங்க பதிவு மாதிரியே.

ஸ்ருசல் சொன்னது…

அத ஏன் கேக்குறீங்க... ஐ-போன் எப்படா வரும் என்று பல நிறுவனங்கள், அதனை பிரித்து பார்ப்பதற்காகவே, காத்திருந்தன.

நேரடி ஒளிபரப்பு (Disassembly செய்வதை) கூட செய்தன, சில இணைய தளங்கள்.

தென்றல் சொன்னது…

ஸ்ருசல்,

அருமையான விளக்கம்... நல்ல அலசல்.

/
இது வரை இரு முறை Crash ஆகி விட்டது.
/
எதனால் என்று சொல்லமுடியுமா? நன்றி!!