வெள்ளி, ஜூன் 29, 2007

எலி ஃபோன்

கடந்த ஆறு மாதங்களாக அனைத்து இணையத் தளங்களிலும், பத்திரிக்கைகளிலும் அதிகமாக விவாதிக்கப்பட்ட, எழுதப்பட்ட செய்தி ஆப்பிள் ஐ-ஃபோன். ஆப்பிள் போன் இன்று மாலை ஆறு மணி முதல் விற்பனை ஆரம்பிக்கிறது.

இது வரை டெக்னாலஜி வரலாற்றில் எந்த போனுக்கும், ஏன் எந்த ஒரு கணினியிற்கோ, ஆப்பரடிங் சிஸ்டத்திற்கோ, சாஃப்ட்வேருக்கோ இப்படி ஓர் எதிர்பார்ப்பு எழுந்ததில்லை. அப்படி என்ன அதிசயம் இந்த ஐ-ஃபோனில். இதனைப் பற்றி எழுத போவதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. அதனைப் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இதனை வாங்கலாமா, வேண்டாமா என்று பல நாட்களாக யோசித்து வருகிறேன்.

முதலில் ஐ.போனைப் பற்றி:

ஜாப்ஸை பல முறை எனது வழிகாட்டி என்று குறிப்பிட்ட்டதுண்டு. ஆனால் அவரிடம் பிடிக்காத சில விசயங்களும் உண்டு. அவற்றுள் முக்கியமானது, கண்மூடித்தனமாக (அல்லது தெரிந்தே) தனது தயாரிப்புகளைப் பற்றி உயர்வாகவும், அதிமதிப்பீடு செய்தும் பேசுவது.

ஜனவரி மாதம் ஐபோனை பற்றிய அறிமுக கூட்டத்திலேயே, உலகிலேயே இது போன்றதொரு போன் வந்ததில்லை என்று கூறினார். ஐபோனில் பல வித்தியாசமான, நல்ல வசதிகள் உள்ளதென்பது மறுக்க முடியாதது. ஆனால் எல்லாவற்றையும் இவர்கள் தான் கண்டுபிடித்தது போல் கூறுவது ஒப்புக்கொள்ள இயலாதது. முதலில் டச் கீபேடுகள். இது LG Prada போனின் அப்பட்டமான காப்பி என்றும் கூறப்படுகிறது. இதனை நான் முழுமையாக நம்புகிறேன். LG போன்ற நிறுவனங்கள், மொபைல் போன்களில் புதுவசதிகளை புகுத்துவதற்கு புகழ் பெற்றவை (ஆப்பிள் அளவிற்கு ஒரே நாளில் அல்ல என்பது வேறு விசயம்). இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே LG சாக்லேட் என்ற மொபைல் போனை வெளியிட்டது. அதில் பட்டன்களுக்குப் பதிலாக, பட்டன்களை போன்ற அமைப்புகளின் மீது கை வைப்பதனால் ஏற்படும் வெப்பம், உள்ளீடுகளாக மாற்றப்பட்டும் சாப்ட்வேருக்கு கொடுக்கப்பட்டது. இதனால் பொத்தான்களை அழுத்த வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. உபயோகிப்பதற்கு மிகவும் சுலபமாக இருந்தது. இது ஐரோப்பாவில் பெரும் வரவேற்பினை பெற்றது. ஐரோப்பாவில் கிடைத்த வரவேற்பினால், அதே மாடல் சிற்சில மாற்றங்களுடன் வட அமெரிக்காவில் வெளியிடப்பட்டது (ஆனால் CDMA). இதில் கிடைத்த படிப்பினையின் (Learning) விளைவாக, LG, பிராடா ஃபோனை வெளியிட்டிருக்க வேண்டும். உள்ளீட்டிற்கு தனியாக ஓர் இடம் இருப்பதற்கு பதிலாக, ஸ்கிரினீலேயே உள்ளீடு செய்யும் வசதி தான் பிராடாவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை தான் ஐபோனும் கொடுக்கிறது. இதன் புகைப்படங்களை பார்த்து தான் ஐபோன் டிசைன் செய்யப்பட்டது என்று LG நிறுவனம் குற்றம் சாட்டுகிறது. இதனை இது வரை ஆப்பிள் நிறுவனம் மறுக்கவில்லை. மறுக்கவும் செய்யாது என்று நினைக்கிறேன்.

ஐ-பாட் டிவைஸ்கள் மார்கெட்டிற்கு வருவதற்கு முன்பாகவே பல நிறுவனங்கள் MP3 பிளேயர்களை சந்தையில் விற்றுக் கொண்டிருந்தன. அவற்றுள் முக்கியமானவை Creative, மற்றும் iRive. இவை இரண்டும் மிகவும் புகழ்பெற்ற பிளேயர்கள். ஆனால் ஐ-பாட் தான் உலகிலேயே முதல் MP3 பிளேயர் போல் அவர் பேசியது என்னவோ ஏற்றுக்கொள்ள இயலாதது. மற்றவர்களின் தயாரிப்பிற்கு இவர் புகழ் தேடிக்கொள்வது ஒப்புக்கொள்ள இயலாதது. இதில் மைக்ரோசாஃப்டினைப் பற்றி அடிக்கடி, 'எங்களை காப்பி செய்கிறார்கள்', என்று கூறுகிறார்.

சஃபாரியை (Safari) பற்றி இவர் விட்ட கதைகளை இப்போது நினைத்தாலும்......... 300 மில்லியன் iTunes உபயோகிப்பாளர்கள் இருக்கிறார்களாம்... ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

அதே போல், சின்ன சின்ன விசயங்களை கூட, பெரிய கண்டுபிடிப்பாக பேசுவது. அடுத்து வெளிவர போகும், Max Os 10.5 பதிப்பில் கொடுக்கவுள்ள நூற்றுக்கணக்கான வசதிகளில் (?) Top 10 வசதிகளாக அவர் இந்த மாதம் Apple Developer Connection கூட்டத்தில் பட்டியலிட்டார். அவற்றுள் வால்பேப்பர் போன்ற சிற்சில வசதிகளை கூட பெரிய விசயமாக குறிப்பிட்டு கூறியிருந்தார்.அடுத்த ஆண்டு, "10.6 பதிப்பில் புதிய கால்குலேட்டர் புரோகிராம் வெளியிடுகிறோம்', என்பார். அதற்கும் கூட்டத்தினர் கரவொலியெழுப்புவார்கள்.

புதிய wallpaper என்று அவர் கூறிய போது, அந்த வீடியோவினை பார்த்தால், கூட்டத்தில் சிரிப்பொலியினை கேட்கலாம். காரணம், அந்த வால்பேப்பர், Windows Vista Wallpaper-ஐ சிறிது ஒத்திருப்பது. வழக்கம் போல், ஜாப்ஸ் விண்டோஸை கேலி செய்கிறார் என்று நினைத்து கூட்டத்தினர் சிரித்தனர். ஆனால், கடைசியில், அது இல்லை என்று தெரிய வந்து வழக்கம் போல், 'ஆஆஆஆஆஆ, என்று உணர்ச்சிகரமாக கரவொலி எழுப்பினர். என்ன கூட்டம் சார் இது?



இதெல்லாம் இருந்தாலும், இந்த ஐ-போனை கண்டிப்பாக, எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்ற தணியாத ஆவல் இன்று வரை இருந்தது. இன்று கூட அவர்களின் அங்காடிக்கு சென்று விசாரித்து விட்டு வந்தேன். இன்று வந்த தகவல்களின் படி, வாடிக்கையாளர்கள் ஐஃபோனைப் பெற, ஏடி&டி நிறுவனத்துடன் இரண்டு வருடம் ஒப்பந்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக, பிரீபெய்டு இணைப்பு கூட பெற்று கொள்ளலாம் என்று கூறினர். இதனை நாளை வரும் செய்தி தாளை பார்த்து தான் உறுதி செய்ய வேண்டும். நல்லது; வாங்கலாம் என்று நினைத்திருந்தேன்.

ஆனாலும் வேண்டாம் என தடுத்த விசயங்களில் மிக மிக முக்கியமானது (எனக்கு):

MP3 ஃபைலை ரிங்டோனாக அமைத்து கொள்ளும் வசதி இல்லாதது. ஆப்பிள் ஐடியூன்ஸ் தளத்திலிருந்து ரிங்டோன்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால் அவை அனைத்தும் பாடல்களாக இருக்கும். சும்மா இருக்கும் போது, எனக்குப் பிடித்த பாடல்களில் இருந்து இண்ட்ஸ்ட்ருமண்ட் இசையை மட்டும் எடுத்து MP3-யாக அமைத்து கொள்வேன். எப்போதும் அவற்றையே உபயோகப்படுத்துவேன். ஆனால் இவ்வசதி ஐபோனில் இல்லாததால், அதனை வாங்கும் எண்ணம் சிறிதும் இல்லை.இப்போது, பல பத்திரிக்கைகள் மதிப்பீடுகள் எழுத ஆரம்பித்து விட்டன. அவை MP3 Ringtone வசதி இல்லையென்று உறுதி செய்துள்ளன.

கொசுறு:

* முப்பது மில்லியனுக்கும் மேற்பட்டோர்கள் இந்த ஆறுமாதங்களில் ஐ-ஃபோனைப் பற்றி கூகுள் தளத்தில் தேடியுள்ளனர்.
* ஆப்பிளின் மார்க்கெட் மதிப்பு 30 பில்லியன் டாலர்கள் உயர்ந்துள்ளன. அதாவது 50%
* எனது வீட்டிற்கு அருகிலுள்ள ஆப்பிள் ஸ்டோரில் மக்கள் இப்போதே நிற்க ஆரம்பித்து விட்டனர்.

ஸ்டீவ் மீதான வருத்தம் எல்லாம் அவரது வியாபாரத்தின் மீதும், மற்றவர்களின் உழைப்பிற்கு இவர் பெயர் வாங்கி கொள்வதனாலும், மற்றவர்களை மதிக்காமல் பேசுவதும், அதீத தற்புகழ்ச்சியினாலும் தான். ஆனாலும் அவரது உழைப்பும், திறமையும், வாழ்க்கையில் இவர் கண்ட ஏற்ற, தாழ்வுகளை மீறி சாதித்ததும், இவரது தன்னம்பிக்கையும் என்னை எப்போதும் கவர்பவை.

அதே நேரத்தில் இந்த போன், சந்தையில் புரட்சி செய்ய போகிறது என்பதை மறுப்பதிற்கில்லை. ஒவ்வொரு நிறுவனமும் (Motorola, LG, Nokia, Sony, ...), வருடம் முழுவதும் ஏனோதானோவென்று 100 மாடல்கள் வரை வெளியிட்டுக் கொண்டிருந்தன. ஒன்றுக்கொன்று பெரிய வித்தியாசம் இருக்காது. ஒரு நிறுவனம், இரண்டு வருடங்கள் உழைத்து ஒரே ஒரு மாடல் கொண்டு சந்தையில் இறங்குவது புதிது. இனியாவது மற்ற நிறுவனங்கள், இவர்களிடமிருந்து கற்றுக் கொண்டு, தரமான மொபைல் போன்கள் வெளியிடுவார்கள் என்று சிறிது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

------------------------------------------------------------------------------------

சென்ற பத்து நாட்களில் மட்டும் ஆறு படங்கள் தியேட்டரில் பார்த்து விட்டேன் என்று நினைத்தாலே அதிர்ச்சியாக இருக்கிறது.

1. Shrek 3
2. Mr. Brooks
3. Surf's Up
4. சிவாஜி
5. Ocean 13
6. Evan Almighty

நாளையும், நாளை மறுநாளும் இரண்டு படங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். அவற்றுள் ஒன்று 'Evening'. மற்றொன்று.

எலி:

Pixar ஸ்டுடியோவின், அனிமேட்டட் படங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. அனிமேட்டட் படங்கள் பெரும்பாலும் தவறாமல் பார்த்து விடுவேன். Pixar நிறுவனத்திடமிருந்து (வால் டிஸ்னி), வந்துள்ள சமீபத்திய படம் 'ராட்டடூயி' (Ratatouile). ஒரு எலியினை பற்றிய கதை. இன்று (June 29), வட அமெரிக்காவெங்கும் வெளியாகிறது. யாம் இங்குள்ள தியேட்டரில் ஆஜர்.



இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால், ஐ-ஃபோனும், இப்படமும் ஒரே நாளில் வெளியாவது தான். இரண்டுமே ஸ்டீவ் ஜாப்ஸின் தயாரிப்புகள். தெரிந்தே தான் இப்படி செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

------------------------------------------------------------------------------------

சென்ற வாரம் அருகிலுள்ள தியேட்டரில் 'Surf's up' படம் பார்க்க சென்றிருந்தேன். 10 நிமிடங்கள் தாமதமாக தான் சென்றேன். உள்ளே சென்றால் அதிர்ச்சி. திரையரங்கில் யாருமே இல்லை. நான் மட்டும் தான் தனியாக பார்த்தேன். எனக்கே ஒரு மாதிரி உறுத்தலாகிவிட்டது. அதற்கு முந்தைய நாள், 'Mr. Brooks' (நல்ல திரைப்படம்) படத்திற்காவது பரவாயில்லை. நான்கைந்து நபர்கள் இருந்தார்கள்.

எப்பொழுதாவது தியேட்டரில் தனியாக படம் பார்த்த அனுபவம் உண்டா?

24 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

ஐ.போன் பற்றி நல்ல வீச்சான அனாலிஸிஸ்...

அருமை...!!!

கடைசி கொசுறு கூட நன்று...!!

Boston Bala சொன்னது…

---எப்பொழுதாவது தியேட்டரில் தனியாக படம் பார்த்த அனுபவம் உண்டா?---

'உன்னைக் கொடு என்னைத் தருவேன்' - இரண்டாவது பாதியில் கூட வந்த நண்பனும் கிளம்பிச் சென்று விட, கொடுத்த எட்டு டாலருக்காக, ஒன்றரை மணி நேரம் அதிகம் செல்வழித்து ரசித்தேன் :)

ப்ரசன்னா (குறைகுடம்) சொன்னது…

mp3-க்களை, itune-ல் இறக்கி ringtone-ஆக பயன்படுத்த முடியாதா?
'Knocked Up' பார்த்தீர்களா?

பகீ சொன்னது…

எடுத்த எடுப்பிலேயே உங்கள் கணிப்புகள் தவறானவை என்பதை கூறுவதற்கு மன்னியுங்கள். ஆனால் அதூதான் உண்மை.

//முதலில் டச் கீபேடுகள். இது LG Prada போனின் அப்பட்டமான காப்பி என்றும் கூறப்படுகிறது//
ஐபோனில் இருப்பது கீபேட்டில் டச் செய்வதாக இருந்தாலும், அது மல்ரிரச் எனப்படும் புதிய ஒரு கண்டுபிடிப்பு (உள்ளீட்டு முறை). இதனை அப்பிள் நிறுவனம் முறையாக us இல் பேற்றன்ற் எடுத்திருக்கின்றது.

அப்பிள் நிறுவனம் LG இன் குற்றச்சாட்டை மறுக்கவில்லை என்பதற்கா, அப்பிள் நிறுவனம் குற்றமிழைத்தது என எவ்வாறு கருதுகின்றீர்கள்? ஏன் LG நிறுவனம் Cisco நிறுவனம் போல வழக்கொன்றை தொடுக்கவில்லை என நினைக்கின்றீர்கள்??

பல்வேறு MP3 player கள் இருக்கின்றன தான். ஆனால் உங்கள் மனதை தொட்டுச் சொல்லுங்கள் உங்களை ஒரு MP3 player வாங்கச்சொன்னால் எதனை வாங்குவீர்கள்? really apple reinvented MP3 player.

அப்பிள் நிறுவனத்தின் statistic இனை நீங்கள் குறை சொல்ல முற்படாதீர்கள். அது ஆதார பூர்வமானது. அத்துடன் நீங்கள் குறிப்பிட்ட 300 மில்லியன் கணக்கை ஒருபோதும் அப்பிள் வெளியிட்டதில்லை அதனை எங்கு பெற்றீர்கள் என்று கூற முடியுமா?

Max Os 10.5 வெளிவந்த பின்னர், அதிலிருக்கும் வசதிகளை பார்த்த பின்னர் அதனைப்பற்றிய உங்கள் குறைநிறைகளை சொல்லுங்கள். அவசரப்படாதீர்கள்.

உங்கள் விளக்கத்தை எதிர்பார்க்கின்றேன்.

ஸ்ருசல் சொன்னது…

உன்னைக் கொடு என்னைத் தருவேன் படத்திற்கு சென்றீர்களா?

இன்னும் அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியே பார்க்கவில்லை என்று கேள்வி.

:)

ஸ்ருசல் சொன்னது…

mp3-க்களை, itune-ல் இறக்கி ringtone-ஆக பயன்படுத்த முடியாதா?
>>

முடியாது என்று நினைக்கிறேன். நீங்கள் iTunes மூலம் ஆப்பிள் மியூசிக் தளத்திலிருந்து பணம் கொடுத்து வாங்கி Ringtone-ஆக உபயோகப்பட்டுத்த முடியும்.
இதை சில இணைய தளங்களும் உறுதி செய்துள்ளன.

ஆனாலும், இன்னும் சில நாட்களில் இந்த குறை நிவர்த்தி செய்யப்படும் என்று நினைக்கிறேன்.

சில நிமிடங்கள் கழித்து வந்து மறுமொழிகிறேன்.....

ILA (a) இளா சொன்னது…

ஐ போன் பற்றி அதிரடியான சே சே அடிதடியான விமர்சனம். ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துகளே.

இலவசக்கொத்தனார் சொன்னது…

பக்ரைன் தியேட்டர் ஒன்றில் நானும் நண்பனும் மட்டும் ஒரு படம் பார்த்தோம்.

பாபா, பார்த்தீர்கள் சரி. ரசித்தீர்களாஆஆஆஆ?? :))

ஸ்ருசல் சொன்னது…

//அப்பிள் நிறுவனம் LG இன் குற்றச்சாட்டை மறுக்கவில்லை என்பதற்கா, அப்பிள் நிறுவனம் குற்றமிழைத்தது என எவ்வாறு கருதுகின்றீர்கள்? ஏன் LG நிறுவனம் Cisco நிறுவனம் போல வழக்கொன்றை தொடுக்கவில்லை என நினைக்கின்றீர்கள்?? ///

இந்த உள்ளீடு முறையை மட்டும் காப்பி செய்ததாக நான் கூற முயலவில்லை. போனின் அமைப்பு, திரை வடிவம், எல்லாமே LG Prada விடமிருந்து பெறப்பட்டதாக தெரிகிறது. Prada இன்னும் சந்தைக்கு வரவில்லை. அதிலும் அமெரிக்காவில் இன்னும் சில மாதங்களுக்கு வராது என்று நினைக்கிறேன். பிராட்காமிற்கும், குவால்காமிற்கு இடையேயான Patent Dispute காரணமாக, FTA நிறுவனம் Prada உட்பட பல போன்களை தடை செய்துள்ளது.

LG நிறுவனம் இது வரை வழக்கு தொடுக்கவில்லை. தொடுக்கவும் செய்யாது என்று நினைக்கிறேன். LG Prada-வின் ஃபோட்டோக்கள், சென்ற ஆண்டோ அல்லது அதற்கு முந்தைய ஆண்டோ Flickr போன்ற தளங்களில் இருந்ததாகவும் அதை பார்த்து ஐபோன் வடிவமைக்கப்பட்டதாகவும், LG நிறுவன பிரதிநிதியே தெரிவித்திருக்கிறார். ஆனால் எப்படி இதை நிரூபிப்பது?. அதன் காரணமாக அவர்களும் சிறிது தயங்கலாம். மேலும் ஆப்பிள், LG நிறுவனத்தில் வாடிக்கையாளர்களில் ஒரு நிறுவனம். ஆப்பிள் iPod-ற்கு LG நிறுவனம் Hardware செய்து கொடுத்ததாக கேள்வி. இது கூட அவர்களின் தயக்கத்திற்கு காரணமாக இருக்கலாம்.


/// பல்வேறு MP3 player கள் இருக்கின்றன தான். ஆனால் உங்கள் மனதை தொட்டுச் சொல்லுங்கள் உங்களை ஒரு MP3 player வாங்கச்சொன்னால் எதனை வாங்குவீர்கள்? really apple reinvented MP3 player.

என்னிடமிருப்பது iPod Nano தான். :)

iPod-ற்கு முன்பாக, iRiver (www.iriver.com) மற்றும் கிரியேட்டிவின் பிளேயர்கள் மிகவும் பிரசித்தம்.ஆப்பிள் அளவிற்கு, குலோபல் மார்க்கெட் அவர்களுக்கு இல்லாதது ஓர் காரணமாக இருக்கலாம். அல்லது மார்க்கெட்டிங் இல்லையென்பது காரணமாக இருக்கலாம். iPod-ற்கு, iRiver, கிரியேட்டிவ் எவ்வளவிலும் குறைவில்லை என்று அடித்து கூறுவேன். இது மைக்ரோசாஃப்ட்டுடன், Netscape மோதுவதற்கு சமம். எதனால் Netscape வீழ்ந்தது? Microsoft-நிறுவனமா Browser-ஐ கண்டுபிடித்தது?

//அப்பிள் நிறுவனத்தின் statistic இனை நீங்கள் குறை சொல்ல முற்படாதீர்கள். அது ஆதார பூர்வமானது. அத்துடன் நீங்கள் குறிப்பிட்ட 300 மில்லியன் கணக்கை ஒருபோதும் அப்பிள் வெளியிட்டதில்லை அதனை எங்கு பெற்றீர்கள் என்று கூற முடியுமா?//

ஆப்பிள் வெளியிடவில்லை. ஆனால் ஸ்டீவ் ஜாப்ஸ், சில நாட்களுக்கு முன்பு நடந்த, 'D: All Things Digital', conference-ல் குறிப்பிட்டிருக்கிறார்.

//Max Os 10.5 வெளிவந்த பின்னர், அதிலிருக்கும் வசதிகளை பார்த்த பின்னர் அதனைப்பற்றிய உங்கள் குறைநிறைகளை சொல்லுங்கள். அவசரப்படாதீர்கள். //

நான் iPhone-லோ, Mac OS 10.5-லோ, வசதிகள் குறைவு என்றோ, எதிர்பார்க்கும் அளவிற்கு சிறப்பாக செயல்படாது என்றோ கூறவில்லை. அவரின் வியாபார யுத்தியும், கண்மூடித்தனமான பேச்சையும் தான் குறை கூறுகிறேன்.

'The Planet's Best Brower', என்று சஃபாரியை பற்றி கூறுவது எல்லாம் சிறிது அதிகம் தானே?

ஆப்பிள் ஏன் iPhone-ல் 3rd party applications அனுமதிக்கவில்லை என்ற கேள்விக்கு, ஜாப்ஸின் பதிலை படித்திருக்கிறீர்களா? சில Hacker-கள் அதனை தவறாக உபயோகப்படுத்தி, நாட்டில் உள்ள செல்போன் டவர்களை செயலிழக்க செய்து விடுவார்களாம். எப்போதாவது இது நடந்திருக்கிறதா?

Mac OS X, ஆப்பரேட்டிங் சிஸ்டம், iPhone-க்கு எப்படி உபயோகப்படுத்த முடியும்? அதன் Simplified / modified version-ஆக தான் இருக்க முடியும். Windows Vista-வும், Windows CE-யும் ஒன்றாக முடியுமா?

மணிகண்டன் சொன்னது…

'ஈ' படத்தை ஒரு ஈ காக்கா கூட இல்லாம தனியாளா சான் ஓசேல பார்த்தேன்னா நம்பமுடியுதா? அதுவும் முதல் நாள் முதல் ஷோ :)

ஸ்ருசல் சொன்னது…

வித்யாசாகர், பேக்ரவுண்ட் மியுசிக்-ல கொன்னுருப்பாரே?

நான் காதை மூடிக்கொண்டு பார்த்த படங்களில் ஈ-யும் ஒன்று.

கண்ணை மூடிக் கொண்டு பார்த்த படங்கள் பல....

ஸ்ருசல் சொன்னது…

//சில நிமிடங்கள் கழித்து வந்து மறுமொழிகிறேன்..... //

'Knocked Up' அருகிலுள்ள தியேட்டரில் வரவே இல்லை. பார்க்க வேண்டும்.

ஸ்ருசல் சொன்னது…

நான் இந்தப் பதிவில் குறிப்பிட்டிந்தது போலவே, இன்று AT&T நிறுவனம் ஓரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

iPhone வாங்க விரும்போவோர்கள், பிரீ பெய்டு கணக்கின் மூலம் கூட அதனை பெற்று கொள்ளலாம் என்பது.

http://uk.reuters.com/article/technologyNews/idUKN2926197120070630

ilavanji சொன்னது…

ஸ்ருசால்,

// புதிய wallpaper என்று அவர் கூறிய போது, அந்த வீடியோவினை பார்த்தால், கூட்டத்தில் சிரிப்பொலியினை கேட்கலாம் //

லிங்க் கிடைக்குங்களா?!

ஸ்ருசல் சொன்னது…

ஒரிஜினல் வீடியோவை தேடி கொண்டிருக்கிறேன்.

சுமாரான தரத்துடனான வீடியோ இதோ:

http://youtube.com/watch?v=Pc_KvJ7d4Jk&mode=related&search=

ஸ்ருசல் சொன்னது…

அங்கு கூட சிலர்,

Hahaha, did you hear the laughing - I thought it was a joke too.

++++++++++++

Unfortunately, the desktop picture looks very Vista. Hence the laughing I think. All the rest is Mac magic though. I especially appreciate the top bar blending into your desktop picture. Tiger suddenly looks so last century :)

++++++++++++++


தெரிவித்திருக்கிறார்கள். :)

I thought I was the only one who felt that way....

விரைவில், நான் பார்த்த முழு வீடியோ லிங்கை அனுப்புகிறேன். அது ஆப்பிள் தளத்தின் முதல் பக்கத்திலேயே இரண்டு வார காலமாக இருந்தது. iPhone ரிலீஸ் காரணமாக, அது எங்கோ மறக்கடிக்கப்பட்டுவிட்டது.

ஸ்ருசல் சொன்னது…

ஒரிஜினல் இங்கே இருக்கிறது:

http://www.apple.com/quicktime/qtv/wwdc07/

பகீ சொன்னது…

உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி. ஐபோன் வடிவமைப்பு ஐபொட் வடிவமைப்பின் மேம்பாடு என நான் சொன்னால் உங்களால் அதனை மறுக்க முடியுமா??

Global marketing என்பது பற்றி சொல்கின்றீர்கள் அப்படியானால் மைக்ரோசொவ்ற் zune என்னானது என்கின்றீர்கள்? அப்பிள் நிறுவனத்தை விட சிறந்த Global marketing இனை sony நிறுவனம் கொண்டிருந்தது என்பதை நீங்கள் மறுக்க முடியுமா?

வலியது பிழைக்கும் என்பது உண்மைதான் என்றாலும், browser இனை உருவாக்கியது Netscape என்கின்றீர்களா? இப்போது நெருப்புநரி என்ன செய்கின்றது என்று நினைக்கின்றீர்கள். நீங்கள் பயன்படுத்து ம் இணைய உலாவி எதுவாக இருக்கின்றது?

அவரது வியாபார யுத்தியும், பேச்சும் அவரது தன்னம்பிக்கையின் வெளிப்பாடே தவிர குறைகூறப்படக்கூடியதொன்று. Actually steve is an Icon.

Safari பற்றிய கூற்று, ஐபோன் இலிலுள்ள இணைய உலாவி பற்றியது என்பது என் எண்ணம். அவ்வாறிருப்பின் இது வரை வந்த கைப்பேசிகளுக்கான இணைய உலாவிகளில் இவ்வளவு வசதிகளுடன் வந்திருக்கும் Safari is the planet's best browser in mobile.

இப்பொழுது ஐபோன் 3rd party applications இனை அனுமதிக்கின்றது என்று கேள்விப்பட்டேன். இது உண்மையில்லையா??

Mac OS X என்பது அவர்களது குறியீட்டு பெயர். அதன் பல்வேறு பதிப்புகள்தான் tiger (10.4) உம் leopard (10.5) உம். ஐபோன் இற்கான பதிப்பு எதுவென அவர்கள் அறிவிக்கவில்லை.

உங்கள் விளக்கங்கள் அல்லது பதில்களை எதிர்பார்க்கின்றேன்.

ஸ்ருசல் சொன்னது…

///உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி. ஐபோன் வடிவமைப்பு ஐபொட் வடிவமைப்பின் மேம்பாடு என நான் சொன்னால் உங்களால் அதனை மறுக்க முடியுமா??////

அதனை வாங்குபவர்கள் யாரும் அதனை iPod என்று மட்டும் வாங்குவதில்லை. முதலில் அது ஃபோன். ஒரு போனாக, அதற்குரிய வேலையை திறம்பட செய்தாலே வெற்றி பெற்று விடும்.

பகீ, நான் iPhone-ஐ முழுவதுமாக குறை சொல்லவில்லை என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதனை எனது பதிவில் தெரிவித்திருக்கிறேன்.

//மைக்ரோசொவ்ற் zune என்னானது என்கின்றீர்கள்?//

Zune, தவறான காலகட்டத்தில் வந்த தவறான Product. Really irrelevant product (RIP). இது Internet Explorer-உடன், Safari மோதுவதற்கு சமம். Google-உடன், Ask.com மோதுவதற்கு சமம். Safari-யையும் மில்லியன் கணக்கில் மக்கள் பதிவிறக்கம் செய்திருப்பார்கள். அது எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காகவே. நான் கூட செய்தேன். அடுத்த சில நிமிடங்களில் Uninstall செய்து விட்டேன். Safari விண்டோஸிற்கு கொண்டு வந்ததற்கு காரணம் வேறு என்பது என் கணிப்பு. (iPhone-க்கு Web Application Develop செய்வதற்காக). நான் IE, Firefox இரண்டும் உபயோகிக்கிறேன்.

அடுத்து Firefox: எதனால் இது உருவானது என்று உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். IE-யின் போட்டியை சமாளிக்க முடியாமல், வேறு வழியில்லாமல், Mozilla என்ற Open Source project ஆரம்பித்தார்கள். முதன் முதலாக, முழுமையான Browser, Netscape-மிடம் இருந்து தான் வந்தது. Open Source project-ஆக மாற்றிய பின்பு தான் பலர் அதில் கலந்து கொண்டு, Mozilla, அதன் பின்னர் FireFox என்று உருமாறியது. இதற்கு inspiration Linux பிராஜக்ட்.

நான் கூறவருவது, முதல் முழு தயாரிப்பு Netscape. ஆனால் அதனைத் தொடர்ந்து வந்த IE, Safari கொடிகட்டி வருகின்றன. இதே போல் தான் மற்ற MP3 பிளேயர்களும் ஆனது என்பது என் கருத்து. இப்போது iPod, ஓரளவிற்கு SanDisk கொடிகட்டி பறக்கின்றன.

//அவரது வியாபார யுத்தியும், பேச்சும் அவரது தன்னம்பிக்கையின் வெளிப்பாடே தவிர குறைகூறப்படக்கூடியதொன்று//

அது பல தருணங்களில் தவறான விளைவுகளை கொடுக்கின்றன என்பது என் கருத்து. அவரிடம் பணி புரிந்தவர்கள் கொடுத்த பேட்டிகள் எடுத்து படித்து பாருங்கள். சமீபத்திய உதாரணம். ஜாப்ஸ், 'Firefox-ன் இடத்தை முழுவதுமாக பிடிப்போம்', என்று கூறியிருப்பது.

//Safari is the planet's best browser in mobile.

இதற்கு காரணம் iPhone-ன் வடிவமைப்பே. பெரிய திரை, WiFi support. N95 எடுத்து பாருங்கள்.

// இப்பொழுது ஐபோன் 3rd party applications இனை அனுமதிக்கின்றது என்று கேள்விப்பட்டேன். இது உண்மையில்லையா??

இது வரை இல்லை. ஆனால், Browser applications எழுத முடியும். Ajax, JS உபயோகப்படுத்தி எழுதிய Web Applications, iSafari ல் இயக்க முடியும். ஆனால் அதற்கு தனியாக Web Hosting / PWS வைத்திருக்க வேண்டும். Symbian, BREW, Win Mobile தருவது போல் Native Code எழுத முடியாது.

//Mac OS X என்பது அவர்களது குறியீட்டு பெயர். அதன் பல்வேறு பதிப்புகள்தான் tiger (10.4) உம் leopard (10.5) உம். ஐபோன் இற்கான பதிப்பு எதுவென அவர்கள் அறிவிக்கவில்லை. //

அவர் கூறியது, "We already have an excellent OS. Yes... We are going to use MAC OS X..." அதன் உண்மையான அர்த்தம். "Mac OS X", iPhone-ற்காக Port செய்வோம் என்பதே. Mac OS X அப்படியே iPhone-ல் வேலை செய்யும் என்பதல்ல. இதை தான், Microsoft-யும் செய்கிறது. Windows NT Kernel-ஐ எடுத்து, Win CE-யாக மாற்றினார்கள்.

Linux-ம், ucLinux, Linux RTOS என்று உருமாறியது.

Radha Sriram சொன்னது…

உங்களை எட்டு விளையாட்டுக்கு அழைச்சிருக்கேன்.முடிஞ்சப்போ எழுதுங்க!!

ஸ்ருசல் சொன்னது…

அது என்னங்க எட்டு விளையாட்டு?

பார்க்கிறேன். அழைத்தமைக்கு நன்றி!

Sud Gopal சொன்னது…

ஹூம்..என்னத்தச் சொல்ல.இங்கே எப்போ ரிலீஸ் ஆகும்னு தெரியலையே...?அப்புறம் "ஈ"க்கு இசையமைத்தது ஸ்ரீகாந்த் தேவா.

உங்களைப் பற்றின எட்டு விஷயங்களை எழுதும் தொடர் பதிவுக்கு அழைச்சிருக்கேன்.மேலதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

பெயரில்லா சொன்னது…

Your analysis is biased for LG and FYI apple has been working in this since 2002 and they approached AT & T (formerly Cingular) in year 2004 for thier lauch . Another question is if it was a copy of LG prada or LG choclate why LG has not filed a law suite against apple???

ஸ்ருசல் சொன்னது…

யாருங்க அது?

LG-க்கு சாதகமாகவா? இதனால் எனக்கு என்ன பயன்? LG ஏன் செல்லவில்லை என்று என்னுடைய முந்தைய பின்னூட்டங்களில் தெரிவித்திருந்தேன்.

//AT & T (formerly Cingular) in year 2004 for thier lauch...

முற்றிலும் தவறு. ஆப்பிளின் முதல் செல்போன் சம்பந்தப்பட்ட விசயமே, iTunes-ஐ மோட்டரோலா Razr phone-உடன் Sync செய்யும்படி வடிவமைத்தது தான். அது 2004 இறுதியில் தான் நடந்தது.

அதன் பிறகு தான், நாமும் மொபைல் போன் தயாரித்தால் என்ன என்று ஆரம்பித்தது. அதற்கு முன்பாக, எப்படி மொபைல் போன்கள் தயாரிக்கலாமா என்று யோசித்திருக்கலாம்...

2003, 2004 வரை அதன் முழு ஈடுபாடும் iPod தான். 2001 இறுதியில் தான் பத்து மில்லியன்களில் Profit பார்க்க ஆரம்பித்தது. 2002-லிருந்து, "இந்த" போனை செய்கிறது என்பதனை ஏற்றுக் கொள்ள இயலாதது.

////
/////approached AT & T (formerly Cingular) in year 2004 for thier lauch
/////

இதுவும் சரியல்ல. முதலில் அவர்கள் கேட்டது Verizon. அது எப்போது என்ற விவரங்கள் இல்லை. Verizon மறுத்துவிடவே அந்த வாய்ப்பு Cingular-க்கு சென்றது. என்னுடைய அனுமானம், இது 2006- மத்தியில் இருந்திருக்க வேண்டும் என்பது.

Verizon, எதனால் மறுத்தது? iPhone விற்பதில் Apple சில ஆதிக்க உரிமையை கேட்டதனால்.

Apple, Verizon-ஐ தொடர்பு கொண்ட
2004-ல், iPhone தயாராக இருந்தது என்று வைத்துக் கொள்வோம். 3 வருடங்கள் எந்த ஒரு நிறுவனமும், காத்திருக்காது.

2004-ல் போன் தயாராக இல்லை என்று கருதினால்... ஆப்பிளே, Verizon-இடம் அம்மாதிரி பேசியிருக்க வாய்ப்பில்லை. முதலில் போன் எப்படி தயாராகிறது என்று தான் அவர்கள் பார்த்திருப்பர். ஆப்பிள் போன்ற நிறுவனம், அதுவும் முதன் முதலாக செல்போன் தயாரிக்கும் போது, அவ்வாறு பேசியிருக்க வாய்ப்பில்லை.

ஆகையினால் இது 2006-ல் தான் நடந்திருக்க வேண்டும். 2005 ஆரம்பம் / மத்தியில் தான் அவர்கள் iPhone-ல் முழுமையாக இறங்கியிருக்க வேண்டும்....