நீண்ட நாட்களாக மற்றவர்கள் காத்திருந்தது போலவே, பலத்த எதிர்பார்ப்பிற்கு பிறகு சிவாஜி படத்திற்கு சென்றேன். 'சிவாஜி என்றொரு குப்பை' என்று கூற தான் ஆசை. ஆனால் ரஜினி ரசிகர்கள் என்னை சும்மா விட மாட்டார்கள். அந்த அளவிற்கு படமும் மோசமில்லை. உண்மை தான். படம் நன்றாக தானிருக்கிறது; நன்றாக ஓடுகிறது; ஓட வேண்டும் என்பதே எனது விருப்பமும் கூட - ஏ.வி.எம். நிறுவனத்திற்காகவாவது. எனது வருத்தமெல்லாம், சங்கர் என்றொரு குப்பையான இயக்குநர் மீது தான். பிரம்மாண்டம் எல்லாம் சரி தான். நல்ல பாடல்களை வருவிக்கும் விதத்திலும், நல்ல திரைக்கதை கொண்டு வரும் விதத்திலும், சிறு சிறு விஷயங்களில் கவனம் செலுத்தும் விதத்திலும் சிறப்பாக செயல்பட்டாலும் எவ்விதமான படங்கள் எடுக்கிறார் இவர்? இவருக்கு இந்தியாவில் சிறந்த இயக்குநர் என்றொரு பெயர் வேறு! இவருடைய இரு படங்கள் எப்படிப்பட்ட படங்கள்! (என்று நினைத்திருந்தேன்). ஜென்டில்மேன், இந்தியன். அப்புறம் தான் தெரிந்தது. இவரிடம் இருப்பது எல்லாமே ஒரே மாதிரியான கதைகள் தான் என்று. இது முதல்வன், அந்நியனில் உறுதி செய்யப்பட்டு விட்டது. சிவாஜி மற்றொரு உதாரணம். இவருடைய ஜென்டில்மேன், இன்று வரை, எனக்கு மிகவும் பிடித்தமான படங்களில் ஒன்று. அதில் எவ்விதமான மாற்றமும் இல்லை. எதற்காக, வாஜி வாஜி என்ற பாடலை நான்கு-ஆறு கோடி செல்வு செய்து எடுக்கவேண்டும்? ஒன்றும் புரியவில்லை. 'மன்றம் வந்த தென்றலுக்கு' போன்ற பாடல்களுக்கு, அது ஏன்?
அவருடைய 'என் வீட்டு தோட்டத்தில்', போன்ற பாடல்களுக்கு என்ன செலவு? கதை நன்றாக இருந்தால், எதற்காக இவ்வளவு செலவு? இவருடைய கதைகளில் என்ன இருக்கிறது என்று படங்களையும், படத்தினைப் பற்றி செய்திகளையும் மறைத்து மறைத்து வைக்கிறார் என்று தெரியவில்லை. ஒரு வேளை, படத்தில் கதையென்று ஒன்றுமே இல்லாதது தெரிந்து விட்டால் மக்கள் யாரும் படம் பார்க்க வர மாட்டார்கள் என்பதாலா? :)
சிவாஜி படத்தினை பற்றி:
1. விவேக் மிக நன்றாக செய்திருக்கிறார்; அந்நியன் போலவே. வசனங்கள் அவர் எழுதியதா அல்லது சுஜாதா எழுதியா என்று தெரியவில்லை.
நன்று. அந்நியனில், திருவையாறுக்கு விக்ரம், சதா, விவேக் ரயில் ஏறச் செல்லும் காட்சி:
பின்னணியில் மற்றொரு ரயில் கிளம்பிக் கொண்டிருக்கும். வழியனுப்ப வந்த நபரிடம், ரயிலிருக்கும் நபர் சொல்வார்.
"போனதும் லெட்டர் போடுறேன்'... (வழக்கமாக எல்லோரும் கூறுவது தான்)
அதற்கு விவேக் மெதுவாக, 'போனா லெட்டர் எல்லாம் போட மாட்டாங்கடா... தந்தி தாண்டா கொடுப்பாங்க....'. அருமை!
இது போல சிவாஜி முழுவதும் பரந்து கிடக்கிறது விவேக்கின் ராஜ்யம்.
'தமிழ்நாட்டில், கற்பை பத்தியும் கருப்பை பத்தி மட்டும் பேச கூடாது'
'பால் சாப்பிட்டு வளர்ந்த மாதிரி தெரியலையே.... டிக்காஷன் சாப்பிட்டு வளர்ந்த மாதிரி இல்ல இருக்கு...'
2. ரஜினியின் நகைச்சுவை காட்சிகளும் நன்றாக வந்திருக்கிறது.
'என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே!'
'Mr. தொண்டை சொன்னா தான் வருவேன்'
சிவாஜி மாதிரி, வசந்த மாளிகை பாடலில் முயற்சித்திருப்பது.
'இப்ப எப்படி கமலஹாசன் மாதிரி வர்றேன் பாரு'...
இது போன்ற மெல்லிய நகைச்சுவைகள்...
இப்படத்தில் ரஜினி பேசும், 'பன்னிங்க தாண்டா கூட்டமா வரும்... சிங்கம் எப்பவும் தனியாக தான் வரும்', என்ற வசனம் ஏற்கனவே 'கிரி' படத்தில் அர்ஜூன் பேசியது.
'நான் காசு தர்றேன் படிக்கிறியா', என்ற வசனமும், காட்சியும் அப்படியே 'ஜென்டில்மேன்' படத்தில் அர்ஜூன் பேசியது. பதினைந்து ஆண்டுகள் சென்றும் இன்னும் நிலைமை மாறவில்லையா?
3. பட்டிமன்ற நகைச்சுவையாளர் ராஜாவிற்கு படத்தில் ஒரு வேலையும் இல்லை. ரஜினி, இவரது வீட்டிற்கு வரும் காட்சியில் அவர் அணிந்திருக்கும் பனியன் முதலில் நன்றாக இருக்கும். அடுத்த சில நொடிகளில் கைகளில் வேர்த்துக் கொட்டியும், காட்சி முடியும் வேளையில் தொப்பல் தொப்பலாகி இருக்கும். ஏன்? அவருக்கு கொடுக்க வேறொரு பனியன் இல்லையா? என்னய்யா 80 கோடி போட்டு படம் எடுக்குறீங்க... ரெண்டு பனியன் வாங்க காசு இல்லையா? அல்லது அது அவரது முதல் நாள் ஷூட்டிங்கா?
4. தொண்டைமானாக வரும் பாப்பையா, ராஜாவிற்கு எவ்வளவோ பரவாயில்லை... 'அது தான்யா பண்பாடு...', அழகு!
5. ஸ்ரியா.... இவர் படத்தில் பேசுவதே சில வசனங்கள் தான். அதையும் ஒழுங்காக சொல்லித்தரவில்லையா? வாயசைப்பது ஒரு மாதிரியும் வசனம வேறொரு மாதிரியும் இருக்கிறது. பாடல்களில் இன்னும் மோசம். நடனம் நன்றாக ஆடுகிறார்.
6. கடைசி காட்சியில் கத்தை கத்தையாக பறந்து வரும் பணத்தை பிடிக்க வரும் மாணவன், 'இன்னும் ஆயிரம், இரண்டாயிரம் தான்', என்று ஏன் ஆகாயத்தை பார்த்துக் கொண்டிருக்கிறான்? கீழே கோடி கோடியாக இறைந்து கிடக்கிறது; எதற்காக பறக்கும் பணத்தை பிடிக்க முயற்சி செய்கிறான்? வில்லனின் கழுத்தை மிதிக்க வைப்பதற்காகவா? என்ன சங்கர்?
7. ஏ.ஆர்.ரகுமான் அடக்கி வாசித்திருக்கிறார். அல்லது வாசிக்க மறந்து விட்டாரா?
8. சண்டை காட்சிகள் மிகவும் சுமாராக இருக்கிறது. கிளைமேக்ஸை தவிர்த்துப் பார்த்தால். பின்னி மில்லில் ரஜினி ரவுடிகளை அடிப்பதும், பின்பு அவர்கள் ரஜினியுடன் இணைவது ஒட்டவே இல்லை.
9. கொச்சின் ஹனீபா வழக்கம் போல் கலக்கியிருக்கிறார்.
'வயித்துல கேபிள் கனெக்ஷன் எல்லாம் கலக்கி விட்டுடானே! அங்குட்டு போக வேண்டியது இங்குட்டு போகுது.. இங்குட்டு போக வேண்டியது அங்குட்டு போகுது....'
'உங்ககிட்ட் ஆட்சி இருக்கு... அவன் கிட்ட ஆபிஸ் ரூம் இருக்கே....'
'பிரபஷனல் எதிக்ஸ்'
9. நடன காட்சிகள். மன்னிக்கவும்...
10. இன்னொன்று மிகவும் சிரித்தது: (இரண்டாம் தர வசனம் தான்).
'என்ன ஆச்சுயா?',
'ஆப்பு வச்சாங்க... ஆனா வச்ச ஆப்பை எடுக்க மறந்துட்டாங்கன்னு நினைக்குறேன்'.
சங்கரின் அடுத்த படத்திற்கு சில உத்திகள்: (திரு. தேசிகன்: திருவாளர் சுஜாதா மூலம் சங்கருக்கு தெரிவிக்க உதவவும்)
* கடைகளில் வாங்கும் பொருளுக்கு சரியான ரசீது கொடுக்காமல் வாங்குவோரையும் ஏமாற்றி, அரசாங்கத்திற்கு முறையாக விற்பனை வரி கட்டாமல் ஏய்க்கும் வியாபாரிகளை வழிக்கு கொண்டு வரும் கதை. கருத்து: விற்பனை வரி கட்டச் செய்வதன் மூலம் மக்களுக்கு ஓர் விழிப்புணர்வு
ஏற்படுத்துதல். விளைவு: 2011 ல் இந்தியா வல்லரசு. 2011 என்பது கொஞ்சம் கஷ்டம். இவர் படம் எடுத்து முடிக்கவே இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகலாம்.
* பஸ்ஸில் டிக்கெட் எடுக்காமலும், பெரியவர்களுக்கு இடம் கொடுக்காமலும் செல்லும் நபர்களை தண்டிக்கும் ஓர் கண்டக்கரின் கதை. இதனால் நஷ்டத்தில் இயங்கும் பல பஸ்களை லாபகரமாக இயக்கலாம்.
ஹீரோ: அர்ஜூன். குறிப்பு: இதே கதையில் மல்டி-பெர்சனாலிட்டியை புகுத்தி விக்ரமை ஹீரோவாக போட்டு இன்னொரு படம் எடுத்து விடலாம்.
* விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு அடுக்குமாடி வீடுகளாகவும், தியேட்டர்களாகவும் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதற்கு காரணமான சமூக விரோதிகளை அழிக்கும் ஓர் விவசாயி.
விளைவு: 2019-ல் உலகிலேயே அதிகமாக உணவு பொருள் உற்பத்தி செய்யும் நாடாக மாற்றுதல்.
* வித்தியாசமாகவும், பிரம்மாண்டமாகவும் படம் எடுக்கிறேன் என்று மக்களின் நேரத்தையும், தயாரிப்பாளரின் பணத்தையும் வீணாக்கும் இயக்குநர்களை களையெடுக்கும் ஓர் ரசிகனின் கதை.
விளைவு: இது போன்ற பதிவுகள் வருவதையும், அதனை வேறு வழியில்லாமல் உங்களை போன்றவர்கள் படிக்க வேண்டியதையும் தவிர்க்கலாம்.
இக்கதைகளை வைத்தே இன்னும் 15 வருடங்கள் சங்கர் ஓட்டி விடலாம்.
என்ன, இவரின் பட்ஜெட் அப்போது 300 கோடியை தொட்டிருக்கும். இப்படிபட்ட கதைக்கு பட்ஜெட் 80 கோடி! வெட்ககேடு!
தனது பணத்தை முதலீடு செய்து படம் எடுக்கும் போது மட்டும் பட்ஜெட்: 2 கோடி! இவரின் எண்ணம் நல்ல எண்ணமாகவே இருந்தாலும், தனது இயக்குநர்கள் மீது நம்பிக்கை இருந்தால் இன்னும் சில கோடிகள் கொடுக்க வேண்டியது தானே? ஒரு வேளை நல்ல படம் எடுக்க இரண்டு கோடி போதுமோ? கதை இல்லாமல் படம் எடுக்கும் போது தான் 50 கோடி, 80 கோடி வேண்டுமோ?
ஆண்டவா! எதற்காக இவ்வளவு குறைகள் கூறுகிறாய் என்று கேட்காதீர்கள்.
1. நன்றாக எடுக்க வேண்டும் முயற்சிப்பவனிடம் தான் அல்லது தான் நன்றாக படம் எடுக்கிறேன் என்று நினைப்பவனிடம் தான் குறைகளைக் கூற
முடியும்.
2. 2, 3 கோடி போட்டு ஒரிரு மாதங்களில் படம் எடுப்பவருக்கும், 10 அசிஸ்டெண்ட் இயக்குநர்கள் வைத்து, சுஜாதா, ரஜினி, ரகுமான், கே.வி. ஆனந்த், பீட்டர் ஹெய்ன்ஸ், வைரமுத்து போன்ற குழுவினை உடன் வைத்துக் கொண்டும், இரண்டு வருடங்களை முழுங்கிக் கொண்டும் இப்படி கதையில் கோட்டை விடுவதும், சிறு சிறு காட்சிகளில் கோட்டை விடுவதும் சரியல்ல.
என்ன கொடுமை சரவணன்!
80 கோடி பணத்தை முதலீடு செய்துவிட்டு, இரண்டு வருடங்கள் காத்திருந்து, எடுத்த படத்தை போட்டு பார்த்தால்; அது குப்பை. சங்கர்; ரகுமான்; எல்லாவற்றிற்கும் மேலாக ரஜினி. இப்படி எல்லாமும் இருந்தும், படம் இப்படி. தயாரிப்பாளர் 'ஜெர்க்' ஆவது உறுதி தான். அதனால் தான் சரவணன் ஐயா திருப்பதி சென்று முன்னெச்செரிக்கையாக மொட்டை போட்டு விட்டு, 100 நாட்கள் ஓடினால் லாபத்தில் 25% சிவாஜி பவுண்டேஷனுக்கு கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்.
அவரது வேண்டுதல் நிறைவேறட்டும்!
அது சரி... சிவாஜி பவுண்டேஷனுக்கு தான் 46000 கோடி சொத்திருக்கிறதே... பின்பு ஏன் இன்னும் சில கோடிகள்? :)
குறிப்பு: நான் கமல் ரசிகன் அல்ல.
25 கருத்துகள் :
எழுதிவிட்டு, தமிழ்மணத்தில் சென்று பார்த்தால், ஏற்கனவே 'சிவாஜி எனும் அக்கபோர்' என்று யாரோ எழுதியிருக்கிறார்கள் :(
அடடா உங்க கதைகளை இப்பவே Copy Rights போட்டு வெச்சுக்கலாம். செம சரக்கு..
நீங்கள் சொல்வது எல்லமே உண்மை !
:)
அடுத்த படத்துக்கும் ஷங்கருக்கு டிப்ஸ் கொடுத்துட்டிங்க ?
தண்ணீரை ஒரு சொட்டுக் கூட சிந்தாமல் பிடிக்கனும், அப்படி செய்யாததால் நாம எல்லோரும் காவேரி நீருக்கு கையேந்துகிறோம் என்று கதை கூட இருக்கு பாஸ்
:)
"தண்ணீரை ஒரு சொட்டுக் கூட சிந்தாமல் பிடிக்கனும், அப்படி செய்யாததால் நாம எல்லோரும் காவேரி நீருக்கு கையேந்துகிறோம்"
இது நல்லா இருக்கே!
சங்கரோட பத்து தலைமுறை படம் எடுக்குற மாதிரி கதைகள் நம்மகிட்ட இருக்கும் போல....
எக்ஸ்ரே அலசல் நண்பரே..
உங்களுடைய கதைகளுக்கு உடனே காப்பிரைட் உரிமை வாங்கி விடுங்கள்.. சங்கரின் காதுகளுக்குச் சென்றால் இதையும் எடுத்தாலும் எடுப்பார்.
நன்று.. நன்று.. நன்று..
மிகச் சரியாக சொன்னீர்கள். அத்தனையோடும் ஒத்துப் போகிறேன்.
சங்கரை என்னால் இன்னும் மிகச் சிறந்த டைரக்டராக ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. வேண்டுமானால் தொழில் நுட்ப உத்திகளில் கவனம் செலுத்தும் ஒரு டைரக்டர் என்று பாராட்டலாம்.
சரி. அதற்கும் மேலாக ஒரு படி சென்று, அவரை சிறந்த விற்பனையாளர் என்று கூறினால் சரியாக இருக்கும்.
ஸ்டீவ் ஜாப்ஸ் போல..
சரியான திறனாய்வு.
முதல் பாதியில் அரை மணி நேரம் செம்ம மொக்கை.
இரு குடும்பங்களும் பழகப் போகுதல்,சிவாஜி வெள்ளையாக முயற்சி செய்யறது எல்லாமே ரத்தம் வர வைக்குது.இரண்டாம் பகுதியில இதற்கெல்லாம் சிகரம் வைக்கிற மாதிரி வருது அந்த தாவணியால ரயிலை நிறுத்துற காட்சிகள்.
என்ன கொடுமை சிவாஜி இது.....????
ப்ரீ கன்சீவ்டு நோஷன்ஸ் இல்லாம போன என்னை மாதிரி ஆளுங்களாலேயே தாங்க முடியலையே;எந்த இடங்களில தப்பக் கண்டுபிடிக்கலாம்னு கண்ணில வெளக்கெண்ணை ஊத்திக்கிட்டு பாக்கிற ஆளுங்க கிட்ட இருந்து சிவாஜியைக் காப்பாத்த ஆண்டவனால் கூட முடியாது..
அப்புறம் ஏன் சொல்லி வச்சாப்பில ஷங்கரொட பெரும்பாலான கதாநாயகிகள் பாவாடை தாவணியில உலாத்தறாங்கன்னே தெரியலை???
ஒருவேளை ரயிலை நிறுத்த இது தான் சௌகரியமான ஆடையோ???
அப்புறம் ஏன் சொல்லி வச்சாப்பில ஷங்கரொட பெரும்பாலான கதாநாயகிகள் பாவாடை தாவணியில உலாத்தறாங்கன்னே தெரியலை???
++++
சேலை வாங்க பட்ஜெட்-ல இடம் இல்லையோ என்னவோ?
=======
ஸ்ரியா வேலை செய்யும் கடையிலும் என்ன பிரச்சனை வந்தாலும் ஸ்ரியாவின் மேனேஜர் ஏன் என்றே கேட்க மாட்டேன் என்கிறாரே காரணம் என்னவோ?
10 விநாடிகளே வந்தாலும், சங்கர் பெருந்தலைகளை தான் படத்திற்கு உபயோகப்படுத்துவாரா?
* கடையில் கஞ்சிரா வாங்க வரும் சுவாமிநாதன் (லொல்லு சபா)
* ரஜினிக்கு எம்.எம்.ஸ் மூலம் எதிரியின் திட்டங்களை கூறும் கான்ஸ்டபிள் (இளவரசு... ரமணாவில் வருவாரே... ஐயா என்னோட கணக்குல பற்று வச்சுக்கங்க்ய்யா...)
* அடியாளாக வரும் நபர் (கில்லி படத்தில் பெரிய மீசையோடு வருவாரே!) இவரை படத்தில் இரண்டு மூன்று பிரேம்களில் தான் காண முடியும்
உங்களா மாதிரி ஆட்கள் சிலரும் இருந்தாத்தான் சுவாரஸ்யமே!!! ;)
உங்களா மாதிரி ஆட்கள் சிலரும் இருந்தாத்தான் சுவாரஸ்யமே!!! ;)
>>>
என்ன அர்த்தத்தில் கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை. :) ஆனாலும் வழக்கம் போல், என்னை புகழ்வதாகவே கருதி தன்னடக்கத்துடன் உங்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். :)
//என்ன அர்த்தத்தில் கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை.//
ஒரு சு.சுவாமி மாதிரி, ஒரு டி.ஆர் மாதிரி, ஒரு வெற்றி கொண்டான் மாதிரி...
//வழக்கம் போல், என்னை புகழ்வதாகவே கருதி தன்னடக்கத்துடன் உங்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்//
'எவ்வளாவு அடிச்சாலும் வலி தாங்கறான்டா. இவன் ரொம்ப நல்லவன்'
மேலும் ஒரு கதைக்கரு
வலைப்பூவில் இப்படி திரைப்படத்தை , இயக்கத்தை அலசுபவர்களை ரிவீட் அடிக்கும் ஒரு அனானிமஸ் இன் கதை.. :)
விளைவு : விமர்சனம் என்ற பயமில்லாமல் சுதந்திரமாக இயக்குனர்கள் படமெடுக்கலாம்.. :) :)
விளையாட்டுக்கு ஸ்ருசல்.. :)
மிக நல்ல அலசல் பதிவு.. வித்தியாசமாக இருந்தது... உங்கள் உத்திகளை ரசித்து சிரித்தேன்..
வீ எம்
//எக்ஸ்ரே அலசல் நண்பரே..\\
என்ன உண்மைத்தமிழரே இன்னுமா ஓசி பாஸ் கெடைக்கல.
என் மனதில் இருப்பதை அப்படியே போட்டுத் தாக்கீட்டீங்க போங்கள்...
ஷங்கர் சிந்திப்பதை நிருத்தி பல வருடம் ஆச்சு..
பாடல்கள் கூட ஒரே மாறிதான் இருக்கு... நடிகர்கள் மட்டும்தான் மாறிருக்காங்க..
தொழில்நுட்பங்கள் கூட ஆங்கில படங்களில் இருந்து சுட்டதுதான்..
பாடல்களுக்கு அதிக்கப்படியான செலவு தேவையற்றது..
ரஜினிக்கு அதிகப்படியான hairstyle தேவைதானா?
மொத்தத்தில் சிவாஜி S P முத்துராமன் இயக்கவேண்டிய AVM படம். கிட்டத்தட்ட 3 கோடி செலவுல அற்புதமா எடுத்திருப்பார்..
AVM க்காவது படம் ஓடனும்ங்க...
//எக்ஸ்ரே அலசல் நண்பரே..\\
என்ன உண்மைத்தமிழரே இன்னுமா ஓசி பாஸ் கெடைக்கல.
////////////
ஒண்ணும் புரியலையே!!! தமிழ்மணத்தில் புதுசா ஏதாவது ஓடுதா?
சம்பந்தப்பட்டவர் (உண்மை தமிழன் எண்):: ஏதேனும் தவறாக (மனம் புண்படும்படியாக))பின்னூட்டங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தால் தெரிவிக்கவும். இல்லை... சும்மா சுவாரசியமான சண்டை தான் என்றால் அப்படியே விட்டுவிடலாம்.
////
வலைப்பூவில் இப்படி திரைப்படத்தை , இயக்கத்தை அலசுபவர்களை ரிவீட் அடிக்கும் ஒரு அனானிமஸ் இன் கதை.. :)
////
பொது வாழ்க்கை சிக்கல்களை களைவதற்கே சங்கரின் திரை வாழ்க்கை போதாது.
வலைப்பூ சம்பந்தப்பட்ட சிக்கல்கள் சங்கரின் வருங்கால சந்ததியினருக்கு.
சங்கர் இப்பொழுது கனடாவில் உட்கார்ந்து கொண்டு கதை யோசிக்கிறாராம். அடுத்து யாருக்கு மொட்டை என்று தெரியவில்லை.
படம் ஓடிவிட்டால் பிரச்சினை இல்லை. இல்லாவிடில்?
ஹீரோ யார் என்று சரியாக யூகிப்பவர்களுக்கு ஓர் பரிசு:
அவரது வலைப்பதிவில் 10 பின்னூட்டங்கள் இடப்படும்....
i dont know what u come to told mr thadakam... everybody can say more than u abt shankar? is that so important? did u forget to comment rajini in this post? hmmmmmm! ur title is suppose to be like this...
"thadakam endroru kuppai"
சிவாஜி - The Boss!,
ஏன் இந்த ரத்தவெறி? :)
//ரஜினிக்கு அதிகப்படியான hairstyle தேவைதானா?//
பின்னே? நிஜத்தில் இருப்பதுபோல சினிமாவிலும் வந்துட்டா நல்லவா இருக்கும்?
உண்மை உருவத்துடன் கதாநாயகிகளுடன் டூயட் பாடறது போல கற்பனை
செஞ்சு பாருங்க கொஞ்சம்.
நேற்றுத்தான் படம் பார்த்தேன்.
நீங்கள் சொன்ன பல விஷயங்களும் எனக்கும் தோண்றியதுதான்.
அதைவிட காமெடி என்னவென்றால் - 200 கோடி சம்பாதித்திருக்கும் ஒரு மனிதர் (software system architect-ஆக 200 கோடி சம்பாதிக்க முடியுமா?) ஒவ்வொரு கட்டத்திலும் அரை வேக்காட்டுத்தனமாக ப்ளான் செய்கிறார்.
எல்லா இடங்களிலும் சொல்லி வைத்தார் போல் அவருடைய விரோதி (அவரும் இவரைவிட பெரிய கோடீஸ்வரராம்) ஆஜராகிறார்.
ஏதோ பணம் சம்பாதிப்பதும் செலவிடுவதும் டீக்கடையில் பஜ்ஜி சாப்பிடுற ரேஞ்சுக்கு காட்டுகிறார்கள்.
வடிவேலு பாணியில் சில டைலாக்குகளை சொல்கிறார்கள். அதில் இதையும் சேர்த்திருக்கலாம்.
'சுத்த சின்னபிள்ளத்தனமால்ல இருக்கு'
dai.... evanda intha mathiri ezhuthinathu... inuum 3 natkalukul intha bloga edukalana... rajinifans.com la irunthu unai kandu pidichi adika erpadu panren.
Note:- Nee ulagathula entha moolaila irunthalum unaku adi than
Chandramuki 804 days (forced)
Shivaji 84 days ( farced )
Dont u have any other work....
Yes, Shankar could have come up with a better movie with all the budget and the crew he got.
Very good review.
கருத்துரையிடுக