வியாழன், அக்டோபர் 20, 2005

இந்திரா வாழ்வில் சுவாரசியமான நிகழ்ச்சிகள்

சென்ற மாதம் "Life of Indira" என்ற புத்தகத்தை வாங்கினேன். முதல் 200 பக்கங்கள் மிகவும் களைப்படைய வைப்பதாக இருந்தாலும், அடுத்த 200 பக்கதங்களுக்கு மேல் மிக சுவாரசியமாகவே சொல்லி இருந்தார், நூலாசிரியர் ஃபிராங்க்.

அந்தப் புத்தகத்திலிருந்து பல விசயங்கள் என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. எனக்கு அதற்கு முன்பு தெரிந்ததெல்லாம், நேரு குடும்பத்தைச் சார்ந்தவர். நெருக்கடி நிலையை அமலாக்கியவர், பொற்கோவில் என்ற அளவில் மட்டுமே. அவரைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் வந்தது, Inside an Elusive Mind என்ற புத்தகத்தினைப் படிக்கும் போது தான்.

அந்தப் புத்தகத்தில் இருந்து சில சுவாரசியமான, எனக்கு தெரிந்திராத விசயங்களைக் கீழேக் கொடுத்துள்ளேன். இது நிறைய பேருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம். அவர் இறக்கும் போது எனக்கு 3 வயது என்பதால் எனக்கு அப்போது அவரைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. நீங்கள் அப்போதே இதனைப் பற்றி நாளிதழ்களில் படித்திருக்கலாம்.

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள எதுவும் என்னுடைய கருத்துகள் அல்ல. அனைத்தும் அந்த நூலாசிரியரின் கருத்து. அவற்றின் நம்பகத்தன்மையைப் பற்றி எனக்குத் தெரியாது.

1. சஞ்சய் காந்தி, ஏதோ விமான விபத்தில் இறந்தார். அவருடை மனைவி மேனகா என்பது மட்டுமே நான் அறிந்திருந்த ஒன்று. ஆனால், இந்திராவின் வாழ்க்கையில் மற்ற யாருக்குமே இல்லாத ஒரு இடம் இவருக்கு இருந்திருக்கின்றது. ராஜீவினை விட செல்வாக்கு பெற்றவறாகவும், இந்திராவினை விட அதிகாரம் படைத்தவராகவும் இருந்திருக்கின்றார்.

ஒரு நாள் குடும்பத்தினருடனும், இன்ன பிற நண்பர்களுடனும் இந்திரா இரவு உணவு அருந்தும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், சஞ்சய் காந்தி, இந்திராவின் கன்னத்தில் ஆறு முறை அறைந்தாராம். அந்த இடமே நிசப்தமாகி விட்டதாம். யாராலும் ஒன்றுமே செய்ய இயலவில்லை. ஆனால் இந்திராவின் குடும்ப நண்பர் இதனைப் பற்றி இவ்வாறாகக் குறிப்பிடுகின்றார். "இது ஒரு வதந்தி.

இந்திராகாந்தியை கடவுள் கூட அடிக்க முடியாது"

2. இந்திராகாந்தி நெருக்கடி நிலைக்கு பின் நடந்த முதல் தேர்தலில் ஆட்சியை இழந்தார். அது வரை அவர், அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த வீடான 1, சாப்ராங் ரோட்டில் வசித்து வந்தார். ஆனால் அந்த வீடு மொரார்ஜி தேசாய் பிரதமரானதும், மொரார்ஜிக்குக் கொடுக்கப்பட்டது. இந்திரா குடிபோவதற்கு எந்த வீடும் இல்லாத நிலையில், இந்திராவின் அவருடைய நண்பர் அவருடைய பங்களாவினை காலி செய்து அவருக்குக் கொடுத்தார். நேருவின் ஆனந்த பவன் வீடு நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது, நேரு வாழ்ந்து வந்த டீன் மூர்த்தி வீடும், நேரு மியுசியமாக மாற்றப்பட்டது.

3. நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டதால் அனைத்துப் பத்திரிக்கைகளும் அரசினால் தணிக்கை செய்யப்பட்டது எல்லாருக்கும் தெரியும். அப்போது வி.சி.சுக்லா தகவல மற்றும் செய்தித் துறை அமைச்சராக இருந்தார். சஞ்சய் காந்தி பற்றி ஏராளமான செய்திகள் பத்திரிக்கைகளிலும், வானொலியிலும் இடம் பெற்றன. 1976 ஆம் ஆண்டின், ஜனவரி மாதத்தின் முதல் இரு வாரங்களில் மட்டும் சஞ்சய் பற்றி 176 புல்லட்டின்கள் ஆல் இந்தியா ரேடியோவில் வாசிக்கப்பட்டது.

4. இந்திரா நெருக்கடி நிலையினை ஒட்டி, 20 திட்டங்களை நாட்டு மக்களுக்கு அறிவித்தார். அதனை விட சஞ்சய் அறிவித்த 5 திட்டங்கள் தான் மிகவும் பிரசித்தி பெற்றது. அவை, வரதட்சணை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, நகரங்களை அழகாக்கும் திட்டம், குடும்பக் கட்டுபாடு திட்டம், இன்னொன்று எனக்கு மறந்து விட்டது.

5. பல ஆங்கில பத்திரிக்கைகள், அரசுக்கு ஆதரவு நிலை எடுக்க, இந்தியன் எக்ஸ்பிரஸ் மட்டும் அரசினை சாடி வந்திருக்கின்றது. த டைம்ஸ் ஆப் இண்டியா பத்திரிக்கை, த டைம்ஸ் ஆப் இந்திரா என சிலரால் கேலி செய்யப்பட்டது.

6. பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் சஞ்சயினை பேட்டி எடுத்து தனது வார இதழில் (பெயர் மறந்து விட்டது) வெளியிட்டார். அது பின்வருமாறு.

சிங்: நீங்கள் பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தவர். உங்கள் தாத்தா நேருவுடன் உங்களுக்கு எந்த மாதிரி பழக்கம்?
சஞ்சய்: எல்லா பேரன்களுக்கும் தாத்தாவிற்கும் உள்ள உறவினைப் போன்றது தான்.

சிங்: நீங்கள் தாத்தாவின் புத்தகங்களிலிருந்து நீங்கள் தெரிந்து கொண்டது?
சஞ்சய்: பெரியதாக ஒன்றும் இல்லை.

சிங்: உங்கள் தந்தை ஃபெரோஸ் பற்றி?
சஞ்சய்: எல்லா மகன்களுக்கும், தந்தைக்குள்ள உறவு தான்.

சிங்: உங்களுக்கு புத்தகளில் எந்த மாதிரி புத்தகங்கள் பிடிக்கும்? வரலாறு, பொருளாதாரம், வாழ்க்கை வரலாறு, ...?
சஞ்சய்: நான் அவ்வளவாக புத்தகம் படிப்பதில்லை.

சிங்: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர ஏதும் திட்டம் வைத்திருக்கிறீர்களா?
சஞ்சய்: எனக்கு அரசியலமைப்புச் சட்டம் அவ்வளவாகத் தெரியாது.

7. இந்திரா தேர்தலில் தோற்றது, ராஜீவ் காந்தி மிகவும் ஆத்திரப்பட்டு, "அம்மாவை இந்த நிலைக்கு ஆளாக்கிய சஞ்சயை சும்மா விட மாட்டேன்" என அவரது நண்பரிடம் கூறியுள்ளார்.

8. காமராஜரை நம்ப வேண்டாம் என நேருவிடம் இந்திரா அடிக்கடி கூறியுள்ளார்.

9. இந்திரா நிக்சனை சந்திக்க அமெரிக்கா சென்ற போது, முதல் நாள் நடந்த பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட கோபத்தினால், இரண்டாம் நாள் பேச்சு வார்த்தைக்கு வந்த இந்திராவை கிட்டத்தட்ட அரை நாள் காத்திருக்க வைத்திருக்கிறார், நிக்சன்.

சஞ்சய் ஆரம்பத்தில் குறைந்த விலையில் இந்தியர்களுக்கு கார் கொடுப்பதாக மாருதி என்னும் நிறுவனத்தினை தொடங்கி பல காலம் முயன்றுள்ளார். அது தான் இப்போதுள்ள மாருதி நிறுவனமா எனத் தெரிந்தவர்கள் கூறவும்.

இவை தான் என் நினைவில் உள்ளது. இதன் தொடர்ச்சி அடுத்த பாகத்தில்.

ஸ்ருசல்

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள எதுவும் என்னுடைய கருத்துகள் அல்ல. அனைத்தும் அந்த நூலாசிரியரின் கருத்து. அவற்றின் நம்பகத்தன்மையைப் பற்றி எனக்குத் தெரியாது.

6 கருத்துகள் :

Boston Bala சொன்னது…

சுவாரசியமான தகவல்கள். இதன் தொடர்ச்சியையும் சீக்கிரமே இடுங்கள். குஷ்வந்த் 'இல்லுஸ்ட்ரேடட் வீக்லி ஆஃப் இந்தியா'விற்காக பேட்டி எடுத்திருப்பார்.

பெயரில்லா சொன்னது…

Nalla Suvarasiyamaana Thagavalkal Ennidam "Idira"p Patri orup Putthakam (thamilil) Ullathu athil Ithup Pontru Innum Yaeralamaana Thagavalkal Ullana!

ஸ்ருசல் சொன்னது…

ஹமீது,

அந்தப் புத்தகத்தின் பெயரினைக் குறிப்பிடவும்.

பாலா,

நீங்களும் VC++ ல் தான் வேலை செய்கிறீர்களா?

ஸ்ருசல்.

Boston Bala சொன்னது…

---நீங்களும் VC++ ல் தான் வேலை செய்கிறீர்களா---

எப்படி கண்டுபிடித்தீர்கள்!?

ஸ்ருசல் சொன்னது…

உங்கள் Profile Page-ல் VC++ பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். இது என்னுடைய கணிப்பு தான்.

பொதுவாக, VC++ ல் வேலை செய்பவர்களுக்கு மட்டுமே அதன் முக்கியத்துவம் தெரியும். அவர்கள் VC++ எப்போதும் மறக்க மாட்டார்கள். வேறு என்ன Package வந்தாலும்.

பெத்தராயுடு சொன்னது…

VC++ ?

Me too... :)

Yes, the Maruthi Sanjay (== GOI) started (in colloboration with Suzuki) is the same Maruthi (majorority owner Suzuki) that exists today.

The 'close friend' might be 'Dhirendra Bramhachari'.