சனி, அக்டோபர் 15, 2005

சாம்சங் கட்டுகிறது 1290 கோடி அபராதம்! இங்கே நிலைமை?

சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், சிப் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவன்ம். 1999-2002 ஆண்டுகளில் அது பிற சிப் தயாரிக்கும் நிறுவனங்களான ஹைனிக்ஸ், இன்ஃபினியான் மற்றும் மைக்ரான் உடன் சேர்ந்து சில்லுகளின் (டிஜிட்டல் மேமராக்கள், பிரிண்டர்கள், மொபைல் போன்களில் உபயோகப்படுத்தப்படும் சில்லுகள்) சந்தை விலையை நிர்ணயம் செய்தாகக் குற்றம் சாட்டப்பட்டது. இப்போது குற்றம் நிரூபணமாகி, சாம்சங் நிறுவனம் சுமார் ரூபாய் 1290 கோடி (300 மில்லியன் அமெரிக்கன் டாலர்கள்) அபராதமாகக் கட்ட வேண்டும் என அமெரிக்க நீதித் துறை தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதற்காக, அந்த நிறுவனங்களளிடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள், அவர்கள் பரிமாறிக்கொண்ட மின்னஞ்சல்கள் ஆதாரமாக சமர்பிக்கப்பட்டன. வழக்கு 2002 இறுதியில் ஆரம்பித்து 2 ஆண்டுகளில் தீர்ப்பும் வெளிவந்துள்ளது.

மற்ற நிறுவனங்களான ஹைனிக்ஸ் 180 மில்லியன் அமெரிக்கன் டாலர்களும், இன்ஃபினியான் 160 மில்லியன் அமெரிக்கன் டாலர்களும் அபராதமாகக் கட்ட வேண்டும் என அமெரிக்க நீதித் துறை தீர்ப்பு வழங்கியது. அவை ஏற்கனவே அபராதத் தொகையைக் கட்டியுள்ளன. மைக்ரான், குற்றத்தை ஒப்புக் கொண்டு, விசாரணைக்கு ஒத்துழைத்ததால், அதற்கு அபராத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மைக்கேல் டெல் 2001 ஆம் ஆண்டே சில சில்லு தயாரிக்கும் நிறுவனங்கள் ஏகாதிபத்திய முறையில் செயல்பட்டு வருவதாக தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தார். அது இப்போது நிரூபணமாகி உள்ளது.

இந்தியாவிலும் அதே ஏகாதிபத்திய நிலைமை தான். இதைப் பற்றி ஏற்கனவே என்னுடைய பதிவில் எழுதியுள்ளேன். தனியார் நிறுவனங்கள் இந்திய சந்தையில் புகுந்து விளையாடுகின்றன. பெரும்பாலான விசயங்கள் கண்டு கொள்ளாமல் விடப்படுகின்றன.

இப்போது சில பெரிய நிறுவனங்கள் அரசிடம் இருந்தே ரூபாய் நஷ்ட ஈடு கேட்கும் அளவிற்கு தேறி விட்டன. காரணம், புதிய நிறுவனங்கள் துவக்குவதற்கான அனுமதிக் கட்டணத்தை அரசு குறைத்தது தான். கட்டணத்தைக் குறைப்பதும், உயர்த்துவதும் அந்த நிறுவனங்களை எந்த விதத்தில் பாதிக்கின்றது?. அவர்கள் அதிகமாகக் கட்டி உரிமம் பெற்றார்கள் என்பதற்காக மற்றவர்களும் கட்ட வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பாக சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானக் கட்டணமாக நான் 8000 ரூபாய் கொடுத்ததனால், இப்போது செல்பவர்களும் அதே தொகையைக் கட்ட வேண்டும் எனக் கூறுவது முட்டாள் தனமானது. வேண்டுமானால், அவர்களும் காத்திருந்து உரிமம் பெற்றிருக்கலாம்.

ஸ்ருசல்

2 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

Buddy,

Just to remind you of Gaurav chibnis issue...

பெயரில்லா சொன்னது…

good .. to hear