செவ்வாய், அக்டோபர் 04, 2005

சாஃப்ட்வேர் நிறுவனங்களில் தினமும் கன்னடப் பாடல்கள்

போன வாரம் (வெள்ளிக்கிழமை என்று நினைக்கின்றேன்) IBM நிறுவனம், ஒரு பெரிய கலைநிகழ்ச்சியை பெங்களூர் "பேலஸ் கிரவுண்ட்ஸ்"-ல் நடத்தியது. அதில் ஹிந்தி பாடல்கள் மட்டுமே ஒலிபரப்பப்பட்டதாகவும், கன்னட பாடல்கள் பாடும் போது, மற்றவர்கள் வேண்டாம் என்று மறுப்புத் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை சில கன்னட அமைப்பினர், கோரமங்கலா IBM நிறுவனத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதோடு, தனியார் நிறுவனத்தைச் சார்ந்த மெய்க்காவலர்களையும் தாக்கியுள்ளனர். கடைசியில் போலீசார் வந்ததும் கலைந்து சென்றுள்ளனர்.

தவறு இருவர் பக்கமும் உள்ளது. அவர்கள் கன்னடப் பாடல்களை ஒலிபரப்ப அனுமதித்திருக்க வேண்டும். சிறுபான்மையினர் (வெளி மாநில மக்கள்) பெரும்பான்மையாக பணிபுரியும் நிறுவத்தினமாக இருந்தாலும் கூட, அவர்களும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும். சிறுபான்மையினரின் உரிமை பாதிக்கப்படுகின்றது என இப்போது கூக்குரல் இடுவதற்குப் பதில், தாங்கள் பெரும்பான்மை என்ற தகுதியை அடையும் போதும் கண்ணியத்துடன் நடக்கின்றார்களா என எண்ணிப் பார்க்க வேண்டும். அது தான் சகிப்புத் தன்மை. இதே மக்கள், தங்கள் சொந்த ஊர்களில் எவ்வாறு நடந்து கொள்வார்கள்?

சரி அடுத்த விடயம். எதற்காக கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்துகின்றனர்? அவர்களுக்கு எவ்வாறு இது தெரிய வந்தது. கண்டிப்பாக, அங்கே பணிபுரியும் யாராவது, அந்த அமைப்பினரிடம் சொல்லியிருக்க வேண்டும். இது வெறும் வாயில் மென்று கொண்டிருந்தவர்களுக்கு அவல் கிடைத்தது போலாகி விட்டது. ஏற்கனேவே, பெங்களூரில் மற்ற மாநில மக்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது; கன்னடர்களுக்கு மென்பொருள் நிறுவனங்களில் முன்னுரிமை வேண்டும் எனவும் அவ்வப்போது குரல் கொடுத்து வருகின்றனர்.
இப்போது, இது போன்ற நிகழ்ச்சிகள் அவர்களுக்கு சாதகமாக ஆகி விட்டன. ஏன் அவர்கள் இதனை இவ்வாறு யோசிக்கக் கூடாது? கர்நாடாகவைச் சார்ந்த அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலை கிடைத்து விட்டது. மற்ற காலி இடங்களுக்கு வெளி மாநிலத்திலிருந்து ஆட்களைப் பணியில் அமர்த்துகிறார்கள்.

மாநில அரசு இது போன்ற போராட்டங்களை ஊக்குவிக்கக்கூடாது. இதே மாநில அரசு தான், சிறிது ஆண்டுகளுக்கு முன்னதாக "வாருங்கள் எங்கள் மாநிலத்திற்கு! முதலீடு செய்ய" என்று எல்லோரையும் அழைத்தது. இப்போது நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் வந்த பின் இவ்வாறு தாக்குதல் நடத்துவதும், அதனைக் கண்டிக்காமல் மவுனமாக இருப்பதும் சரியல்ல. இந்தியா என்ற பெயரைச் சொல்லி முதலீடு பெறுவதும், சிறிது நாட்களுக்குப் பிறகு எங்கள் மாநிலத்தவற்கே முன்னிரிமை என்பதும், பின் எங்கள் ஜாதிக்கு முன்னிரிமை என்று கேட்பதும் மிகவும் வருத்தத்திற்குரியது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மென்பொருள் நிறுவனங்கள் மாநில அரசுக்கு தலைவலியாக இருந்து வருகின்றன. பெங்களூரின் உள்கட்டமைப்பு வசதி சரியில்லை என்று நிறைய புகார் தெரிவித்த வண்ணம் உள்ளன. இது அதிகரிக்கவே, ஒரு மாநில அமைச்சர், "முதலில் அவர்கள் கர்நாடகாவைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கட்டும். அப்புறம் அவர்கள் இதெல்லாம் கேட்கட்டும்" என்றார். கஷ்டத்தில் இருக்கும் போது மற்றவர்களுடன் மிகப் பணிவாகவும், அந்தக் கஷ்டத்திலிருந்து விடுபட்டப் பின் அவர்களே வேறு விதமாக நடப்பதும் மனிதனிடம் காணக்கிடைக்காத பண்பொன்றுமில்லை.

இந்தியாவில் இதுவொன்றும் புதிதாகவொன்றும் நடக்கவில்லை. மகாராஸ்ட்ராவிலும், அஸ்ஸாமிலும் இன்ன பிற மாநிலங்களிலும் அடிக்கடி நடப்பது தான். அதற்காக இதைக் கவனிக்காமல் விட்டு விடக் கூடாது. மக்கள் தங்கள் எல்லையை விட்டுத் தாண்டி வர வேண்டும். தங்கள் சாதி, மதம். மொழி, மாவட்டம், மாநிலம், என்று நினைக்காமல் ஒரே நாடு என்ற எண்ணத்துடனாவது வாழ வேண்டும். என்னைக் கேட்டால் நமது நாடு என்று சொல்வதைக் கூடத் தவறு என்று சொல்வேன். ஆனால் மற்ற பிரிவினையை விட இது
எவ்வளவோ மேல். இப்படி ஒரு மாநிலத்தவர் மற்றொரு மாநிலம் சென்று தொழில் துவங்கக் கூடாது, வாழக் கூடாது என்றால், இந்தியா என்பது எதற்கு? சிறிய மாநிலங்களிலிருந்து வரியை சம்பாதித்து, பெரிய மாநிலங்களும், நகரங்களும் பங்கிட்டுக் கொள்வதற்கா?

இதற்கு தான், 1) எந்த ஒரு முதலீடும் ஒரே இடத்தில் முடங்கக் கூடாது. எல்லா இடங்களிலும் பள்ளிக் கூடங்களும், கல்லூரிகளும் இயங்குவதைப் போல, முதலீடும் எல்லா இடங்களுக்கும் கிடைக்க வேண்டும். 2) மக்கள் படிப்பறிவு பெற வேண்டும். படித்தால் அனைவரும் பண்படைந்து விடுவார்கள் என்பதல்ல என் வாதம். கீழ்த்தரமான எண்ணங்களும் இருக்கும். இதைப் போன்ற உணர்வுகளும் இருக்கும் (அடித்துத் துரத்த வேண்டும்...). காழ்ப்புணர்ச்சியும் இருக்கும். ஆனால் எதிர்வினை வேறு மாதிரி இருக்கும். ஒரு நிகழ்ச்சியை ஒரு படித்தவனும், படிக்காதவனும் பார்க்க நேர்ந்தாலும், படிக்காதவனின் எதிர்வினை, படித்தவனின் எதிர்வினையை விட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.

இதைத் தான் இன்று காலை எழுத நினைத்தேன். ஆனால் இதோடு முடியவில்லை. இன்று காலையும் போராட்டம். சரியாக காலை 9 மணிக்கு IBM நிறுவனத்தின் முன்பும், என்னுடைய பழைய அலுவலகத்திற்கு முன்பும். என்னுடை பழைய அலுவலகத்தில் IBM இல்லை

தான். ஆனாலும் அவர்கள் ஒரு பெரிய பூட்டை எடுத்து, நுழைவாயிலைப் பூட்டி விட்டனர். யாராலும் உள்ளேயேயும் செல்ல முடியவில்லை. வெளியேறவும் முடியவில்லை. பெரிய சாலை இடையூறு.

சரி இப்போதைக்கு இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு:

பெரிய ஒலி பெருக்கிகளை மென்பொருள் நிறுவனங்களின் வாசலில் மாட்டி, தினமும் ஒரு மணி நேரம் கன்னடப் பாடல்களை ஒலிபரப்புவது தான்.

எத்துனை நாட்களுக்கு இந்த இந்தியா என்ற அமைப்பு தாக்கு பிடிக்குமோ என்ற அச்சம், இதைப் போன்ற நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது, மேலோங்குகிறது.

ஸ்ருசல்

17 கருத்துகள் :

Suresh babu சொன்னது…

Good one..

Have you noticed this?

http://www.dinamalar.com/2005sep20/flash.asp

பெயரில்லா சொன்னது…

I AGREE WITH YOU.

பெயரில்லா சொன்னது…

I AGREE WITH YOU.

அப்டிப்போடு... சொன்னது…

//எத்துனை நாட்களுக்கு இந்த இந்தியா என்ற அமைப்பு தாக்கு பிடிக்குமோ என்ற அச்சம், இதைப் போன்ற நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது, மேலோங்குகிறது//.

உங்கள் பயம் அதிகமாகத் தெரிந்தாலும்., அதில் நியாமும் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டத்தான் எல்லாத்துக்கும், எல்லாருக்கும் திறந்து வைத்திருக்கிறார்கள். இந்தப் பதிவப் பத்தி தப்பித்தவறி உங்க கன்னட நண்பர்களிடம் சொல்லிவிடாதீர்கள். Take Care.

பெயரில்லா சொன்னது…

From someone who attended the concert
--------------
IBM conducted function (Party) in Bangalore Palace ground. There all IBM employees were present. In the function first, Viva girls (Channel V VJ's) Anuksha & Mauvva came to the stage...every body whistling when she made an entry to the stage. But when she started a song in Kannada ( little stanza) almost all IBM employees were shouting NO...OOOOO!.....U know at the moment Viva girls also surprised by looking at the IBM people 'coz they thought its Bangalore & there may be Kannada people there, but they both didn't realise its IT software company party, where Karnataka state & Kannada people are not given priority.. . Ok friends If this is the case its ok.......U know when Sonu Nigam & Saumya Rao (She is typically from karnataka ,bangalore & Hindi Singer) came to stage........Sonu asked Saumya to sing a song in Kannada, the crowd ( non - Karnataka IBM employees) almost all again started SHOUTING NOOOOOOOOOOO! they didn't want Kannada song.....see that Kannada singer Saumya stopped in the middle of the Kannada song (She sang only 2 lines of kannada song, "BaBaro Rasika nodenna ee thaluka...") & started Hindi song.......This is the situation of Kannadiga in karnataka.........Even the outsiders(artists) wishes to sing a kannada song but the people who are staying in Kannada Soil are not allowing to do that...
----------------

சுதர்சன் சொன்னது…

//இப்படி ஒரு மாநிலத்தவர் மற்றொரு மாநிலம் சென்று தொழில் துவங்கக் கூடாது, வாழக் கூடாது என்றால், இந்தியா என்பது எதற்கு? //

இப்போதெல்லாம் என் மனதில் அடிக்கடி எழும் கேள்வி இது.

என்ன இந்தியா எழவு வாழுகிறது? கர்நாடகாவும் தமிழ்நாடும் அண்டையில் உள்ள எதிரி நாடுகள் போலல்லவா இருக்கின்றன? தண்ணீர் தர மறுப்பதும், நிலப் பகுதியை ஆக்ரமிப்பதும்..

===

//தமிழ்நாட்டத்தான் எல்லாத்துக்கும், எல்லாருக்கும் திறந்து வைத்திருக்கிறார்கள்.//

இதெல்லாம் பழைய கதை. ஒரு நடிகை எக்குத்தப்பாக வாயை திறந்தாலே 'உன் ஊருக்கு ஓடு' என்கிறார்கள். அந்தளவுக்கு ஒரு செயற்கையான தமிழ் வெறியும் இப்போதெல்லாம் ஊட்டப்படுகிறது..

Narain சொன்னது…

இதுக்கு பேரு தான் இpseudo தேசியம் ;-) நம்மாளு சுதர்சன் அடிச்சாரு பாருங்க கில்லி. அது நெத்தியடி.

Voice on Wings சொன்னது…

அனானிமஸ் நண்பர் அளித்தத் தகவல் வருத்தமளிக்கிறது. கன்னடப் பாடல்கள் தொடங்கிய பின் நிறுத்தப்பட்டன என்றச் செய்தி IBM நிறுவனப் பணியாளர்களின் சகிப்பின்மையைத்தான் காட்டுகிறது. இருப்பது பெங்களூரோ, சென்னையோ, மும்பையோ, தில்லியோ, ஒரு பாடகர் (எந்த மொழியாக இருந்தாலும்) பாடத் தொடங்கிய பின், அவரைத் தொடர்ந்துப் பாட அனுமதிப்பதுதான் நாகரீகமானச் செயல். ஒருவேளை அந்நிறுவனத்தின் பணியாளர்களிடம் நாகரீகத்தை எதிர்பார்ப்பது நம் தவறோ?

Alex Pandian சொன்னது…

ஸ்ருஸல்,

அட ஒரே நாளில் இருவரும் சம்பந்தப்பட்ட விஷயத்தில் பதிவு.
க்ளிக்கவும்: http://alexpandian.blogspot.com

- அலெக்ஸ்

பெயரில்லா சொன்னது…

from a forwarded mail

Subject: Shocking Brutality at Bangalore Railway Station


Hi,

A shocking and outrageous incident happened three days ago with one of my juniors from IIM Lucknow. This happened at Bangalore Railway Station.The details of the incident are posted below.

He is seeking help from anyone with contacts in media to as that will probably ensure speedy justice and also help in bringing culprits to books. Anyone with willingness to help can reach him at 9886179319 or 30933067.

Thanks and regards,

Ashish

-------------------------------------

Hi!I would like to bring to notice a certain injustice that I have subjected to at the Bangalore Railway Station (Majestic). On September 30 (Friday), 2005, I had been to the station to see off my fiance and her mother. They took the Karnataka Express (Train #2627) to Jhansi at 6:30 pm.On my way out I was asked to present my platform ticket by a railway official. On producing the same, the TT turned around and told me "What if I say that you haven't given me the ticket?" Before I could react, he along with his colleague pushed me into the adjacent enquiry cabin and physically manhandled me. I was slapped several times, my spectacles were grabbed and deliberately crushed by foot, and my phone was flung away from me. The RPF comprising of one RPF and four constables, appeared on the scene. The surrounding public was whisked away. None of the railway police officials cared to listen to me and they started hitting me indiscriminately with lathis. They dragged me out, and all the 4 constables continued hitting me with lathis from Platform 1 to Platform 3/5, till we reached the station master's cabin. Racist abuses and threats were made on the way. At the station master's cabin, I was told that I have been charged with a non-bailable offence and would be behind bars for 15 days.Not for a single moment was I allowed to speak. All of a sudden a stranger came to the scene and he claimed that he was there to help me. Having lost all my physical strength and mental senses, I was happy to see some sort of help. He, claiming to be V Srinivas from Infosys, talked to the officials and the railway police in Kannada. He told me that the only way I was to get out was if I was willing to pay my way through. Being in no state to make a rational choice, I gave him my ATM card and pin. He took one of the RPF chaps along with him and said he would clear the matter. He returned some time later saying that everything was okay now.I was asked to sign a statement which said that I hit the police and TT in a drunken state. I refused. Finally, they pressurized me to write that I did not produce a platform ticket when asked. I wrote the same and then V Srinivas took me out of the station. He joined me in an auto and took me to the ICICI ATM at Anand Rao circle. He withdrew Rs. 15000 from my ATM and got back. he took the cash under the pretext that while helping me he had left his wallet in the train he had left behind and that he would return the same through his ICICI Internet account. Having broken down mentally I did not realise that I was being cheated. He then took me to a Samsung showroom and tried purchasing a cellphone worth Rs. 18500 with my card. It was only then that I realised what was happening. I grabbed my card back, caught him by the collar, snatched my cash that lay in his pocket, and got into a running auto.I have now realized that all of this was a plan. There is a strong nexus between the railway officials, the railway police and the fraudster. The railway officials identify a victim who they think is well-to-do, the RPF beat that individual till he has no physical or mental well-being. Then this fraud chap comes on to the scene, takes advantage of the situation, and takes all your cash away. Also, this series of events generally occurs on the last day of the month as they know that the salary gets credited on this day. (This strikes me now because the self-proclaimed Infy employee, V Srinivas, clearly asked me whether I had received my salary. He said that he just wanted to find out if there was cash enough to tackle the case.)Now three days hence, I have tried to run from pillar to post. I have been forced to miss office hours in my effort to get justice. But I don't want to give up the fight midway. If any of you are in the media, or have friends/relatives who are in the industry, I'd like to speak with them about this in greater detail. I can be reached on 09886179319 or 08030933067. I believe it would catalyze my efforts.Also, please pass this email to all the people who reside in Bangalore, so that they don't fall into the same trap.Regards,

Nimish V Adani

IIML Batch of 2003

ITBHU Batch of 2001

பெயரில்லா சொன்னது…

I seriously doubt the last incident. If that incident in fact occurred, TimesofIndia would've published the news and shouted from the roof.

My 2 cents...

elilan சொன்னது…

இசைக்கு மொழி இல்லையாமே, ஈBM காரர்கலுக்கு அது எப்படி வந்தது?.

பெயரில்லா சொன்னது…

http://www.deccanherald.com/deccanherald/oct52005/index2042432005104.asp

RPF assaults IT firm employee

DH News Service Bangalore:


An employee of an IT company in Bangalore was allegedly beaten up by some Railway Protection Force (RPF) officers with the help of two travelling ticket examiners (TTs) at the City Railway Station on September 30.

Nimish V Adani (25), an IIM, Lucknow, graduate who works as business development manager at Logix Microsystems here, said he was roughed up while on his way out of the station after seeing off his fiancée and her mother by the Karnataka Express to Jhansi at 6.30 pm.
<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>

பெயரில்லா சொன்னது…

More

http://www.ryze.com/posttopic.php?topicid=563043&confid=366

ஸ்ருசல் சொன்னது…

இந்த செய்தி (IIM Student) இன்றைய (அக்டோபர், 5ம் தேதி) டைம்ஸ் ஆஃப் இண்டியா-வில் 3 வது பக்கத்தில் விரிவாக வந்துள்ளது. தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புவோமாக!.

பெயரில்லா சொன்னது…

I Agree with you ...
All these kannadigas , tamilians, teluguites, north indians,malayalies, mhaharastrian diversity has to go for the India's growth

சீனு சொன்னது…

//All these kannadigas , tamilians, teluguites, north indians,malayalies, mhaharastrian diversity has to go for the India's growth//
Impossible!!!