நான் கற்றுக் கொண்ட பாடங்கள்:
இருக்கும் பணிகளிலேயே கடினமான பணி, தமிழ்மணத்தில் நட்சத்திரமாக இருப்பது தான் என நினைக்கிறேன். மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு அப்படித் தான். ஒரு வாரத்திற்கும் முன்பாகவே இடுகைகளை தயாரிக்க ஆரம்பித்து, ஒன்றொன்றாக ஒரு வடிவிற்குக் கொண்டு வந்து வெளியிட்டால், ம்ஹீம்; ஆரம்பத்தில் யாரிடமும் இருந்து எவ்விதமான எதிர்விளைவும் இல்லை. ஏதும் தவறாகச் சொல்லி விட்டோமா என யோசிக்கும் நிலைக்கு என்னைத் தள்ளி விட்டது? இதில் தவறு நிச்சயம் வாசகர்கள் மீது இல்லை. நான் எழுதும் முறையில் சில மாறுதல்களைச் செய்ய வேண்டியதிருப்பதை இது சுட்டிக்காட்டியது. சில பதிவுகள் நீளமாகிப் போய் விட்டன. குமரனுக்கு என்னுடைய முதல் பதிவிற்காக கொடுத்த கீழ்கண்ட பதிலைக் கொடுத்திருந்தேன். "பதிவின் நீளம் அதிகம் தான். பள்ளியிலிருந்தே அதிகமாக எழுதுவது எனக்கு வழக்கமாகி விட்டது. அதை மட்டும் மாற்றினால் போதும் என நினைக்கிறேன்", எனத் தெரிவித்திருந்தேன்.
இந்த ஒரு வார காலத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் வரை என் பதிவிற்கு வருகை தந்திருந்தாலும், வந்த அனைவரும் இடுகைகளை முழுவதுமாகப் படித்தார்களா, படித்தவர்கள் அனைவரும் ரசித்தார்களா, ரசித்தவர்கள் அனைவரும் என்னுடைய கருத்துக்களுடன் ஒத்துக்கொண்டார்களா அல்லது முரண்பட்டார்களா எனத் தெரியவில்லை. வந்த சில பின்னூட்டங்களிலிருந்து சிலரது கருத்துக்களைத் தான் அறிய முடிந்தது.
கன்னத்தில் முத்தமிட்டால் படம், ஓர் சிறந்த திரைப்படம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த திரைப்படம் சரியாக ஓடவில்லை. அதன் பிறகு நடந்த ஓர் சந்திப்பில் (மூன்று பொது ஜனங்கள், மணிரத்னம், இன்னொரு திரைக்கலைஞர்), மணிரத்னம் சிறிது கோபமாக 'கன்னத்தில் முத்தமிட்டால் என்ற சிறந்த படம் எடுத்தேன். யார் பார்த்தீங்க', என்று கோபத்துடன் கூறினார். அவரின் கோபம் புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால், அவர் எடுக்கும் படங்களை எல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என நினைப்பது சரியல்ல. அதே மக்கள் தான், ரோஜாவையும், பம்பாயையும், அஞ்சலியையும் வெற்றி பெற வைத்தனர். திரைப்படமும், எழுத்தும் மக்களைச் சென்று சேரவில்லை என்றால், 'எழுத்தில் குறை இருக்கிறதா என்று தான் பார்க்க வேண்டுமே தவிர மக்களின் மீதல்ல. கொடுப்பவர், அவரின் கருத்தை மாற்ற வேண்டும் என்று சொல்ல வரவில்லை. கொடுத்த விதத்தில் ஏதும் தவறிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதில் சில மாற்றங்கள் செய்தால், வெற்றியடைந்திருக்க முடியும். அதே போல, நான் எழுதுவதை எல்லாரும் ரசிக்க வேண்டும், பார்க்க வேண்டும் என நினைத்தால், எழுதாமலே இருந்து விடலாம்.
எனக்கு இந்த இடுகைகள் வெளியிட்டதில் திருப்தி இருந்தும், சில இடுகைகள் சரியாக மற்றவர்களைச் சென்று சேரவில்லையோ என்ற ஐயம் இருக்கிறது. இதற்கு தவறு என் மீது தான் (நான் கொடுத்தவிதம்) தான் இருக்க வேண்டும். கொடுத்தவிதத்தில் சில மாறுதல்கள் செய்ய வேண்டும் என அறிகிறேன். இதை நட்சத்திர வாரத்திற்கு முன்பே உணர்ந்திருக்கிறேன். மற்றவர்கள் கண்ணில் சரியாகப் படாமல் போயிருக்கலாம்; அதனால் தான், சரியாக சென்றடையவில்லை என நினைத்தேன். ஆனால் நட்சத்திர வாரம் அந்த கருத்தை மாற்றியிருக்கிறது.
சிறந்த ஆசிரியர்களைஅடையாளம் காண்பது எப்படி, கல்வி கற்பித்தலின் தரத்தை அதிகரிப்பது எப்படி என எனக்குத் தெரிந்த சில விசயங்களைப் பதிவு செய்திருந்தேன்.
கதை எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எழுதி
அதை பதியவும் செய்தேன். சிலர் அதனையும் பொறுத்துக்கொண்டு, நன்றாக இருக்கிறது என பெருந்தன்மையுடன் கூறினாலும், அதன் தரம் எனக்குத் தெரியும். ஆதலால், இனி கதை எழுதி நேரத்தை (என்னுடைய, படிக்கும் உங்களுடைய) வீணடிக்கக் கூடாது என முடிவெடுத்திருக்கிறேன். (யப்பா பொழச்சோம் என நீங்கள் சொல்வது எனக்குக் கேட்கிறது).
கெட்ட புத்தியும் பச்சரிசி சாப்பாடும் என்ற பதிவிற்கு மிக அதிக எதிர்ப்புகள் இருக்கும் என தயக்கத்தோடு தான் பதித்தேன். ஆனால், அதற்கு வந்த ஆக்கப்பூர்வமான பின்னூட்டங்களும், தருமி, பாரதி, முத்து (தமிழினி), மரத்தடி, மற்றும் சில அனானிகள் உள்ளிட்ட பலர் கோபப்படாமல் இட்ட பின்னூட்டங்களும், அந்த எண்ணத்தை மாற்றின. மற்ற சில ஒத்த கருத்துள்ள நண்பர்களின் ஊக்கமும் உற்சாகமூட்டியது. யாரிடமும் இருந்து பழித்து பின்னூட்டங்கள் வரவில்லை. அதற்காக நானடைந்த ஆச்சர்யத்திற்கும், சந்தோசத்திற்கும் அளவில்லை. என்னுடைய கருத்துக்களை ஓரளவிற்காவது மதித்து, அதற்கு ஆக்கப்பூர்வமாக பின்னூட்டமிட்ட தமிழன்பர்களுக்கு நன்றி. நான் ஏமாற்றமடைந்தது ஒன்றே ஒன்றில் தான்; '-' குறியை தேர்ந்தெடுத்த சிலர், எதற்காக '-' தேர்ந்தெடுத்தார்கள் என்ற காரணத்தைச் சொல்லாமல் சென்றது தான்.
எனக்குப் பிடித்த பாடல்களைப் பதியவேண்டும் என நினைத்து மிகவும் சிரமப்பட்டு பதித்தேன். காலங்கள் மாற மாற என்னுடைய ரசனை மாற்றத்தை பதிவு செய்யும் விதத்தில் அது அமைந்திருந்தது. ஏற்கனவே ஓவராக தத்துவமாகப் பொழியக்கூடாது என்ற எண்ணத்தில் தான், ஆசிரியர்கள், கெட்டபுத்தியும் பச்சரிசி சாப்பாடும், உயிர் இழப்பதற்காகவா போன்ற பதிவுகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் பதிந்தேன். இது எப்படிபட்ட விளைவுகளை உண்டாக்கியது எனத் தெரியவில்லை. பயணத்தை தொய்வாக்கியதா அல்லது நல்ல மாறுதலை உண்டாக்கியதா எனத் தெரியவில்லை.
உயிர்; மற்றவர்களுக்காக இழப்பதற்காகவா? என்ற தலைப்பில் ராணுவ வீரர்களின் கஷ்டங்களைப் பற்றிக் கூறியிருந்தேன்.
சனிக்கிழமை டவர் ஆஃப் சைலண்ட்ஸ் என்ற தலைப்பில் ஓர் தகவல், நான் ரசித்த சினிமாக் காட்சிகளின் (பின்னணி இசைத் தொகுப்பு) பட்டியல்.
7 நாட்கள் எப்படி போனது என்றே தெரியவில்லை எனக் கூறவிரும்பவில்லை. இடுகைகளைப் பதிவது, சரி பார்ப்பது, பதிவது, பதிந்ததில் திருந்தங்கள் இருந்தால் அதனை சரி செய்வது, அதன் பின்னர் வரும் பின்னூட்டங்களுக்கு பதிலளிப்பது, மீண்டும் அடுத்த நாளுக்கான பதிவினை எடுத்து காலை 9 மணிக்கு இடுவது என பளு சிறிது அதிகம் தான். சனிக்கிழமை கிட்டத்தட்ட சோர்ந்து விட்டேன். முறைமாமன் படத்தில் வரும் கவுண்டமணி போல. :)
இன்னும் வாசகர்களைக் கவரும் விதத்தில் எழுதுவது எப்படி என நான் கற்றுக்கொள்ள வேண்டும், என இந்த ஒரு வாரத்தில் அறிந்து கொண்டேன். கொடுக்கும் விசயங்கள், கடினமான விசயங்களாக இருந்தாலும், அது கடைசி நிலை மனிதருக்கு எளிதில் புரியும் படி தெளிவாகவும், எளிமையாகவும் இருக்கும் வகையில் எழுதுவதில் தான் விசயமே இருக்கிறது. அதற்கும் நான் இன்னும் முயற்சி எடுக்க வேண்டும். இடுகைகள் எழுதும் வேகம் அதிகரித்துள்ளது.
இந்த ஒரு வார காலத்தில், என்னுடைய பதிவுகளினால் யாருடைய மனமாவது புண்பட்டிருக்குமாயின் எனது வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சாதாரண தமிழன்பர்கள் - நாம் அனைவரும். தமிழில் எழுதுவதும், வாசிப்பதையும் இன்பமெனக் கருதுபவர்கள். உலகின் பல பகுதிகளில் வசிக்கும் நம்மிடையே வெறும் அரசியல் மற்றும் இன்ன பிற விசயங்களில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளினால் தனி மனிதக் காழ்புணர்ச்சி இருக்கக் கூடாது என்பதே என்னுடைய அவா. நிச்சயமாக இந்த விசயத்தில் தமிழ் வலைப்பூக்கள் முன்னேறி வருகிறது என்பது என்னுடைய கணிப்பு. ஆனாலும் இன்னும் பலருக்கு தங்களுடைய கருத்துக்களைச் சொல்வதற்கு தயக்கமிருக்கிறது. நம்முடைய விருப்பு, வெறுப்புகளை மற்றவர்களின் மனம் கோணாம்ல் எடுத்துரைத்தால், அது போன்ற விசயங்கள், மெல்ல மறைந்து விடும் என நம்புகிறேன்.
தமிழ் வலைப்பூக்கள், திரட்டிகள் பல விசயங்களைத் தமிழிலேயே தெரிந்து கொள்ள உதவுகின்றன. (உ.ம். நியூக்கிளியர் ரியாக்டர், கூகுள் தேடியில் உள்ள குறைபாடுகள் உட்பட). இதனை போன்ற விசயங்களை சாத்தியமாக்கியதற்காக தமிழ்மணத்திற்கும் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு ஊக்கமளித்துக் கொண்டிருக்கும் அனைத்து வாசகர்களுக்கும், எனக்கு வாய்ப்பளித்த தமிழ்மணத்திற்கும் என்னுடைய நன்றியைக் கூறி என்னுடைய நட்சத்திர வாரத்தை இந்த இடுகையுடன் முடித்துக் கொள்கிறேன்.
இன்று பதிவிடுவதற்கு, இன்னொரு பதிவு எழுதி வைத்திருந்தேன். ஆனால் ஓவர்டோஸ் ஆகிவிடும் என்பதால், பதிவிடவில்லை. ஆதலால் உங்களுக்கு நேரமிருந்தால் என்னுடைய அதிகம் அறியப்படாத (?) சில பதிவுகளை நோட்டமிடவும்.
1. ஐஐடி என்ன செய்ய வேண்டும்
2. சர்வதேசப் பள்ளிகளில் இந்திய விஞ்ஞானிகள்
3. புலம் பெயர்வதால் ஏற்படும் இழப்புகள்
இவற்றைப் படிப்பதற்கு அபார பொறுமை வேண்டும். இதில் விருப்பம் இல்லையென்றால், சில ஜாலி பதிவுகள் இதோ:
1. இந்தியாவின் நேர்மையற்ற முறையீடு - இன்சமாம் கதறல்
2. தில்லாலங்கடி திப்புசுல்தான்
3. ஏ.ஆர்.ரகுமானின் பெங்களூர் இசை நிகழ்ச்சி - பாகம் 1
4. ஏ.ஆர்.ரகுமானின் பெங்களூர் இசை நிகழ்ச்சி - பாகம் 2
இதுவும் உங்களை சந்தோசப்படுத்தவில்லை என்றால் என்னுடைய 'பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்', கதையைப் படியுங்கள்.
ஆண்டவன் உங்களைக் காப்பாற்றுவானாக! :)
அடுத்து வரும் நட்சத்திரங்களுக்கு, வாழ்த்துக்களைக் கூறி விடை பெறுகிறேன்.
(அட, இந்தப் பதிவும் நீளமாகி விட்டதே, பழக்க தோஷங்க மாத்த முடியாது)
------------------ எனது பின்னூட்டத்தை இங்கே சேர்க்கிறேன் -------------------------
நான் சொன்ன விசயங்கள் சிலவற்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
"எனது இடுகைகள் சில, வாசகர்களைச் சரியாக சென்றடையவில்லையோ என்ற ஐயம் இருக்கிறது". இதைத் தான் இந்தப் பதிவில் நான் கூறிய ஒரே குறை. ஆனால் இது பல அர்த்தங்களைக் கொடுக்கிறது.
1. பின்னூட்டங்கள் அதிகம் கிடைக்கவில்லை
2. இடுகைகள் படிக்கப்படவில்லை / விரும்பப்படவில்லை.
1. பின்னூட்டங்கள் அதிகம் கிடைக்கவில்லை:
முதலில், நான் பின்னூட்டங்களின் கணக்கை வைத்து, இடுகை நல்ல பதிவா, இல்லையா என்பதை முடிவு செய்வதில்லை. எனது பல பதிவுகள் (நல்ல பதிவுகளாக நான் நினைப்பது) ஒன்றிரண்டிற்கு மேல் பின்னூட்டங்களைப் பெற்றதில்லை. அதிகபட்சமாக ஒரு சில இடுகைகள் பத்து வரைப் பெற்றிருக்கின்றன. அதற்காக, நான் என்றென்றும் அது போன்ற இடுகைகளை எழுதுவதை நிறுத்துவதில்லை. இடுகைகளை விரும்பும் பலரும், பின்னூட்டங்கள் இட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. நானும் பல முறை (பல முறை என்ன, எப்போதும் இதைத் தான் செய்வேன்). பல நல்ல பதிவுகளைப் படித்துவிட்டு, பின்னூட்டம் இடாமலேயே சென்றுள்ளேன். ஆதலால், பின்னூட்டங்கள் பெறாததை ஓர் குறையாகக் கூறவில்லை.
எனது நட்சத்திர வார இடுகைகள், சில இடுகைகள் 30-50 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. அப்படியானால், நான் மகிழ்ச்சியாகத் தானே கடைசி இடுகையை முடித்திருக்க வேண்டும். 50க்கும் மேற்பட்ட இடுகையைக் கூட சிறந்த இடுகையாக நான் கூறமாட்டேன். பின்னூட்டங்களே நான் வேண்டாம், எனக்கு அவசியம் இல்லை என்ற அர்த்தம் இல்லை. பின்னூட்டங்கள் மூலம் தான் வாசிப்பவரின் மனநிலையை அறியமுடிகிறது. ஆனாலும் அது பின்னூட்டங்கள் மட்டுமே இடுகையின் தரத்தை நிர்ணயிப்பதில்லை.
இடுகைகள் படிக்கப்படுவதில்லை. இதற்கு காரணம், எடுத்திருக்கும் கரு, சோர்வடையச் செய்பவையாக இருக்க வேண்டும். அது தான் காரணம் என என்னால் உறுதியாகக் கூறமுடியும்.
"ம்ஹீம்; ஆரம்பத்தில் யாரிடமும் இருந்து எவ்விதமான எதிர்விளைவும் இல்லை. ஏதும் தவறாகச் சொல்லி விட்டோமா என யோசிக்கும் நிலைக்கு என்னைத் தள்ளி விட்டது"
எனது முதல் நாள் மனநிலையை அப்படியே இந்த வரியில் பதிந்திருந்தேன். ஒரு வாரமாக யோசித்து, அடித்த பதிவு அதிகமாகப் படிக்கப்படவில்லை என்பது எனக்கு வருத்தத்தை அளித்தது உண்மை. அதனால் தான் அதை அப்படியே பதிவுசெய்திருக்கிறேன். நான் பிராமண எதிர்ப்பைப் பற்றி கொடுத்த இடுகையை விட இந்த ஆசிரியர் இடுகையை மிகவும் மதிக்கிறேன். அந்த காரணத்திற்காகத் தான், அது சினிமா, கதை, ஜாதி, அரசியல் போன்ற மற்ற இடுகைகளால் பாதிக்கப்படக் கூடாது என எனது முதல் இடுகையாகப் பதிவு செய்தேன். ஆனால் அதைப் படித்தவர்கள் 100 பேர் கூட இருக்கமாட்டார்கள்.(Statistics வைத்து சொல்கிறேன்). இதற்கு காரணம், நான் முன்பே குறிப்பிட்டது போல, வேறு பட்ட ரசனைகள் கொண்ட வாசகர்கள் இருப்பது தான். அது போன்ற பதிவு படிக்கப்படாமல் போனதில் எனக்கு வருத்தம் இருந்தது உண்மை. ஆனால் சினிமா மற்றும் சில பதிவுகள் அதிக வரவேற்பைப் பெறுகின்றன.
எனது மனநிலை எப்படி இருந்ததோ, அதை அப்படியே எனது "நான் கற்ற பாடங்கள்", என்ற இடுகையில் ஒளிவு மறைவின்றி பதிந்திருந்தேன். இது இவ்வாறு ஆனதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பதற்கான விளக்கத்தையும் எனது இடுகையில் தெரிவித்திருந்தேன். இதற்கு அர்த்தம், "நான் வருத்தப்படுகின்றேன்; கோபத்துடன் இருக்கிறேன்; மனத்தளர்ச்சி அடைந்து விட்டேன்", என்று அர்த்தம் அல்ல. வருத்தப்பட்டேன். ஆனால் யோசித்துப் பார்த்ததில் எனக்கு கிடைத்த விடைகள் இவை: (அதையும் இடுகையில் தெரிவித்திருந்தேன்)
1. சோர்வையடையச் செய்யும் தலைப்புகள் (ஒவ்வொருத்தரின் ரசனை வேறு விதமாக இருக்கிறது. நான் ஒவ்வொருவரையும் வற்புறுத்தமுடியாது. எனது ஆசிரியர்கள் இடுகையை படித்த பலருக்கு, "எனது பாடல்கள்" பதிவும், "பாடல்கள்" பதிவு பிடித்த பலருக்கு எனது ராணுவம் பதிவும் பிடிக்காமல் போவது இயல்பு. ஆனாலும், இந்தத் தலைப்புகளை நான் நிறுத்தப்போவதில்லை. நான் ஏற்கனவே சொல்லியிருந்தது போல, "பிளாக்குகள் எனது எண்ணங்களின் வடிகால்; நான் நினைப்பதை பதிவு செய்கிறேன்", அவ்வளவு தான். எனது பதிவுகளுக்கு பின்னூட்டங்களே கிடைக்கவில்லையென்றாலும் கூட நான் எனக்குத் தோன்றியதை எழுதிக்கொண்டுதானிருப்பேன்.
2. திரைப்படமும், எழுத்தும் மக்களைச் சென்று சேரவில்லை என்றால், 'எழுத்தில் குறை இருக்கிறதா என்று தான் பார்க்க வேண்டுமே தவிர மக்களின் மீதல்ல. கொடுப்பவர், அவரின் கருத்தை மாற்ற வேண்டும் என்று சொல்ல வரவில்லை. கொடுத்த விதத்தில் ஏதும் தவறிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
3. கொடுக்கும் விசயங்கள், கடினமான விசயங்களாக இருந்தாலும், அது கடைசி நிலை மனிதருக்கு எளிதில் புரியும் படி தெளிவாகவும், எளிமையாகவும் இருக்கும் வகையில் எழுதுவதில் தான் விசயமே இருக்கிறது.
இவை நான் கற்றுக்கொண்ட பாடங்கள். எனக்கு நன்மையளிக்கும் விதமாக நான் தெரிந்து கொண்டவை என்ற ஆக்கப்பூர்வமான, அர்த்தத்தில் கொடுத்திருந்தேன். யாரையும் குறை சொல்லும் நோக்கிலும், படித்து விட்டும் ஏன் பின்னூட்டம் இடாமல் செல்கிறீர்கள் என்ற அர்த்தத்திலும் அல்ல என்பதைத் தெளிவுபடித்த விரும்புகிறேன்.
தாராளமாக நீங்கள் வாருங்கள்; படியுங்கள்; செல்லுங்கள்.
----------------------------------------------------------------------------------
20 கருத்துகள் :
உண்மைதான் ஸ்ருசல். உங்கள் பதிவுகள் மிக மிக நீளமாக இருந்தன. சொன்ன விதத்தில் குறை இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. ஆனால் நீளமாக இருந்தததால் படிப்பதில் சிறிது அயர்ச்சி ஏற்பட்டது உண்மை தான். வழக்கமாய் எல்லா நட்சத்திரங்களின் பதிவுகளையும் படித்துப் பின்னூட்டம் இடுவது என்பதை ஒரு கொள்கையாக வைத்திருக்கிறேன். தமிழ்மண நிர்வாகிகள் எத்தனை முயற்சி எடுத்து ஒருவரை நட்சத்திரமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்களுக்கு என்னால் முடிந்த கைம்மாறு அந்த நட்சத்திரங்கள் எழுதும் நட்சத்திர வாரப் பதிவுகளைப் படித்துப் பின்னூட்டம் இடுவது தான் என்று எண்ணுகிறேன். ஆனாலும் உங்கள் நட்சத்திரப் பதிவுகளை ஒரே முறையில் படித்து விட முடியவில்லை. அவற்றை பிரிண்ட் அவுட் எடுத்து மெதுவாகப் படித்து ஜீரணித்துப் பின்னர் தான் பின்னூட்டம் இட வேண்டியிருந்தது. அதனால் இதுவரை உங்களின் இந்த வாரப் பதிவுகளில் ஒன்றே ஒன்றைத் தான் முழுதாகப் படித்து முடித்திருக்கிறேன். மெதுவாக ஒவ்வொன்றாகப் படித்துப் பின்னூட்டம் இடுகிறேன்.
அடுத்த இரண்டு வாரம் நட்சத்திரங்களின் பதிவுகளை உடனே படிக்க முடியாத படி வேலை இருக்கிறது. அதனால் அடுத்து வரும் நட்சத்திரங்கள் 'சரி. குறைந்த பட்சம் நமக்கு குமரனின் பின்னூட்டமாவது வரும்' என்று எண்ணி ஏமாற வேண்டாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்துப் பின்னூட்டம் இடுகிறேன். ஆனால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கியாரண்டி இல்லை. :-)
உங்க நட்சத்திர பதிவுகள் படித்தேன், ஆனால் பின்னோட்டம் தான் இடவில்லை.
வித்தியாசமான நட்சத்திர வாரத்தை உணர்ந்தேன். பாராட்டுகள்.
>>அவற்றை பிரிண்ட் அவுட் எடுத்து மெதுவாகப் படித்து ஜீரணித்துப் பின்னர் தான் பின்னூட்டம் இட வேண்டியிருந்தது..<<<
குமரன் சுட்டிக்காட்டியதற்கு நன்றி. உங்கள் பொறுமைக்கும் தான். :)
பரஞ்சோதி மிக்க நன்றி. உங்களின் சிறுவர் பூங்கா எப்படி இருக்கிறது?
ஸ்ருசல்! நீங்க நட்சத்திர வாரத்தை நன்றாகவே கொண்டு போனீர்கள். அளவாக, திட்டமிட்டு கொண்டு சென்றது நன்றாகவே தெரிந்தது. உங்கள் ஆசிரியர் பற்றிய சிந்தனை ரொம்பவே அருமை. அந்த பாடல் பதிவுக்கு ரொம்பவே உழைத்திருப்பீர்கள். உங்கள் பார்சி பதிவையும் நேற்று காலையிலேயே படித்து விட்டேன். கமெண்ட் தான் போடலை. நான் படிக்கணும் என்று நினைத்து இன்னும் படிக்காமல் இருப்பது உங்கள் 'ராணுவ வேலை' பற்றிய பதிவு தான். மற்றபடி, நீங்கள் சொல்ற அளவுக்கு அப்படி ஒன்றும் பெரிய பதிவோ, கடின நடையோ இல்லை என்றே தோன்றுகிறது.
லீவுல போறீங்களா :-)) (என்னைய மாதிரி)
hello siva,
thanks.
leave-la pogum idea ippothaikku illa. ;)
bharathi,
nanri.
thaguthi attravai entru nanum kuripidavillai. kuripidavum matten. appadai thontri irunthal, idugaigal ittirukave matten!
nalai kalaiyil virivaga pinnootam idukiren. i don't have e-kalpai here.
thanks a lot.
நன்றாகவிருந்தது. எல்லாவற்றையும் வாசிக்கவில்லையென்றாலும், பாடல்தெரிவு, இராணுவசேவை, இரண்டும் நான் ஆர்வத்தோடு வாசித்தேன். பாராட்டுக்கள். தொடர்க
bharathy,
neengal kooriathai nan sariyaga purinthu kollavillai ena ninaikiren.
mannikavum.
melum ingu tamil font-kalai padikkum vasathi illai. nan pinnootangalai thenkoodu text box-il copy seithu than, approve seikiren. padithu purinthu kollavum kainamaga irukkirathu. athanal than intha kuzhpam. varunthukiren.
ஸ்ருசல்
உங்கள் கடைசிப் பதிவில் சற்று மனத்தளர்ச்சி தெரிகிறது.
வாசிப்பவர்கள் எல்லோருமே பின்னூட்டம் இடுவதில்லை.
சில சமயங்களில் மிக மிக நல்ல பதிவுகளை வாசித்து விட்டே...
என்ன எழுதுவதென்று தெரியாமல் போபவர்களும் உண்டு.
எழுத வேண்டுமென்ற யோசனை வராமல் சென்று விடுபவர்களும் உண்டு.
அதனால் பின்னூட்டம் போதியளவு வரவில்லை என்பதற்காக மனம் தளர வேண்டாம்.
உங்கள் திரையிசைப் பாடல்கள் பதிவை ஆர்வமாக வாசித்தேன்.
சிறுகதையை வாசிப்பதற்காக எடுத்து வைத்துள்ளேன். இனித்தான் வாசிக்கப் போகிறேன்.
நீங்கள் சிறுகதை எழுதுவதையே நிறுத்தப் போவதாகக் குறிப்பிட்டதால் கண்டிப்பாக அக்கதையை வாசிக்க வேண்டுமென நினைத்துள்ளேன். வாசித்து விட்டுக் கருத்தைச் சொல்கிறேன்.
chandravadhana,
pinnootam peruvathu enathu nokam alla. ennudaiya pathivukal sariyakach sentru seruvathu illaiyo entru aiyam irupathaga koori irunthen.
atharku artham, pinnootam kidaikavillai enpathu artham alla.
nalai, office sentru, vilakam alikiren.
eninum ungalin varukaikum, karuthukkum mikka nantri.
vanakam.
உங்க பதிவுகள் அனைத்தும் அருமையாக இருந்தன. என்ன நமக்கு நிறைய ஆளுங்களை போல பின்னூட்டமெல்லாம் நல்லா எழுத வராது. அதனால விட்டுட்டேன். மேலும், உங்க வேற பதிவுகளையும் இனிமே தான் படிக்கணும். முடிச்சுட்டு, தனி மயில் அனுப்புறேன்.
என்றும் அன்புடன்
Srusal,
most of yr posts were good especially about "teaching and teachers","pacharisi" and about the "Parsis".I just skimmed thru the rest of yr posts....(will be reading in a few days!!)Lot of hard work has gone into yr writing.....i did enjoy yr "star week"
இந்தப் பதிவை வாசித்து வரும்போது, அந்த படம் ஒன்று போட்டிருக்கிறீர்களே அதைப் பார்த்ததும் நீங்கள் கொஞ்சம் சோகமாக இருப்பது போல் தோன்றி, அந்த சோகம் என் மேலும் கொஞ்சம் தொற்றிக்கொண்டது... :-(
நான் சொன்ன விசயங்கள் சிலவற்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
"எனது இடுகைகள் சில, வாசகர்களைச் சரியாக சென்றடையவில்லையோ என்ற ஐயம் இருக்கிறது". இதைத் தான் இந்தப் பதிவில் நான் கூறிய ஒரே குறை. ஆனால் இது பல அர்த்தங்களைக் கொடுக்கிறது.
1. பின்னூட்டங்கள் அதிகம் கிடைக்கவில்லை
2. இடுகைகள் படிக்கப்படவில்லை / விரும்பப்படவில்லை.
1. பின்னூட்டங்கள் அதிகம் கிடைக்கவில்லை:
முதலில், நான் பின்னூட்டங்களின் கணக்கை வைத்து, இடுகை நல்ல பதிவா, இல்லையா என்பதை முடிவு செய்வதில்லை. எனது பல பதிவுகள் (நல்ல பதிவுகளாக நான் நினைப்பது) ஒன்றிரண்டிற்கு மேல் பின்னூட்டங்களைப் பெற்றதில்லை. அதிகபட்சமாக ஒரு சில இடுகைகள் பத்து வரைப் பெற்றிருக்கின்றன. அதற்காக, நான் என்றென்றும் அது போன்ற இடுகைகளை எழுதுவதை நிறுத்துவதில்லை. இடுகைகளை விரும்பும் பலரும், பின்னூட்டங்கள் இட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. நானும் பல முறை (பல முறை என்ன, எப்போதும் இதைத் தான் செய்வேன்). பல நல்ல பதிவுகளைப் படித்துவிட்டு, பின்னூட்டம் இடாமலேயே சென்றுள்ளேன். ஆதலால், பின்னூட்டங்கள் பெறாததை ஓர் குறையாகக் கூறவில்லை.
எனது நட்சத்திர வார இடுகைகள், சில இடுகைகள் 30-50 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. அப்படியானால், நான் மகிழ்ச்சியாகத் தானே கடைசி இடுகையை முடித்திருக்க வேண்டும். 50க்கும் மேற்பட்ட இடுகையைக் கூட சிறந்த இடுகையாக நான் கூறமாட்டேன். பின்னூட்டங்களே நான் வேண்டாம், எனக்கு அவசியம் இல்லை என்ற அர்த்தம் இல்லை. பின்னூட்டங்கள் மூலம் தான் வாசிப்பவரின் மனநிலையை அறியமுடிகிறது. ஆனாலும் அது பின்னூட்டங்கள் மட்டுமே இடுகையின் தரத்தை நிர்ணயிப்பதில்லை.
இடுகைகள் படிக்கப்படுவதில்லை. இதற்கு காரணம், எடுத்திருக்கும் கரு, சோர்வடையச் செய்பவையாக இருக்க வேண்டும். அது தான் காரணம் என என்னால் உறுதியாகக் கூறமுடியும்.
"ம்ஹீம்; ஆரம்பத்தில் யாரிடமும் இருந்து எவ்விதமான எதிர்விளைவும் இல்லை. ஏதும் தவறாகச் சொல்லி விட்டோமா என யோசிக்கும் நிலைக்கு என்னைத் தள்ளி விட்டது"
எனது முதல் நாள் மனநிலையை அப்படியே இந்த வரியில் பதிந்திருந்தேன். ஒரு வாரமாக யோசித்து, அடித்த பதிவு அதிகமாகப் படிக்கப்படவில்லை என்பது எனக்கு வருத்தத்தை அளித்தது உண்மை. அதனால் தான் அதை அப்படியே பதிவுசெய்திருக்கிறேன். நான் பிராமண எதிர்ப்பைப் பற்றி கொடுத்த இடுகையை விட இந்த ஆசிரியர் இடுகையை மிகவும் மதிக்கிறேன். அந்த காரணத்திற்காகத் தான், அது சினிமா, கதை, ஜாதி, அரசியல் போன்ற மற்ற இடுகைகளால் பாதிக்கப்படக் கூடாது என எனது முதல் இடுகையாகப் பதிவு செய்தேன். ஆனால் அதைப் படித்தவர்கள் 100 பேர் கூட இருக்கமாட்டார்கள்.(Statistics வைத்து சொல்கிறேன்). இதற்கு காரணம், நான் முன்பே குறிப்பிட்டது போல, வேறு பட்ட ரசனைகள் கொண்ட வாசகர்கள் இருப்பது தான். அது போன்ற பதிவு படிக்கப்படாமல் போனதில் எனக்கு வருத்தம் இருந்தது உண்மை. ஆனால் சினிமா மற்றும் சில பதிவுகள் அதிக வரவேற்பைப் பெறுகின்றன.
எனது மனநிலை எப்படி இருந்ததோ, அதை அப்படியே எனது "நான் கற்ற பாடங்கள்", என்ற இடுகையில் ஒளிவு மறைவின்றி பதிந்திருந்தேன். இது இவ்வாறு ஆனதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பதற்கான விளக்கத்தையும் எனது இடுகையில் தெரிவித்திருந்தேன். இதற்கு அர்த்தம், "நான் வருத்தப்படுகின்றேன்; கோபத்துடன் இருக்கிறேன்; மனத்தளர்ச்சி அடைந்து விட்டேன்", என்று அர்த்தம் அல்ல. வருத்தப்பட்டேன். ஆனால் யோசித்துப் பார்த்ததில் எனக்கு கிடைத்த விடைகள் இவை: (அதையும் இடுகையில் தெரிவித்திருந்தேன்)
1. சோர்வையடையச் செய்யும் தலைப்புகள் (ஒவ்வொருத்தரின் ரசனை வேறு விதமாக இருக்கிறது. நான் ஒவ்வொருவரையும் வற்புறுத்தமுடியாது. எனது ஆசிரியர்கள் இடுகையை படித்த பலருக்கு, "எனது பாடல்கள்" பதிவும், "பாடல்கள்" பதிவு பிடித்த பலருக்கு எனது ராணுவம் பதிவும் பிடிக்காமல் போவது இயல்பு. ஆனாலும், இந்தத் தலைப்புகளை நான் நிறுத்தப்போவதில்லை. நான் ஏற்கனவே சொல்லியிருந்தது போல, "பிளாக்குகள் எனது எண்ணங்களின் வடிகால்; நான் நினைப்பதை பதிவு செய்கிறேன்", அவ்வளவு தான். எனது பதிவுகளுக்கு பின்னூட்டங்களே கிடைக்கவில்லையென்றாலும் கூட நான் எனக்குத் தோன்றியதை எழுதிக்கொண்டுதானிருப்பேன்.
2. திரைப்படமும், எழுத்தும் மக்களைச் சென்று சேரவில்லை என்றால், 'எழுத்தில் குறை இருக்கிறதா என்று தான் பார்க்க வேண்டுமே தவிர மக்களின் மீதல்ல. கொடுப்பவர், அவரின் கருத்தை மாற்ற வேண்டும் என்று சொல்ல வரவில்லை. கொடுத்த விதத்தில் ஏதும் தவறிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
3. கொடுக்கும் விசயங்கள், கடினமான விசயங்களாக இருந்தாலும், அது கடைசி நிலை மனிதருக்கு எளிதில் புரியும் படி தெளிவாகவும், எளிமையாகவும் இருக்கும் வகையில் எழுதுவதில் தான் விசயமே இருக்கிறது.
இவை நான் கற்றுக்கொண்ட பாடங்கள். எனக்கு நன்மையளிக்கும் விதமாக நான் தெரிந்து கொண்டவை என்ற ஆக்கப்பூர்வமான, அர்த்தத்தில் கொடுத்திருந்தேன். யாரையும் குறை சொல்லும் நோக்கிலும், படித்து விட்டும் ஏன் பின்னூட்டம் இடாமல் செல்கிறீர்கள் என்ற அர்த்தத்திலும் அல்ல என்பதைத் தெளிவுபடித்த விரும்புகிறேன்.
தாராளமாக நீங்கள் வாருங்கள்; படியுங்கள்; செல்லுங்கள்.
தருமி அய்யா,
அது சோகத்துடன் செல்கிறேன் என்ற அர்த்தத்தில் இடப்பட்டது அல்ல. 'சென்று வருகிறேன்', என்ற அர்த்தத்தில் நான் சில படங்களைத் தேடியபோது எனக்குக் கிடைத்த நல்ல படம் அது தான்.
ஒரு பில்ட் அப்பிற்காக கையில் வயலினுடன் ஒருவன் செல்வது போல் காட்ட நினைத்தேன். ;)
அது இது போல் ஆகிவிட்டது. இது போன்ற கருத்துக்களை இந்த இடுகை பரப்பும் என நினைக்கவில்லை.
எனது மனநிலையை, ஒளிவுமறைவின்றி பதிய நினைத்து இட்ட இடுகை, இப்படி ஆகிவிட்டது.
நானும் simple-ஆக, "நன்றி வணக்கம்", எனக் கூறி சென்றிருக்க வேண்டும்.
ஸ்ருசல், உங்கள் நட்சத்திரவாரத்தை இரசித்து பதிவு செய்யாமல் போனவர்களில் நானும் ஒருவன். உங்கள் எண்ணத்தெளிவிற்கும் எழுத்தாற்றலுக்கும் ஒரு குறையுமில்லை. வாழ்த்துக்கள்!!
சுருசல்,
முதலில் என் வாழ்த்துக்களை பிடியுங்கள்..உங்கள் நட்சத்திர வாரம் நன்றாகவே இருந்தது..நன்றாக திட்டமிட்டு ஒரு பல்சுவை சிறப்பிதழாக அமைத்திருந்தீர்கள்.
கருத்து வேறுபாடுகளையெல்லாம் மறந்துவிடுங்கள்.அது இருக்கும்.(வரலாற்றின்
முரண் இயக்கம் என்பார்கள்).என் ஞாபகசக்தி சரி என்றால் நான் தமிழ்மணம் வந்த புதிதில் உங்களுடன் ஒரு வாக்குவாதம் கூட செய்துள்ளேன்.(ஏதோ சங்கம் சம்பந்தப்பட்ட பதிவு)
கதை எழுதுவதை எல்லாம் நிறுத்த வேண்டியதில்லை. சித்திரமும் கைப்பழக்கம்.
முத்து,
நன்றி. ஆம் அது 'சாப்ட்வேர் ஊழியர்களின் சங்கம்', என்ற பதிவிற்காக. இருவரும் ஒரே நேரத்தில் இட்ட பதிவு.
கதை எழுதுவதை நிறுத்துவதற்குக் காரணம், யாருக்கும் பிடிக்கவில்லை என்பதற்காக அல்ல. உண்மையிலேயே அது மிகவும் கடினமாக இருக்கிறது. :)
எதையாவது விமர்சனம் செய்யச் சொன்னால் பக்கம் பக்கமாக எழுதலாம் ;)
ஒவ்வொரு வார்த்தையையும் யோசித்து யோசித்து எழுதுவது கடினம் தான். மற்ற எழுத்தாளர்கள் எல்லாம் எப்படித்தான் எழுதுகிறார்களோ!
ஸ்ருசல்,
கருத்து சொல்றதுக்கு இந்தியாகாரங்களுக்கு சொல்லி தரனுமா என்ன? :))))
ஸ்ருசல்,
தமிழ்மணத்தில் எனக்குப்பிடித்த வலைப்பதிவாளர்களில் நீங்களும் ஒருவர். உங்களுடைய அனைத்து பதிவுகளையும் நான் படித்திருக்கிறேன். இதுவரை பின்னூட்டமிடாததற்கு மன்னிக்கவும்.
நிறைய எழுதுங்கள்....வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக