வெள்ளி, பிப்ரவரி 10, 2006

இந்தியாவின் நேர்மையற்ற முறையீடு - இன்சமாம் கதறல்

நேற்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் ஒரு நாள் போட்டியில், பாகிஸ்தான் 40/8 என்ற வலுவான நிலையில் இருந்த போது அந்த அணியின் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக், இந்தியாவின் தலைசிறந்த பவுலர் டோனியினால் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். முன்னதாக இந்தியா 50 ஓவர்களில் 380 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிபெற இன்னும் 360 ரன்களே எடுக்க வேண்டிய நிலையில், இன்சாமின் அவுட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய அணியினர் அம்பயரிடம் அவுட் கேட்டதைப் பார்த்த இன்சமாம் பெரும் அதிர்ச்சி அடைந்து மயக்கம் அடைந்தார். பின்னர் மயக்கம் தெளிந்ததும் அம்பயரிடம் சென்று, "உங்களை இந்திய அணியினர் ஏமாற்றி விட்டார்கள். இன்று ஏப்ரல் 1-ம் தேதி. எனக்கு அவர்களைப் பற்றி நன்றாகத் தெரியும். உங்களிடம் அவுட் எல்லாம் கேட்க மாட்டார்கள். உண்மையிலேயே அனைவருமே அடுத்த ஓவரை நான் வீசுகிறேன் என்று கூறிக்கொண்டு ஆர்வத்தில் தான் ஓடி வந்தார்கள். அதனைப் புரிந்து கொள்ளாமல் அவுட் கொடுத்து விட்டீர்கள்", என்று கண்ணீருடம் முறையிட்டார். ஆனாலும் அவரின் பேச்சை கேட்காமல் அம்பயர், "எத்தனை நாட்கள் தான் இந்தியர்களை கதற கதற தோற்கடிப்பீர்கள். அவர்களும் ஒரு மேட்சாவது ஜெயிக்கட்டும்.", என்று கூறி அவுட் கொடுத்தார்.

ஆனாலும், இன்சமாமின் வெளியேற்றம் இந்தியாவின் தோல்வியை எவ்விதத்திலும் பாதிக்காத வண்ணம் இந்திய அணியின் பவுலர்கள் பார்த்துக் கொண்டனர். இந்திய அணியினர் ஒவ்வொருவரும் ஒற்றுமையுடன் விளையாடி, இந்தியாவை வழக்கம் போல தோல்வியுறச் செய்தனர். ஆட்டத்தின் முடிவில் சோயிப் அக்தர் 32 சிக்சர்களுடன், 240 ரன்கள் குவித்து 'மேன் ஆஃப் த மேட்ச்' பட்டம் வென்றார்.

ஆட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் பேட்டியளித்த இன்சமாம்-உல்-ஹக், "ஆட்டம் இக்கட்டான நிலையில் இருந்த போது, டோனி பொறுப்பற்ற முறையில் பந்தை ஸ்டம்பை நோக்கி வீசியிருக்கக் கூடாது. ஆனாலும் பந்து வீசி விதத்தை விட, நெறிகெட்ட முறையில் இந்திய வீரர்கள் அவுட் கேட்ட விதம் தான் என்னை மிகவும் பாதித்து விட்டது. இது கிரிக்கெட்டின் மீதான மதிப்பையும், இந்தியாவின் மீதான நம்பிக்கையும் கெடுக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. இது போன்ற முறையற்ற, நேர்மையற்ற ஆட்டத்தை என் வாழ்நாளிலேயே கண்டதில்லை. எதற்குமே அமைதியாக இருக்கும் டிராவிட் கூட அம்பயரின் முன்னால் தரையில் விழுந்து அடம்பிடித்து அழுது அவுட் கேட்டது எனது மனநிலையை மிகவும் பாதித்து விட்டது. இந்திய அணியினர் மீது மான நஷ்ட வழக்குத் தொடரலாம் என முடிவெடுத்திருக்கிறேன். மேலும் இந்திய வீரர்கள் கங்குலி, சித்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜக்மோகன் டால்மியா முதலியோர் தங்களுடைய ஆதரவை எனக்குத் தெரிவித்துள்ளனர். இனி மேலாவது, டோனி போன்ற பகுதி நேர பவுலர்கள் பந்தை ஸ்டம்பை விட்டு ஒன்றிரண்டு அடிகள் தள்ளி வீசுவார்கள் என நினைக்கிறேன். டோனி ஓர் வளர்ந்து வரும் கிரிக்கெட் ஆட்டக்காரர். அவர் அகார்கர், ஜாகீர்கான் போன்ற அனுபவம் வாய்ந்த பவுலர்களிடம் எங்கே, எவ்வாறு பந்து வீசுவது எனக் கற்றுக்கொள்ள வேண்டும். அல்லது என்னிடமாவது கேட்டிருக்கலாம். பந்தை எங்கே வீச வேண்டுமென்று; நான் இடத்தைக் காட்டியிருப்பேன்.

1998 ம் ஆண்டு நடந்த போட்டியில் என்னை இந்திய வீரர்கள் ரன் அவுட் செய்த போது, அம்பயர் அவுட் கொடுத்தார். ஆனால் அசாரூதீன் அம்பயரிடம் சென்று, "இன்சாமிற்கு காலில் முள் குத்தி விட்டது. அந்த வேதனையைப் பொறுட்படுத்தாமல் ஓடி வருகிறார். அதைப் பார்க்காமல் அவுட் கேட்பதற்கு நாங்கள் ஒன்றும் பகுத்தறிவில்லாதவர்கள் அல்ல. நாங்கள் அவுட் கேட்கவே இல்லை. நாங்கள் அவுட் கேட்காமல் நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு இன்சமாமிற்கு எப்படி அவுட் கொடுக்கலாம்', என வாதிட்டு என்னை மீண்டும் விளையாடும்படி கேட்டுக்கொண்டார். டிராவிட் போன்றோர்கள் அசாரிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது. ஆண்டவன் இந்தியர்களுக்குப் பகுத்தறிவினையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் கொடுக்கட்டும்.

ஐ.சி.சி-ன் சில விதிகளும் குழப்பமாக இருக்கின்றன. சென்ற ஆட்டத்தில் டெண்டுல்கர் பந்து வீசும் போது, காற்றில் பந்து சிறிது ஆட்டம் கண்டு, ஸ்டம்பைத் தகர்த்தது. அது கூட புரியாமல் அம்பயர் அவுட் கொடுத்தார். கேட்ச், போல்ட், ரன் அவுட் போன்ற முறைகளை கிரிக்கெட்டிலிருந்து நீக்க வேண்டும்.", என ஆக்ரோஷத்துடன் கூறினார்.

செய்தி:

‘India’s appeal against spirit of the game'

Islamabad: Pakistani captain Inzamam-ul-Haq has slammed the Indian team for appealing against him for obstructing the field in the first one-day international at Pewhawar and termed it as “against the spirit of cricket”.

Inzamam was ruled out obstructing the field after he stopped a fielder’s throw with the bat while attempting to get back to his crease in the series opener on Monday.

Pakistan, chasing 329 to win, went on to win the match by Duckworth/Lewis method after their innings was cut short by three overs due to bad light.

The home captain, who became only the third person to be given out in this rare manner in ODIs, said he never imagined that the Indian squad led by Rahul Dravid would resort to “such a thing” and warned that the appeal made in “an unsportsmanlike manner” can lead to bad blood between the two teams.

Inzamam also made a veiled reference to Indian coach Greg Chappell instructing his younger brother Trevor to bowl underarm in a one-day international to prevent New Zealand from scoring a boundary off the last ball for victory in the early 1980s.

“In my role as the Pakistan captain I would say that the appeal from the Indian fielders was against the spirit of cricket.

“Certainly, there are several modes in which a batsman can be declared out, but many of them are not in the spirit of the game,” Inzamam wrote in his column in The News.

“I am particularly referring to the obstructing the field, handled the ball and hit the ball twice dismissals, also about the illegal practice of underarm bowling and running out a batsman while backing out.

“The Indian fielders appealed when the Peshawar match was in a crucial state. I would not have imagined Rahul Dravid and his team would do such a thing.

“I am not bothered about my dismissal but an appeal made in an unsportsmanlike manner by the visiting team can have an adverse affect on the relations between the two opponents.

“I have surely impressed upon my team not to make much of the Peshawar incident. However, in my personal opinion the appeal was not made in a sporting manner. Instead, it might have left a bad taste in the mouth.”

Inzamam said that the umpires’ decision was certainly according to the rules of the game, but added however that he was unable to comprehend this particular law of cricket. He said that had he not brought his bat in front of the ball it could have hit his body instead. Indian team manager Raj Singh Dungarpur told PTI that he had not seen the comments made by the Pakistani captain but assured that the team would discuss it at its meeting.

“We may also take it up with the concerned authorities if it’s warranted,” he added. PTI

ஸ்ருசல்

5 கருத்துகள் :

நாமக்கல் சிபி சொன்னது…

இன்சமாமின் முறையீடு கொஞ்சம் பரிசீலிக்கப் பட வேண்டியதே!

:))

பெயரில்லா சொன்னது…

அருமையான சடையர். இந்த முறை பாகிஸ்தான் டீமின் அணுகுமுறை கொஞ்சம் ஏமாற்றத்தையே அளிக்கிறது. ஜெயித்தது எங்க மதநம்பிக்கையால் என்று இன்ஸமாம் சொன்னது. அப்புறம் சொயிப் அக்தர் (எனக்குப் பிடிச்ச போலர் அவர்) டெஸ்ட்மேட்சில் டோனியின் முகத்தை நோக்கி பீமர் என்ற பெயரில் எறிந்தது இதெல்லாம் பார்க்கப் பார்க்க ஏக கடுப்பாகிப் போச்சு.
வந்தனா

Muthu சொன்னது…

நக்கல் நன்றாக உள்ளது.
.ஆனால் நம் ஆட்கள் அதை அவுட் கேட்டிருக்க தேவையில்லை..ஆனா டீஸண்ட் பத்தி பாகிஸ்தான் கிளாஸ் எடுக்கறது தமாஷ்தான்.

Boston Bala சொன்னது…

Simply excellent :-)))

dondu(#11168674346665545885) சொன்னது…

இதே மாதிரி ஒரு ஒண்டே மேட்சில் டெண்டுல்கர் மூன்றாம் ரன் எடுக்கும்போது போலர் குறுக்கே வந்து மோத, டெண்டுல்கர் க்ரீஸுக்கு சற்றே வெளியில் தடுமாற, அவர் மட்டை சில மைக்ரோசெகண்டுக்கு தரையிலிருந்து மேலே இருக்க, அப்போது பவுண்டரி தரப்பிலிருந்து வீசப்பட்ட பந்து டைரக்ட் ஹிட்டாக, அப்போது கேப்டன் வாசிம் அக்ரம் அப்பீல் செய்தது மட்டும் என்ன ஸ்பொர்ர்ட்மேன் ஸ்பிரிட் என்று யாராவது விளக்குவீரா?
கொஞ்சம் மூச்சு விட்டுக்கறேன்.

இப்பின்னூட்டமும் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்