புதன், மார்ச் 08, 2006

கெட்ட புத்தியும் பச்சரிசி சாப்பாடும்

கெட்ட புத்தியும், பச்சரிசி சாப்பாடும்

மதிய இடைவேளை. உணவருந்துவதற்காக, வெளியே செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தோம்.

"எங்கே சாப்பிட போகலாம்? கிருஷ்ணா ஃகபே?", என நண்பரிடம் கேட்டேன்.

"வேண்டாம். பொன்னுசாமி போகலாம்"

"ஏன்? கிருஷ்ணா ஃகபேக்குப் போகலாம்"

"இல்லப்பா... பச்சரிசி சாப்பாடு. அப்புறம் அவங்க மாதிரியே நமக்கும் புத்தி வந்திடும்"

????

எனக்கும், என் நண்பர்களுக்கும் அடிக்கடி நடக்கும் வாதம். என்னை கோபத்தின் உச்சிக்குக் கொண்டு செல்லும் தலைப்புகளில் இதுவும் ஒன்று. பிராமணர்கள் எல்லாம் கெட்டவர்கள்; அனைவருமே ஒரே மாதிரி தான் சிந்திப்பார்கள், அவர்கள் கெட்டு ஒழிய வேண்டும் என எதற்கெடுத்தாலும் ஆரம்பிக்கும் சிலர் இங்கும் உண்டு.

அப்படி பேசுபவர்கள், எதற்காக அப்படி பேசுகிறார்கள்? அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு (மறைமுகமாகவோ, அல்லது நேரடியாகவோ) இருந்ததா? ஏன் அந்த பழைய விசயம், இவர்களின் மனதில் இப்படி ஓர் தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது? இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கப் போகிறார்கள்? என எனக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது.

'இப்படி நீங்கள் பேசுவதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா', என அவர்களிடம் கேட்டால், பெரும்பாலும், 'நாம் எல்லாரையும் அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள், நம்மை வாழ விடவில்லை', என்ற ஒரே பதிலை மட்டும் கூறுவார்கள்.

யார் யாரை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள்; யார் கெட்டவர்கள்; யார் நல்லவர்கள் என்று ஆராய்ச்சி செய்வதால் இப்போது வாழும் நமக்கு என்ன பயன்? இன்றைய சூழலில், நல்ல முறையில் வாழ்வதற்கு அவசியமான காரணிகள் என்ன என்பதை மட்டும் யோசிப்பதை விட்டு விட்டு, 100 ஆண்டுகளுக்கு முன்பாக 'நமது முன்னோர்கள் மீது அநீதி கட்டவிழ்த்து விடப்பட்டது; நம்மை வாழ விடவில்லை', என்பன போன்ற விசயங்களைப் பற்றி பேசினால் யாருக்கு என்ன லாபம்? மனதில் காழ்ப்புணர்ச்சி மட்டும் தான் வளரும்.

இப்போதிருக்கும் எல்லா கெட்ட நிலைகளுக்கும் பிராமணர்களை மட்டுமே காரணமாகக் கூறுவதில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை. இப்போதிருக்கும் நிலைக்கு (அது நல்ல நிலையோ, கெட்ட நிலையோ) நீங்களும், அதில் சம்பந்தப்பட்டவர்களுமே காரணமாக இருக்க முடியுமே தவர, சம்பந்தமே இல்லாத, உங்களுக்கு யாரென்றே தெரியாத சில மனிதர்களைக் காரணமாகக் கூறுவது சரியா? நன்றும் தீதும் பிறர் தர வாரா என்று சரியாகத் தானேச் சொன்னார்.

இன்னொரு நாள் அவரிடம் பேசியதில்....

"இவ்வளவு காட்டமா பேசுறீங்கன்னா, ஏதாவது காரணம் இருக்கணுமே. உங்களை யாரும் நம்ப வைச்சு ஏமாத்திட்டாங்களா?"

"அவங்க என்ன பண்ணலை? எத்தனை வருசம் அடிமைப்படுத்தி வச்சிருந்தாங்க தெரியுமா?. அதான் இப்ப அவங்க அனுபவிக்கிறாங்க...."

"இப்ப என்ன பிரச்சினை அவங்களால?"

"அவங்களாலத் தான் இப்ப எல்லாரும் கஷ்டப்படுறாங்க....."

"சரி எப்பவோ நடந்திருக்கலாம். நீங்களுக்கும் அனுபவிச்சதில்லை; நானும் அனுபவிச்சதில்லை. அவங்க, நீங்க சொல்றது மாதிரியே நடந்தாங்கண்ணே வச்சுக்கலாம். அதுக்காக, இப்பவும் எல்லாரும் அப்படியே இருப்பாங்க நினைக்கறது எந்த விதத்துல நியாயம்?. சரி உங்கள எடுத்துக்கங்க. உங்களுக்கு என்ன பிரச்சினை?. நல்ல தானே இருக்கிறீங்க? படிக்க வாய்ப்பு கிடைக்கிலையா? வேலை கிடைக்கைலையா? இல்ல யாரும் உங்கள மதிக்க மாட்டேன்றாங்களா?"

"அதெல்லாம் இப்போப்பா. ஒரு 60 வருசத்துக்கு முன்னாடி, இதெல்லாம் கஷ்டமா இருந்ததுல.

"இருக்கட்டும். ஏன் பழசையே பேசுறீங்க. நிகழ்காலத்துக்கு வாங்க. யாரோ ஏதோ செய்தாங்கன்னு, உங்க கோபத்தை எல்லாம், ஏன் இப்ப இருக்குறவங்க மேல காட்டுறீங்க?"

"ஆனா எப்ப வாய்ப்பு கிடைச்சாலும் திரும்ப பண்ணுவாங்கப்பா. அதான் அவங்களை அப்படியே வைக்கனும். அவங்களை எல்லாம் இப்படி அடக்கி வைக்கலைன்னா நீ கூட படிச்சு வந்திருக்க மாட்ட"

"இப்பத் தான் எல்லாருக்குமே எல்லாமே கிடைக்குதுல. பின்ன ஏன் இன்னும் நிறைய பேரைக் கஷ்டப்படுறவங்க?. அவங்களுக்கெல்லாம் நல்ல வழி கிடைச்சிருக்கணும் இல்லையா? உங்க ஊர்ல - உங்க சமூகத்தில படிக்காவங்க யாருமே இல்லியா?"

"இருக்காங்க"

"ஏன் இருக்காங்க?"

"எல்லாரும் எப்படிப்பா படிக்க முடியும்? கஷ்டப்படுறவங்க இருக்கத்தான செய்வாங்க. அவங்கள எல்லாம் எப்பவோ அடக்கியிருந்தா, இப்ப எல்லாருமே படிச்சிருப்பாங்க..."

"நீங்க நல்லா இருக்கிறீங்க. மாசம் லட்சம் ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கிறீங்க. அவங்களோட நிலைமைக்கு இவ்வளவு பரிவோட பேசுற நீங்க, அவங்களோட முன்னேற்றத்துல உன்மையிலேயே அக்கறை இருந்தா, அவங்களை நீங்க ஏன் படிக்க வைக்க கூடாது? பிராமணர்கள் செய்த அடக்கு முறையினால தான் மற்ற சமூக மக்களும், உங்க சமூகத்தினரும் கஷ்டப்பட்டாங்ங்கன்னே வச்சுப்போம். இப்ப நல்ல இருக்குற உங்கள மாதிரி ஆளுங்க, உங்க சமூகத்துல கஷ்டப்படுற மத்தவங்க முன்னேற்றத்துக்கு உதவக்கூடாது? இப்ப அவங்களோட நிலைமைக்கு, உங்களோட உதாசீனமும், அவங்களுக்கு உதவி செய்யனும்ற மனப்பான்மை உங்களுக்கு இல்லாததும் தான் காரணம். சுலபமா, மத்தவங்க மேல பழியப் போட்டுட்டு நீங்க தப்பிச்சிடுறீங்க. நீங்களே, உங்க ஆளுங்களுக்கு உதவி பண்ணுறதில்லை. ஆனா பேசும் போது மட்டும் சும்மா எங்க சமூகத்திற்கு அநீதின்னு சொல்றீங்க. அநீதி செய்றதெல்லாம் உங்கள மாதிரி ஆளுங்க தான். அதுவும் பெரும்பாலும், உங்கள மாதிரி படிச்சவங்க தான். கவர்மெண்ட் வந்து எல்லாருக்கும் வேலை கொடுத்து உயர்த்தி விடனும். அப்படி கிடைக்காம, இருக்கிறவங்களோட நிலைமைக்கு, பிராமணர்கள் தான் காரணம்னு சொல்லுறது சரியா? இன்னும் 100 வருசம் ஆனாலும் அவங்க தான் காரணம்னு சொல்லுவீங்க போலிருக்கு"

மற்றொரு நண்பரிடம் இன்னொரு நபரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தது...

"அவன் ஏங்க இப்படி பேசுறான்?"

"அய்யர் மாப்ளே அதான் அப்படி...."

"அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?"

"எல்லா அய்யரும் அப்படித் தான் மாப்ளே. அவங்க எல்லாரும் அப்படித் தான் பேசுவாங்க. நான் அடிக்கடி சொல்லுவேனே... அவங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்ணு. டைம் கிடைச்சா கால வாரி விட்டுடுவாங்க...."

"யாராவது ஒருத்தர் ரெண்டு பேர பாத்துட்டு, எல்லாரும் அப்படித்தான்னு சொல்லாதீங்க..."

"இல்ல மாப்ளே. எல்லாரும் அப்படித் தான்"

"எப்படி சொல்லுறீங்க?"

"நான் பாத்திருக்கேன் மாப்ளே"

"எத்தனை பேரைப் பாத்திருக்கீங்க?"

"நிறைய பேரைப் பாத்திருக்கேன்"

"எத்தனை பேர்? ஒரு பத்து பேர்"

"ம்...."

"சரி நூறு பேர்ன்னு வச்சுக்கலாம். இல்லைனா ஆயிரம் பேர்னு வச்சுக்கலாம். மிச்சம் லட்சக்கணக்கான பேர் இருக்காங்க. அவங்க யாரையுமே பார்க்காம அவங்க அப்படித்தான் அப்படித் தான்னு சொன்னா எப்படி? லட்சத்துல ஒருத்தன் கூடவா நல்லவன் இருக்க மாட்டான்?. ஒருத்தனை பாக்குறப்பவே இவன் இப்படித் தான் இருப்பான்னு கணிக்கிறது எந்த விதத்துல நியாயம்?"

"எனக்குத் தெரிஞ்சு அவங்க அப்படித்தான்பா"

"உங்க ஊர்ல கொலையே நடந்ததில்லையா?"

"இருக்கு"

"உங்க ஆளுங்க இது வரை யாருயுமே கொலை பண்ணுனதில்லையா?"

"பண்ணியிருக்காங்க"

"அப்ப அந்த கொலை பண்ணுனது உங்க ஜாதியைச் சேர்ந்தவன்ற காரணத்துக்காக, உங்க ஆளுங்க எல்லாருமே கொலைகாரங்கன்னு சொன்னா ஒத்துப்பீங்களா? ஒருத்தர் இரண்டு பேரை மட்டும் வச்சு பொதுப்படையா பேசுறது சரியா வராது. நான் யாரைவது ஏமாத்துறேன்னு வச்சுக்கலாம். அதுக்காக எங்க ஜாதியைச் சேர்ந்த எல்லாரும் ஏமாத்துக்காரங்க சொன்னா சரியா வருமா?

அதுவுமில்லாம, நீங்க சொல்லுறது, நல்லவன் அவங்க ஜாதியிலேயே கிடையாது; கெட்டவன் வேறெந்த ஜாதியிலும் கிடையாதுன்ற மாதிரி இருக்கு. நாளைக்கு நீங்க சொல்லுறதைத் தான் உங்க குழந்தையும் செய்யும். உங்க குழந்தை வளரும் போது, 'அவங்க எல்லாம் கெட்டவங்க. அவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கனும், ஜாக்கிரதையா இருக்கனும்' சொல்லியே வளப்பீங்க. பின்னாடி ஏன், எதுக்குன்னு தெரியாமலேயே உங்க குழந்தையும் நீங்க செஞ்ச அதே தவறைச் செய்யும்".

'பிராமணர்கள் அனைவரும் கெட்டவர்கள்', என்று சொல்லும் என்னுடைய நண்பர்களுக்கும் பல பிராமண நண்பர்கள் உண்டு. ஆனாலும், 'பிராமணர்கள் ஒழிக', என்று சொல்வதை நிறுத்தவில்லை.

சொல்ல வருவதெல்லாம், உங்களின் கோபத்திற்கும் ஓர் அர்த்தம் இருக்கட்டும். கெட்டவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். கெட்டவர்களின் கூட்டத்திலும் நல்லவன் உண்டு. நல்லவர்களின் கூட்டத்திலும் கெட்டவன் உண்டு. உங்களுக்குப் பிடிக்காதவர்கள் நிறைய பேர் இருக்கலாம். ஆனால் பிடிக்காத பிராமணர்களை மட்டும் அவர்களின் பிறப்பினை சம்பந்தப்படுத்தி பேசுவது என்ன நியாயம்? நீங்கள் பார்க்கும் பிராமண நபர்கள் நல்லவர்களாகவே இருந்தாலும், அவர்கள் கெட்டவர்களாகத் தான் இருப்பார்கள் என்ற குருட்டு எண்ணம் ஏன்?

எப்போதோ நடந்து முடிந்த சில விசயங்களை வைத்துக் கொண்டு (உங்களுக்கும், அந்த நிகழ்வுகளுக்கும், இப்போது வாழ்பவர்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லாத நிலையிலும்), இன்னும் சில தரப்பினர் மனதில் விரோதத்தை வளர்த்துக் கொண்டிருப்பது எவ்விதத்திலும், யாருக்கும் உபயோகமானதல்ல. யாரோ செய்த செயலுக்கு, இப்போதிருப்பவர்களை பழிப்பது என்ன நியாயம்? கேட்டால், சிலர் இது 2000 ஆண்டுகளாக ஏறிய விஷம்; 50 ஆண்டுகளில் இறங்கி விடுமா என்பர். நீங்கள் என்ன 2000 ஆண்டுகளாக வாழப்போகிறீர்களா? 2000 ஆண்டுகளாக, நீங்கள் தான் கஷ்டப்பட்டீர்களா? உங்களுக்குக் கொடுக்கப்பட்டது, 60-80 ஆண்டுகளே. அந்த காலகட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்; இவ்வுலகில் 'நீங்கள்' என்றால், 'நீங்கள்' மட்டும் தான். உங்கள் முன்னோர்களுக்கு நீங்கள் வாரிசு மட்டும் தான்; பிரதிநிதிகள் அல்ல. அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கு, நீங்கள் பழிவாங்கப் போனால் அதற்காக நீங்கள் இழந்த காலத்திற்காக, கடவுள் உங்களுக்காக சலுகை நாட்கள் வழங்கப் போவதில்லை. போராட வேண்டாம் என்று சொல்ல வரவில்லை. ஆனால் விதண்டாவாதம் பிடிக்க வேண்டாம். நிகழ்காலத்திற்காக மட்டும் வாழுங்கள். இறந்தகாலத்தின் கெட்ட விசயங்களை நினைத்துக் கொண்டும், எதிர்காலத்தைப் பற்றிய வீண் சந்தேகங்களாலும் உங்களின் நிகழ்காலத்தை வீணடிப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களின் வாழ்க்கையையும் நரகமாக்க வேண்டாம்.

படித்த பல நபர்களே, இவ்விதம் கூறிக்கொண்டிருந்தால், மற்ற படிக்காத நபர்கள் எவ்விதம் நடந்து கொள்வார்கள் என நினைத்தால் வருத்தமளிக்கிறது. ஆனால் அவர்கள் பரவாயில்லை என்றுத் தோன்றுகிறது. படித்தவர்கள் தான் கண்டதையும் ஆராய்ந்து கொண்டு மனதில் நஞ்சை வளர்த்துக் கொண்டு வருகின்றனர். ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் என்ற காரணத்திற்காக, எத்தனை பேர் இங்கிலாந்து செல்லாமல் இருக்கிறார்கள்?. 'ஆங்கிலேயர்கள் அனைவரும் கெட்டவர்கள்; மற்றவர்களை அடிமைப்படுத்தி விடுவார்கள்', என்று எத்தனை பேர் அவர்களுடன் தொழிலில் கூட்டணி வைத்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள்? நம்மை 300 ஆண்டுகளாக ஆண்ட ஆங்கிலேயர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என இப்போதிருக்கும் எத்தனை பேர் நினைக்கிறார்கள்? அப்படி செய்ய வேண்டும் என்று யாராவது கூறிக்கொண்டு அலைந்தால் கூட, எல்லாரும் அவனைப் பார்த்து சிரிக்கத் தான் செய்வர். இவ்வளவு ஏன்? இங்கிலாந்திலேயே ஐந்து லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் எல்லாம் மனதில் காழ்ப்புணர்ச்சியை வைத்துக் கொண்டா அங்கு வாழ்கிறார்கள்? அவர்களுடன் பணிபுரியும் ஒவ்வொரு நிமிடமும், "இவன் என்னை அடிமைப்படுத்தி வைத்திருந்தான். இவனைப் பழி வாங்க வேண்டும்', என்ற எண்ணமா அவர்களுடன் பணிபுரிபவர்களுக்கு ஓடுகிறது? எப்போதோ நடந்த நிகழ்வு; யாரோ செய்த தவறு; இவர்களைப் பழிப்பதில் நியாயம் இல்லை என எல்லாருக்கும் தெரியும்.

ஆங்கிலேயர்களின் விசயத்தில் காட்டும் விழிப்புணர்ச்சியை ஏன் பிராமணர்கள் விசயத்தில் காட்டக்கூடாது?

பிராமணர்கள், அந்தக் காலத்தில், அடக்குமுறையை கையாண்டனர் எனக் கூக்குரலிடுபவர்கள் மட்டும் இப்போது என்ன செய்கிறார்களாம்? சட்டத்தின் பேரால், அதே பிராமணர்களை அடக்கியாள முற்படுவதில்லையா? இன்னும் சிலர், இப்போதும் பெரிய பெரிய பணிகளில் பிராமணர்கள் தான் இருக்கிறார்கள். அதனால், இன்னும் இந்த நாட்டில் அவர்களின் ராஜ்ஜியம் தான் எனவும் கூறுவார்கள். அப்படியானால், அவர்கள் எங்குமே பணி வகிக்கக் கூடாதா? அவர்களில் யாருக்குமே வசதி இருக்கக் கூடாதா? எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், பெரிய கல்வி நிறுவனங்கள் உட்பட எங்கும் படிக்கக் கூடாதா? சாதித்தவர் மாற்று சாதிக்காரராக இருந்தால், 'பார், பிராமண ஆதிக்கத்தை உடைத்து சாதித்து விட்டார்', என்பதும், சாதித்தவர் பிராமணராக இருந்தால், 'என்ன பெரிதாக சாதித்து விட்டார்; மற்றவர்களின் தயவு இருந்திருக்கும்', என்பதும் அசிங்கமாக இருக்கிறது.

இப்போது உயர்ந்த ஜாதி என்றால், அது ஒரே ஒரு ஜாதி தான். 'அரசியல்வாதிகள்' என்ற ஜாதி மட்டும் தான். அவர்கள் உபயோகிக்காத அடக்குமுறையா? ஆங்கிலேயர்கள் கையாண்ட 'பிரித்தாளும் கொள்கையை' (மதவாரியான) விட, அரசியல்வாதிகள் கையாளும் 'பிரித்தாளும் கொள்கை' (பிராமணர்கள், பிராமணரல்லாதவர்கள்) மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் கூட இணைந்து இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் பரஸ்பர நட்பு கொண்டாடினாலும் கூட, பிராமணர்கள் - பிராமணரல்லாதவர்கள் சண்டை ஓயாது போலிருக்கிறது.

இப்போதிருக்கும் அரசியல்வாதிகளில் எத்தனை பேர், பிராமணர்கள்? அரசியலில் பிராமணர்களின் பங்கு மிகக் குறைவே. அரசியல் ஆதிக்கம் எல்லாம் 'மற்ற ஜாதிக்காரர்களிடம்' தானே இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் கூட உங்களின் நல்ல நிகழ்வுகளுக்கும், கெட்ட நிகழ்வுகளுக்கும் நீங்கள் (மற்றும் அரசியல்வாதிகள்) தானே காரணமாக இருக்க முடியும்? உங்களுக்குக் கெட்டது நிகழ்ந்தால், அந்த அரசியல்வாதியைக் கேட்க வேண்டியது தானே? ஏன், நல்லவரான, பிராமணரல்லாத, உங்கள் அரசியல்வாதி, உங்களுக்கே நல்லது செய்வதில்லை? அவர் மீது உங்களுக்குக் கோபம் இல்லையா? அவரின் செயலுக்கும் பிராமணர்களின் சூழ்ச்சி தான் காரணமா?

இந்த நேரத்தில் ஆபிரகாம் லிங்கன் கூறியது தான் எனக்கு ஞாபகம் வருகிறது.

"சமூதாயத்தில் ஏற்ற தாழ்வுகளை ஒழிக்க, திட்டங்களும், எண்ணங்களும், கவனமும், மேலே இருப்பவர்களை கீழே இருப்பவர்களுக்கு இணையாகக் கொண்டு வருவதில் இருக்கக் கூடாது; மாறாக கீழே இருப்பவர்களை எப்படி மேலே உயர்த்துவது என்பதில் இருக்க வேண்டும்", என்று கூறினார். எவ்வளவு அருமையான வாசகம் அது?

பிச்சைக்காரர்களை ஒழிக்க வேண்டும் என்றால், பிச்சைக்காரர்களை கொல்வது தீர்வல்ல; பிச்சை எடுப்பதற்கு என்ன வழி என்ன என்பதைப் பார்த்து அதற்கான வழியினை ஆராய வேண்டும். இளமை / முதுமையில் வறுமை, தனிமை போன்ற காரணங்களுக்குத் தீர்வைக் காண வேண்டும். மாறாக அவர்களை அடித்துக் கொன்றுவிட்டால், சிக்கல் தீர்ந்து விடுமா?

இந்தப் பதிவு ஒரு குறிப்பிட்ட இன மக்களுக்கு ஆதரவு கொடுப்பதற்காகவும், மற்றவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவும் எழுதப் பட்டதல்ல. உங்களுக்கு குறிப்பிட்ட அமைப்பினரைப் பிடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. (உங்களின் கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள் எனக் கூற வரவில்லை. அது உங்களின் முடிவிற்கே விட்டு விடுகிறேன்). ஆனால், நீங்கள் சந்திக்கும் எல்லாருமே ஒரே மாதிரி இருப்பார்கள் என எடை போட்டு, அவர்களிடமிருந்து விலக வேண்டாம்; காழ்ப்புணர்ச்சியைக் காட்ட வேண்டாம் என்பது மட்டுமே எனது வேண்டுகோள். உங்களாலும், உங்களின் சமகால மக்களாலும் இந்த சிக்கலுக்குத் தீர்வு கண்டிப்பாக கிடைக்கப் போவதில்லை. தயவுசெய்து, உங்கள் குழந்தைகளின் மனதில் உங்களின் காழ்ப்புணர்ச்சியையும், வெறுப்புணர்ச்சியையும் விதைக்கவேண்டாம். நீங்கள் ஒன்றும் அவர்களுக்கு புத்தி புகட்ட வேண்டாம், 'அவனிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்' என. அவர்களே தீர்மானித்துக் கொள்வார்கள்; யார் நல்லவர்கள்; யார் கெட்டவர்கள் என்று! குணத்தின் அடிப்படையில்; குலத்தின் அடிப்படையில் அல்ல. நீங்கள் அவ்விதம் செய்யாமலிருந்தாலே, இந்த பிரச்சினை இன்னும் சில ஆண்டுகளில் ஓய்ந்து விடும்.

நீங்கள் போராடுவது யாருக்காக? உங்களுக்காகவா? உங்களின் முன்னோர்களுக்காகவா? தவறுக்கு தண்டனை கொடுக்க நினைத்தால் கூட, யாரைத் தண்டிப்பீர்கள்? உங்கள் முன்னோர்களுக்கு அநீதி இழைத்தவர்களின் வாரிசுகளையா? நீங்கள் செய்யும் குற்றத்திற்கு, உங்கள் மகனுக்குத் தண்டனை கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா அல்லது உங்கள் மகன் தான் ஏற்றுக் கொள்வானா? குற்றம் தந்தை மீதா? அல்லது மகன் மீதா?

இந்தப் பதிவு பிராமணர்களைப் புகழ்வதற்காக அல்ல. எனக்கு அவர்கள் மேல் எவ்விதமான விருப்பும் கிடையாது; வெறுப்பும் கிடையாது. எனக்குத் தெரிந்து, நான் ஒரு சில பிராமணர்களுடன் தான் பழகியிருக்கிறேன். எனக்கு எந்த சிக்கலும் இதுவரை இருந்ததில்லை. என்னுடைய மற்ற நண்பர்களிடமிருந்து வேறுபட்ட முறையில் அவர்கள் நடந்து கொண்டதாகவோ, அல்லது என்னை அவர்களின் மற்ற நண்பர்களை நடத்தியதாகவோ நான் அறியேன். அப்படியே, அவர்கள் நடத்தியிருந்தாலும், நடத்தினாலும், என்னுடைய கருத்து மாறப்போவதில்லை. ஏனென்றால், பல கொடூரமானவர்களை மற்ற சமூகத்தில் சந்தித்திருக்கிறேன். ஏன் என்னுடைய சமூகத்திலும் தான். தனிப்பட்ட மனிதர்கள் யாரும் அவர்களின் சமூகத்தின் பிரதிநிதிகளாகி விட முடியாது; அதே போல ஒரு சமூகத்தின் மீதான முத்திரையும், அச்சமூகத்தில் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் பொருந்தி வர வேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஒரு ஹிட்லரை வைத்து ஜெர்மானியர்களையும், முஷாரப்பை வைத்து பாகிஸ்தானியர்களையும், கெளரவர்களை வைத்து கர்ணனைப் பழிப்பது போலத் தான் இதுவும். மனிதர்களையும், அவர்களின் குணாதிசயங்களைப் பாருங்கள்; அவர்களின் குலத்தை மறந்து விடுங்கள்.

இந்தப் பதிவிற்கு, எவ்விதமான கருத்துகள் உங்களிடமிருந்து வரும் எனத் தெரியவில்லை. கண்டிப்பாக ஏகப்பட்ட பழிச்சொற்கள் வர வாய்ப்பிருக்கிறது. நட்சத்திரமாக இருந்து விட்டால், 'எது வேண்டுமானாலும் எழுதலாமா?' எனவும் சிலர் கேட்கலாம். என்னை தனிப்பட்ட முறையில் விமர்சித்தும் சிலர் பேசலாம். இந்தப் பதிவிலிருந்து மாறுபட்ட கருத்துள்ளவர்கள், உங்களின் கருத்தைத் தாராளமாகத் தெரிவிக்கலாம். ஆக்கப்பூர்வமான விவாதத்திற்குத் நான் தயார். கூறுபவர் யார், அவரின் பின்னணி என்ன என ஆராயாமல், கூறும் கருத்தை மட்டும் கவனத்தில் கொள்ள ஆரம்பித்தால், எப்போதுமே இரு தரப்பினருக்கும் நல்லது.

ஆக்கப் பூர்வமாக சிந்திப்போம்! அமைதியான சமுதாயம் வளர வழி வகுப்போம்!

48 கருத்துகள் :

Vassan சொன்னது…

வணக்கம்.

தெளிவாக அலசியுள்ளீர்கள். நீங்கள் முன்னிறுத்தியுள்ள கருத்துகளை நடுநிலமையாளர்களான யாராலும் ஒத்துக் கொள்ளாமல் இருக்க முடியாது.

dondu(#11168674346665545885) சொன்னது…

பல இடங்களில் வெவ்வேறு தருணங்களில் நானும் நீங்கள் கூறியதையே கூறியிருக்கிறேன்.

உண்மை, நந்தன் முதலிய பத்திரிகைகளை எடுத்துக் கொண்டால் ஒரு கொலையோ கற்பழிப்போ பற்றி செய்தி வந்தால் குற்றம் சாட்டப்பட்டவர் பார்ப்பனராக இருந்தால் உடனே பலான குற்றம் புரிந்த பார்ப்பனர் என்றே செய்தி போடுவார்கள். மற்ற ஜாதியினராக இருந்தால் வெறும் பெயரை மட்டும் போடுவார்கள். பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி விஷயத்திலும் வெறுமனே உயர்சாதியினர் என்றுதான் இணையத்திலும் எழுதி வந்தனர். நான் அங்கு சென்று சம்பந்தப்பட்ட உயர்சாதியினர் என்ன சாதி என்று குறிப்பிட்டு எழுதுமாறு சவால் விட்டதும்தான் வேண்டாவெறுப்பாக பிறன்மலை கள்ளர் என்று ஜாதிப் பெயரை வெளியிட்டனர்.

வன்னியர்கள் செய்யாத தலித் அடக்குமுறைகளா, தேவர்கள் செய்யாததா? கீழ்வெண்மணி கொடுமைக்கு ஒரு நாயுடுதானே காரணம்?

திடீரென்று பார்ப்பனீயம் என்று எழுதுவார்கள். ஏன், உயர்சாதீயம் என்று எழுதுவதுதானே? மாட்டார்கள்? ரொம்ப பேசினால் இதையெல்லாம் பார்ப்பனர்தானே ஆரம்பித்து வைத்தது என்று கூறிச் சென்று விடுவார்கள். அதில் தாங்கள் மரம் வெட்டியதும், தலித்துகளை கொடுமைபடுத்தியதும் மறைந்து விடும் என்று மனப்பால் குடிக்கின்றனர்.

பார்க்கப்போனால் ஜாதியை விடாப்பிடியாக வைத்துக் கொண்டு தொங்கி இரட்டை கிளாஸ் முறை செயல்படுத்துவது எல்லாமே பார்ப்பனர் அல்லாத உயர் சாதியினர்தான். பார்ப்பனர்களுக்கு அதையெல்லாம் செய்ய நேரமுமில்லை, வசதியும் இல்லை. தங்கள் கல்வி, தொழில் முன்னேற்றம் என்று பார்த்துக் கொண்டு போகவே அவர்களுக்கு நேரம் போதவில்லை.

பல கிராமங்களில் அக்கிரஹாரம் என்று தனியாகவே இல்லை. அப்படியிருந்தாலும் கோவில்களில் பணிபுரியும் குருக்கள் ஓரிருவர் இருக்கலாம், திதி கொடுக்க பிராம்மணர்கள் இருக்கலாம். அப்படி ஒன்றும் சுகஜீவனத்திலும் அத்தொழில் செய்பவர்கள் இல்லை. தங்கள் சந்ததியினரை மேல் படிப்பு படிக்க வைத்து நகரங்களுக்கு அனுப்புவதே அவர்கள் முழு நோக்கமும்.

ஆக, பார்ப்பனர்கள் மேல் எல்லா பழியையும் போடுபவர்கள் தாங்கள் செய்யும் அக்கிரமத்தை மூடி மறைக்கவே அவ்வாறு செய்கின்றனர்.

பின்னூட்டம் நீண்டு விட்டது. மன்னிக்கவும். நீண்ட பதிவுக்கு நீண்டப் பின்னூட்டம் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.

இப்பின்னூட்டம் உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதற்கு ஆதாரமாக அதன் நகல் என்னுடைய பிரத்தியேகப் பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஸ்ருசல் சொன்னது…

டோண்டு அவர்களே,

உங்களுடைய பின்னூட்டத்தில் ஜாதிப் பெயர்களை உபயோகப்படுத்தியதைத் தவிர்த்திருக்கலாம்.

நீங்களும் பொதுப்படையாகத் தான் பேசுகிறீர்கள்.

வன்னியர்கள் செய்யாததா? நாயுடு செய்யாததா என்று!

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
dondu(#11168674346665545885) சொன்னது…

தவிர்த்திருக்கலாம்தான் ஆனால் ஆ ஊ என்றால் பார்ப்பனரை சந்திக்கு இழுப்பவர்களின் ஜாதியையும் இழுப்பது என் போன்றவர்களின் எதிர்வினையே.

கோலங்கள் சீரியலையே எடுத்துக் கொள்ளுங்கள். இது வரை கதாபாத்திரங்களின் ஜாதியைப் பற்றி வாயைத் திறக்காதவர்கள் திடீரென்று ஒரு ஐயங்கார் குடும்பத்தைக் காட்டுவதன் நோக்கம்?

சாவித்திரி (?) என்னும் திரைப்படத்தில் கோவில் குருக்களின் மனைவி கெட்டுப்போவதாக காண்பிப்பார்கள். அதே படத்தில் கதாநாயகனின் தாய் விபசாரி என்று வரும்போது அவன் சாதியை மட்டும் கூற மாட்டார்கள். இது என்ன போங்கு? கூறினால் சம்பந்தப்பட்ட ஜாதியினரிடம் செருப்படிபடுவோம் என்பதால்தானே? பார்ப்பனரை மட்டும் ஜாதியைக் குறித்துக் கூறி, இது வெறும் கதைதானே என்று பசப்புவார்கள். ஏனெனில் இது ஒன்றுதானே வன்முறையில் இறங்காத ஜாதி? இந்த பின்புலனில் என் எதிர்வினையை புரிந்து கொள்ளவும். மற்றப்படி ஜாதியை குறித்து எழுதியதற்காக மன்னிப்பெல்லாம் கேட்கப் போவதில்லை.

இதையெல்லாம் வைத்து நான் எழுதிய என் வெளிப்படையான எண்ணங்கள் பதிவைப் பாருங்கள். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_13.html

இப்பின்னூட்டம் உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதற்கு ஆதாரமாக அதன் நகல் என்னுடைய மேலே குறிப்பிட்ட பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_13.html

கோபத்துடன்,
டோண்டு ராகவையங்கார்

கால்கரி சிவா சொன்னது…

ஸ்ருசல்,

மிக அருமையான மனிதநேயக் கட்டுரை. தொடரட்டும் இது போன்ற சிந்தனைகள். ஒத்த சிந்தனையாளர்கள் சேர்ந்து புதியதொரு உலகம் படைப்போம் அங்கு மனிதத்தை வளர்ப்போம்.

மரத் தடி சொன்னது…

தெருவில் எதிரே ஒரு பிராமனர் வந்தால் தலையில் இருக்கும் முண்டாசை அவிழ்த்து இடுப்பில் கட்டு, காலில் கிடக்கும் செருப்பைத்தூக்கி தலையில் வை, எண்சாண் உடம்பும் கூனிக்குருகி கூழைக்கும்பிடு போடு என்று ஆரம்பம் முதலே ஏழைகளை மிரட்டிக் குளிர்காய்ந்தவர்கள் பார்ப்பனர்கள்.

ஜாதியை பிறப்பால் செய்யும் தொழிலால் முதன்முதலில் உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர்களே பார்ப்பனர்கள்தான்.

அக்கால மன்னர்களின் முக்கிய ஆலோசனை அமைச்சர்களாக இருந்தவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்கள். மணியடிக்கும் தொழிலைச் செய்து வந்தவர்கள்தான் பின்னாளில் பார்ப்பன குலமாக தங்களை ஆக்கிக் கொண்டார்கள். மன்னனின் அருகே இருந்ததால் மன்னனுக்கு சகல(!) வழிகளிலும் விருந்து வைத்து அவனது மனதைக் கலைத்து தமக்கு வேண்டியதை செய்து கொண்டார்கள்.

அப்படி கேட்டுப் பெற்றதுதான் பல கோவில்கள், இலவச நிலங்கள், தானிய வசூல், குடவோலை முறையில் தேர்தல் அதிகாரி, மணியக்காரர் பதவி எல்லாம். இப்படி பதவிகள் வந்ததும் பிற மக்களை தமக்கு கீழ் படியுமாறு செய்தார்கள்.

அதன்பின்னரே மேல்வர்க்கம் என்று தம்மை கூறிக்கொண்டு சாதியை வளர்த்ததோடு அல்லாமல் மற்றவர்களை தாழ்த்தியும் நடத்த தொடங்கினார்கள்.

இங்கே பார்ப்பனம் பற்றிப் பேசுபவர்கள் தயவு செய்து பண்டைய வரலாறுகளை ஒருமுறை புரட்டிப் பார்க்கவும்.

மரத் தடி சொன்னது…

கோபத்துடன் டோண்டு ராகவ ஐயங்காராம்!!! இது திருந்தும் வாய்ப்பு ஜென்மத்திலும் கிடையவே கிடையாது!!!

பெயரில்லா சொன்னது…

Execllent pathivu.Keep it up

ஸ்ருசல் சொன்னது…

மரத்தடி,

உங்களின் ஆதங்கம் புரிந்து கொள்ளக்கூடியதே. நான், அவர்கள் செய்தது சரியென்று வாதிட வரவில்லை. அவர்கள், மற்ற பிறரும் அக்காலத்தில் என்ன செய்தார்கள் என்பதைப் பற்றி துளி கூட எனக்கு அக்கறை இல்லை. ஆனால், நிகழ்காலத்திற்கு வரலாறு அவசியமா என்பது தான் கேள்வி. ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கு, அந்த வரலாறு எவ்விதத்திலும் உபயோகப்படவில்லை என்றால், அந்த வரலாறு இருந்து என்ன பயன்?

பெரும்பாலும், நம்முடைய (என்னையும் சேர்த்து தான்) ஒவ்வொரு செயலுமே இறந்தகாலத்திற்குப் பதில் சொல்வததாகத் தான் இருக்கிறது. நிகழ்காலத்தின் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், எதிர்காலம் சிறப்பாக அமையவும், வரும் சந்ததியினர் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் சாதகமானத் திட்டங்களை தீட்டுவதில் நமது நேரத்தை செல்வழித்தால் பயனுள்ளதாக இருக்கும் என்பது என் கருத்து.

உங்களின் கேள்வியின் தீவிரத்தை சரியாக உணரமால் நான் பதிலளித்திருந்தால், தெரிவிக்கவும்.

உங்கள் கருத்துக்கு நன்றி.

சாணக்கியன் சொன்னது…

அருமையான நடுநிலையான உணர்ச்சிவயப்படாமல் அறிவுப்பூர்வமாக சிந்தித்து எழதப்பட்டுள்ள ஆக்கப்பூர்வமான கட்டுரை. சம்பந்தப்பட்ட மக்கள் படித்து பயன்பெற வாழ்த்துக்கள்.

ஸ்ருசல் சொன்னது…

வாசன், சாணக்கியன், கால்கரி சிவா, பெயரிலி (10.40), மரத்தடி நன்றி.

Muthu சொன்னது…

குழந்தைதனமாக சில கருத்துக்கள் இருந்தாலும் எல்லா பிராமணரையும் கண்மூடித்தனமாக எதிர்க்கும் முட்டாள்களை உங்களோடு சேர்ந்து நானும் கடுமையாக கண்டிக்கிறேன்.

அதே சமயத்தில் எங்களை வதைக்கிறார்கள் என்று ஒரு பக்கம் புலம்பிகொண்டு மறுபக்கம் நுணுக்கமாக வருணாஸ்ரமத்தை ஆதரிக்கும் பிராமணர்களையும் நான் கண்டிக்கிறேன்.

உங்கள் நட்சத்திர வாரம் நன்றாக போகிறது.வாழ்த்துக்கள்.

ஸ்ருசல் சொன்னது…

முத்து, உங்களின் ஆதரவிற்கும், கருத்திற்கும் நன்றி.

ஆனால் "குழந்தைதனமாக இருக்கிறது சில கருத்துகள்", என தெரிவித்திருக்கிறீர்கள். சிறிது விளக்கினால் நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது. நீங்கள் கூறுவதில் குறை காண்பதற்காக அல்ல; உண்மையிலேயே அது என் மீதான தவறாக இருந்தால், அதை மறுபரிசீலனை செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.

நன்றி.

Maraboor J Chandrasekaran சொன்னது…

ஸ்ருசல்..
நல்ல அனுபவபூர்வமான கட்டுரை. எல்லா சாதியினரையும் ஒரு நல்லவன், ஒரு தீயவனை வைத்து, ஒட்டு மொத்த மதிப்பீடு செய்யாதீர்கள் என்று நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே! எத்தனையோ பிராமணர்கள் ஏற்படுத்திய சமூக சேவை நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் இன்று எல்லாத் தரப்பினருக்கும் அரும்பணி செய்து வருகிறது. சொன்னாற்போல், ஒரு திரைப்படமோ, தொலைக்காட்சித் தொடரோ, எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத அணி பிராமணர் அணி ஆகிவிட்டது; இந்த தைரியத்தில்தான் படமெடுப்பவர் மற்ற சாதியை வைத்து புதுமை புரட்சி என்று காட்டுவதில்லை! இந்த கொடுமையை, பாலச்சந்தர் போன்ற சந்தர்ப்பவாதிகளே செய்து வருகின்றனர்; அவரை சாதி வைத்து வைவதை விட, மனித நேயமில்லா சந்தர்ப்பவாதி எனச் சொல்வதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. உடனே இதை எழுதினவன் 'பார்ப்பான்' எனப் பின்னால் படிப்பவர்கள் முத்திரை குத்த நேரிடும்! அதற்குத்தான் நான் முன்னமே, எந்தன் மனத் தாக்கத்தை "என்ன சாதி?' என்றுப் பதிந்தேன்!(http://www.blogger.com/posts.g?blogID=18037237)
'மரபூர்' ஜெய. சந்திரசேகரன்

ஸ்ருசல் சொன்னது…

ஜெய சந்திரசேகரன் நன்றி. நீங்கள் கொடுத்த தொடுப்பு வேலை செய்யவில்லை.

ஸ்ருசல் சொன்னது…

பாரதி உங்கள் கருத்துக்கு நன்றி.

பாரதி, எனக்கு எல்லாம் கிடைத்துவிட்டதற்காக அனைவருக்கும், எல்லாம் கிடைத்து விட்டதாக சொல்லவரவில்லை.

"இப்பத் தான் எல்லாருக்குமே எல்லாமே கிடைக்குதுல" என்பதற்குப் பொருள் அதுவல்ல.

கிடைப்பதற்கு தடை ஏதும் இல்லையே என்பது தான்.

ஒருவன் எந்த சமூகத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும், படிக்க வேண்டும் என நினைத்தால், அவனை உயர்சாதியினரோ அல்லது யாருமே பள்ளிக்குச் செல்லாதே எனத் தடுக்க இயலாது. கண்ணுக்குத் தெரியாத சில இடங்களில் அப்படி நடந்து வரலாம். ஆனால் அப்படி தடுப்பது கடுமையான குற்றம். அப்படிப்பட்ட சம்பவங்கள் சுலபமாக ஊடகங்களுக்கும் இப்போது தெரிந்து விடுகிறது. நல்ல மனதோடோ, அல்லது அரசியல் ஆதாயத்திற்காகவோ, சில அரசியல் கட்சிகள் அவர்களுக்காக போராடவும் செய்கிறார்கள். ஆகவே தடையேதும் இல்லை என சொல்ல வருகிறேன்.

Muthu சொன்னது…

some points for you

//இப்போதிருக்கும் நிலைக்கு (அது நல்ல நிலையோ, கெட்ட நிலையோ) நீங்களும், அதில் சம்பந்தப்பட்டவர்களுமே காரணமாக இருக்க முடியுமே தவர, சம்பந்தமே இல்லாத, உங்களுக்கு யாரென்றே தெரியாத சில மனிதர்களைக் காரணமாகக் கூறுவது சரியா? நன்றும் தீதும் பிறர் தர வாரா என்று சரியாகத் தானேச் சொன்னார்.//

இந்த கருத்து குழந்தைதனமானது. ஒருவேளை நீங்களோ நானே ஒரு சேரியில் பிறந்திருந்தால் இந்த அளவிற்கு வந்து வலைப்பதிவெல்லாம் செய்யமுடியாது.(விதிவிலக்குகளை பேசவேண்டாம்.பெரும்பான்மையை பேசுங்கள்)


//இப்பத் தான் எல்லாருக்குமே எல்லாமே கிடைக்குதுல. பின்ன ஏன் இன்னும் நிறைய பேரைக் கஷ்டப்படுறவங்க?. அவங்களுக்கெல்லாம் நல்ல வழி கிடைச்சிருக்கணும் இல்லையா? உங்க ஊர்ல - உங்க சமூகத்தில படிக்காவங்க யாருமே இல்லியா?"//

இதுவும் மேற்சொன்ன கருத்து போன்றதே....

//நீங்கள் என்ன 2000 ஆண்டுகளாக வாழப்போகிறீர்களா? 2000 ஆண்டுகளாக, நீங்கள் தான் கஷ்டப்பட்டீர்களா? உங்களுக்குக் கொடுக்கப்பட்டது, 60-80 ஆண்டுகளே. அந்த காலகட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்; இவ்வுலகில் 'நீங்கள்' என்றால், 'நீங்கள்' மட்டும் தான். உங்கள் முன்னோர்களுக்கு நீங்கள் வாரிசு மட்டும் தான்; பிரதிநிதிகள் அல்ல. அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கு, நீங்கள் பழிவாங்கப் போனால் அதற்காக நீங்கள் இழந்த காலத்திற்காக, கடவுள் உங்களுக்காக சலுகை நாட்கள் வழங்கப் போவதில்லை.//


இது தான் மிகவும் குழந்தைதனமானது. ஒரு தவறு தொடர்ந்து நடக்காமல் தடுப்பதும் நம் கடமைதான். உங்க தாத்தா மரம் நடாமல் உங்களால் பழம் பறிக்க முடியாது என்று ஒத்துக்கொள்கிறீர்களா?

நீங்கள் சொல்வது போல் யாரும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பிராமணர்களை போட்டு பார்ப்பது கிடையாது.

ஒரு உதாரணத்திற்கு மென்பொருள் கம்பெனிகளிலேயே பிராமணர்கள் அரசியல் பண்ணுகிறார்கள் என்று சொல்லப்படுவதற்கு உங்கள் பதில் என்ன?அவர்கள் தங்கள் இனம் மட்டும்தான் புத்திசாலிகள் என்று நினைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு எதிராக பாலிடிக்ஸ் செய்வதாக தகவல் உண்டு.அதற்கு உங்கள் பதில் என்ன?

இன்னும் சி்ல குழந்தைதனங்கள் கீழே

//சட்டத்தின் பேரால், அதே பிராமணர்களை அடக்கியாள முற்படுவதில்லையா? //

இதற்கு என்ன அர்த்தம்?

//அரசியலில் பிராமணர்களின் பங்கு மிகக் குறைவே. அரசியல் ஆதிக்கம் எல்லாம் 'மற்ற ஜாதிக்காரர்களிடம்' தானே இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் கூட உங்களின் நல்ல நிகழ்வுகளுக்கும், கெட்ட நிகழ்வுகளுக்கும் நீங்கள் (மற்றும் அரசியல்வாதிகள்) தானே காரணமாக இருக்க முடியும்?//

அப்போது பி.ஜே.பி யார்?

//ஆனால், நீங்கள் சந்திக்கும் எல்லாருமே ஒரே மாதிரி இருப்பார்கள் என எடை போட்டு, அவர்களிடமிருந்து விலக வேண்டாம்; காழ்ப்புணர்ச்சியைக் காட்ட வேண்டாம் என்பது மட்டுமே எனது வேண்டுகோள்//

இந்த கருத்தை ஒட்டிய கருத்துக்கள் ஓ.கே.

i also agree that activity of opposing brahmins only because they are brahmins is highly condemnable...but vested interests should be dealt with

குமரன் (Kumaran) சொன்னது…

நல்ல பதிவு ஸ்ருசல். என் கருத்தினை ஒத்த பதிவு.

ஆனால் நான் தற்போது வந்த பிண்ணனியில் (backgroun) இருந்து வராமல் மற்ற பிண்ணனியில் இருந்து வந்திருந்தால் என் கருத்துகள் வேறு விதமாக இருந்திருக்குமா என்ற சந்தேகம் உண்டு. எல்லார் எண்ணமும் அவரவர் பின்புலத்திலிருந்து வருவது தான். நீங்கள் சொன்ன மாதிரி சில கருத்துகள் பெற்றோரால் பிள்ளைகளுக்கு ஊட்டப் பட்டு, பின்னர் பிள்ளைகளால் உண்மை என்று நம்பப் படுகின்றன. அவை உண்மையா என்று கூட பிள்ளைகளால் சிந்திக்க முடியாத அளவு அவை ஆழப் பதிந்து விடுகின்றன.

ஸ்ருசல் சொன்னது…

முத்து உங்களின் விளக்கத்திற்கு நன்றி. உங்களின் கருத்துக்களை மதிக்கிறேன். ஆனால் இனிமேலும் 'குழந்தைத்தனம்', என்ற வார்த்தையை தவிர்த்து விடலாமே?

சரி விசயத்திற்கு வருகிறேன்.


//இப்போதிருக்கும் நிலைக்கு (அது நல்ல நிலையோ, கெட்ட நிலையோ) நீங்களும், அதில் சம்பந்தப்பட்டவர்களுமே காரணமாக இருக்க முடியுமே தவர, சம்பந்தமே இல்லாத, உங்களுக்கு யாரென்றே தெரியாத சில மனிதர்களைக் காரணமாகக் கூறுவது சரியா? நன்றும் தீதும் பிறர் தர வாரா என்று சரியாகத் தானேச் சொன்னார்.//

இந்த கருத்து குழந்தைதனமானது. ஒருவேளை நீங்களோ நானே ஒரு சேரியில் பிறந்திருந்தால் இந்த அளவிற்கு வந்து வலைப்பதிவெல்லாம் செய்யமுடியாது.(விதிவிலக்குகளை பேசவேண்டாம்.பெரும்பான்மையை பேசுங்கள்)


இது எல்லாருக்குமே பொருந்துவது தான். பிராமணருக்கும் மற்ற உயர்சாதியினருக்கும் வாய்ப்பு கிட்டாவிட்டால், அவராலும் இந்த அளவிற்கு வரமுடியாது தான். அதில் சந்தேகம் இல்லை.

>>>>>
ஒரு உதாரணத்திற்கு மென்பொருள் கம்பெனிகளிலேயே பிராமணர்கள் அரசியல் பண்ணுகிறார்கள் என்று சொல்லப்படுவதற்கு உங்கள் பதில் என்ன?அவர்கள் தங்கள் இனம் மட்டும்தான் புத்திசாலிகள் என்று நினைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு எதிராக பாலிடிக்ஸ் செய்வதாக தகவல் உண்டு.அதற்கு உங்கள் பதில் என்ன?
<<<<<

இது சரியல்ல. இது பொதுப்படையாகத் தான் கூறப்படுகிறது. அப்படியென்றால், மற்றவர்கள் எல்லாம் எதுவும் செய்யவில்லை எனக் கூறுகிறார்களா? இரு தரப்பினரும் செய்கின்றனர். அவனவன் சமய சந்தர்ப்பம் பார்த்து நடந்து கொள்கிறான். நான் பார்த்ததை வைத்துச் சொல்கிறேன்.


>>>>இது தான் மிகவும் குழந்தைதனமானது. ஒரு தவறு தொடர்ந்து நடக்காமல் தடுப்பதும் நம் கடமைதான். உங்க தாத்தா மரம் நடாமல் உங்களால் பழம் பறிக்க முடியாது என்று ஒத்துக்கொள்கிறீர்களா?

நீங்கள் சொல்வது போல் யாரும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பிராமணர்களை போட்டு பார்ப்பது கிடையாது.
<<<<<

உங்களைப் போராட வேண்டாம் என்று சொல்லவில்லை. இப்போது அநீதி நடந்தால், தாராளமாக எதிர்த்து நில்லுங்கள். கேள்வி, இப்போது ஏதும் அது போல நிகழ்வுகளைச் சந்தித்தீர்களா என்பது தான். பழைய விசயங்களை வைத்தே பேச வேண்டாம் என்ற பொருளில் கூறினேன்.

>>>அப்போது பி.ஜே.பி யார்? <<<

நாமும் பெரும்பான்மையை வைத்துப் பேசலாமே? விதிவிலக்குகள் வேண்டாம். ஆனாலும் நான் குறிப்பிட்டது தமிழ்நாட்டை மனதில் வைத்துதான்.

இந்த வாதம் எங்கெங்கோ செல்கிறது.

நீங்கள் பார்க்கும் சில விசயங்களை நான் பார்க்கத் தவறுகிறேன் என நினைக்கிறேன். மன்னிக்கவும்.


>>>>
இந்த கருத்தை ஒட்டிய கருத்துக்கள் ஓ.கே.

i also agree that activity of opposing brahmins only because they are brahmins is highly condemnable...but vested interests should be dealt with
<<<

இந்த விசயத்திலாவது ஒற்றுமை இருக்கிறதே நல்லது.

நன்றி.

ஸ்ருசல் சொன்னது…

பாரதி,

முத்துவிற்கு சொன்னது போல், நீங்கள் சொல்லும் சில விசயங்களை நான் பார்க்கத் தவறுகிறேன் என நினைக்கிறேன்.

இன்னும் தடை இருக்கிறது என எப்படிச் சொல்கிறீர்கள்? விதிவிலக்குகளை விட்டு விடுங்கள்.
சில எடுத்துக்காட்டுக்களுடன் விளக்கிச் சொன்னால் நலம்.

ஸ்ருசல் சொன்னது…

குமரன்,

எனக்கும் சில நேரங்களில் தோன்றும் சந்தேகம் தான். ஆனாலும், நான் பார்த்த வரையில் அவர்களின் பாதிப்பு, என்னுடைய அனுபவத்தில் எப்போதும் எனக்கு மட்டுமல்ல என்னுடன் படித்த மற்ற சமூகத்தினருக்கும் நிகழ்ந்ததாக அறியேன். (அது பள்ளியாகட்டும், கல்லூரியாகட்டும்). இத்தனைக்கும் நான் ஒன்றும் மதுரை போன்ற பெரிய நகரத்தில் படித்து வரவில்லை. சின்ன ஊர் தான்.

நான் post 1980 பற்றி சொல்கிறேன்.

நன்றி.

Muthu சொன்னது…

குழந்தைத்தனம் வார்த்தை பிரயோகம் தவறு என்று நினைத்தால் நீங்கள் என் பின்னூட்டத்தை அழித்துவிடலாம். ஏனென்றால் இது போன்ற வாதங்களில் நீங்கள் ஆரம்ப நிலையில் இருக்கிறீர்கள் என்பதால நான் கூறியது அது.

மற்றபடி நான் கூற எதுவும் இல்லை.நன்றி.

ஸ்ருசல் சொன்னது…

>>>>குழந்தைத்தனம் வார்த்தை பிரயோகம் தவறு என்று நினைத்தால் நீங்கள் என் பின்னூட்டத்தை அழித்துவிடலாம். ஏனென்றால் இது போன்ற வாதங்களில் நீங்கள் ஆரம்ப நிலையில் இருக்கிறீர்கள் என்பதால நான் கூறியது அது.
<<<<<

எனக்கு அது புதிதாகப் பட்டதால் கூறினேன். இன்னும் சில நாட்களில் பழகிவிடும். :)

>>>>
நீங்கள் ஆரம்ப நிலையில் இருக்கிறீர்கள் என்பதால நான் கூறியது அது. <<<<

ம். புரிந்து கொண்டேன். சுட்டிக் காட்டியதற்காக, வருந்த வேண்டாம்.

உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

ஸ்ருசல் சொன்னது…

பாரதி,

என்னால் சிரித்து முடியவில்லை. :))

நல்லது.

dondu(#11168674346665545885) சொன்னது…

ஸ்ருசல் அவர்களே, முகமூடி அவர்களின் இப்பதிவைப் போய் படியுங்கள். பின்னூட்டங்களையும் சேர்த்துத்தான். சுவாரசியமாக இருக்கும். பார்க்க:
"பார்ப்பன எதிர்ப்புன்னு எவ்ளோ நாள்தான் ஜல்லி அடிக்கறது" http://mugamoodi.blogspot.com/2005/05/blog-post_20.html

இப்பின்னூட்டம் உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதற்கு ஆதாரமாக அதன் நகல் என்னுடைய பிரத்தியேகப் பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

பெயரில்லா சொன்னது…

ஸ்ருசல்,

சமூக பிரச்சினைகளை நேர்மையாக அலசி, நடைமுறைக்கு சாத்தியமான தீர்வுகளைக் கூறி போலி புரட்சியாளர்களின் நெற்றிப் பொட்டில் அறைந்திருக்கிறீர்கள். எவனொருவனையும் அவன் சமூக பிரதிநிதியாகப் பார்க்காத ஒவ்வொரு தனி மனித மனங்களின் மாறுதலே சமுதாய நலனுக்கு உகந்தது என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

ஆனால், இதன் மூலம் பல தேசங்களிலும் தன் சமூக மக்களின் மேம்பாட்டுக்காக அயராது வியர்வை சிந்தி பாடுபட்டுக்கொண்டிருக்கும்(ப்ளாக் எழுதும் போது வேர்க்குமா?) புரட்சியாளர்களை "நல்ல நிலையில் இருக்கும் நீங்கள் உங்கள் சமுதாயத்திற்கு என்ன செய்தீர்கள்" என்று கேட்டதனால்
, பார்ப்பன அடிவருடி என்று முத்திரை குத்தப்படுவீர்கள் என்று உங்களை எச்சரிக்கிறேன். :-)

ramachandranusha(உஷா) சொன்னது…

ஸ்ரூசல், ( என்ன பேரூங்க இது?),
சாதி, மதம் மற்றும் இனம் இவைகளால் எல்லா மனிதனும் தன் வாழ்நாளில் பலமுறை கேலி செய்யப்படுவான், அவமானப்படுத்தப்படுவான், விமர்சிக்கப்படுவான்(ள்) நம் நாட்டில் இதில் சாதி முதன்மை பெறுகிறது. இதில் மேல்சாதி, கீழ்சாதி பேதம் எல்லாம் இல்லை. நாம் உண்டாக்கிய சாதியையும், மதத்தையும் ஒதுக்கி தள்ளிவிட்டு மனிதம் என்று தழைத்தோங்க தொடங்கும்பொழுது, இக்கொடுமைகள் குறையலாம்.
குறையும். இந்த பட்டியலில் பெண் என்ற ஒரு மாற்றுக்குறைந்த மனுஷபிறவியையும் சேர்த்துக் கொள்ளுங்கள் :-)

தருமி சொன்னது…

Mr./Ms./Mrs./ ?? anony,

(virtual ulagathil "anony'kum "dharumi"kkum enna verupaadu endru vilakinaal nalladhu).
anony,
there is a saying in tamil : "தூங்கிறவன எழுப்ப முடியும்; தூங்கிறது மாதிரி நடிக்கிறவன எழுப்ப முடியாது. well, if you dont have the "guts" to come out of your veil, why the hell should i keep answering to that 'faceless, spineless' entity. sorry man ( i wonder whether you are a 'man'?)

தருமி சொன்னது…

ஸ்ருசல்,
நீங்கள் சொல்வதில் சிலவற்றில் எனக்கு உடன்பாடே. சாதியை வைத்து நல்லவன், கெட்டவன் என்று பாகுபடுத்துவது தவறு என்பதில் எனக்கும் உடன்பாடே.

மற்றவற்றில் நீங்கள் சொல்வது ஒரு 'utopian concept'. அவைகள் கொள்கை அளவில் சரியே..ஆனால், நடைமுறைக்கு...?

உங்கள் பின்னூட்டங்களில் வந்த சில வரிகளே போதும். நான் வேறு எதற்குத் தனியாகப் பின்னூட்டம் இடவேண்டும்?:
குமரன்: "நான் தற்போது வந்த பிண்ணனியில் (background) இருந்து வராமல் மற்ற பிண்ணனியில் இருந்து வந்திருந்தால் என் கருத்துகள் வேறு விதமாக இருந்திருக்குமா என்ற சந்தேகம் உண்டு"
தமிழினி முத்து 'குழந்தைத் தனம்' என்று சொன்னது childish என்ற பொருளில் அல்ல என்றே நினைக்கிறேன். அது child-like என்ற பொருளில் கொள்ளுவதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். probably you are under the illusion that all is well with -ok, let me put the right word - DALITS.உங்களது வார்த்தைகள்:
"ஒருவன் எந்த சமூகத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும், படிக்க வேண்டும் என நினைத்தால், அவனை உயர்சாதியினரோ அல்லது யாருமே
பள்ளிக்குச் செல்லாதே எனத் தடுக்க இயலாது."
"கிடைப்பதற்கு
தடை ஏதும் இல்லையே என்பது தான்"
இவைகளுக்குப் பதில்:
bharathi: இப்போது எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதாக உள்ள தோற்றப் பிழையைக் கண்டு நாம் மயங்கி நிற்கிறோம்.

கடைசியாக இரண்டு விஷயங்கள்: நீங்கள் சொன்னது: " இப்போதிருக்கும் நிலைக்கு (அது நல்ல நிலையோ, கெட்ட நிலையோ) நீங்களும், அதில் சம்பந்தப்பட்டவர்களுமே காரணமாக இருக்க முடியுமே தவர, சம்பந்தமே இல்லாத, உங்களுக்கு யாரென்றே தெரியாத சில மனிதர்களைக்
காரணமாகக் கூறுவது சரியா?"
"நிகழ்காலத்திற்கு வரலாறு அவசியமா என்பது தான் கேள்வி".

இதற்குப் பதிலாக ஒன்றே ஒன்றை மட்டும் உங்களிடம் கேட்கலாமா? : நீங்கள் ஒரு தலித் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் தனிப்பட்ட ஆற்றலால் நீங்கள் பெரிய மனிதராக வந்து விட்டீர்கள் என்றும் கொள்வோம். இருப்பினும், உங்கள் பாட்டனும், முப்பாட்டனும் எத்தகைய வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்றும், அதற்குக் காரண காரியங்கள் என்ன என்றும் உங்களால் நினைக்காமல் இருக்க முடியுமா?
முடியும் என்றால் - நீங்கள் ஒரு தெய்வப் பிறவி என்று சொல்வதை விட வேறென்ன சொல்ல முடியும்?

நீண்ட பின்னூட்டத்திற்கு மன்னிக்க.

பெயரில்லா சொன்னது…

ஸ்ரூசல் அவர்களே,

எனக்கு பாப்பன ஜாதியின்மீது அளவு கடந்த பாசமோ எதிர்ப்போ இல்லை. இன்றளவுக்கும் எனக்கு பல பார்ப்பன நண்பர்கள் இருக்கிறார்கள்.

எனது வீட்டின் நடுக்கூடம் வரை வந்து உணவு உண்டிருக்கிறார்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியினர். நான் பெருமைக்காக சொல்லவில்லை. அதே வீட்டின் நடுக்கூடத்தில் என் இனிய உற்ற பிராமன நண்பர்களும் உண்டு இருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரைக்கும் மனிதர் எல்லோரும் சமமே.

பிராமனர் என்பதற்காக தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடவோ அல்லது பிராமனர் என்பதற்காக எள்ளி நகையாடவோ நான் விரும்புவதில்லை. எல்லோரும் எனக்குச் சமமே.

தமிழ்நாட்டைப் பொருத்த அரசியலில் பார்ப்பனரின் ஆதிக்கம் இல்லை என்றீர்கள்? அதற்கு டோண்டு என்ற மத வெறியர் சப்பைக்கட்டு வேறு! இல.கணேசன் யார்? பொன்.இராதாகிருஷ்ணன் யார்? தமிழகத்தையே ஆட்டிப்படைக்கும் செல்வி(?)ஜெயலலிதா யார்? கும்பகோணம் குடுமி ராமநாதன் யார்? தயவுச் எய்து விளக்குங்களேன்.

பெயரில்லா சொன்னது…

Dear Friend,

Did you read/hear about the speeches made in the recent Brahmin conference held in Chennai. I would highly recommend you to go thru that and write something.

Some of them would have changed but the majority will never change. As Dharumi said, think about the sufferings your/our parents, grand parents suffered at their hands.

I am not saying that we should punish the current generation because their elders did something. The current generation Brahmins must realize that all are equal. They still think that they have high IQ than others.

Will the brahmins agree to implement Tamil slogans in the temples??. Why the kolaikara-subramani is opposing that??

Will the brahmins allow a non-brahmin to perform the pujas in temples??. If so why they went to supreme court to fight against it??

பெயரில்லா சொன்னது…

So called "dharumi",

why the heck do you need the identity of a person(Man/Woman/or something else), as long as the debate is decent?

Or you'll be happy if i start commenting with a name suresh or ramesh or kuppan or suppan or dharumi or karumi?

I am saying that your "intellectulal looking posed" black&white photo is not you. So are you going to sign with your bio-data proofs and do blogging from today. Or did you start publishing your identity from the day-1 of your blogging?

Comment moderation is enabled and the blogger has allowed anonymous comments on his blog. You dont have to worry about that.

ஸ்ருசல் சொன்னது…

பெயரிலி & தருமி அவர்களே,

இந்தப் பிரச்சினை திசையில்லாமல் பயணிப்பதால், இத்தோடு இதனை நிறுத்தி விடுமாறு வேண்டுகிறேன்.

பெயரிலி & தருமி நீங்கள் இருவரும் அனுமதித்தால், உங்களின் பின்னோட்டத்தை எடுத்து விடலாம் என நினைக்கிறேன்.

ஸ்ருசல் சொன்னது…

எல்லாருமே அங்கு நடக்கிறது, எங்கோ ஓரிடத்தில் நடக்கும் என்றே கூறுவதால், ஒப்புக்கொள்வதற்கு ஏதுவாக இல்லை. இங்கு இப்படி இன்னும் நடக்கிறது என்று ஏதாவது எடுத்துக்காட்டுடன் கூறினால் நன்றாக இருக்கும்.

எங்காவது நடந்தால், கண்டிப்பாக அது தடுக்கப்படவேண்டும்; நிச்சயமாக மற்றவர்களால் தடுக்கப்படும் இதில் மாற்றுக்கருத்து இல்லை. நாம் இன்னும் கிணற்றில் வாழ்ந்து கொண்டிருக்கும் தவளைகள் அல்ல. நிச்சயம் தெரிந்திருந்தால், அதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும் எனபது நான் ஏற்கனவே கூறியிருந்தது.

அப்படி எங்காவது, யாராவது நடந்து கொண்டால், அதற்காக அந்த சமூகத்தினரைச் சார்ந்த அனைவரும் காரணம் என்று சொல்வதும் சரியாகாது. அப்படி நடக்கும் பட்சத்தில், அடக்குமுறையைக் கையாளும் சம்பந்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களே, அவர்களுக்கு எதிராக குரல் கொடுக்கத் தயாராக இருப்பார்கள். அப்படி குரல் கொடுக்கும் அனைவருமே வெளி வேசம் போடுகிறார்கள் என நினைக்கவும் முடியாது.

விகடனிலில் ஒரு முறை கீழ்கண்ட வாக்கியத்தை படித்ததாக ஞாபகம்:

இரண்டாம் உலக்ப் போர் நடந்து முடியும் தருவாயில், முசோலினியின் பாசிச அரசைக் கவிழ்க்கப்பட்டது. அப்போது முசோலினியும், அவரது காதலியும் (அல்லது மனைவி என நினைக்கிறேன்) கொல்லப்பட்டு சாலையில் அவர்களின் உடல், தொங்கவிடப்பட்டது. மக்கள் அனைவரும் கோபத்தில், அவர்கள் உடலைச் சுற்றி கூக்குரலிட்டும், அடித்துக்கொண்டிருக்கும் தருவாயில் கூட, முசோலினி காதலியின் ஆடையை ஒருவர் சரி செய்தார். எவ்வளவு தான் அவர்கள் மீது கோபம் இருந்தாலும், அவரின் மனிதாபிமானத்தையும், என்னவென்று சொல்வது.

சிலர் கூறுவது போல், ஒரு உயர் சமூகத்தைச் சார்ந்த சிலரால் இன்னொரு தரப்பினர் அடக்கியாளப்பட்டால், அதை அந்த உயர் சமூகத்தை அனைவரும் விரும்புவர் என்பது தவறு; பெரும்பாலோனோர் வெறுக்கத் தான் செய்வர். சிலர் மட்டும், தவறான முறையில் நடந்துகொண்டு, அவர்களின் சமூகமே அப்படித் தான் என்று தவறான பிரதிபலிப்பாக இருப்பர். இது எல்லா சமூகத்தினருக்கும் பொருந்தும். பிராமணர்கள் உட்பட.

கூட்டம் கூட்டுவது சிலர் தானே! மேலும், இதை மற்ற சமூகத்தினரும் செய்கிறார்களே? இருப்பது 1000 பேரே ஆனாலும், அவர்களுக்கும் ஓர் ஜாதி சங்கம் வைத்துக் கொள்கிறார்களே? 99% படித்த அறிவாளிகள் இருக்கும் அமெரிக்க-இந்தியர்கள்-தமிழர்களில் கூட சங்கம் இருக்கிறதே. அதற்கும் கூட சிலர் சென்று வருகின்றனரே? இதை என்ன சொல்வது?

நான் இத்தகைய செயல்கள் நடைபெறவே இல்லை என்று அறுதியிட்டு மறுக்கவில்லை. ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவே.

ஸ்ருசல் சொன்னது…

ஜெயலலிதா, கணேசன், சுப்ரமணியசாமி போன்றோர்கள் இருப்பதை மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் மட்டும்தான் இருக்கிறார்களா என்ன? எத்தனை மாநில மந்திரிகள், எத்தனை மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள், எத்தனை எம்.எல்.ஏக்கள், எத்தனை முன்னாள் முதல்வர்கள், எத்தனை மாற்று சமூக அரசியல் தலைவர்கள்? அவர்களில் 99% சதவீதம் பிராமணரல்லாதவர்கள் தான். அவர்களால் எதுவுமே முடியாது என்கிறீர்களா?

ஸ்ருசல் சொன்னது…

தருமி அவர்களே, எது நடைமுறைக்கு ஒவ்வாத செயல்?

உங்களின் குழந்தைக்கு, 'ஜாதிப்பற்றுடன் இருக்காதே', என்று போதிப்பதா?

'திருடாதே', 'பொய் சொல்லதே', 'பெரியவர்களை எதிர்த்துப் பேசாதே', என்று சொல்வது போல் தான், 'ஜாதியை மறந்து வாழ்; எல்லாரும் சமம்' என்று சொல்லித்தருவதும்.

நான் கூறியது போல், இந்தத் தலைமுறை மக்களால் இந்த சிக்கல் நிச்சயமாகத் தீரப்போவதில்லை. என்னதான் திட்டமிட்டாலும், சட்டமியற்றினாலும், காந்தி போன்றோர்கள் வந்தாலும்.

அடுத்த தலைமுறையில் தான் அது சாத்தியம்.

இன்னும் சிலர், நான் மட்டும் நல்லவனாக வளர்த்து என்ன பயன்? மற்றவர்கள் அப்படி இருக்கமாட்டார்களே, என்று சிந்திப்பார்கள். இப்படியே அனைவரும் நினைப்பதினால் தான் இதற்கொரு முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

மாறாக, அவர்களைத் திறமையுடன் வளருங்கள், பொறாமையை வளர்க்க வேண்டாம். எந்த இக்கட்டான சமயத்திலும் எதிர்த்து நிற்பது போல், அவர்களை உருவாக்குங்கள். ஜாதியைப் பார்க்காமல் யாரும் வாழ முடியாது என்றோ, யாரும் வாழ வில்லை என்றோ சொல்கிறீர்களா? ஜாதி தான் உயிர் மூச்சு, அது இல்லாமல் யாரும் வாழமுடியாது என்றிருந்தால், மனித இனம், தோன்றிய மறு நிமிடமே அழிந்திருக்காதா?

மேலும், பாட்டனார்கள் கஷ்டப்பட்டார்கள் என்றால், அதை நினைத்துப் பார்க்க மாட்டேன் என்றோ, பார்க்கக் கூடாது என்றோ சொல்லவில்லை. அதன் காரணங்களை அலசி என்ன பயன். அது திரும்ப நிகழாமல் இருக்க என்ன வழியோ அதைப் பாருங்கள். அதற்கு பிராமணர்களை அடக்கி வைப்பது தான் வழி என்றால், நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.

ஒரு முறை ஒரு செயல் நடந்து முடிந்த பின்பு, முடிவு கிடைக்கப்பட்ட அந்த சூழலில், முதலில் நடந்த செயலுக்குக் கொடுக்கப்பட்ட உள்ளீடுகளைத் திரும்ப கொடுத்தால், முந்தைய முடிவு நிச்சயமாக கிடைக்காது. என்னால் அறுதியிட்டு கூறமுடியும்

பெயரில்லா சொன்னது…

Dear Friend,

// உங்களின் குழந்தைக்கு, 'ஜாதிப்பற்றுடன் இருக்காதே', என்று போதிப்பதா?

'திருடாதே', 'பொய் சொல்லதே', 'பெரியவர்களை எதிர்த்துப் பேசாதே', என்று சொல்வது போல் தான், 'ஜாதியை மறந்து வாழ்; எல்லாரும் சமம்' என்று சொல்லித்தருவதும். //

Are the brahmins doing this???. They were the ones who does the Poonol kalyanam to the children. Once the nool gets on them, they think they are superior to anyone. Can you ask the brahmins not to do this??

//மேலும், பாட்டனார்கள் கஷ்டப்பட்டார்கள் என்றால், அதை நினைத்துப் பார்க்க மாட்டேன் என்றோ, பார்க்கக் கூடாது என்றோ சொல்லவில்லை. அதன் காரணங்களை அலசி என்ன பயன். அது திரும்ப நிகழாமல் இருக்க என்ன வழியோ அதைப் பாருங்கள். அதற்கு பிராமணர்களை அடக்கி வைப்பது தான் வழி என்றால், நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.//

If everyone gets adequate education & most importantly some job, they can survive. The brahmins were the ones who didnt allow the people to be educated for a long time. Even Rajaji closed more than 6500 schools in Tamilnadu during his regime. If you deprive basic education, how the guys are going to come up in life.

If Kamarajar didnt reopen those schools, I would have probably running behind cows in a village.

I really dont understand your intention of creating such a post. What are you trying to say?.

"Dont blame the brahmins"

If they became human beings, who is going to blame them???.

தருமி சொன்னது…

ஸ்ருசல்,
என் முந்திய பதிவின் முதல் பத்தி, கடைசி பத்தி இவைகளை மட்டும் வாசித்துப் பாருங்களேன்.

ஸ்ருசல் சொன்னது…

பெயரிலி,

>>>>Are the brahmins doing this???. They were the ones who does the Poonol kalyanam to the children. Once the nool gets on them, they think they are superior to anyone. Can you ask the brahmins not to do this??
<<<<<

நான் பிராமணர்கள் நல்லவர்களா, கெட்டவர்களா என ஆராய்ந்து, அவர்கள் நல்லவர்கள் என்று இந்தப் பதிவில் சொல்லவில்லை. என்னுடைய பதிவின், எவ்விடத்திலும் அது இடம் பெறவில்லை. அதற்கு எனக்கு எவ்விதமான அவசியமும் இல்லை. எப்போதும் செய்யப்போவதில்லை. அவர்கள் செய்வது சரி என்று வாதிடவும் இல்லை. அந்த விசயம் என்னுடைய பார்வையிலேயே இல்லை.

ஏனென்றால், ஒரு சமூகம் எப்படிப்பட்ட சமூகம் என ஆராய்வதே எனக்கு பிடிக்காத, தேவையில்லாத விசயம். தனி மனிதர்கள் தான் உங்கள் வாழ்க்கையின் அங்கம். எந்த சமூகமும் அல்ல.

நான் பதிவில் குறிப்பிட்டிருந்தபடி, 'அவர்களுடன் அதிகமாகப் பழகும் வாய்ப்பு கிட்டவில்லை; ஒரு வேளை அப்படி வாய்த்திருந்து, அவர்களின் செயல் அதுவாக இருந்தாலும், என்னுடைய கட்டுரை இன்னும் வெளிவந்திருக்கும். 'நான் பிராமணத்தை ஆதரியுங்கள்; அவர்கள் தான் உயர்ந்தவர்கள்' எனக் கூறவரவில்லை; இந்த சமூகம், மதம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமான பணிகளைப் பார்க்க வாருங்கள் என்பது தான்.

>>>>>>
If they became human beings, who is going to blame them???.
<<<<<<

யாரையும் இப்படி பொதுப்படையாகக் கூறவேண்டாம், என்பது தான் என் கருத்து. இது பிராமணர்கள் என்பதற்காக அல்ல. ஒரு மற்றொரு மதத்தினர் மீது உங்களின் குற்றச்சாட்டாக இந்த வரி இருக்குமாயின், என்னுடைய பதில் அது தான்.

இன்னொருமுறை கட்டுரையை, உணர்ச்சிவசப்படாமல் படிக்க வேண்டுகிறேன்.

<<<<
I really dont understand your intention of creating such a post. What are you trying to say?.
>>>>

தனி மனிதனைப் பாருங்கள். சமூகத்தைப் பார்க்காதீர்கள். இங்கு சமூகம் என்று யாருமே இல்லை; இருக்கக்கூடாது, என்பதைக் கூறத் தான் இந்தப் பதிவு.

அந்த நபர், யாராக இருந்தாலும். பிராமணரா, நாடாரா, நாயுடுவா, தேவரா என்று பார்க்காதீர்கள் என்பது தான். தனி நபர்கள், சமூகத்தின் பிரதிநிதிகள் அல்ல.

நீங்கள் பார்க்கும் கோணத்தின் பிரதிபலிப்புகள் எனக் கூறுகிறேன்.

இங்கே 'பிராமணர்கள்' என்று எங்கெல்லாம் வருகிறதோ, அங்கெல்லாம், உங்களுக்குப் பிடிக்காத ஜாதி, அல்லது மதம் அல்லது மாநிலத்தவர் (பிராமணத்தைத் தவிர ஒன்று இருக்குமாயின்) அதை இட்டுப்படியுங்கள். இன்னும் அந்த கட்டுரை சரியாகத் தான் வரும்.

பிராமணர் என்ற விசயத்தை எடுத்ததற்குக் காரணம், "அவர்களுக்கு எதிராக நான் அடிக்கடி அந்த வாசகங்களைக் கேட்பதே".

அதே போல,வேறு ஒரு ஜாதிக்கும் எதிராக கருத்து பரவலாகக் கூறப்பட்டிருப்பின், என்னுடைய கட்டுரை அந்த ஜாதியைச் சார்ந்ததாக இருந்திருக்கும்.

இது தான் நான் சொல்ல விழைந்த கருத்து.

அந்தக் கருத்து உங்களைச் சரியாக சென்றடையாமல் விட்டிருந்தால், நான் கொடுத்த விதத்தில் தான் தவறு. பிராணமர்களை உயர்த்தியோ, மற்றவர்களைத் தாழ்த்தியோ கூறவேண்டும் என்ற நோக்கில் இடப்பட்டதில்லை.

எந்த இடத்திலாவது உங்களுக்கு அப்படித் தோன்றியிருந்தால், கூறவும் அல்லது மன்னித்தருளவும்.

கட்டுரையின் உட்பொருளை மட்டும் பார்க்குமாறு வேண்டுகிறேன்.

மற்ற சின்ன சின்ன விசயங்களில் கவனத்தை செலுத்தினால், கட்டுரை இட்டதற்கே அவசியம் இல்லாமல் போய் விடும்.

ஸ்ருசல் சொன்னது…

தருமி அவர்களே,

படித்துப் பார்த்தேன்.

>>>>>
நல்லவனா இருன்னு சொன்னால் யார் கேட்பது? ஆனால் நம் முன்னோர்கள் ரொம்பவே புத்திசாலிகள். பொய் சொல்லதேன்னு சொன்னாலும் நாம் பொய் சொல்லுவோம்னு அவங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு. அதனால், பொய் சொன்ன வாய்க்குப் போசனம் கிடைக்காதுன்னு சொன்னாங்க. ஆனாலும், நம்ம ஆளுக இந்த மாதிரி விஷயங்களில் பெரியவங்க சொன்னதைக் கேட்பதில்லை. ஆனால், அதையே ‘இது சாஸ்திரம்’ அப்டின்னு சொல்லிட்டாங்கன்னு வச்சுக்குவோம். நம்ம ஆளுங்க டோட்டல் சரண்டர். அதுக்கு மேல கேள்வி எதுவும் கிடையாது.

இவைகள் இப்படி என்றால், இன்னும் பல காரியங்கள் சாஸ்திரம் என்ற பெயரில் அர்த்தமில்லாமல் நம்மேல் சுமத்தப் படுகின்றன. கேள்வி கேட்டால் ‘ஆமா, எல்லாம் படிச்ச திமிரு’ / ‘’பெரியவங்க அர்த்தமில்லாமலா சொல்லுவாங்க..’ - இப்படி ஏதாவது ஒரு பதில். என் கேள்வி: சாஸ்திரம் என்று சொல்லிவிட்டால் கண்ணை மூடிக்கொண்டு வழிநடக்கணுமா அப்டின்னுதான்.
<<<<<<<<<<<<


எனக்கென்னவோ சொன்ன விதத்தில் சொன்னால் கேட்பார்கள் எனத் தோன்றுகிறது. அம்மா என்றழைக்க வேண்டும் என்று சொன்னால், ஏன் அழைக்க வேண்டும் என்று எந்த குழந்தையாவது கேட்குமா?

எதையும், எவ்விதத்தில் சொல்லிக் கொடுக்கிறோம், சொல்லித்தரும் விசயத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்தது.

இன்றில்லாவிட்டால், என்றாவது ஒரு நாள் குறிப்பாகச் சொன்னால் இன்னும் 50-100 வருடங்களில் (பூமி அது வரை இருந்தால்) ஜாதி என்பதே இல்லாது போய் விடும் என்ற நம்பிக்கை அதிகமாக இருக்கிறது.

பார்க்கலாம். அதுவரை சுழலட்டும் வாழ்க்கைச் சக்கரம், அமைதியாக!

யாத்ரீகன் சொன்னது…

/* நீங்க நல்லா இருக்கிறீங்க. மாசம் லட்சம் ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கிறீங்க. அவங்களோட நிலைமைக்கு இவ்வளவு பரிவோட பேசுற நீங்க, அவங்களோட முன்னேற்றத்துல உன்மையிலேயே அக்கறை இருந்தா, அவங்களை நீங்க ஏன் படிக்க வைக்க கூடாது? */

விழிப்புணர்வு கொண்ட பலரும் இப்பொழுது இதை செய்து வருகின்றார்கள்... ஆனால் அது இன்னமும் பரவ வேண்டுமென்பது என் எண்ணம்...

ஸ்ருசல், உங்களின் இந்த பதிவை படித்துக்கொண்டிருக்கும் நேரம் என் பதிவில் உங்களின் மறுமொழி.. :-) எதிர்பாராத ஒன்று...

Geetha Sambasivam சொன்னது…

To Mr.Anony, poonool kaliyanam and the poonool is not only to the Brahmins. Even these days some chettiars and asaris are wearing poonool and observe Avani Avittam when we are observing.Lord Krishna was an Yadava and he also was wearing poonool.He observed all the kriyas according to his Dharma.Sri Rama was a kshathriya and he was also wearing poonool. These days other community did not observe. Only Brahmins are.So do not tell this is only for brahmins.I am sorry if it hurts you in any way. It is only a clarification.

பெயரில்லா சொன்னது…

Dear Friend,

// தனி மனிதனைப் பாருங்கள். சமூகத்தைப் பார்க்காதீர்கள். இங்கு சமூகம் என்று யாருமே இல்லை; இருக்கக்கூடாது, என்பதைக் கூறத் தான் இந்தப் பதிவு.

அந்த நபர், யாராக இருந்தாலும். பிராமணரா, நாடாரா, நாயுடுவா, தேவரா என்று பார்க்காதீர்கள் என்பது தான். தனி நபர்கள், சமூகத்தின் பிரதிநிதிகள் அல்ல. //

I fully agree with your point. But you have choosen a bad example. I thought your post is similar to what asokamithran wrote in one of the magazines (relating the brahmins to holocaust).

My suggestion is to include other examples (like dalits, minorities etc etc) to highlight your point. It would have given a better understanding.

Thank you very much for your patience and explaining the details.

பெயரில்லா சொன்னது…

ஸ்ருசல் சொல்கிறார்
எனக்கென்னவோ சொன்ன விதத்தில் சொன்னால் கேட்பார்கள் எனத் தோன்றுகிறது. அம்மா என்றழைக்க வேண்டும் என்று சொன்னால், ஏன் அழைக்க வேண்டும் என்று எந்த குழந்தையாவது கேட்குமா?

நான் சொல்கிறேன்
முத்துக்குமரன், தருமி சொல்வது மிகவும் நடைமுறையானது. மயிலே மயிலேயென்றென்றால் இறகு போடுமென நீங்கள் நம்புகின்றீர்கள். எங்களால் முடியவில்லை.

அம்மா என்றழைக்க வேண்டும் என்று சொன்னால், ஏன் அழைக்க வேண்டும் என்று எந்த குழந்தையாவது கேட்காதுதான். ஆனா மருந்து குடி உடம்புல இருக்கும் நோய்க்கு நல்லது என்றால் கேட்கிற குழந்தை ஒண்ணைக் காட்டுங்களேன். டோண்டு ராகவையங்கார் என்று சிக்னேச்சர் வைக்கும் ரிட்டயர்ட்டு ஆபீசர்களே குடிக்கிறதா தெரியல்ல. நம்மோட பாயிண்டுக்கு பொருந்துற உதாரணம்னா ஆயிரம் தேடிச் சொல்லலாம். ஆனா பொருந்தமா இருக்கணுமே?

கண்மூடித்தனமா சகட்டுமேனிக்கு பிராமின்ஸை தாக்குறவுங்கள கண்டிப்போம். ஆனா அதையே வெச்சுக்கிட்டு can't we all get along? எங்கிற மாதிரி பேச முடியாது. அப்பிடி பேசலாமுன்னா அது யூதோபியன் தாட் மட்டுமேன்னு தோணுது.

தருமி சொன்னது…

ஸ்ருசல்,
மன்னிக்கணும்..மன்னிக்கணும். என் கடைசிப் பின்னூட்டத்தைப் பார்க்கவும் என்பதற்குப் பதில் பதிவு என்று தவறாகச் சொல்லிவிட்டேன்.

அதோடு நீங்கள் சொல்லியுள்ள விஷயத்தில் என் தனிப்பட்டக் கருத்தை அங்கே அப்போதே கூறியுள்ளேன். முடிந்தால் பார்க்கவும்.

ஸ்ருசல் சொன்னது…

தருமி அவர்களே,

>>>>
பிறந்த சாதியே இதற்கெல்லாம் காரணம் என்று ‘அவர்கள்’ சொல்லிக்கொண்டிருந்தது சமூகத்தில் விற்பனையானது.
<<<<

இதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. கருத்து சொல்வதற்கில்லை. அப்படியே 'அவர்களில்', 'சிலர்' அப்படிக் கூறியிருந்தாலும், அது வெறும் பேச்சு தானே. 'இவர்கள்' செயலில் காட்டலாமே?

>>>>>>>>>>
பல துறைகளில், முக்கியமாக கலைத்துறைகளில் - எழுத்து,கவிதை,இசை,கலை,…என்று பலவற்றில் - ‘அவர்களைத்’ தாண்டியாகிவிட்டது. ஆடுவது ‘அவர்கள்’; ஆட்டுவிப்பது ‘இவர்கள்’ என்பதுதான் நிலை.
<<<<<<<<<<

அதான் நீங்களே சொல்கிறீர்களே! இப்போது பெரும்பாலான விசயங்கள் அடையும் விசயமாக இருக்கிறதே. யாரும் தடையிடுவதாகத் தோன்றவில்லையே. போதாக்குறைக்கு, நீங்களே ஒப்புக்கொள்வது மாதிரி இருக்கிறது; நான் கூறிய சில விசயங்களை:

"பிராமணர்கள், அந்தக் காலத்தில், அடக்குமுறையை கையாண்டனர் எனக் கூக்குரலிடுபவர்கள் மட்டும் இப்போது என்ன செய்கிறார்களாம்? சட்டத்தின் பேரால், அதே பிராமணர்களை அடக்கியாள முற்படுவதில்லையா?"

இனியும் யாரிடம் அந்த ஆட்டுவிக்கும் சாவி இருக்க வேண்டும் என்ற போட்டி இருக்கவேண்டுமா?

நான் யார் பெரியவர்கள், வலியவர்கள், மெலியவர்கள், கெட்டவர்கள், நல்லவர்கள் என்று சொல்வதற்கு வரவில்லை.

உங்களை மட்டும் பாருங்கள்; நீங்கள் சார்ந்திருக்கும் சாதியை. மதத்தை. உங்கள் பின்பு யாருமே இல்லை என நினைத்துக்கொள்ளுங்கள்.

கஷ்டம் என்று வந்துவிட்டால், உறவினர்களே, சமயங்களில் குழந்தைகளும், கணவன் /மனைவியே உதவாத இந்த காலத்தில், சமூகம் அவசியமா?

நன்றி.

சீனு சொன்னது…

மிக நல்லப் பதிவு. நன்றி.

//ஒரு உதாரணத்திற்கு மென்பொருள் கம்பெனிகளிலேயே பிராமணர்கள் அரசியல் பண்ணுகிறார்கள் என்று சொல்லப்படுவதற்கு உங்கள் பதில் என்ன//

இங்கே பிராமணர் / பிராமணர் அல்லாதவர் என்பது பிரச்சினை இல்லை. இயலாதவர்கள் தாங்கள் பிழைக்க அரசியல் பன்னுகிறார்கள் அவ்வளவே. இயலாதவர்கள் எல்லா சாதியிலும் இருக்கிறார்கள். மென்பொருள் கம்பெனிகள் "அசந்தா அடிக்கிற" policy. அதனால், தான் அரசியல்.

//நந்தன் முதலிய பத்திரிகைகளை எடுத்துக் கொண்டால் ஒரு கொலையோ கற்பழிப்போ பற்றி செய்தி வந்தால் குற்றம் சாட்டப்பட்டவர் பார்ப்பனராக இருந்தால் உடனே பலான குற்றம் புரிந்த பார்ப்பனர் என்றே செய்தி போடுவார்கள். மற்ற ஜாதியினராக இருந்தால் வெறும் பெயரை மட்டும் போடுவார்கள்//

காரணம், வேற சாதிக்காரர்கள் அடிப்பார்கள். பிராமணர்கள் வாய் மூடி இருப்பார்கள்.

பார்ப்பணர்கள் தவறு செய்யவில்லை என்று சொல்லவில்லை. ஆனால், அதற்கு பழி வாங்குதல் முறையன்று. பிறகு, பிராமணர் / பிராமணர் அல்லாதவர்க்கும் என்ன வித்தியாசம்?