வெள்ளி, நவம்பர் 25, 2005

Desktop திரட்டிகள் (Feed Readers)

ஒவ்வொரு மின்னஞ்சல் வரும் போது, எப்படி உங்களுக்கு அவுட்லுக் மென்பொருள் அறிவிப்புக் கொடுத்து மின்னஞ்சலை செர்வரில் இருந்து இறக்கம் செய்து உங்கள் கணினியில் சேமிக்கிறதோ, அதே போல உங்களுக்குப் பிடித்தமான வலைப்பதிவுகளையும் அவை புதிதாக Post செய்யப்படும் போது உடனே இறக்கம் செய்ய பல மென்பொருள்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றைப் பற்றி இங்கே தெரிவிக்கின்றேன.

FeedDemon என்ற மென்பொருளை நீங்கள் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உபயோகப்படுத்தலாம். நீங்கள் இதனுடைய Trial Version-ஐ இந்தப் பக்கத்திலிருந்து பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். Licensing பற்றித் தெரிந்து கொள்ள அந்த நிறுவனத்தின் வலைப்பக்கத்திற்குச் செல்லவும். இதனை உங்கள் கணினியில் நிறுவியதும், இயல்பாகவே பல வலைத்தளத்திலிருந்து செய்திகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு காண்பிக்கப்படும். உங்களுக்குப் பிடித்தமான பதிவினை இதில் சேர்க்க, Channel Group-ல் Right Click செய்து வரும் மெனுவில் New -> New Channel Option தெரிவு செய்யவும்.




பின்பு வரும் கட்டத்தில் உங்களுக்கு வேண்டிய வலைப்பதிவின் Atom URL-ஐ கொடுக்கவும். முடித்ததும், நீங்கள் கொடுத்த வலைப்பதிவிலிருந்து அனைத்து புதிய பதிவுகளும் இறக்கம் செய்யப்பட்டு காண்பிக்கப்படும்.





இனி உங்கள் கணினியிலேயே உங்களுக்குப் பிடித்தமான வலைப்பதிவுகளையும் இறக்கம் செய்து கொள்வது மட்டுமல்லாமல், உங்களின் ஓய்வு நேரத்தில் நீங்கள் படித்துக் கொள்ளலாம் அதுவும் இணையத்தில் தொடர்பு இல்லாமல். (i.e offline). இதனால் உங்களுக்குப் பணமும் மிச்சமாகும்.




இதனைப் போல நிங்கள் இன்னொரு மென்பொருள் இலவசமாகக் கிடைக்கின்றது. அதனைப் பற்றித் தெரிந்து கொள்ள http://www.feedreader.comஎன்ற வலைப்பக்கத்திற்கு செல்லவும். ஆனால் இதில் தமிழ் எழுத்துருக்கள் படிப்பதற்கான வசதி இல்லை.

Desktop திரட்டிகளை சில நேரம் நீங்கள் விலை கொடுத்து வாங்க வேண்டியதிருக்கும். அப்படி முடியாத பட்சத்தில் Google-ன் ரீடர் பக்கத்தினைப் பயன்படுத்தி நீங்கள் பல வலைப்பதிவுகளை கூகுள் மின்னஞ்சல் போல வாசிக்கவும் முடியும். அதற்கு http://www.google.com/reader என்ற பக்கத்திற்கு சென்று "Your subscriptions" option -> "Add Feed" -> ஐ தெரிவு செய்து, உங்களுக்கு வேண்டிய பதிவின் URL-ஐக் கொடுக்கவும்.




ஒவ்வொரு முறை நீங்கள் ரீடர் பகுதிக்கு செல்லும் போது நீங்கள் பதிவு செய்துள்ள அனைத்து வலைப்பகுதிகளில் இருந்து புதிய பதிவுகள் திரட்டப்பட்டு உங்களுக்குக் காட்டப்படும். Gmail மின்னஞ்சல் போல நீங்கள் படித்துக் கொள்ளலாம்.





அதே போல உங்கள் கூகுள் தேடி-யின் முகப்பினையும் உங்கள் வசதிக்கேற்ப Customize செய்து உங்கள் வலைப்பதிவையோ, உங்களுக்குப் பிடித்த வலைப்பதிவுகளோ கிடைக்குமாறும் செய்ய முடியும். அதற்கு நீங்கள் 'Personalize Google' Option-ஐ தெரிவு செய்து உங்களுக்கு வேண்டிய செய்தி நிறுவனங்களின் தலைப்புகள் வரும் படி செய்ய முடியும்.





சிக்கல்கள்:

இது சிறந்த பயனளிக்கும் முறைதான் என்றாலும் உங்களால் சில மென்பொருட்களில் படங்கள் பார்க்க இயலாது. மேலும் முக்கியமாக நீங்கள், பின்னூட்டம் இட இயலாது. நீங்கள் அந்த வலைப்பதிவிற்கு சென்று தான் பின்னூட்டமிட வேண்டும். மற்றவர்களின் பின்னூட்டங்களையும் படிக்க இயலாது. முக்கியமாக, யார் யார் புதிதாக எழுதுகிறார்கள் எனத் தெரியாது. உதாரணத்திற்கு ஒரு புதிய உறுப்பினர் தமிழ்மணம் போன்ற மன்றத்தில் இணைந்தால், அவர் பற்றி உங்களுக்கு தெரியாமல் போக வாய்ப்பிருக்கிறது. உங்களுக்கு மிக மிக பிடித்தமான பதிவுகளை மட்டும் இது போன்ற மென்பொருட்கள் கொண்டு படித்துவிட்டு மற்ற பதிவுகளுக்கு இந்த மன்றங்களுக்கு செல்லத் தவற வேண்டாம்.

உங்களுக்கு இதனை நிறுவிப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏதும் இருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ருசல்

6 கருத்துகள் :

பழூர் கார்த்தி சொன்னது…

நல்லா எழுதியிருக்கீங்க.. இந்த மென்பொருட்களை உபயோகப்படுத்திப் பாத்திட்டு சொல்றேன் மத்த விஷயங்களை... தகவலுக்கும், விளக்கப் படங்களுக்கும் நன்றி :-)

பழூர் கார்த்தி சொன்னது…

அப்படியே ஒரு + குத்தும் போட்டுடறேன்....

ஸ்ருசல் சொன்னது…

நன்றி சோம்பேறி பையன்.

மேலும், News Crawler என்ற மென்பொருளையும் நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். இதனை இந்தப் பதிவில் குறிப்பிட மறந்து விட்டேன். இது மற்ற இரண்டையும் விட மிக அருமையாக இருக்கும்.

இதனின் Trail Version-ஐ இந்தத் தளத்திலிருந்தும் நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

http://www.newzcrawler.com/

நன்றி.

ஸ்ருசல்

பெயரில்லா சொன்னது…

Deep Net Explorer போன்ற இலவச மென்பொருள்கள் இருக்கும்போது trial versionகள் எதற்கு?

அன்பு சொன்னது…

அன்பு ஸ்ருசல்,

உங்களிடமிருந்து வழக்கம்போல ஒரு விரிவான, அழகான பதிவு. அதுவும் தொழில்நுட்ப அறிமுகமாக... நன்றாக விளக்கி செய்துள்ளீர்கள், நன்றி.

பெயரில்லா சொன்னது…

SharpReader-ஐ மறந்திட்டீங்களே. its pretty decent