வனசா மே உலகப் புகழ் பெற்ற வயலின் இசைக் கலைஞர். அவருடைய Choreography என்ற புதிய இசைப் படைப்பில், ஏ ஆர் ரகுமானும் ஒரு பாடலுக்கு (பாடல் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா என்று தெரியவில்லை) , இசை அமைத்துள்ளார். இரண்டு வாரக் காத்திருப்பிற்குப் பின் நேற்று தான் அந்த இசைத் தட்டு கிடைத்தது. மொத்தம் 10 பாடல்கள் (பல இசை அமைப்பாளர்கள் சேர்ந்து இசை அமைத்துள்ளனர்). அதில் "Raga Dance", ஏ ஆர் ஆரின் கைவண்ணத்தில் உருவானது. மற்றவர்களின் பாடலுடன் ஒப்பிடும்போது, ரகுமானின் இசை எவ்வாறு இருக்குமோ என்ற சந்தேகத்துடன் CD Player-ல் இசைத் தட்டை ஒலிக்க விட்டேன்.
என்னுடைய எதிர்பார்ப்பிற்கும் மேலாக, மற்ற எல்லா பாடல்களை விடவும் ரகுமானின் பகுதி மிகச் சிறப்பாக வந்திருந்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. Worth the money!. (CD-ன் விலை 399).
அதில் இன்னொரு பாடல். Handels Minuet. இசையமைப்பாளரின் பெயர் மறந்து விட்டது. அந்தப் இசையை எங்கோ கேட்டது போல் ஒரு உள்ளுணர்வு. என்னிடம் இருந்த அத்தனை (BGM) பின்னணி இசைத் தொகுப்பினையும் ஒலிக்கச் செய்து, அது என்ன எனக் கண்டறிந்த பின் தான் நிம்மதி. அந்தப் பாடல் அப்படியே ஜானி (1978) படத்தின் பின்னணி இசையை பதிவு செய்தது போல் உள்ளது.
இசை என்பதே ஒரு அற்புதமான விசயம். அதைத் திறம்பட இசைத்து, மற்றவர்களை மெய்மறந்து ரசிக்கச் செய்யும், ரகுமான் அவர்கள் ஓர் அற்புதமான இசைக் கலைஞர். அவரின் பல பாடல்கள் பல படங்களின் வெற்றிக்கும், வெற்றிக்கு உறுதுணையாகவும் இருந்திருக்கிறது. ஆனால் அவரின் பல அற்புதமான பாடல்கள், படங்களின் வர்த்தக தோல்வியினால் ரசிக்கப்படாமல் போயிருக்கின்றன. அவற்றில் முக்கியமானது. "வெள்ளைப் பூக்கள்.." என்ற பாடல். இது "கன்னத்தில் முத்தமிட்டால்" என்ற திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. உங்களில் எத்தனை பேருக்கு அந்த பாடலைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது எனத் தெரியவில்லை. இல்லை என்றால், பாடலைக் கேட்க முயற்சி செய்யவும். அதைத் தவிர இன்னும் சில பாடல்களையும் குறிப்பிடலாம். இன்னொரு நாள் பட்டியலிடுகிறேன்.
வரும் அக்டோபர் 8-ம் தேதி இங்கு, Bangalore-ல் நடைபெறவிருக்கும் ரகுமானின் இசை நிகழ்ச்சியைக் காண மிக ஆவலுடன் உள்ளேன்.
6 கருத்துகள் :
//"வெள்ளைப் பூக்கள்.." என்ற பாடல். இது "கன்னத்தில் முத்தமிட்டால்" என்ற திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. //
really a good one from ARR.
- Suresh Kannan
தகவலுக்கு நன்றி.
"வெள்ளைப் பூக்கள்.." என்ற பாடல். ரசித்துக்கேட்டிருக்கிறேன்... நீங்கள் ரசித்த மற்றபாடல்களையும் பட்டியலிடுங்கள்.
நண்பர் ஸ்ரூஸல்,
மிக அருமையாக உள்ளது உங்கள் படைப்புகள். பாராட்டுக்கள். நான் மதுரையில் வசிக்கிறேன். உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாமா?
நண்பன், நாகரத்தினம்
mobile: 9894009473
snagarathinam@gmail.com
நாகரத்தினம் அவர்களே, உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி.
நான், தற்சமயம் Bangalore-ல் மென்பொருள் துறையில் பணிபுரிந்து வருகிறேன். என்னுடைய சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்.
ஏஆர் ஆர் இசை கச்சேரியை கேட்டுவிட்டு அவசியம் எழுதுங்கள்.
நான் கனடாவில் டொரண்டோவில் கேட்டு இருக்கிறேன். மிக அருமை.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
naan oru rasigan enpathyvida
கருத்துரையிடுக