புதன், செப்டம்பர் 21, 2005

ஏ.ஆர்.ரகுமானின் கவனிக்கப்படாமல் போன படைப்புகள்

சில தினங்களுக்கு முன்னால், ஏ.ஆர்.ரகுமானின் பல சிறந்தப் பாடலகள், சில திரைப்படங்களின் வர்த்தகத் தோல்வியினால் ரசிக்கப்படாமல் போயிருக்கின்றன எனத் தெரிவித்திருந்தேன். அவற்றின் பட்டியல். (எனக்கு ஞாபகம் இருக்கும் சிலவற்றை மட்டுமே இங்கே அடுக்குகிறேன்). அதில் "வெள்ளைப் பூக்கள்" பாடல் ( படம்: கன்னத்தில் முத்தமிட்டால்) குறிப்பிடத்தக்கது.

1. கண்களால் கைது செய் படத்தில் வரும் "என்னுயிர் தோழியே" பாடல். இதனை சின்மயி மிக அருமையாகப் பாடியிருந்தார். அதில் அவர் ஆரம்பிக்கும் போது வரும் ஹம்மிங் மிக அருமையாக இருக்கும். மற்றுமொரு பாடல். தீக்குருவி என வரும் பாடல். அதை ஹரிணிப் பாடியிருந்தார். இந்தப் படத்தில் வரும் அனைத்துப் பாடல்களுமே மிக அருமை. ஏனோ, கவனிக்கப்படாமல் போய்விட்டன. மேலும், பாடல்களை எடுத்த விதம் வருத்தத்திற்குரியது. பாரதிராஜாவுடன், இனி ரகுமான் பணியாற்றமாட்டார் என்றும் நினைக்கின்றேன்.

2. இருவர் படத்தில் வரும். பூக்கொடியின் புன்னகை பாடல். அதனை சந்தியா பாடியிருந்தார் (தகவலுக்கு நன்றி - எழில்). அதில் பல்லவி முடிந்ததும் வரும் இசை மிக அருமையாக இருக்கும்.

3. என் சுவாசக் காற்றே படத்தில் வரும். "திறக்காதக் காட்டுக்குள்ளே" பாடல்

4. Bose the Forgotten Hero (ஹிந்தி) படத்தில் வரும், ஆசாதி பாடல். ரகுமானே பாடுயது. "தனுகா" என்ற பாடலும் சிறந்தப் பாடல்.

5. Swades படத்தில் வரும், எஜ தேஷ் அல்லது தமிழில், உந்தன் தேசத்தின் குரல் மிக மிக அருமையானப் பாடல். அவரே பாடியது.

6. "சித்திரை நிலவு சேலையில் வந்தது" - வண்டிச்சோலைச் சின்னராசு படத்தில் வரும். ஜெயச்சந்திரன், மின்மினி பாடியது.

7. தாளத்தில் வரும் "வா மன்னவா". இது ஹிந்தியில் நல்ல அங்கீகாரத்தைப் பெற்றப் பாடல். தமிழில் இன்னும் நன்றாக இருக்கும். சுஜாதா பாடியிருந்தார்.

8. ரட்சகனில் வரும் - "நெஞ்சே நெஞ்சே" பாடல். "போகும் வழியெங்கும் காற்றே". இதுவும் சிறந்தப் பாடல்.

9. ஸ்டாரில் வரும் "நேந்துகிட்டேன் நேந்துகிட்டேன்" - இது கார்த்திக், சித்ரா(இன்னொரு சித்ரா) பாடியது. "மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டது" பாடலும் நல்ல பாடல்.

10. லவ் பேர்ட்ஸ்-ல் வரும் "நாளை உலகம் இல்லை என்றால்". மிக அருமையானப் பாடல். சுஜாதா, உன்னி கிருஷ்ணன் பாடியது.

11. "ஊனே ஊனே உருக்குறானே" - அல்லி அர்ஜீனாவில் வரும். இது ஏற்கனவே ஒரு ஹிந்தி படத்தில் இடம் பெற்றிருந்தது.

12. "அழகே சுகமா" பாடல் - பார்த்தாலே பரவசம். சாதனாவும், ஸ்ரீனிவாசும் பாடியது. (தகவலுக்கு நன்றி - ஜெயஸ்ரீ)

13. பகத்சிங் ஹிந்தி படத்தில் வரும் சிலப் பாடல்கள்.

14. ரிதம் படத்தில் வரும் "அன்பே" சாதனா பாடியது.

நான் குறிப்பிட மறந்த பாடல்கள் ஏதும் இருந்தால் தெரிவிக்கவும்.

நன்றி
ஸ்ருசல்

20 கருத்துகள் :

எழில் சொன்னது…

இருவர் படத்தில் இடம் பெற்ற "பூக் கொடியின் புன்னகை " பாடலைப் பாடியவர் சந்தியா. இவர் பி. சுசிலாவின் உறவினர்.

ரவி ஸ்ரீநிவாஸ் சொன்னது…

பார்த்தேன் ரசித்தேன்
bhardwaj ?

ஸ்ருசல் சொன்னது…

மன்னிக்கவும். தவறுகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

எழில், ஜெயஸ்ரீ-க்கு நன்றி

வெங்கட்ராமன் சொன்னது…

கையில் மிதக்கும் கனவா நீ
- ரட்சகன்

புன்னகையில் தீ மூட்டிப் போனவளே
- ஜீன்ஸ் (இது படத்தில் மட்டுமே வரும் பாடல்)

nagoreismail சொன்னது…

1. புதிய மன்னர்கள் படத்தில் வரும் சில பாடல்கள் நன்றாக இருக்கும்

2. உழவன் படத்தில் வரும் மாரி மழை பெய்யாதோ, பெண்ணல்ல.. பெண்ணல்ல., இன்னும் இரண்டு மெல்லிசை பாடல்கள் நன்றாக இருக்கும்
நாகூர் இஸ்மாயில்

ஸ்ருசல் சொன்னது…

வெங்கட்ராமன் இத்தனை மாதங்களுக்குப் பிறகு எனது பழைய பதிவினை நீங்கள் படித்திருப்பது வியப்பளிக்கிறது.

ஜீன்ஸினைப் போல், காதலனில் வரும், 'காற்றுக் குதிரையிலே' பாடலும் சிறந்த பாடல். சுஜாதா மிக அற்புதமாக பாடியிருப்பார்.

Krubhakaran சொன்னது…

Anthimanthaarai movie directed by Baarathiraaja

Manoj Kumar சொன்னது…

ARR rocks.........

~ சொன்னது…

கன்னத்தில் முத்தமிட்டால் - soundtrack-ல் "சட்டென மலர்ந்தது உள்ளம்" என்ற பாடல்

பெயரில்லா சொன்னது…

I Must say that these songs are always listened by his fans and cannot be forgotten...

அன்பரசு சொன்னது…

I think few more songs could be added to this list.
1. Konjam Nilavu-Thiruda thiruda
2. Putham puthu boomi-Thiruda thiruda
3. Raasaathi-Thiruda thiruda
4. Pennalla Pennalla Uthaapoo-Uzhavan
5. Thenikzhakku seemaiyile-Kizhakku Seemaiyile
6. Minnale nee-May Madham
7. Nila kaaikirathu-Indira
8. Katre en -Rythym

பெயரில்லா சொன்னது…

spider man spider man பாடல் நியு படத்தில்.கேட்டுப்பாருங்கள்...

முதலில் ஆராவாரமாய் ஆரம்பிக்கும் இசை பிறகு smoothly will kill u like a slow poisen...

Dont miss this song guys

Sundar சொன்னது…

I accept Mr. Vignesh comments... These songs are always listened by his fans and who like good music and lyrics... But i agree some good songs are not famous in A.R. Rahman
collections......

ARIVUMANI, LISBON சொன்னது…

நீங்கள் கூறியது முற்றிலும் சரி..( ஆச்சர்யம், நீங்களாவது கவனித்தீர்களே!! )
குறிப்பாக 'தீக்குருவி', 'அன்பே இது நிஜம் தானா', 'வெள்ளைப் பூக்கள் ' 'பூக்கொடியின் புன்னகை ' - இந்தப் பாடலைப் பாடியது பி.சுசீலா இல்லையிங்களா!! ) ' இந்த தேசத்தின் புகழ்', 'நெஞ்சே நெஞ்சே' ' , 'வா மன்னவா' அடுக்கிகொண்டே போகலாம்..

நம்மள மாதிரியே நல்லா சிலர் கவனிக்கறாங்க எ.கா. 'சட்டென மலர்ந்தது உள்ளம்' , புன்னகையில் தீ மூட்டிப் போனவளே' மற்றும் பல..

நான் சிலவற்றை சேர்க்க எண்ணுகிறேன்..

தேசம் படத்தில் வரும் 'காவிரியா காவிரியா' ,..
'மாரி மழை பெய்யாதோ' - உழவன் ,..
'கிவஜா எங்கள் கிவாஜா'- ஜோதா அக்பர்,..
'திகு திகு' - அ ஆ , ...
'தீயில் விழுந்த' - வரலாறு ,..
'கும்மி அடி' - சில்லுனு ஒரு காதல், ...
'ஒரு பொய்யாவது சொல் கண்ணே' - ஜோடி ,..
'ஒரே கனா' - குரு,...

நேரம் கிடைக்கும்போது இன்னும் எழுதுகிறேன், நம் காதில் சிக்காத அந்தப் புதையல்களை..

Unknown சொன்னது…

இவர் இசையமைத்த "இருவர்" படத்தில் ," உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் " , பாடல் அருமையான ஒன்று... வரிகள் அற்புதம்

Unknown சொன்னது…

"endhan vanin kadhal nilave" from "kadhal virus"

Selvansannasi சொன்னது…

மின்சாரகனவில் வரும் தங்கத்தாமரை பாடலும் NEWYARK நகரம் பாடல் மிகவும் அருமை

Selvansannasi சொன்னது…

மின்சாரகனவில் வரும் தங்கத்தாமரை பாடலும் NEWYARK நகரம் பாடல் மிகவும் அருமை

Selvansannasi சொன்னது…

மின்சாரகனவில் வரும் தங்கத்தாமரை பாடலும் NEWYARK நகரம் பாடல் மிகவும் அருமை

பெயரில்லா சொன்னது…

iruvar movie song 'narumugaye narumugaye cute melody with pure tamil lyrics.