நடிகர் சிவக்குமாரின் 'இது ராஜாபாட்டை அல்ல' நான் பத்திரமாக பாதுகாக்கும் புத்தகங்களில் ஒன்று. அவரது இளமைப் பருவம் முதல் தற்போதைய காலம் வரை அவரைப் பற்றியும் அவரது வாழ்க்கையைப் பாதித்தவர்களைப் பற்றியும் அலசிய புத்தகம். 'அலையன்ஸ்' பதிப்பகத்தாருடையது. விலை 350+ (2005-ம் ஆண்டு மார்ச் மாதத்தில்)
இவ்வருட புத்தகக் கண்காட்சியில் அப்புத்தக விலை 170 அளவிற்கு குறைக்கப்பட்டது வருத்தம் கலந்த மகிழ்ச்சி. மகிழ்ச்சிக்கு காரணம் புத்தகம் இன்னும் அதிகமான மக்களை சென்றடையும். வருத்தத்திற்கு காரணம் நான் மட்டும் 350 ரூபாய் கொடுக்க வேண்டியதிருந்ததே என்பது தான்.
அதே 'அலையன்ஸ்' பதிப்பகத்தாரிடமிருந்து சிவக்குமாரின் மகன் நடிகர் சூர்யா எழுதிய 'இப்படிக்கு சூர்யா' புத்தகம் பொங்கலன்று வெளியிடப்பட்டுள்ளது. புத்தகத்தைப் புரட்டி பார்த்தேன். சரி தந்தையைப் பற்றியும், தன்னைப் பற்றியும், திரையுலக வாழ்க்கையைப் பற்றியும் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம் என்று தான் வாங்கினேன். விலை ~240.
ஆனாலும் எனக்கு நம்பிக்கையில்லை. புத்தகத்தில் கொடுக்குமளவிற்கு சூர்யாவிற்கு என்ன தெரிந்திருக்க முடியும்? அவர் வாழ்வில் அப்படி என்ன சாதித்திருக்க முடியும் (அவரது தந்தை அளவிற்கு அனுபவம் கொண்டவரல்லவே?) என்ற கேள்வியுடன் தான் வாங்கினேன். வியாபார யுத்தி தானோ என்றெல்லாம் கேள்விகள். சரி ஐந்து பக்கங்கள், நல்ல விசயம் இருந்தாலே லாபம் தானே என்று வாங்கிக் கொண்டேன்.
மேலும் அனைத்துப் புத்தகங்களிலும், சூர்யா தனது கையெழுத்தினைப் பதித்திருந்தார். நான் இது அவரே கைப்பட எழுதியதா அல்லது அச்சில் வடிக்கப்பட்டு அச்சிடப்பட்டதா என்று ஆராய்ந்தேன். மேலோட்டமாகப் பார்த்ததில் ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. நான்கு புத்தகங்களை எடுத்து கூர்ந்து கவனத்துப் பார்த்த பிறகு தான் வித்தியாசம் தெரிந்தது.
'400 புத்தகங்களுக்கு அவரை உட்கார்ந்து கையெழுத்துப் போட்டது...', 'அலையன்ஸ்' நிறுவன ஊழியர் தந்த பதில்.
வீட்டிற்கு இரவு 9 மணிக்கு வந்து புத்தகத்தைப் புரட்டத் துவங்கியதில் பேருந்திற்கு நேரமானது கூடத் தெரியவில்லை. ஆரம்பம் முதல் அற்புதம்.
"முத்து எடுக்கலாம் என்று மூழ்குகிறவன் செத்துப்போவதும் உண்டு.
செத்துப்போகலாம் என்று கடலில் விழுகிறவன் கை நிறைய
முத்துக்களை அள்ளுவதும் உண்டு". நான் இரண்டாவது ரகம்.
கடல் வேண்டாம் என்று துப்புகிற கிளிஞ்சல்களைக் கூட
திறமையாக பொறுக்கத் தெரியவில்லையே என்கிற
தாழ்வு மனப்பான்மை தான் என் ஒரே சொத்து...."
என்று முதல் பக்கத்தில் ஆரம்பித்து கடைசி வரை.
இது போன்ற உவமைகளை விட என்னை மிகவும் கவர்ந்தது: புத்தகமெங்கும் நிறைந்திருந்த 'உண்மை'. தான் செய்த தவறுகளை ஒப்புக்கொள்வதற்கு, அதுவும் புகழின் உச்சியிலிருக்கும் போது புத்தகங்களில் சொல்வதற்கு பெரிய தைரியம் வேண்டும். அது சூர்யாவிடம் அளவிற்கு அதிகமாகவே இருக்கிறது.
ஆனால் நாம் இப்போது காணும் சூர்யாவா இது போன்ற செயல்களைச் செய்தது என்று ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகாவும் இருந்தது. ஆனால் 'இவை அனைத்தும் எனது தவறுகள் தான்' என்று ஒப்புக்கொள்ளும் போது, அவர் இப்போதிருக்கும் உயர்ந்த நிலை தெரிகிறது. அதற்கு நிச்சயமாக அவரது வாழ்வில் கிடைத்த வழிகாட்டிகள் தான் காரணமாக இருக்க முடியும்.
பள்ளிப்பருவம்:
அவரது இளமைப் பருவத்தில் அவரை வாட்டிய தாழ்வு மனப்பான்மை, அதன் காரணமாக படிப்பில் ஏற்பட்ட ஈடுபாடின்மை, தம்பியுடனான போட்டி என்று விவரித்திருக்கிறார்.
அப்போது வீட்டுக்கு வந்த யாரோ ஒரு தாத்தா கேட்டர். "தம்பி, நீ என்னாவா ஆகப்போற?"
நான் டாக்டர் அல்லது என்ஜினியர் என்று சொல்வேன் என எதிர்பார்த்தாரோ என்னவோ? நான் அவரிடம் சொன்னது - இது தான்.
"ஐ வாண்ட் டு டை!"
அப்பா:
'அப்பா எனக்கு எல்லாமே தந்திருக்கிறார். ஒரு நடிகரின் புகழ் வெளிச்சம் எங்கள் மீது படாமல் பார்த்துக் கொண்டது தான் அவர் எங்களுக்குத் தந்த மிகப்பெரிய பரிசு. 'கார்ல போய்ட்டு வந்தா நாலு கார் கண்ணாடிக்குள்ளா வாழ்க்கை முடிஞ்சிடும். பஸ்ல போனாதான் நிஜமான வாழ்க்கை எப்படினு புரியும். நிறைய மனிதர்களைப் புரிஞ்சுக்க முடியும். ஸ்கூலுக்குப் பஸ்ல போப்பா', என்று யதார்த்த வாழ்க்கையைக் கற்றுத் தந்தார்.
வண்டியை நிறுத்திவிட்டு நேரே செட்டுக்குள் போய் உட்கார்ந்தேன். பதற்றத்துடன் என்னைப் பார்த்த அப்பாவுக்கு அதிர்ச்சி. "என்னப்பா திடீர்னு?", என்றார். "உங்கப்பா லேட்டு! இன்னும் கிளம்பலையான்னு எரிச்சலோடு தொடர்ந்து மூன்று தடவை ஒருவர் போன் பண்ணினார். அவர் மூஞ்சியைப் பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன்", என்று குரலை உயர்த்திக் கத்தினேன்....
நட்பு:
என்னைக் கலங்கி அழ வைத்த நட்பும் உண்டு. 'சரவணா, நான் உன்னிடம் மனம் விட்டுப் பேசி நீண்ட நாள் ஆகிறது. உன்னை சந்திக்க வேண்டும்', என்றார். ஆனால் திட்டமிட்ட நாளில் இருவருக்குமே முடியாமல் போய் விட்டது. ஒரு மாதம் ஓடியிருக்கும். உறுத்தல் விரட்டியடித்ததில் வேலைகளைக் கொஞ்சம் ஒதுக்கிவிட்டு விஜய்யை சந்தித்து சர்ப்ரைஸ் கொடுக்கப் புறப்பட்டேன். ஆச்சர்யம்! எனது செல்போனில், 'விஜய் காலிங்', என்ற டிஜிட்டல் எழுத்துக்கள் மின்னின. விதியின் மேல் வெறுப்பும் விரக்தியும் தந்த போன்கால் அது.
'காக்க காக்க.... கடைசி ஷெட்யூலுக்குப் பணம் இல்லை. குழப்பங்களும், பிரச்னைகளும் திரண்டு எங்களை ஆக்ரமித்த போது, கணம் கலங்கிப் போனோம். ஆனால் படத்தின் கதை எங்களைத் துவளவிடவில்லை. அதை அவ்வளவு விரும்பிக் காதலித்தோம். ஆசையாக என் கையால் தங்கைக்கு ஒரு வைர நெக்லஸ் வாங்கி பரிசளித்து விட வேண்டும் என்று போக்கிஷமாய் மூன்று லட்ச ரூபாய் சேர்த்து வைத்திருந்தேன். அதைத் தயங்காமல் எடுத்தேன். என்னைப் போலவே ஜோதிகாவும் கதையை நேசித்தவர். அவரது தந்தையிடம் எடுத்துச் சொல்லி, மூன்று லட்ச ரூபாய் வாங்கிக் கொடுத்தார். இறுதியாகக் கெளதம், அவரது மனைவியின் மொத்த நகைகளையும் விற்று விட்டார்'.
ஒரு சிறந்த படத்தின் (நான் இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை) வரலாறு தெரிகிறது.
பாசம்:
மெல்லிய முனகலோடு ஒவ்வொருவராக அழைத்து எங்கள் முகங்களை இரு கைகளால் ஏந்தியபடி "என் செல்லங்களைப் பார்த்துட்டேன்" என்றவர் என் முறை வந்த போது, "சாப்டியா கண்ணு" என்றார். அவரது கடைசி மணித்துளிகள் என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத நான், "நாய்க்குட்டிக்கு அப்பாக்கிட்ட சொன்னியா இல்லையா?", என வெடுக்கென்று கேட்டுவிட்டு, பதிலை எதிர்பாராமல் பள்ளிக்குப் புறப்பட்டு விட்டேன். பிறபகல் பள்ளி முடிந்து வந்தபோது....
பாட்டியிடம் நாம் நெருக்கமாக இருக்கவில்லையே என்ற குற்ற உணர்வு, நண்பன் விஜய் மரணத்தின்போதும் என்னைக் கூண்டில் ஏற்றி விசாரித்தது.
சென்னையில் அம்மாவின் தனிமையைப் போக்கிய துணையான ஜானகியின் தங்கை சின்ன லக்ஷ்மி. எங்கள் வீட்டில் நடந்த தீ விபத்தில் ஜானகி இறந்து போனார். தன்னுடைய பிள்ளையைப் போல் பார்த்துக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கை வைத்த பெற்றோர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று கலங்கிப் போனது என் குடும்பம். மூத்த மகளை அடக்கம் செய்த மறுநாள், 'லக்ஷ்மி இங்க இருக்கட்டும் மச்சான்' என்று இரண்டாவது மகளைப் பெருந்தன்மையாக விட்டுவிட்டுப் போனார் என் அத்தை வீட்டுக்காரர். 'ஏற்கனவே ஒரு பொண்ணைக் கொன்னுட்டேன். இன்னொரு பொண்ண இங்க விட்டுட்டு போகாதீங்க', என்று அப்பா கலங்கியபோது, 'ரெண்டு குழந்தைகளைத் தூக்கி வளர்ந்தீங்க, அதுல ஒண்ணு போயிடுச்சு. இன்னொண்ணு உங்ககிட்ட இருக்கிறதுதான் நியாயம்' என்று சொல்கிற மனிதர்களால் தான் நம் நாட்டில் இன்னமும் கிராமங்கள் அழகாக இருக்கின்றன.
வேலை:
"யாருடைய சிபாரிசும் இல்லாமல் நானே தேடிக்கொண்ட வேலை. .... கனவுகளோடு முதல் தேதி காலை எட்டு மணிக்கு ஃபேக்டரியில் இருந்தேன்.... என்னப்பா இன்னிக்கும் ஆபிஸ் பாய் லீவா?' என் டேபிள் இவ்ளோ மோசமா இருக்கு", என்று கத்திக்கொண்டே "ஹலோ மிஸ்டர் சரவண்ன்" .... "தொடப்பம் இருக்கும்.. எடுத்து ஆபிஸ் ரூமைக் கூட்டிப் பெருக்குங்க...", என்றார்.
திரையுலகப் பிரமுகர்கள்:
'சேது' படம் பார்த்து விட்டு, வாயடைத்துப்போய் அவரைத் தேடியபோது, அந்த ப்ரீவியூ தியேட்டரில் ஒரு சாதாரண ஊழியரைப் போல, லிஃப்ட்க்குப் பக்கத்தில் சுவரோடு சுவராக நின்றிருந்தார். ஒட்டு மொத்த உடம்பிலும் இருபத்தைந்து கிலோ சதையிருந்தால் அதிகம். நெஞ்சுக்கு மேலே பட்டனைத் திறந்து விட்டுக் கொண்டு, சட்டையைக் கை முட்டி வரை மடித்து விட்டிருந்தவரின் பாதங்களில் சாதாரண ஹவாய் காலணிகள்....
சென்னை ஒய்.எம்.சி.ஏ. கிரவுண்டில் ஒரு நாள் ஸ்டண்ட் பிராக்டிஸ்ல உடம்பெல்லாம் மண்ணும், வியர்வையுமா இருந்தேன். அங்கே பக்கத்திலேயே ஜோதிகாவோட ஷூட்டிங். 'நம்ம கூட நடிச்ச் பொண்ணு 'குஷி', 'தெனாலி',-ன்னு எங்கேயோ உயரத்துக்குப் போயிடுச்சு. நாம என்னன்னா, இப்போதான் பல்டி அடிக்கவே கத்துக்கறோம்'னு நினைச்சிட்டுருக்கும் போது, 'சார் ஜோதிகா மேடம் கூப்பிடுறாங்க'ன்னு ஒருத்தர் வந்து கூப்பிட்டார். 'நான் எதுக்கு அவங்களைப் பார்க்க வரணும்? வேலையா இருக்கேன்'னு சொல்லி அனுப்பிட்டேன். மறுபடியும் அவர் திரும்ப வந்து கூப்பிடவே.. போனேன். 'என்ன சூர்யா, என்னை ஞாபகம் இருக்க?ன்னு கேட்டு செமத்தியா கலாச்சுட்டாங்க. 'என் படங்கள் பார்ப்பீங்களா'ன்னு கேட்டாங்க. 'ஓ... பார்ப்பேனுங்க'ன்னு அப்பாவியா சொன்னேன். 'அட்லீஸ்ட் ஒரு போன் பண்ணிப் பாராட்ட மாட்டீங்களா?'ன்னு கேட்டாங்க....
'நந்தா'வுக்கு அப்புறம் என்ன பண்ணுறதுன்னு நான் குழப்பத்தில் இருந்த போது ஜோதிகாவிடமிருந்து போன்....
அம்மா:
நான் சினிமாவுக்கு வரும் போது, அம்மாவுக்கு தந்த ஒரேயொரு சத்தியத்தை மட்டும் என்னால் காப்பாற்ற முடியவில்லை. 'காதல் எல்லாம் சினிமாவில் மட்டும்தாம்மா. நிஜத்தில் நீங்க பார்க்குற பெண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்' என்று உறுதி சொல்லியிருந்தேன். எனக்கும் ஜோதிகாவிற்கும் நடந்த கல்யாணம், அம்மா எனக்காக விட்டுத் தந்த விஷயம்.
இன்னும் நிறைய கொடுத்துக்கொண்டே செல்லலாம். புத்தகமாகப் படியுங்கள். இன்னும் சுவாரசியாமாக இருக்கும். ஒவ்வொரு அத்தியாயம் ஆரம்பத்தில் வரும் உவமைகள், உண்மையிலேயே சூர்யா எழுதியது தானா? உண்மை என்றால் ஆச்சர்யம்.
ஸ்ருசல்
22 கருத்துகள் :
நன்றாக எழுதியுள்ளீர்கள்!!
உங்களோடு அமர்ந்து புத்தகத்தை படிப்பது போன்ற உணர்வை வாசகர்களுக்கு தந்துவிட்டீர்கள்..
அருமை..
நன்றி
சிவபாலன்,
மிக்க நன்றி.
புத்தகம் இப்பவே வாங்கணும் போல இருக்கே!
ஏனய்யா, நாமும் வருஷக்கணக்கா தமிழ்ல பிளாக்கிக்கிட்டு இருக்கோம். இன்னும் நாலு வரி ஒழுங்க எழுத வருதா, இதுல எடுத்த உடனே புத்தகம் எழுதுகிற அளவு... கேப்பையில நெய் வடியுதுனு சொன்னா.. நம்புகிறவன
சொல்லணும்:-)
சம்பவங்களை சொல்லிடுவாங்க. அதை அங்கங்க வேண்டிய மசாலா சேர்த்து வடிவமைக்க வேண்டியது எடிட்டோரியல் பொறுப்பு. ஒரு முறை, இப்படி நாகேஷ் சுயசரிதை மாதிரி கல்கில எழுதியிருந்தாரு இல்லையா, அதை நாகேஷ் சொல்ல கேட்டு எழுதியது சாருகேசி என்பவர் என்று தெரிந்தது.
உஷா, நீங்கள் சொல்வது தான் உண்மையாக இருக்க வேண்டும்.
பாலா,
ஆனால் புத்தகத்தில் நான் கண்ட குறைகள்.
1. ஒவ்வொரு அத்தியாயத்திற்க்கும் இடையே விடப்பட்ட 2 பக்கங்கள். தலைப்பிற்கும், சூர்யாவின் புகைப்படத்த்ற்கும்
2. புத்தகமெங்கும் இறைக்கப்பட்டுள்ள சூர்யாவின் புகைப்படங்கள். (லயோலா? கல்லூரியில் எடுத்தது)
//அவரது இளமைப் பருவத்தில் அவரை வாட்டிய தாழ்வு மனப்பான்மை, அதன் காரணமாக படிப்பில் ஏற்பட்ட ஈடுபாடின்மை, தம்பியுடனான போட்டி என்று விவரித்திருக்கிறார்//
Everybody Loves Raymond என்ற காமெடி சீரியலில் வரும் Robert காரெக்டரை நினைவு படுத்துகிறது.
சினிமா காரங்களுக்கு கதை எழுதவா கற்றுத் தரணும். 4/5 பேர் ரூம் போட்டு பிரியாணி சாப்பிட்டு தண்ணியடிச்சி யோசிப்பாங்க
கா.சி, இதைத்தான் சொன்னேன் :-) கொஞ்சம் எடுத்துக் கொடுத்தால் சூப்பராய் டெவலப் செய்து விடுவார்கள் என்று.
பாவம் சூர்யாவை கிண்டல் அடிக்காதீர்கள். இங்கு யோசிப்பது எடிட்டோரியல் டிமுங்க.
ஸ்ரூசல், அடுத்து சுந்தர தமிழில் அகநானூறு, திருக்குறளிளில் மூன்றாம் பால் உதாரணத்துடன் தன் காதல் காவியத்தை ஜோதிகா படைபார் என்று எதிர் நோக்குவோம். விலை ஐநூறு வைத்தாலும் வாங்க ஆளா இல்லை?
உஷா,
/////
ஸ்ரூசல், அடுத்து சுந்தர தமிழில் அகநானூறு, திருக்குறளிளில் மூன்றாம் பால் உதாரணத்துடன் தன் காதல் காவியத்தை ஜோதிகா படைபார் என்று எதிர் நோக்குவோம். விலை ஐநூறு வைத்தாலும் வாங்க ஆளா இல்லை?
////
நடந்தாலும் நடக்கும்.
பிரகாஷ் ராஜ் விகடனில் எழுதித் தள்ளுகிறார். ('கரு' நன்றாகத் தானிருக்கிறது) ஆனாலும் அவருக்கு தமிழில் எழுத வருமா என்பதே எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.
அவர், தமிழ் படிக்கக் கற்றுக் கொண்டார் என கேள்விப்பட்டிருக்கிறேன்.
வியாபார யுத்தி, சர்வைவலுக்காக தமிழ் லாவகமாக கையாளப்படுகிறது.
'உங்க மனசுல யாரு அவருக்கு என்ன பேரு', அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நபர் தமிழ் கஷ்டப்பட்டு பேசுகிறார் (பாராட்டப்பட வேண்டிய விசயம் தான்).
அன்றொரு நாள், நிகழ்ச்சி முடியும் தருவாயில்,
'......... அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.. வுஷ்சி (??)மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே'
???
nalla vimasarnam ..padikka thoodum vimarsanam..valakm pol suryavai ilivu padiththi pahdivu eludhveenga adhai parthu innum nalau nal ella blogers sury vai kelvalpauthu elduganagannu ninaichen..kaapathiteenga
விழியன், கார்த்திக் பிரபு நன்றி.
கார்த்திக் நீங்கள் ஆங்கிலத்தில் பின்னூட்டமிட்டுருப்பதால், படிப்பதில் சிரமமாக இருக்கிறது.
///////valakm pol suryavai ilivu padiththi pahdivu eludhveenga adhai parthu innum nalau nal ella blogers sury vai kelvalpauthu elduganagannu ninaichen..////
சூர்யாவை இழிவுபடுத்தி பதிவா? நான் எழுதியதா? எனக்கு அதுபோல் எழுதியதாக ஞாபகம் இல்லையே??
விளக்கமுடியுமா?
நன்றி.
உஷா
---நாமும் வருஷக்கணக்கா தமிழ்ல பிளாக்கிக்கிட்டு இருக்கோம். இன்னும் நாலு வரி ஒழுங்க எழுத வருதா, இதுல எடுத்த உடனே புத்தகம் எழுதுகிற அளவு---
ஏன் இவ்வாறு இருக்க கூடாது???
அப்பருக்கு 60+ தான் 'ஞானம்' வந்திருக்கிறது. ஞானசம்பந்தருக்கோ பதின்ம வயதிற்குள் பாடி முடித்து கரையேறிவிட்டாரே!
ஒருத்தர் சொல்லி, இன்னொருத்தர் எழுதினாலும், பகிர்வதற்கு என்று மனம் வாய்க்க வேண்டும். சொன்னதைத்தானே எழுதினார்கள்?
வலம்புரி ஜான் பேசப் பேச, குறிப்பு எடுத்து, அதை பத்திரிகையில் இட்டதாக அண்ணாகண்ணன் எழுதியிருந்தார், அப்படியென்றால், அவருக்கும் இதே அளவீடு வைப்பீர்களா?
ஹில்லாரி க்ளிண்டன் புத்தகம் எழுதினாலும், மேற்பார்வையிட்டு கருத்துக்களும் திருத்தங்களும் சொல்ல பதிப்பாசிரியர் குழு இருக்கிறார்கள். படைப்பாளி வேறு; பதிப்பாசிரியர் வேறு.
சூர்யா நிச்சயமாக எழுதியிருக்கமாட்டார் என்று அனுமானிப்பது வருத்தம் தருகிறது.
பாபா, சினிமா பிரபலங்களுக்கு நேர பற்றாக்குறை, மேலும் எடுத்தவுடன்
எழுத வருமா என்பது என் கேள்வி. பொதுவாய் பிரபலம் எல்லாரும் செய்வதுதான் இது. இங்கு சூர்யா தமிழை இரண்டாம் மொழியாய் எடுத்துப் படித்திருப்பார், இவர் வயது அனுபவம், துறை ஆகியவைகளை அண்ணா, ஹில்லாரி, வலம்புரிஜான் ஆகியவர்களுடன் ஒப்பிடுதல் சரியா? இவை எல்லாம் என் சந்தேகமே தவிர மற்றப்படி வேறு ஒன்றுமில்லை. இல்லை சூர்யாவே கைப்பட எழுதினார். பிரகாஷ் ராஜ்ஜே எழுதினார் என்றால் இவர்கள் மட்டுமா தொடர்ந்து குமுதம், ஆவி, கல்கியில் யாராவது சினி பிர்பலங்கள் எழுதிக் கொண்டுதானே இருக்கிறார்கள் எல்லாருமே தமிழ் பால் உண்ட ஞான சம்மந்தர்களே!
Thanks for the information about the book. When I heard first time, I was thinking what is the necessicity for Surya to write this book? Also, Charu Niveditha, criticized this book in his page which I agreed with him.
Kumudam used to ghost write stories in the name of the actresses. I had the privilege(?!) of reading actress Ambika's story in Kumudam(all right... i will call that as my dark days :) ).
As 'ramachandrausha' noted, there must be a group of writers contributed to this book.
Boston Bala said...
புத்தகம் இப்பவே வாங்கணும் போல இருக்கே!
- Balaji...Looks like you have money to burn :)
Hello Raj Chandra,
Sorry for the delay in approving ur comment. I was on leave.
PS: No tamil editor here.
nan ivalavu nal wasteta netsurf pannyierukan aanaal na inniku valkaiela thothupoi nikieran karanam indha puthagam.
வாழ்க்கையில் தோத்துப்போய் நிற்பதற்கு இந்தப் புத்தகம் காரணமா?
என்ன அது? புரியும்படி கூற முடியுமா?
nanraga nadippathu mattum thaan Surya virku theriyum endru ninaithu irunthaen .....aanal intha siru katturai padithathum therinthathu... surya virku uvamai nadaiyil alagaga elutha theriyum endru.....
nandri ungal katturai ku.....
ur a role model for youth still mattum ella life la happadi munaranu enpatharkukuta
Where can i buy this book...? any e-book..?
please help me to get this book..
Hello Usha,
Y not it is possible to write a tamil book by an actor.If u want to analyze a book, then discuss the Good and bad points mentioned in the book and comment about the attitude behind the words.Not the author of the book.Nobody has rights to comment about the author. Please leave a comment about the Book.Don't deviate the discussion by concentrating ur opinion about the author.
suryavin narmai sollal adangathu.
Romba romba nalla ezhuthi irukeenga.. :) romba nandri!!!
Ippove book ah vaangi padikanum pola irukku..! book veli vandhu 5 varusham aaguthey inimey adhu book stores la kedaikaadha??
கருத்துரையிடுக