புதன், ஏப்ரல் 19, 2006

எங்கே செல்கிறது இந்த இடஒதுக்கீடு?

எங்கெங்கோ இருந்த இடஒதுக்கீடு இப்போது தனியார் நிறுவனங்களிலும் செயல்படுத்தப் படும் எனத் தெரிகிறது. பிரதமர் மன்மோகன் சிங் நேற்று கொடுத்த பேட்டியில், "தனியார் நிறுவனங்கள் இடஒதுக்கீட்டினை அமுல்படுத்துவதைப் பற்றி யோசிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது", எனத் தெரிவித்துள்ளார். இன்னும் வேறெங்கெங்கு இட ஒதுக்கீடு அமுலுக்கு வரும் எனத் தெரியவில்லை. உங்கள் வீட்டுக்கு வேலை பார்க்க வரும் ஒரு நபருக்கு கூலி கொடுக்க வேண்டும் என்றால் கூட, உங்களுக்கு பிடித்திருந்தால், திருப்தி இருந்தால் மட்டுமே கொடுப்பீர்கள். அதுவும் பேரம் பேசி, பத்து ரூபாய் கொடுக்கும் இடத்தில் எட்டு ரூபாயை மட்டுமே கொடுப்பீர்கள். பத்து ரூபாய்க்கே இவ்வளவு யோசனை என்றால், கோடிக்கணக்கில் முதலீடு செய்து நீங்கள் நிர்வாகிக்கும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நபர்களிடம் எவ்வளவு தரத்தை எதிர்பார்ப்பீர்கள்? (உடனே 'சிலர் தரம் தரம் என சல்லியடிக்கிறார்கள்'' என கூற ஆரம்பித்து விடாதீர்கள்).

உங்களுடைய நிறுவனத்திற்கு தேவைப்படும் ஆட்களைத் தேர்வு செய்யும் உரிமை உங்களுக்கு இருக்க வேண்டாமா? யார் யார் பணியில் சேர வேண்டும் என்ற முடிவை அரசு எடுத்தால் எப்படி? அரசு சொல்கிறது, 'உன்னோட நிறுவனத்தில் இந்த ஜாதிகாரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த ஜாதிக்கு 10% இடத்தைக் கொடு' என்று கூறினால் உங்களுக்கு எவ்வளவு எரிச்சலாக இருக்கும். இயல்பாகவே அத்தனை சதவீதம் அவர்களை அறியாமலேயே கொடுக்கப்பட்டிருக்கும் / நடைமுறையில் இருக்கும். ஆனால் '10% கொடு', என்று அழுத்தும் போது தான் சிக்கல் ஏற்படுகிறது. இது போல ஜாதி, மத, மொழி சிக்கல்கள் இல்லாத காரணத்தினால் தான் தனியார் நிறுவனங்கள் வெற்றிகரமாக செயல்பட முடிகிறது. மற்றவர்கள் வெற்றிகரமாக நடத்தும் நிறுவனங்களில் மட்டும் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று நினைக்கும் சிலர் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்திப் பார்த்தால் இதன் வலி தெரியும்.

எனக்கு யார் யார் என்ன ஜாதியைச் சார்ந்தவர்கள் முக்கியமல்ல. வேலை பார்த்தால் சரி. திறமையுடன் வேலை பார்க்காவிட்டால் தூக்கி விட்டு இன்னொரு திறமையான நபரை நியமித்து விட்டுச் செல்கிறேன். இது இப்போது சாத்தியம். ஆனால் இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட்ட பின் ஒரு நபர் பணியில் இருந்து தற்காலிகமாகவோ / நிரந்தரமாகவோ நீக்கப்பட்டால் அங்கு ஜாதியின் பெயரால் பெரிய கூத்து நடக்க வாய்ப்பிருக்கிறது.

சாதி தாள்களை வைத்துக் கொண்டு, 'இவன் என்ன சாதி, அவன் என்ன சாதி', எனச் சரி பார்த்து ஆட்களைத் தேர்ந்தெடுப்பதற்கு, எனது நிறுவனம் என்ன தாலுகா அலுவலகமா அல்லது கிராம சாவடியா? யார் வேலையில் சேர வேண்டும் என்பதைச் சட்டமாகக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்த எனது நிறுவனம் என்ன தலைமைச் செயலகமா?

ஆண்டுகள் செல்லச் செல்ல பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். ஆரம்பத்தில் ஒன்றுமே இல்லை. பின்னர் கல்வியில், அரசு வேலை வாய்ப்பில், அரசியலில் (தனித் தொகுதிகள்) இப்போது தனியார் வேலை வாய்ப்பில். நாட்டை இது கூறு போடும் வேலை இல்லையா? ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில் மண்டல் கமிஷன் பரிந்துரை செய்த போது, 'நீங்கள் கூறும் திட்டத்தை அறிமுகப்படுத்தி எனது நாட்டைத் துண்டாடச் சொல்கிறீர்கள். என்னால் நிச்சயமாக முடியாது', என்றார்.

இன்னும் எத்தனை நாட்களுக்கு சாதிச் சான்றிதழ்களை நம்பி பிழைக்கப் போகிறோம் எனத் தெரியவில்லை? உங்களது மதிப்பெண் சான்றிதழ்களை நம்பி நிலைக்கும் வழியைப் பாருங்கள். தனியார் நிறுவனங்கள் தான் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் காரணிகளில் முக்கியமானதாகத் திகழ்கிறது. அதையும் கெடுத்துத் தொலைத்தால் நன்றாக இருக்கும். சட்டம் என்ற ஒரு ஆயுதத்தை வைத்துக் கொண்டு, அடுத்தவனின் உழைப்பில் சலுகைகளைப் பெறுவதற்கு நாமெல்லாம் வெட்கப்பட வேண்டுமா? (இதை தனிப்பட்ட சமுதாயத்தின் மீதான தாக்குதலாக நினைக்க வேண்டாம். இது எனக்கோ / நான் சார்ந்திருப்பதாக கூறப்படும் சமூகத்திற்கும் பொருந்தும்.)

ஒரு வேளை இந்த சட்டம் அமுல் செய்த பிறகு, ஒரு நிறுவனத்தில் இருந்து குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த ஒரு நபரை சரியாக பணிபுரியவில்லை என்ற காரணத்திற்காக வெளியேற்றினால் என்னவாகும்?

1. அவரின் மேலதிகாரி என்ன ஜாதியைச் சார்ந்தவர் என்று பார்ப்பர். அவர் மீது பழி போடப்படும்.

2. நீக்கப்பட்டவரின் சமூகத்தைச் சார்ந்தவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு, அதனை ஒரு பெரிய சிக்கலாக மாற்றுவார்கள்.

3. மீண்டும் நீக்கப்பட்ட நபரின் பிரிவிலிருந்து ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து பணியை நிரப்ப வேண்டும். செய்தித் தாள்களில் இந்த ஜாதி / பிரிவின் கீழ் இத்தனை இடங்கள் காலியாக இருக்கின்றன. அந்தப் பிரிவைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்படும். விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் தங்களது விண்ணப்பத்திலும், நான் இந்த ஜாதி, இந்தப் பிரிவை சார்ந்தவன் என்று பெருமையாகக் குறிப்பிட்டுக் கொள்வார்கள்.

4. இன்னும் சில ஆண்டுகளில், 'பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவைச் சார்ந்த நபர்கள் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நீக்கப்படுகிறார்கள்', என்ற குற்றச்சாட்டு வலுத்து, அதற்கும் ஏதாவது ஒரு சட்டம் இயற்றப்பட்டு, இங்கும் அனனவரும் (எல்லா சமூகத்தினரும்) அரசு நிறுவனங்களைப் போல நிரந்தர சீட்டை போட்டு விடுவார்கள்.

5. இப்போது இருப்பது போல, Skillset-ஐ அடிப்படையாக வைத்து அந்த இடத்திற்கு இன்னொருவரைப் பணியில் அமர்த்த முடியாது. சென்றவர், எந்தப் பிரிவைச் சார்ந்தவர் என்று பார்க்க வேண்டும். அதே பிரிவைச் சார்ந்த இன்னொருவரை பணியிலமர்த்த வேண்டும். நீங்களும் நினைத்த நேரத்தில் பணி மாற முடியாது. ஏனென்றால் குறிப்பிட்ட நிறுவனத்தில் உங்கள் பிரிவிற்கு வேலை காலியாக இருக்காது.

6. அடுத்து எல்லா மாநிலங்களிலும் மொழி வாரியாகவும், மத வாரியாகவும் நிரப்பபடும். பிற்காலத்தில் பீகார், அஸ்ஸாம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் சட்ட விரோதமாகக் குடியேறுபவர்களுக்கும் ஏதாவது ஒரு அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

7. நிறுவனங்கள், லாபத்தை உயர்த்துவது எப்படி என்று கூட்டம் நடத்தி திட்டமிடுவதற்குப் பதில், சாதி சங்கங்களுடன் சமரசம் பேசிக் கொண்டிருப்பார்கள்.

8. சிறிது ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு உயர்ஜாதியினருக்கு மட்டும் கொடுக்கப்படுகிறது. அதைத் தவிர்க்க வேண்டும் என்று ஆரம்பிப்பார்கள். பின்னர் பதவி உயர்வு இட ஒதுக்கீடு முறைப்படி கொடுக்கப்படும்.






இங்கே, 'பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோரின் நிலைமை மோசமாக இருக்கிறது; அவர்கள் முன்னேற வேண்டும். அதற்காக தான் இடஒதுக்கீடு', என்று கூறுபவர்கள் தயவு செய்து வடகிழக்கு மாநில மக்களின் நிலைமையையும் கருத்தில் கொள்ளட்டும். அனைவரும் அவரவருக்கு எது நல்லதோ அதற்கு மட்டுமே போராடுகிறார்கள். இவர்களுக்கு சலுகைகள் என்றால், அரசியல்வாதிகளுக்கு ஓட்டுகள்.

'வடகிழக்கு மாநில மக்களின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், அனைத்து அரசு வேலை வாய்ப்புகளும் இன்னும் பத்து வருடங்களுக்கு அஸ்ஸாம், மேகலாயா, அருணாச்சல் பிரதேசம், சிக்கிம், மிசோராம், நாகலாந்து மாநிலங்களைச் சார்ந்த மக்களுக்கு கொடுக்கப்படும். மேலும் கல்லூரிகளிலும் அவர்களுக்கு 55% இட ஒதுக்கீடு கொடுக்கப்படும். மற்ற மாநில மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் நல்ல வேலை வாய்ப்புகள் இருக்கும் காரணத்தினால் அவர்கள் அங்கு பணிபுரிந்து கொள்ளலாம்', என்று அரசு ஒரு ஆணையை வெளியிட்டால் இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

உங்களுக்கோ அல்லது உங்களது உறவினருக்கோ முக்கியமான அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியதிருக்கிறது. பல அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்த ஒரு மருத்துவர் இருக்கிறார். அவ்வளவாக பெயரெடுக்காத பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒரு நபர் மருத்துவரோ இருக்கிறார். யாரிடம் செல்வீர்கள்? அப்போதும் நீங்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினை சார்ந்த ஓர் மருத்துவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைத்து வேண்டி இரண்டாமவரையா தேர்ந்தெடுப்பீர்கள்? மருத்துவரின் ஜாதியைப் பார்ப்பீர்களா? அதைத் தெரிந்து கொண்டு தான் அறுவைச் சிகிச்சைக்கு ஒப்புக் கொள்வீர்களா? இப்படி கூறுவதால், பிற்படுத்தப்பட்டோர் / தாழ்த்தப்பட்ட பிரிவினைச் சார்ந்தவர்கள் அனைவரும் திறமை குறைந்தவர்கள் என நான் கூறுகிறேன் என எண்ண வேண்டாம். நான் கூறுவதெல்லாம், சலுகைகள் இருக்கட்டும், ஊக்கங்கள் தொடரட்டும். ஆனால் அவற்றை ஒரு இடத்தில் நிறுத்த தான் வேண்டும். இது போன்ற உயிர் காக்கும் விசயங்களில் கூட இடஒதுக்கீடு என்றால் அபத்தம் இல்லையா அது?

அய்யா.... இவருக்கு வசதி இல்லை என்றால், வசதியை ஏற்படுத்திக் கொடுங்கள். விவசாயிகளுக்கு மானியம் கொடுப்பது போல், மானியம் கொடுங்கள்; சைக்கிள் கொடுங்கள்; லவச வீடு கட்டிக் கொடுங்கள்; கல்வியை இவர்களுக்கு இலவசமாக்குங்கள்; இலவசப் பயிற்சி கொடுங்கள். இவ்விதமான எதிப்பும் இல்லை. ஆனால் இன்னொருவனை முன்னேற்றுகிறேன் என்று கூறி நன்றாகப் படிக்கும் ஒரு மாணவனின் உரிமையைப் பறிப்பது எவ்விதத்தில் நியாயம்? என்னுடைய நண்பர்கள் சிலர் மாவட்டத்திலேயே சிறந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தும், மருத்துவமோ, அல்லது பொறியியல் துறையில் புகழ்பெற்ற கல்லூரிகளிலோ சேர முடியாமல் போனதை அறிவேன். அத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டு படித்ததற்கு இது தான் விலையா?

இப்படி சலுகைகளாகக் கொடுத்துக் கொடுத்து அவர்களின் திறமையை நீங்கள் மட்டுப்படுத்துகிறீர்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது. அவர்களை சுதந்திரமாக விட்டிருந்தால், நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் மேலாக திறமையை வளர்த்து விசுவரூபமெடுத்திருப்பார்கள். ஆரம்பத்திலிருந்தே, அவர்கள் எப்போதும் சுகமாக அமர்ந்திருப்பதற்கு ஏதுவாக ஒரு எலெக்ட்ரானிக் சற்கர நாற்காலியைக் கொடுத்து, அவர்களை நொண்டியாக்கி விடாதீர்கள்.

சலுகைகளை (இடஒதுக்கீடு) எதிர்பார்த்து ஒரு முறை வாழப் பழகிவிட்டால், பின்னர் மனம் அதையே எதிர்பார்க்காதா? இப்படி இடஒதுக்கீட்டினை மட்டுமே (தன்னிடம் திறமை இருந்தும் அதனை உபயோகப்படுத்தாமல்) நம்பி வாழ்பவர்களுக்கும் இவர்களுக்கும் உடல் திறனிருந்தும் வேலை செய்யாமல் பிச்சையெடுக்கும் நபருக்கும் என்ன வித்தியாசம்? நாட்டில் சமத்தும் பரவ, ஏற்ற தாழ்வு மறைய இடஒதுக்கீடு அவசியம் என சிலர் ஆணித்தரமாகக் கூறுகிறார்கள். அனைத்து அதிகாரமும், சலுகைகளும், வாய்ப்புகளும் உங்களுக்கு மட்டுமே கிடைப்பது தான் சமத்துவம் என்றால், அதற்குப் பெயர் சமத்துவம் அல்ல. சமூகத்திற்கு அடிக்கும் சாவு மணி. (இதை தான் ஒரு சில பிரிவினர் அந்த காலத்தில் செய்து வந்தனர் என மீண்டும் ஆரம்பிக்காதீர்கள்)

இன்னும் சிலர் வாய்ப்பு கொடுத்தால் தான் திறமை வரும். வாய்ப்பு கொடுக்காமல் திறமை வளராது என்கிறார்கள். திறமையை வளர்ப்பதற்கு பயிற்சி தான் அத்தியாவசியம். பயிற்சியின் போது தூங்கி விட்டு, எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது. போரில் சண்டையிடுவதற்கு போதிய பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி காலத்தின் போது பயிற்சியில் கவனமெடுக்காமல் காலத்தை ஓட்டி விட்டு, எனக்கு வாய்ப்பு வேண்டும் என்று அழுது போரிடும் வாய்ப்பை பெறுவதனால் இறப்பது நீங்கள் மட்டுமல்ல; உங்களைச் சார்ந்திருக்கும் நாடு என்பதையும் நினைவில் கொள்தல் வேண்டும். இடஒதுக்கீட்டினை கல்வியில் புகுத்துவதே தவறு. அனைவருக்கும் கல்வி என்றே இருந்திருக்க வேண்டும். அது முடியாத பட்சத்தில் மேல்நிலைப்பள்ளி அளவிற்காவது அது இருக்க வேண்டும். (அப்படித்தான் இருக்கிறது என்றே கருதுகிறேன்.) நல்ல ஆசிரியர்கள் அமைந்தால், ஒருவனின் திறமையை வளர்க்க 12 ஆண்டுகள் போதாதா? உடனே, 'கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் மேல்சாதியினருக்கு ஒரு மாதிரியும், கீழ் சாதியினருக்கு ஒரு மாதிரியும் சொல்லிக் கொடுப்பார்கள்', என்று அபத்தமாகக் குற்றம் சாட்டாதீர்கள். அப்படியானால் என்னைப் போன்றோர்கள் யாருமே படித்திருக்க முடியாது.

இடஒதுக்கீடு அமுல் செய்த பிறகு, ஒரு பிற்படுத்தப்பட்டவரோ / தாழ்த்தப்பட்டவரோ தனது திறமையினால் (இடஒதுக்கீடு அவருக்கு தேவையில்லாத பட்சத்திலும்) சிறிது சிறிது முன்னேறி நல்ல பதவியை அடைந்தாலும் நாளைக்கு சமுதாயம் என்னுடைய திறமையை எந்த அளவிற்கு மதிக்கும்? 'ஆமாம் இவன் இடஒதுக்கீடினால் வந்தவன் தானே', என்று தானே கூறுவார்கள்? எனது சந்ததியினர் சலுகை கிடைக்காமல் நாளைக்கு கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. அவர்கள் தங்களது திறமையினால் முன்னுக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இடஒதுக்கீடு என்ற ஊன்றுகோல் எனக்கும் / அவர்களுக்கு தேவையில்லை. அவர்களுக்கு தேவையானது எல்லாம் நடப்பதற்கு பயிற்சி மட்டுமே. அதனை என்னால் தரமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்கு அந்த நம்பிக்கை இருந்தால், அந்த ஊன்றுகோலைத் தூக்கி எறியுங்கள். முயற்சியுங்கள். விழுங்கள்; எழுந்திருங்கள். எவரின் துணையில்லாமல் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.
உலகம் உங்கள் வசமாகும்!

விமானத்தில் பறப்பவர்கள், அலுமினிய கூண்டுக்குள் அடைபட்டு கீழே மேகங்களை மட்டுமே பார்க்க முடியும். அதில் பறக்கும் போது சுதந்திர உணர்வையும், நிம்மதியையும் விட எப்போது விமானம் விழுந்து விழும் என்ற அச்சம் மட்டுமே மனதில் குடியிருக்கும். ஆனால் தனது சிறகை விரித்துப் பறக்கும் பறவைக்கு அது போன்ற எந்த கவலையும் இருக்காது. அவற்றினால் நிற்காமல், உணவு உண்ணாமல் கண்டம் விட்டு கண்டம் கூட பறந்து செல்ல முடியும். விமானம் என்ற ஊன்றுகோலை விடுத்து, திறமையினால் பறக்க முயலுங்கள். உங்களால் உயரப் பறக்க முடியும்.

ஒருவனுக்கு 'அவன் கருப்பினத்தைச் சார்ந்தவன்' என்ற காரணம் காட்டி சலுகை கொடுப்பதற்கும், அவன் 'கருப்பினத்தைச் சார்ந்தவன்' என்ற காரணத்தினால் இது வரை உரிமை மறுக்கப்பட்டதற்கும் அதிக வித்தியாசமில்லை. உடனே, 'அவர்கள் செய்தார்கள். இப்போது நாங்கள் செய்கிறோம்', என்று கூற ஆரம்பித்து விடாதீர்கள். உங்களுக்கென்று தனிப்பட்ட வரலாறும் கிடையாது; இனிமேலும் இருக்கப் போவதுமில்லை. அதையும் மீறி வரலாற்றில் நிலைத்தவர்கள் எல்லாம். அவர்களின் நிறம், மொழி, ஜாதி, நாடு என்ற சலுகையினால் நின்றதில்லை. 30 ஆண்டுகள் புகழ் என்பதும் ஒரு புகழே அல்ல. ஏன் 2000 ஆண்டுகள் கூட மனித சமுதாயத்தின் வயதினை ஒப்பிடும் போது, இந்த பூமியின் வயதை ஒப்பிடும் போதோ வெறும் தூசு மட்டுமே. இந்த 2000 ஆண்டுகளில் ஓரளவு பெயர் தெரிந்தவர்களே சிலரே (அலெக்ஸாண்டராக இருக்கட்டும்; திருவள்ளுவராக இருக்கட்டும்) மிஞ்சி மிஞ்சி போனால் 10 பெயர்களைச் சொல்வதே மிகக் கடினம். அவர்கள் யாரும் சலுகையினால் ஞாபகம் வைத்துக் கொள்ளப்படுபவர்கள் அல்ல. அசாத்திய திறமையினால் மட்டுமே என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இங்கே திருவள்ளுவர் என்ன ஜாதி என்று கூட ஆராயப்படுவது ஜாதி என்ற கொடூர அமைப்பின் இறுதி கட்ட சீர்கேடு.

சமுதாயம் ஒன்றுபட வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் ஏதாவது ஓர் மகாத்மா ஒரு படியெடுத்து வைக்க முயலும் போதெல்லாம், அதில் பலத்த பின்னடைவு ஏற்பட்டு பல படிகட்டுகள் சறுக்கல் தான் ஏற்படுகின்றன. நாட்டை கோடிக்கணக்கான துண்டாக்காமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது. ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று இங்கிருப்பவர்களை, வெளி மாநிலத்திற்கு கொண்டு சென்று விட்டால் கூட, அங்கேயேயும் நாமெல்லாம் இந்தப் பிரிவின் கீழ் வருபவர்கள், அந்தப் பிரிவின் கீழ் வருபவர்கள், அவர்கள் நமக்கு நண்பர்கள், இவர்கள் நமக்கு எதிரிகள் என்று மொழி தெரியாதவனைக் கூட கூட்டிக் கொண்டு கூட்டம் சேர்க்கும் கூட்டமய்யா இது!

இது இங்கேயே நின்று விடுமா அல்லது ஹோட்டல்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், சினிமா எனத் தொடருமா?

அந்தப் பாடகி பிராமண வகுப்பைச் சார்ந்தவள், இனிமேல் அவள் 100 பாடல்களில் 5 பாடல்கள் மட்டுமே பாட வேண்டும், மீதமுள்ள பாடல்கள் மற்ற பிரிவைச் சார்ந்த பாடகிக்குக் கொடுக்க வேண்டும் என்று கூறுவார்களா? யுவன்சங்கர் ராஜா ஒரு பிரிவைச் சார்ந்தவர். அவர் மட்டும் அதிகமான படங்களுக்கு இசையமைக்கிறார். ஆதலால் இனி அவருக்கு வரும் வாய்ப்புகள் இமானுக்கும், விஜய் ஆண்டனிக்கும் கொடுக்க வேண்டுமா? ரஹ்மானும் அதே போல அவரது படங்களை மற்ற பிரிவினருக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டுமா? அங்கே மட்டும் உங்களது விருப்பமும், கலைஞரின் திறமையைப் பார்க்கும் நீங்கள், ஏன் தனியார் துறைகளிலும், அரசுத் துறைகளிலும் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு பார்க்க கூடாது?

இடஒதுக்கீடு வைத்தா இளையராஜாவும், வைரமுத்துவும், ரஜினிகாந்தும், கமல்ஹாசனும், யுவன்சங்கர் ராஜாவும், ஹாரிஸ் ஜெயராஜூம், விக்ரமும், விஜயும், ரஹ்மானும் திரையுலகில் சாதனை புரிந்து வருகிறார்கள். அவரவரின் திறமையினால் இங்கே அங்கீகாரம் பெற்று, நிலைத்து வருகிறார்கள். இங்கு சாத்தியாமானது, மற்ற இடங்களில் சாத்தியமில்லாமல் போய் விடுமா? இது வரை நன்றாகத்தானிருக்கிறது. இதனை கெடுத்து விடுவது ஆரம்பித்து வைக்கும் அரசியல் வாதிகள் கையிலும், அதனை உடும்பு போலப் பிடித்துத் தொங்கும் உங்களைப் போன்ற படித்தவர்கள் கையிலும் தான் உள்ளது.

சிலர், 'இட ஒதுக்கீட்டு முறை ஏன் தனியார் நிறுவனங்களுக்கு வரக்கூடாது? அங்கு தானே உயர்ஜாதியினர் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். இப்படி செய்தால் தான் அவர்களுக்கு அடி விழும்', என்கின்றனர். இப்படி கூறுவதால், இடஒதுக்கீடு என்ற கருவி இல்லாமல் அவர்களை விஞ்சி நீங்கள் உயரமுடியாது என்பதனை ஒப்புக் கொள்வது போலிருக்கிறது. மேலும் உங்களின் நோக்கம் என்ன? சமுதாயத்தில் கீழே இருப்பவர்கள் மேலே வர வேண்டும் என்பதா? அல்லது உயர்ஜாதியினர் ஒழிய வேண்டும் என்பதா? உங்களின் நோக்கத்தில் தான் குறை இருப்பதாக உணர முடிகிறது. உங்களுடைய முயற்சி கஷ்டப்படும் மற்றவர்களை முன்னேற்ற வேண்டும் என்பதில் இருப்பதாக தோன்றவில்லை; அவன் நன்றாக இருக்கிறானே. இப்படி செய்வதனால் தான், அவன் அழ முடியும். ஆதலால் இதைச் செய்தே முடிக்க வேண்டும் என்ற ஆத்திரம் இருப்பதையும் பார்க்க முடிகிறது. இணைந்து செயலாற்றி சிகரங்களைத் தொடுவதற்குப் பதில், அழிந்தாலும் பரவாயில்லை; தனித்தாற்ற வேண்டும் என்று நினைப்பதில் எவ்வளவு தூரம் நியாயம் இருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். எப்போது இது போன்ற பிரிவுகளைத் தாண்டி இணைந்து பணியாற்றப் போகிறோம்?

என்னைத் திட்டி பின்னூட்டம் இடுவதற்கு முன் எனது கருத்தையும் கொஞ்சமாவது சிந்தித்து பாருங்கள் என வேண்டுகிறேன். தமிழ் வலைப்பதிவார்களுக்குள் இரண்டு பிரிவுகள் ஏற்பட்டு விட்டதால், இதைப் பற்றி எழுதுவதற்குத் தயக்கம் இருந்தது. இந்தத் தலைப்பில் எழுத வேண்டாம் என்று தான் நேற்று வரை நினைத்திருந்தேன். இந்தப் பதிவினைப் பற்றிய மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்கவும். ஆக்கபூர்வமான விவாதத்திற்குத் தயார். ஜாதி என்னும் முகத்திரையை கிழித்து விட்டு, உங்களின் உண்மையான முகத்துடனும், மனத்துடனும் இந்த உலகில் உலா வாருங்கள். உலகம் ஒன்றும் மோசமில்லை. "கீழே இருப்பவர்களை உயர்த்துவதற்கு வழி, மேலே இருப்பவனை கீழிறக்குவதில் இல்லை", என்ற கூற்றை மறுபடியும் கூறி இந்தப் பதிவை முடிக்கிறேன். என்னுடைய வார்த்தை உபயோகத்தினால் யாருடைய மணமும் புண்படும் படியாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்.

வாழுங்கள்! ஆனால் மற்றவர்களையும் வாழ விடுங்கள்!.

இந்தப் பதிவிற்கு சிறிது தொடர்புடைய இன்னொரு பதிவு: கெட்ட புத்தியும் பச்சரிசி சாப்பாடும்

80 கருத்துகள் :

Voice on Wings சொன்னது…

இது பற்றி இந்தச் சுட்டியில் சில உருப்படியான கட்டுரைகள் உள்ளன. பிரச்சனையை பல்வேறு கோணங்களிலிருந்து பார்ப்பது பயனளிக்கும் என்பது எனது கருத்து.

பெயரில்லா சொன்னது…

Friend,

//உங்களுக்கோ அல்லது உங்களது உறவினருக்கோ முக்கியமான அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியதிருக்கிறது. பல அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்த ஒரு மருத்துவர் இருக்கிறார். அவ்வளவாக பெயரெடுக்காத பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒரு நபர் மருத்துவரோ இருக்கிறார். யாரிடம் செல்வீர்கள்? //

Can you further explain the lines??. Are you trying to say that the expert belongs to a forward community??. This is not a good example.

If you are sick - you go to a hospital. Do you check the caste of the doctor & go to him??. You just go to the doctor who is a specialist (irrespective of his/her caste). But you are trying to say that the specialists are ... & backward doctor is not a specialist.

I would suggest you to change the lines.

பெயரில்லா சொன்னது…

Friend,

//இலவசப் பயிற்சி கொடுங்கள். இவ்விதமான எதிப்பும் இல்லை. ஆனால் இன்னொருவனை முன்னேற்றுகிறேன் என்று கூறி நன்றாகப் படிக்கும் ஒரு மாணவனின் உரிமையைப் பறிப்பது எவ்விதத்தில் நியாயம்? என்னுடைய நண்பர்கள் சிலர் மாவட்டத்திலேயே சிறந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தும், மருத்துவமோ, அல்லது பொறியியல் துறையில் புகழ்பெற்ற கல்லூரிகளிலோ சேர முடியாமல் போனதை அறிவேன். அத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டு படித்ததற்கு இது தான் விலையா?//

So what if one or two is affected.?? On the other side so many backward/schedule caste students (most of them may be the first time professional colleague students in their family) will get a chance. This will surely enhance their community as well as themselves.

According to you, your friends scored high marks (you are trying to say that they are very bright students). So why they want to choose the best institutions?? Why cant they study in another college??. There are tons of openings in TamilNadu. More than 15000 engineering seats are vacant this year.

வானம்பாடி சொன்னது…

இந்தப் பதிவின் கருத்துக்களோடு முழுமையாக ஒத்துப் போகிறேன். அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.

ஸ்ருசல் சொன்னது…

அனானி (01:01:09) க்கு,

எல்லா வரிகளையும் இதே போல் அர்த்தம் செய்வது சரியாக இருக்காது. பெரிய நகரங்களில் தான், யார் யார் என்னவென்றே தெரியாது. இது நல்லது தான்.

ஆனால் சாதாரண நகர, கிராமப் புறங்களில் ஒவ்வொரு மருத்துவரும் என்ன ஜாதியைச் சார்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயமாக இருக்கும். அப்படியாக இருக்கும் பட்சத்தில் உங்களின் நிலை என்னவாக இருக்கும்.

நான், அனைத்து மருத்துவர்களும் முற்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்று சொல்வதாக அர்த்தம் கொள்ள வேண்டாம். நீங்கள் பார்க்கும் இருவரில் (அந்த இருவரில் மட்டும்), இது போன்ற நிலை ஏற்படின் உங்களின் முடிவு என்னவாக இருக்கும் என்பதே.

ஆம். உண்மை தான். யாருமே ஜாதி, மதம் பார்த்து மருத்துவரிடம் செல்வது கிடையாது. அங்கு நமக்கு ஆரோக்கியம் தான் முக்கியம். உடல் ஆரோக்கியம் என்று வரும் போது மட்டும் ஜாதி பார்க்காத மனது, மற்றவற்றிற்கு மட்டும் ஜாதி பார்க்கச் சொல்கிறதே.

அதே போல் சமூக ஆரோக்கியத்திற்கும், ஜாதி, மதம் பார்க்காமல் வாழ்வதே நலம் பயக்கும்.

பெயரில்லா சொன்னது…

//அதே போல் சமூக ஆரோக்கியத்திற்கும், ஜாதி, மதம் பார்க்காமல் வாழ்வதே நலம் பயக்கும்.//


எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? நம்ப பொழப்பு நடந்தால் சரி என்று இருக்கலாம் என்கிறீர்கள்.நல்லது.அரிய கருத்து.உங்களுக்கு பல பாராட்டுக்கள் குவியும்.

ஸ்ருசல் சொன்னது…

அனானி (01:12:24) க்கு,

<<<<<<<<
According to you, your friends scored high marks (you are trying to say that they are very bright students). So why they want to choose the best institutions
>>>>>>>>

படிப்பது எதற்காக? புகழ்பெற்ற/ விருப்பமானத் துறையில் சென்று மேற்படிப்பு படிப்பதற்காகவோ / பணியாற்றுவதற்காகவோ.

ஏன் அனைவரும் ஐஐடி / அண்ணா யுனிவர்சிட்டியில் படிப்பதற்கு போட்டியிடுகிறார்கள்? நல்ல நிறுவனங்களில் படிப்பதற்கு தான்.

யாருக்கு தான் வகுப்பில் / வாழ்க்கையில் கடைசியாக வர ஆசை இருக்கும்? முதலாவதாக வருவதற்கு தானே ஆசையும், ஆர்வமும் இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் நல்ல நிறுவனங்கள் இருக்கும் போது, அதில் படிப்பதற்கு அனைத்துத் தகுதியும், திறமையும் இருந்தும், அதில் படிப்பதற்கு ஆசைப்படக்கூடாது என்று சொல்வதில் எவ்விதத்தில் நியாயம்.

உண்மை தான். அவர்கள் வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தான் படித்தார்கள். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் என்ன துறை? மருத்துவம் ஆசைப்பட்ட இடத்தில் பொறியியல் தானே கிடைக்கிறது. கணினி முயற்சித்தால், மெக்கானிக்கல் தானே கிடைக்கிறது.

ஒரு வேளை மருத்துவர் ஆக வேண்டும் என்பது உண்மையான விருப்பமாகக் அதுவாகவே இருந்திருக்கலாம். அது கிடைத்திருந்தால் பல சாதனைகள் நிகழ்த்தியிருக்கலாம்.

இது ஒரு முற்பட்ட சமூகத்தினருக்கு மட்டும் நடக்கப் போவது என்று கூறுவது சரியாக இருக்காது. அனைவருக்கும் பொருந்தி வரும்.

ஸ்ருசல் சொன்னது…

<<<<<<<
எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? நம்ப பொழப்பு நடந்தால் சரி என்று இருக்கலாம் என்கிறீர்கள்.நல்லது.அரிய கருத்து.உங்களுக்கு பல பாராட்டுக்கள் குவியும்.
>>>>>>>>>

மன்னிக்கவும். இதில் எனக்கு லாபமும், பிழைப்பும் எங்கிருந்து வந்தது?


சரி இது போன்ற சலுகைகள் பெற்றவர்கள் எத்தனை பேர் தங்களது சமூக வளர்ச்சிக்காக பாடு பட்டு வருகிறார்கள்?. (சலுகைகளுக்காக போராடுகிறார்கள் என்று கூறாதீர்கள்).

அவரவர், தனக்கு வாய்ப்புகளும், வசதிகளும் கிடைத்ததும் தனது வழியை பார்த்துச் செல்வதைக் கண்டதில்லையா? (இப்போது நான் இருப்பதை போல)

சாதி பார்க்காமல் வாழ்ந்தால் நன்றாக இருக்கமுடியும் நான் கூறியதை நீங்கள் மறுக்கிறீர்கள? எப்படி?

>>>> உங்களுக்கு பல பாராட்டுக்கள் குவியும். <<<

என்னங்க பாராட்டுன்னு சொல்லி அசிங்கப்படுத்திறீங்க...

பெயரில்லா சொன்னது…

// இது ஒரு முற்பட்ட சமூகத்தினருக்கு மட்டும் நடக்கப் போவது என்று கூறுவது சரியாக இருக்காது. அனைவருக்கும் பொருந்தி வரும். //

So it will happen to anyone. lakhs of students study +2. All the people who pass +2 and want to become a doctor cannot become one (due to the limited seats available).

So what are you going to say to those students. All the 12 years of education is a waste??

Everyone knows about reservations in Tamilnadu. They all know the number of seats too. So I think all of them are very well prepared. It wont be a big shock as you say. You may ask whether it is justice??.

To some it may not - but to many it is.

பெயரில்லா சொன்னது…

//நான், அனைத்து மருத்துவர்களும் முற்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்று சொல்வதாக அர்த்தம் கொள்ள வேண்டாம். நீங்கள் பார்க்கும் இருவரில் (அந்த இருவரில் மட்டும்), இது போன்ற நிலை ஏற்படின் உங்களின் முடிவு என்னவாக இருக்கும் என்பதே.//

Why cant you think of a situation where the specialist is an BC/ST who studied through reservation & the other அவ்வளவாக பெயரெடுக்காத doctor from the forward caste???

Will you choose the forward caste, because he got the seat through Thaguthi / thiramai or will you go to the doctor who studied thru reservation???

ஸ்ருசல் சொன்னது…

>>Everyone knows about reservations in Tamilnadu. They all know the number of seats too. So I think all of them are very well prepared. It wont be a big shock as you say.<<<

நாளைக்கே முற்பட்ட / பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு மருத்துத் துறையில் இடம் கிடையாது என்று ஒரு சட்டம் வந்த பிறகும்,
"அவர்கள் மருத்துவர்கள் ஆக முடியாது என்பதை நன்கு அறிவர். ஆதலால் அவர்கள் இதற்கு ஆசைப்படக்கூடாது", என்று கூறுவது சரியாகுமா?

திறமையின் அடிப்படையில் போட்டியிட்டோம்; கிடைக்கவில்லை என்று ஆறுதலாவது அடைந்து கொள்வார்கள். ஆனால் எதைச் சொல்லி ஆறுதலைடைவது?

சினிமாவில் வருவது போல

"நீ வசதியான வீட்டுல பிறக்காம போய்டியே", என்று அம்மா மகளிடம் புலம்புவது போல,

அவர்களின் தாய் தந்தையர்;

என்ன செய்வது "நீ ஒரு தாழ்த்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட / பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறக்காமல் போய் விட்டாயே! என்ன செய்வது", என்று புலம்பச் சொல்வது என்றாக இருக்குமா?

ஏன் இடஒதுக்கீடு இல்லா விட்டால், இவர்களுக்கு உரிமைகள் கிடைக்காது என்று பயப்பட வேண்டும்? முயற்சித்தால் தாராளமாக முற்பட்ட / பிற்படுத்தப்பட்ட நபர்களை திறமையினால் வெல்ல முடியும்.

அவர்களுக்கு தேவையானது எல்லாம், அவர்களின் ஆரம்ப காலங்களை நன்கு திட்டமிட்டு அமைப்பது மட்டுமே.

இலவசக் கல்வி, காமராஜர் கொண்டு வந்தது போல சத்துண்வு , போன்ற நல்ல திட்டங்கள்.

அடித்தளம் நன்கு அமைந்தால், கண்டிப்பாக போட்டியிட முடியும்.

அதை விட்டு விட்டு, பணத்தை கலர் டி.விக்களுக்கும், இலவச அரிசிகளுக்கும் கொடுக்கின்றார்கள். அதை கேட்பதற்கு யாரும் இல்லை. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை வெறும் பொழுது போக்கிற்காக செலவழிக்க தயாராக இருக்கிறார்கள். அதனை இது போன்ற திட்டங்களுக்குச் செலவிடுவதில் முனைப்பில்லை. இது போன்ற விரயங்களை எதிர்த்து கேட்பதற்கும் எந்த சாதித் தலைவருக்கும் துணிவில்லை. ஏனென்றால் அனைவரும் ஏதாவது ஒரு அணியில் ஐக்கியம். மன்னிக்கவும் தடம் மாறி இதனை எழுதுவதற்கு.

ஆதலால் இடஒதுக்கீடு கிடைத்தால் தான் அவர்களால் முழுமையாக செயல்பட முடியும் என்று முயல்வது நன்மை பயக்கும் விசயமாக இருக்கலாம்; ஆனால் அது அத்தியாவாசியமானதல்ல.

அருண்மொழி சொன்னது…

//நாளைக்கே முற்பட்ட / பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு மருத்துத் துறையில் இடம் கிடையாது என்று ஒரு சட்டம் வந்த பிறகும்,
"அவர்கள் மருத்துவர்கள் ஆக முடியாது என்பதை நன்கு அறிவர். ஆதலால் அவர்கள் இதற்கு ஆசைப்படக்கூடாது", என்று கூறுவது சரியாகுமா//

நாளை பற்றி தெரியாது. ஆனால் நேற்று பற்றி தெரியும். பல வருடங்களுக்கு முன்பு Sanskrit படித்தால்தான் மருத்துவர்கள் ஆக முடியும் என்று இருந்தது.

பெயரில்லா சொன்னது…

நாளை பற்றி தெரியாது. ஆனால் நேற்று பற்றி தெரியும். பல வருடங்களுக்கு முன்பு Sanskrit படித்தால்தான் மருத்துவர்கள் ஆக முடியும் என்று இருந்தது.

If so how did siddha medicine
evolve.Unnani system is not
based on sanskrit.

Muthu சொன்னது…

ஸ்ருசல்,

நீங்கள் கல்வி மற்றும் அரசாங்க வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறீர்களா இல்லையா?

தனியார் நிறுவனங்களில் இதை நடைமுறைப்படுத்துவது கடினம்.அதற்கு எதிராக காரணங்கள் உள்ளன.

ஸ்ருசல் சொன்னது…

......நாளை பற்றி தெரியாது. ஆனால் நேற்று பற்றி தெரியும். பல வருடங்களுக்கு முன்பு Sanskrit படித்தால்தான் மருத்துவர்கள் ஆக முடியும் என்று இருந்தது........

நீங்கள் எதைப் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள் எனத் தெரியவில்லை. ஒரு வேளை பிராமணர்களின் ஆதிக்கம் பற்றி தான் என்றால், அதைப் பற்றி விவாதிக்க இது சரியான இடமாக அமையும் எனத் தெரியவில்லை.

படிக்க: கெட்ட புத்தியும் பச்சரிசி சாப்பாடும்

ஸ்ருசல் சொன்னது…

முத்து,

....நீங்கள் கல்வி மற்றும் அரசாங்க வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறீர்களா இல்லையா?....

இன்னும் எத்தனை வருடங்களுக்கு இது போன்ற இடஒதுக்கீடு அமுலில் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? எது தான் முடிவு என்று நீங்கள் சொல்லுவீர்கள்?

அனைவரும் சம உரிமை பெற்ற பிறகு என்றால், யார் அதனை முடிவு செய்வது?

சம உரிமை பெறுவதற்கு இடஒதுக்கீடு தான் ஒரே வழியா? வேறு எதைப் பற்றியும் சிந்திக்க முடியாதா?

இடஒதுக்கீட்டினை வேறு எந்த துறையில் செயல்படுத்தினாலும் நீங்கள் ஆதரிப்பீர்களா? எப்போது அதனை எதிர்க்க ஆரம்பிப்பீர்கள்?

Muthu சொன்னது…

இப்போது தான் விஷயத்திற்கு வந்துள்ளீர்கள்.

ஆக எல்லாவித இடஒதுக்கீட்டையும் நீங்கள் எதிர்க்கிறீர்கள்.இல்லையா?

தனியார் நடத்தும் தொழில் ஆகியவற்றில் அவர்களை வலியுறுத்துவது தவறு என்று எனக்கு தோன்றுகிறது.ஆனால் அவர்களாக சமுதாயத்திற்கு பாஸிடிவ் பங்களிப்பாக இதை செய்யலாம் இப்போதைக்கு.

அரசுத்துறையில் இது கண்டிப்பாக செய்யவேண்டியதுதான்.ஏனென்றால் ஒரு அரசாங்கம் தங்கள் மக்களுக்கு உதவ வேண்டி உள்ளது.

டைம் லிமிட் எல்லாம் நீங்கள் கொடுக்கமுடியாது.நீங்கள் இதை பிச்சை போடுவது போல இதை நினைப்பது தவறு.இது உரிமை.

என்னை பொறுத்தவரை அதிகபட்சம் மூன்று தலைமுறையும் குறைந்தது இரண்டு தலைமுறையும் இது கொடுக்கப்படவேண்டும்.கல்வியை பார்த்தறியாத மக்களுக்கு இது தேவை.

Muthu சொன்னது…

ஒரு தலைமுறை 33 வருடம்.

இதில் வசதி படைத்தவர் , படைக்காதவர் என்றெல்லாம் சரியாக கண்டுபிடிப்பது அரசாங்கத்தின் வேலை.அதற்காக மேலோட்டமாக இடஒது்க்கீட்டில் வருபவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்பது போல் சொல்லுவது தவறு.

ஸ்ருசல் சொன்னது…

முத்து,

நீங்கள் நினைத்தது போல் தான் அந்த காலத்து பெரியவர்களான (அம்பேத்கர் உட்பட) நினைத்தார்கள். இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு போதுமானது என்று. இப்போது எடுத்து விடச் சொன்னால் நீங்கள் கூட ஒப்புக் கொள்ள மாட்டீர்கள் இல்லையா?

அப்படி இருக்கும் பட்சத்தில், இன்னும் இரண்டு, மூன்று தலைமுறைகள் கழித்து வாழும் மக்கள் அப்போது ஒப்புக்கொள்வீர்கள் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள். அந்த அளவிற்கு மோசமாகச் செல்லாது என்ற நம்பிக்கை எனக்கு இருக்காது. இருந்தாலும்.....

அனைவருமே தாங்கள் இருக்கும் வரை இருந்தால் போதும் என்று நினைப்பதாகவே எனக்குப் படுகிறது.

இருக்கும் மரங்கள், நீர் ஆதாரங்கள், இயற்கை வளங்கள் அனைத்துமே. இப்போதைக்கு எந்த ஆபத்தும் இல்லா விடில் சிக்கல் இல்லை என்று தான் நினைக்கிறார்கள். உடனடி தீர்வு எது என்பது தான் நோக்கமாக இருக்கிறது.

எது சரியான, பாரபட்சமற்ற நல்ல முடிவு எது என்று பார்க்க வேண்டும் என்பது என் கருத்து.

கல்லூரிகள் இடஒதுக்கீட்டினைக் கொடுத்து விட்டு, வறுமையில் வாடுபவர்கள் பள்ளிக்கு கூட செல்லமுடியாமல் போய்விட்டால் உங்கள் இடஒதுக்கீடு இருந்து என்ன பயன்?

ஆதலால் ரூட் காஸ் என்னவென்று பார்க்க வேண்டும். அதனை வேரறுக்க வேண்டும் என்பதே எனது கருத்து.

Muthu சொன்னது…

சமஉரிமை பெற வேறு வழியை சொல்லுங்களேன்.

ஐ.ஐ.டியில் சீட் கிடைக்காத புத்திசாலி மேல்சாதியினர் பேங்கில் பியூனாக வேலைக்கு சேர்கிறார்களா?

இல்லையல்லவா.கொஞ்சம் விட்டுகொடுத்துதானாக வேண்டும்.ஏனென்றால் இங்கு மக்கள் தொகை அதிகம்.பாதிக்கபட்ட ஆட்களும் அதிகம்.

பெயரில்லா சொன்னது…

//சம உரிமை பெறுவதற்கு இடஒதுக்கீடு தான் ஒரே வழியா? வேறு எதைப் பற்றியும் சிந்திக்க முடியாதா?//

So what solution do you have? can you put down your thoughts??

பெயரில்லா சொன்னது…

///ஐ.ஐ.டியில் சீட் கிடைக்காத புத்திசாலி மேல்சாதியினர் பேங்கில் பியூனாக வேலைக்கு சேர்கிறார்களா?///

ஐ.ஐ.டியில் சீட் கிடைக்காத புத்திசாலியை பேங்கில் *ப்யூனாக* எடுத்துக்கொள்வார்களா ஆபீசர் சார்?

Muthu சொன்னது…

//ஐ.ஐ.டியில் சீட் கிடைக்காத புத்திசாலியை பேங்கில் *ப்யூனாக* எடுத்துக்கொள்வார்களா ஆபீசர் சார்? //

அனுப்புங்க பார்க்கலாம்.

தான் அறிவாளி என்ற ஆணவம் இருக்கக்கூடாது.கஸ்டமர் சர்வீஸ் முக்கியம்.நான் ரெகமெண்ட் பண்றேன்.:))

Muthu சொன்னது…

இன்னிக்கு என் பிள்ளைகளுக்கு மண்டல் கமிஷன் பரிந்துரை செல்லாது.நான் வீதியில் வந்து கத்துகிறேனா ஸ்ருசல்?

பெயரில்லா சொன்னது…

Where is the question of equality when reservation is 69% in tamil nadu. They want it to be increased again to appease minorities by giving them 5% reservation.So they want 74% reservation. Will OBCs accept 5% reservation for muslims
within the 50% reservation.
Will Muthu and other defenders of reservation accept reservations for muslims within the 27% quota they are enjoying now.
They wont as it affects them.Can Ramadoss convince vanniyars about
the merits of reservation for muslims and ask them to give up 5%
for muslims.He cant.In AP the OBCs went to court and got the reservation for muslims quashed.
Watch out for more fun on this in tamil nadu once the elections are over.

சாணக்கியன் சொன்னது…

நல்ல பதிவுதான். என்ன செய்வது, பலரும் சொல்லிவிட்ட சொல்ல நினைக்கும் விசயம்தான். ஆனாலும், செவிடன் காதில் ஊதிய சங்காகிவிட்டதால் பலரும் விவாதத்தில் பங்குபெறக்கூட முடியாமல் சோர்ந்துவிட்டனர். சோர்வடையாதவர்கள் அவ்வப்போது சொல்லிக்கொண்டு இருக்கத்தான் வேண்டும்.

ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகச்சொல்வேன். தனியார் நிறுவனங்கலில் இட ஒதுக்கீடானால், மைக்ரோ சாஃப்ட், சன், ஐ.பி.எம். போன்ற நூற்றுக் கணக்கான பன்னாட்டு நிறுவனங்கள் மூட்டை கட்டிக்கொண்டு போய்விடும். புதிய உலக நிறுவனங்கள் ஒன்றும் இந்தியாவுக்கு வராது.ஃபோர்டு, ஹுன்டாய் எல்லாம் சென்னையில் இருக்காது. பரவாயில்லையா எனக்கேட்டுச் சொல்லுங்கள். இதற்கும், 'எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை அவர்களுக்கு இரண்டு கண்ணும் போகவேண்டும்' என்ற ரீதியில் ஏதாவது சொல்வார்கள். ஆர்வமாகக் காத்திருக்கலாம்.

பிரதமர் இன்னொன்றயும் சிந்திக்கல்லாம். இந்தியாவுக்காக விளையாட்டுகளில் கலந்துகொள்பவர்களையும் இட ஒதுக்கீடு முறையில் தேர்ந்தெடுக்கலாம்.

ஸ்ருசல் சொன்னது…

"இன்னிக்கு என் பிள்ளைகளுக்கு மண்டல் கமிஷன் பரிந்துரை செல்லாது.நான் வீதியில் வந்து கத்துகிறேனா ஸ்ருசல்?"

முத்து ஒன்றும் சொல்லவில்லையே, செய்யவில்லையே என்று உங்கள் / உங்கள் சமூகத்தினர் மீது மேலும் மேலும் நெருக்கடிகளைக் கொடுத்தால் எப்படி இருக்கும் உங்களுக்கு?

அது தான் இங்கு நடக்கிறது.

ஸ்ருசல் சொன்னது…

சாணக்கியன்,

>>மைக்ரோ சாஃப்ட், சன், ஐ.பி.எம். போன்ற நூற்றுக் கணக்கான பன்னாட்டு நிறுவனங்கள் மூட்டை கட்டிக்கொண்டு போய்விடும்.<<<<

இது அவர்களுக்கு மட்டுமே உண்டான பிரச்சினை அல்ல. இது நமது நாட்டின் பிரச்சினையும் கூட.

சிலர் கூறுவது போல், பாதிப்படைவது சிலர் தான், ஆதலால் அவர்கள் பொறுத்துத் தான் போகவேண்டும் என்று கூறுவதையும் ஏற்க முடியவில்லை.

பாதிப்படைவது சிலர் என்றாலுமே கூட அதன் வலி ஒன்று தானே. 'தக்கன தப்பிப்பிழைத்தல்', என்று கூறுவது சரியாக வரியாது. அப்படிப் பார்த்தால் மனிதன் செய்யும் ஒவ்வொரு தவறையும் நியாயப்படுத்தலாம். 'என்னால் முடிகிறது. முடிந்தால் நீயும் செய்', என்று கூறுவது எவ்விதத்தில் நியாயம்?

Muthu சொன்னது…

i made my point..பெருந்தலைகள் வந்து அரிய கருத்துக்களை கூற ஆரம்பித்துவிட்டதால நான் ஜகா வாங்குகிறேன்.நன்றி

கால்கரி சிவா சொன்னது…

ஸ்ருசல்,

நல்லதொரு பதிவு. இந்த பிரித்தாளும் முறை காங்கிரஸ் என்ற அரசியல் காண்ஸரின் சதி. அடுத்தமுறை அறுதி பெரும்பான்மைப் பெற்றுவிட்டால் பகுத்தறிவு பகலவன்களின் தயவு தேவையில்லேயே. அவர்களையும் ஆளாதிக்கம் செய்யாலாமே என்ற எண்ணம்தான்.

பசித்தவனுக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடுங்கள், மற்றவரின் மீனை பிடுங்கி தராதீர்கள்.

போன வார அவுட்லூக் இந்தியா வார இதழில் அருமையானக் கட்டுரை இருந்தது. அதில் ஒருவர் நான் இடஒடுக்கீட்டை அனுபவித்து முன்னேறிவிட்டேன். ஆகையால் என் மகன் முன்னேறிய குலத்தை சேர்ந்த்துவிட்டான். அவனுக்கு இடஒடுக்கீடு தேவையில்லை என்று பேட்டி அளித்துள்ளார். அது சரியான வழிமுறை. எத்தனைப் பேர் அதற்கு தயாராக இருக்கிறார்கள்.

ஸ்ருசல் சொன்னது…

"i made my point..பெருந்தலைகள் வந்து அரிய கருத்துக்களை கூற ஆரம்பித்துவிட்டதால நான் ஜகா வாங்குகிறேன்.நன்றி"


????????

சாணக்கியன் சொன்னது…

"i made my point..பெருந்தலைகள் வந்து அரிய கருத்துக்களை கூற ஆரம்பித்துவிட்டதால நான் ஜகா வாங்குகிறேன்.நன்றி"

நானும் நிறைய விவாதங்களில் பார்த்துவிட்டேன். தர்க ரீதியிலான சில நேர்மையான கேள்விகளுக்கு அவர்கள் யாரும் பதில் அளிப்பதே இல்லை. மதரீதியான இட ஒதுக்கீடு ஆந்திராவில் 2 முறை கொண்டுவரப்பட்டு அது இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கருணாநிதி தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு தரப்படும் என கூறுகிறார். கலைஞரின் இந்த சட்டவிரோதப் போக்கை எதிர்கிறோம் என்றெல்லாம் இவர்கள் கூற முன்வர மாட்டார்கள்.

ஃபோர்ட், ஹுன்டாய் எல்லாம் சென்னைக்கு வராவிட்டால் பரவாயில்லையா என்று கேட்டிருக்கிறேன் அல்லவா? அதற்கெல்லாம் பதில் அளிக்காமல் தப்பித்துக்கொள்வதற்குத் தான், இந்தா ஜகா வாங்கல் !

மீட்டர் முருகேசன் சொன்னது…

ஏண்ணா ஸ்ரூசல் இனி வரபோர எட ஒதுக்கீட்ட பேசமுன்னாடி ஏற்கனவே எடம் ஒதுக்கினதுல ஆன நெலமய பேசுவோம்ணா. மீட்டர் பாத்துட்டே இருக்குறேண்ணா ஒருத்தரும் அம்பதாண்டுல நெலமை எப்புடி மாறிருக்குன்னு பேசுறதா தெரியல்லண்ணா. ஐஐடில அம்பத்தொம்பதாம் ஆண்டுல இருந்ததுக்கும் இன்னிக்கும் என்னமா இருக்குறவுங்க எட பர்சண்டு மாறிருக்குன்னு ஒரு விபரம் தர்ரிங்களாண்ணா?

வேலைல டெபுடி செக்கரட்டரில்லருந்து டூட்டி செக்யூரிட்டிவரைக்கும் எட ஒதுக்கீடு அம்பாதாண்டுக்கு மின்னாடியும் இன்னிக்கும் என்னமா மாறிருக்குன்னு ஒரு விபரம் தர்ரீங்களாண்ணா?

அப்புடி எதயுமே தரமா ஒதுக்கீடு வாணாமுன்னா என்னங்கண்ணா நியாயம்?

பெயரில்லா சொன்னது…

மதரீதியான இட ஒதுக்கீடு ஆந்திராவில் 2 முறை கொண்டுவரப்பட்டு அது இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது

It is not so.The A.P.High Court quashed the reservation for muslims twice. The Supreme Court affirmed the it when it was quashed first. Now an appeal is pending before SC and SC declined to stay the order of the High Court.Thus right now, while not all muslims are covered under reservation on account of religion, some Muslim groups are covered under the category of BCs.

VSK சொன்னது…

எந்தவொரு வாதமாயினும், அதில் வருபவனை இனம் பிரித்து, தரம் பிரித்து, நீ மேக்குடியா, எடுபிடியா, என்றெல்லாம் வகை பிரித்து, முத்திரை குத்துவதும், அதைத் தட்டிக் கேட்டால்,ஐயோ, பிரிக்கிறானே என்று அலறுவதும், வந்த சில மாதங்களிலேயே பழகி விட்டது!

இதையெல்லாமும் தாண்டி, கொண்ட கருத்தை முடிந்தவரை சொல்லிவைப்பதொன்றே, நம் வழி!

ரொம்பப் பெரிய பதிவாகப் போட்டுவிட்டீர்கள், ஸ்ருசல் அவர்களே!

அதிலும், தெளிவாகவும் போட்டு விட்டீர்கள்!

கொஞ்சம் நேரமாகும், வசைகணைகள் வந்து சேர!

:-)

ஸ்ருசல் சொன்னது…

...
கொஞ்சம் நேரமாகும், வசைகணைகள் வந்து சேர!
....

Ennanga payamuruthureengaa. :(
Appadi ellam ahathunnu nambikka irukku.

sorry no e-kalapai here.

பெயரில்லா சொன்னது…

இன்னாமா கரிகால் சிவா

இப்டி சேம்சைடு கோல் போடலாமா? சௌராஸ்டிரா மக்கள் BC கோட்டால நெரய படிச்சு இருக்காங்க.. நீயும் கூட அப்டித்தான் வந்திருப்பே, இப்போ இன்னாத்துக்கு இப்டி வால் புடிக்கிறே..

Voice on Wings சொன்னது…

சாணக்கியன், நான் பார்த்த வரையில் நீங்கள் கூறும் வாதங்கள்:

1. பன்னாட்டு நிறுவனங்களை இட ஒதுக்கீடு வழங்கும்படி வற்புறுத்தினால் அவர்கள் மூட்டையைக் கட்டிக் கொண்டு இடத்தை காலி செய்வார்கள்.

2. விளையாட்டு வீரர்களையும் இட ஒதுக்கீடு மூலமாகத் தேர்ந்தெடுக்க வேண்டியதுதானே?

(மற்றும் கொசுறுக் கருத்து, இரண்டாவது பின்னூட்டத்தில்) முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது சட்ட விரோதமானது.

இம்மூன்று தர்க்க ரீதியிலான கருத்துகளுக்கு தர்க்க ரீதியாகவே விடையளிக்க முயல்கிறேன்.

1. அரசு இதுவரை தனியார் நிறுவனங்களை இட ஒதுக்கீட்டை அமல் படுத்துமாறு காட்டாயப் படுத்தவில்லை. மாறாக, அரசின் வேண்டுகோளுக்கிணங்கி, தாங்களே இட ஒதுக்கீட்டைக் கடைபிடிப்பவர்களுக்கு வரி விலக்கு, மற்றும் இதர வகைகளில் ஆதாயங்கள் வழங்கலாமென்ற திட்டம் பரிசீலனையிலிருப்பதாகத் தெரிகிறது. இதுபோன்ற சலுகைகளால் உந்தப்பட்டு, பன்னாட்டு நிறுவனங்களே முன்வந்து தங்கள் மனிதவளக் கொள்கைகளில் மாற்றங்கள் செய்து, தங்கள் நிறுவனங்களில் பன்முகத்தன்மையை வளர்க்கக்கூடுமென்பது என் கணிப்பு. ஆகவே, அவர்கள் மூட்டையைக் கட்டாமலேயே, தனியார் துறையில் இட ஒதுக்கீடுகள் அமலாவதற்கு சாத்தியங்கள் உள்ளன.

2. விளையாட்டுத் துறை - இவற்றில் இட ஒதுக்கீடு வேண்டுமென்று எந்த சமூக அமைப்பும் கோரிக்கை வைக்கவில்லை என்று நினைக்கிறேன். இருந்தும் வேறு வகையான இட ஒதுக்கீடுகள் நடைமுறையில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. கிரிக்கெட்டிலேயே, மாநிலங்கள் அடிப்படையில், zone அடிப்படையில் என்றெல்லாம் பார்த்தோம். சரியாக விளையாடாமலேயே கங்குலி பல ஆட்டங்களில் அனுமதிக்கப்பட்டதைப் பார்த்தோம். டால்மியா இருந்திருந்தால் இன்று கங்குலி அணியின் தலைவராகவே தொடர்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆகவே, இந்திய விளையாட்டுத்துறை ஒரு absolute meritocracy எல்லாம் கிடையாது. இதே வாதத்தை வேறு துறைகளுக்கும் நீட்டப்போகிறீர்களா? நம் பாதுகாப்புப் படைகளிலும் இட ஒதுக்கீடு வைப்பதுதானே என்று கேட்கப் போகிறீர்களா? ராணுவ வீரர்கள் மத்தியில் ஏற்கனவே பன்முகத்தன்மை இருப்பதாகக் கருதலாம். அதிகாரிகள் என்று வரும்போது, சமூகத்தில் உயர்நிலையிலிருப்போருக்கே தற்போது வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது (கல்வியறிவுக்குத் தரப்படும் முக்கியத்துவத்தினால்). என் சொந்தக் கருத்து - அதிகாரப் பதவிகளிலும் இட ஒதுக்கீடு என்று வருமானால் ஒன்றும் குடி முழுகிப் போய் விடாது. அனைவரும் நாட்டுப்பற்றுடைய இந்தியர்களே. தேர்வுகளில் ஒரு சில மதிப்பெண்கள் குறைவாக வாங்கியதால் யாரும் தரத்தில் குறைந்து விடப்போவதில்லை. வேண்டுமானால் சில சிறப்புப் பயிற்சிகள் அளித்து அவர்களின் தரத்தை உயர்த்துவதும் இந்திய அரசுக்கு ஒரு பெரிய பிரச்சினையல்ல.

3.நீங்கள் கூறிய கொசுறுக் கருத்து - இந்திய அரசின் ஒரு அங்கமான National Commission of Backward Classes என்ற வாரியம், தமிழ்நாட்டைச் சேர்ந்த பல இஸ்லாமிய மற்றும் கிருத்தவர்களை பிற்பட்டவர்களாகக் கருதுகிறது. அவர்களுக்கு பிற்பட்டோர்களுக்கான இட ஒதுக்கீட்டிலிருந்துதான் இடம் வழங்க பரிந்துரை செய்யப்படுள்ளது. தமிழ்நாட்டில், மாநில அளவில் இது ஏற்கனவே நடைமுறையிலுள்ள ஒன்றுதான் என்று நினைக்கிறேன். ஆகவே, முஸ்லிம்களுக்கோ வேறு மதத்தவர்களுக்கோ இடஒதுக்கீடு அளிப்பது சட்ட விரோதமாகாது. மேலும், உச்ச நீதி மன்றம் ஒரு தீர்ப்பை வழங்கி விட்டதால் அத்திசையிலேயே பயணிக்க முடியாது என்பதும் வெத்து வாதமே. ஏனென்றால், மத்திய அரசால் அரசியல் சட்டங்களில் வேண்டிய மாற்றங்கள் செய்து, நிலையை மாற்ற முடியும். உ-ம், நாடெங்கிலும் முஸ்லிம்கள் பின்தங்கிய நிலையிலுள்ளார்கள் என்ற கருத்து வலுவடைந்தால், மத்திய அரசே வேண்டிய சட்டங்களை இயற்றி அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்க முடியும்.

பெயரில்லா சொன்னது…

Voice on Wings just like other pro-reservationits you are ignorant of the facts.NCBC has rejected the demand of muslims that all muslims should be included in BC list i.e. muslim community as a whole should declared as educationally and socially backward.You better read the judgment of AP high court
on reservations for muslims to know more.If they give reservation for muslims on the basis of religion it is totally unjustified.

ஸ்ருசல் சொன்னது…

Swamy Red Bulls, (Wed 4/19/2006 10:33 PM)

என்ன சொல்ல வருகின்றீர்கள் எனக்கு சுத்தமாகப் புரியவில்லை. முடிந்தால் தமிழில் அதனை டைப் செய்து அனுப்பவும்.

நன்றி.

ஸ்ருசல் சொன்னது…

"அன்பின் சகோதரருக்கு," என்று பின்னூட்டமிட்ட நபருக்கு...

நீங்கள் எழுதிய பின்னூட்டத்தினை எனக்கு எழுதிய தனி மடலாகக் கருதி அதனை வெளியிடவில்லை. அதனை இங்கே வெளியிட வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், சில மாற்றங்களோடு வெளியிடத் தயாராக இருக்கிறேன்.

குறிப்பு:

யாருடைய மனமும் புண்படக் கூடாது என்று சிறிது எச்சரிக்கையுடன் பின்னூட்டங்களை மட்டுறுத்த வேண்டியதாக இருக்கிறது. மேலே அனுமதிக்கப்பட்ட பின்னூட்டங்களில் யாருடைய மனமாவது புண்பட்டிருக்குமாயின் தெரிவிக்கவும். அந்தக் குறிப்பிட்ட பின்னூட்டத்தினை அழிப்பதற்கு ஆவண செய்கிறேன்.

Voice on Wings சொன்னது…

Anonymous, I think my statement is clear. I only said 'many'(பல) not 'all'. I never suggested that reservation should be based on religion. But it should be offered irrespective of religion, based on the backwardness of a community of people. I hope this clarifies. While we are at it, I would appreciate if you would refrain from giving certificates like 'ignorant of facts' and so on, coz I can also reciprocate in kind.

பெயரில்லா சொன்னது…

முஸ்லீம்கள் கோருவது தங்களுக்கென்று தனி இட ஒதுக்கீடு (உ-ம் 5%). இது அனைத்து முஸ்லீம்களுக்கும் வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை. முஸ்லீம்கள் அனைவரையும்
பிற்பட்ட வகுப்பினர் என்று கருதி தனியே இட ஒதுக்கீடு கொடுக்க முடியுமா , முடியாதா
என்பதுதான் கேள்வி.முடியும் என்று கருதி ஆந்திர அரசு 5% இட ஒதுக்கீட்டினை முஸ்லீம்களுக்கென்று வழங்கியது.இதைத்தான் ஆ.பி. உயர் நீதிமன்றம் நிராகரித்தது.முஸ்லீம்களில்
உள்ள பல பிரிவினருக்கு பிற்பட்டோர் பட்டியலில் இடமளித்து ஆ.பி, தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு
உள்ளது. அவர்களது கோரிக்கை முஸ்லீம்களுக்காக மத அடிப்படையில் தனியே இட ஒதுக்கீடு
வேண்டும்.ஒட்டு மொத்த முஸ்லீம் சமூகத்தினை சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்பட்டோர் என்று கருத முடியாது என்று ஆ.பி உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்துவிட்டது.மேலும் ஆ.பியில் அப்படி அளிக்கும் போது மொத்த இட ஒதுக்கீடு (46%+5%) 51% என்று ஆகிறது. இட ஒதுக்கீடு 50%தான் அதிக பட்சம் இருக்க முடியும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்பதன் அடிப்படையிலும் இந்த இட ஒதுக்கீட்டினை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

இந்த உண்மைகளைப் புரிந்துகொள்ளாமல் ஜல்லியடிப்பதை இனியாவது நிறுத்துவார்களா.

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
சாணக்கியன் சொன்னது…

வாய்ஸ் ஆஃப் வின்ட், தருக்கரீதியிலான விவாதத்திற்கு வந்ததற்கு நன்றி.

1. பன்னாட்டு நிறுவனங்கள் ஒரு சில சலுகைகளுக்காக தங்கள் போட்டியிடும் தன்மையை குறைத்துக்கொள்ள முன்வரும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு சில இந்திய நிறுவனங்கள் முன்வரலாம். அப்படி ஒருசில தனியார் நிறுவனங்கள் செயல்படுத்தினால் பிற நிறுவனங்களிலும் வேண்டும் என்று மீண்டும் கொடிபிடிக்க மாட்டோமா? முடிவுகள் பிரச்சனை வலுக்கும் முன்னறே எடுக்கப்படவேண்டும். மேலும் சிக்கலாக்கக்கூடாது.

2. விளையாட்டில் இட ஒதுக்கீடு நான் கொண்டுவர சொல்லவில்லை. தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்பது எவ்வளவு அபத்தமாக இருக்கும் என்பதை குறிப்பால் உணர்த்துவதற்காகச் சொன்னேன். இன்றைய தேர்வு முறையில் குறைகள் இர்ந்தால் களையப்படவேண்டுமே ஒழிய அங்கே இருப்பதால் மற்ற துறைகளிலும் வரட்டும் என்பது என்ன வாதம்?

ஒலிம்பிக்குகு கூட இப்படி ஸோனல் அடிப்படையில்தான் தேர்ந்தெடுத்து அனுப்புகிறார்களா என்று தெரியாது. அப்படியானால் அடுத்தமுறை விக்ரம் ரதோரை அனுப்ப முடியாது. வேறு மாநிலத்தை அல்லது ஸோனை சேர்ந்தவரைதான் அனுப்ப முடியும்.

3. முஸ்லீம்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பின் கீழ் சேர்த்து ஒதுக்கீடு அழிப்பதில் யாருக்கும் பிரச்சனை இல்லை. ஏற்கனவே இது நடைமுறையில் இருக்கிறது. மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்பதுதான் வாதம். அதைத்தான் உச்சநீதி மன்றமும் கூறுகிறது.

சாணக்கியன் சொன்னது…

இன்னொரு நணபர் கேட்டிருக்கும் கேள்விக்கும் பதில் சொல்லுங்கள். அதை சற்று விளக்கமாக முன்வைக்கிறேன்.

சென்னையில் உள்ள மென்பொருள் கம்பெனிகளில் 50% வரை தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெங்களூரில் கன்னடிகள் 10% தான் இருப்பர். சரியான புள்ளி விவரங்கள் இருந்தால் யாராவது கொடுங்கள். பிற மாநிலத்தவர்கள் வந்து பிழைப்பதால் கன்னடிகள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர். அதனால் வன்முறைகளும் அவ்வப்போது நடக்கின்றன. இப்போது அவர்கள் செய்யவேண்டியது என்ன? தங்கள் மாநிலத்தில் கல்வித் தரத்தை உயர்த்தி சிறப்புப் பயிற்சிகள் கொடுத்து தமிழர்களுக்கு , தெலுங்கற்களுக்கு இணையாக போட்ட்டி போடுவதா? அல்லது கன்னடிகளுக்கு 50% இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடுவதா?

ஸ்ருசல் சொன்னது…

அனானி (Thu Apr 20, 12:45:08 PM 2006) பதிவு செய்தது....


//ஐ.ஐ.டியில் சீட் கிடைக்காத புத்திசாலியை பேங்கில் *ப்யூனாக* எடுத்துக்கொள்வார்களா ஆபீசர் சார்? //

//அனுப்புங்க பார்க்கலாம். தான் அறிவாளி என்ற ஆணவம் இருக்கக்கூடாது. கஸ்டமர் சர்வீஸ் முக்கியம். நான் ரெகமெண்ட் பண்றேன். :))//


'அனுப்புங்க பார்க்கலாம். தான் விரும்பியதைப் படிக்க முடியாவிட்டாலும் தன் அறிவாலும் திறமையாலயும் இங்கேயும் பெரிய பதவிக்கு அவரால் வரமுடியும்; வந்துவிடுவார்' என்று சொல்லியிருந்தால், ஒரு மனிதத் தன்மையையாவது பார்த்திருக்கலாம்.

'அனுப்புங்கள். வரும்போது அறிவைக் குறைத்துக்கொண்டு அடங்கி வரவேண்டும்' என்று ஒரு சக மனிதனைச் சொல்லும்போதே, இது தான் முன்னேற வேண்டும் என்ற ஆர்வத்தைவிட அடுத்தவனை தலைதட்டி உட்காரவைக்கவேண்டும் என்ற எண்ணம்தான் தெரிகிறது. வளரும் நாட்டில் அடுத்தவன் தன்னைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்ன முற்போக்கோ?

//கஸ்டமர் சர்வீஸ் முக்கியம். //

கஸ்டமர் சர்வீஸ் ப்யூனுக்கு மட்டுமில்லை, பேங்க் சேர்மனிலிருந்து ஆரம்பித்து, தனக்கு அறிவில்லாவிட்டாலும் இருப்பதுபோல் பம்மாத்திக்கொண்டிருக்கும் ஆப்பீசர்கள், கிளார்க்குகள் வரை எல்லோருக்குமே இருக்கவேண்டியது என்ற பொதுஅறிவு என்றைக்கு இவர்களுக்கு வரும்? அறிவைக் குறைத்துக்கொண்டா அதைச் செய்கிறார்கள்? அறிவுக்கும் கஸ்டமர் சர்வீசுக்கும் என்ன சம்பந்தம்?


//நான் ரெகமெண்ட் பண்றேன். :))//

ரெகமண்டேஷன், தகுதியில்லாதவனுக்குத் தேவையானது. தேடிப்பாருங்கள். வேறு யாராவது கிடைப்பார்கள். அதற்குமுன் ப்யூனுக்கு என்ன பாஸ் செய்திருக்கவேண்டும் என்பதைவிட என்ன படிப்பு பாஸ் செய்திருக்கக்கூடாது என்ற விபரங்களிலிருந்து படிக்க ஆரம்பியுங்கள்.

BTW, இந்தக் கேள்வியை ஆரம்பித்த அநாநியும் நானும் ஒன்றல்ல.

ஸ்ரூசல், சிந்திக்க வைக்கும் பதிவு. ஆனால் நேர்மையாக எதிர்கொள்ள மாட்டார்கள்.

Muthu சொன்னது…

அனானி,
பெயர் சொல்லவில்லை என்றாலும் , நான் ஒரு Lighter vein இல் சொன்னதை எடுத்து பிரச்சினை கிளப்பியதற்கு நன்றி. என் பொறுப்புகள் அதிகரிக்கின்றன.

யாராவது மனம் புண்பட்டிருந்தால் என் மன்னிப்புகள்.

பியூன் எட்டாப்பு ஃபெயில் ஆகியிருந்தால் போதும். அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வரலாம்.நன்றி.

Muthu சொன்னது…

what anony said about customer service is true..i donot have any objection to agree with him

Voice on Wings சொன்னது…

சாணக்கியன்,

1. தனியார் நிறுவனங்கள் இட ஒதுக்கீடு செய்வதால் போட்டியிடும் ஆற்றல் குறைந்து விடும் என்ற அனுமானத்தின் பேரில் நீங்கள் வைக்கும் இந்த வாதம் வலுவானவொன்றல்ல. நீங்கள் குறிப்பிட்ட நிறுவனங்களெல்லாம் ஏற்கனவே diversity / equal opportunity என்ற பெயர்களில் அமெரிக்காவில் இதைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன. அதையே இந்தியாவுக்கும் நீட்டுவது அவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக இருக்காது. இத்தகைய (போட்டியிடும் ஆற்றல் குறைந்து விடும், போன்ற) வாதங்களையெல்லாம் இந்தியாவுக்கு outsourcing செய்யும் போது கூட எதிர்கொண்டு, அவற்றையெல்லாம் கடந்து வந்தவையே இந்த நிறுவனங்கள்.

2. விளையாட்டுத்துறையில் இட ஒதுக்கீட்டை யாரும் கோரவில்லை. விளையாட்டுத் துறைக்கும் தனியார் துறைக்கும் என்ன தொடர்பு என்று கூறமுடியுமா? விளையாட்டு, திரை, இசை, இலக்கியம், போன்றவைகளிலெல்லாம் gifted நபர்களால்தான் (அவர் எந்த சாதி மதத்தை சேர்ந்தவரானாலும்) ஜொலிக்க முடியும். ஆகவே, இவற்றில் இட ஒதுக்கீடு அபத்தமானது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. தனியார் துறை அத்தகைய சிறப்பிடத்தையெல்லாம் வகிக்கவில்லை. பெரும்பாலும் வாடிக்கையான வேலைதான், திறம்பட செய்ய வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனையுடன். அது இட ஒதுக்கீட்டில் வந்தவர்களால் ஆகாது என்பது ஆதாரமில்லாத வாதம்.

3. பிற்பட்டோரைக் கணக்கெடுக்கையில் முஸ்லிம்களைக் கணக்கெடுக்கவில்லை. அவர்கள் அனைவருமே பிற்பட்டோர்தான் என்று முடிவாகுமானால், பிற்பட்டோருக்கான மொத்த ஒதுக்கீட்டை அதிகப்படுத்தித்தான் அவர்களையும் சேர்க்க முடியும் (மற்ற பிற்பட்டோருக்கு பாதிப்பு வராத வகையில்). இதற்குத் தடையாக 50% என்ற உச்ச வரம்பை வைத்திருக்கிறது அரசியல் சட்டம். (இது தமிழ்நாட்டில் பின்பற்றப் படுவதில்லை) இவையனைத்தையுமே மீள்பார்வை செய்வதுதான் சரியான தீர்வு.

4. (உங்கள் புது கேள்வி) சென்னையில் IT நிறுவனங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் இன்னமும் 50% இடங்களைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த எண்ணிக்கை பெங்களூர் அளவுக்குப் பெருகுமானால் சென்னையிலும் தமிழ் மென்பொருளாளர்களின் விகிதம் 10% ஆகிவிடக் கூடும். ஆக, தமிழ் = உயர்ந்த மக்கள் கூட்டம் vs. கன்னடம் = தாழ்ந்த மக்கள் கூட்டம் என்பது உங்கள் நப்பாசையாக வேண்டுமானால் இருக்கலாம், அதில் சாரமில்லை.

//பிற மாநிலத்தவர்கள் வந்து பிழைப்பதால் கன்னடிகள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர். அதனால் வன்முறைகளும் அவ்வப்போது நடக்கின்றன.//

நான் குறிப்பிட்ட அந்த நிலைமை சென்னைக்கும் வந்தால், சென்னையிலும் அத்தகைய வன்முறைகள் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்குத் தீர்வு, தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள இட ஒதுக்கீட்டை ஆதரித்து, சமுதாயத்திலுள்ள ஏற்ற தாழ்வுகளைக் களைவதுதான். இல்லாவிட்டால், பெங்களூரில் இன்று நடப்பது விரைவில் ஒவ்வொரு நகரத்திலும் நடக்கும்.

ஸ்ருசல் சொன்னது…

"நீங்கள் வைக்கும் இந்த வாதம் வலுவானவொன்றல்ல. நீங்கள் குறிப்பிட்ட நிறுவனங்களெல்லாம் ஏற்கனவே diversity / equal opportunity என்ற பெயர்களில் அமெரிக்காவில் இதைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன."

equal opportunity எங்கே இருக்கிறது? இடஒதுக்கீடு எங்கே இருக்கிறது.

எல்லாருக்கும் சம உரிமை என்பதற்கும், குறிப்பிட்ட இன, மதத்தினருக்கு மட்டும் அதிக உரிமை என்பதற்கும் வித்தியாசமில்லையா?

Voice on Wings சொன்னது…

srusal, equal opportunity என்றால் எல்லாரையும் ஓரே scaleஆல் அளப்பதல்ல. அவ்வாறு செய்தால், அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளில் வெள்ளையர்களும், இந்தியாவில் உயர் சாதியினரும்தான் தேறுவார்கள். அது சம வாய்ப்பாகக் கருதப்பட மாட்டாது. அதற்கு மாறாக disadvantaged எனப்படும் சாதகமில்லாதச் சூழல்களிலிருந்து வெளிவருவோருக்கென சற்று தளர்த்தப்பட்ட தேர்வு விதிகளைப் பின்பற்றினால், அது அவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் ஒரு சம வாய்ப்பு அமைப்பாகத் திகழும்.

நான் உங்களுக்கு முதல் பின்னூட்டமாக ஒரு சுட்டியைக் கொடுத்தேனே, அதிலிருந்த கட்டுரைகளைப் படித்துப் பார்த்தீர்களா?

ஸ்ருசல் சொன்னது…

"அவ்வாறு செய்தால், அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளில் வெள்ளையர்களும், இந்தியாவில் உயர் சாதியினரும்தான் தேறுவார்கள். அது சம வாய்ப்பாகக் கருதப்பட மாட்டாது."

இப்போது எப்படி நடைமுறையில் இருக்கிறது என்று சொல்கிறீர்கள்?

ஸ்ருசல் சொன்னது…

எனக்குத் தெரிந்தவரை equal opportunity என்றால், மத, நிற, ஆண்/பெண், ஏழை / பணக்கார வித்தியாசம் பார்க்காமல் "அனைவருக்கும்" (போட்டி போடும் உரிமை) கல்வி, வேலைவாய்ப்புகளில் கொடுக்கப்படும் உரிமை தான்.

அமெரிக்காவில் கூட திறமையான நபர்களை தேர்ந்தெடுப்பதில் பாகுபாடு இருக்கக்கூடாது என்று தான் சட்டம் இருப்பதாக நான் அறிவேன். ஒரு வெள்ளையரை விட அதிக திறமையுடன் ஒரு கறுப்பினத்தை சார்ந்தவரோ, ஒரு ஆணை விட ஒரு பெண் அதிக திறமையுடன் இருந்து, வெள்ளையரையோ / ஆணையோ தேர்ந்தெடுப்பதைத் தடுக்க வேண்டும் என்று தான் சட்டம் சொல்கிறது என்று நினைக்கிறேன்.

அதனைச் செயல்படுத்துவதற்காக சில திட்டங்கள் (affirmative action goal) நடைமுறையில் இருந்தாலும்,


"However, once the applicants apply, in theory the organization is required to select the most qualified candidate and cannot make employment decisions based on race or sex even where there is an affirmative action goal"

இப்படி இருக்கலாம் என்று சொல்கிறது.

தவறு இருந்தால் சுட்டிக் காட்டவும்.

ஸ்ருசல் சொன்னது…

>>>>>>>நான் உங்களுக்கு முதல் பின்னூட்டமாக ஒரு சுட்டியைக் கொடுத்தேனே, அதிலிருந்த கட்டுரைகளைப் படித்துப் பார்த்தீர்களா? >>>>>>

இன்னும் அதனைப் படிக்கவில்லை. வேலைப் பளு அதிகமிருப்பதால் முடிந்த வரை பின்னூட்டம் மட்டும் செய்து வருகிறேன். கண்டிப்பாக படித்து விட்டு சொல்கிறேன்.

அதில் பல பகுதிகள் இருக்கின்றன. எதைப் படிக்க வேண்டும் என்று சொல்லவும்.

ஸ்ருசல் சொன்னது…

"நான் குறிப்பிட்ட அந்த நிலைமை சென்னைக்கும் வந்தால், சென்னையிலும் அத்தகைய வன்முறைகள் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்குத் தீர்வு, தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள இட ஒதுக்கீட்டை ஆதரித்து, சமுதாயத்திலுள்ள ஏற்ற தாழ்வுகளைக் களைவதுதான். இல்லாவிட்டால், பெங்களூரில் இன்று நடப்பது விரைவில் ஒவ்வொரு நகரத்திலும் நடக்கும். "

எப்படி களையமுடியும் என்று கூறுகிறீர்கள்? மொழி வாரியான இடஒதுக்கீட்டின் மூலமாகவா?

விளக்கவும்..

பெயரில்லா சொன்னது…

voice on wings,

Dont waste your time. Guys like srusal will never accept or change his thoughts.

He is just opposing the reservation. Did he give any concrete plans for other ways ?? He cannot give. All he can do is to critize reservation.

ஸ்ருசல் சொன்னது…

"voice on wings,

Dont waste your time. Guys like srusal will never accept or change his thoughts.

He is just opposing the reservation. Did he give any concrete plans for other ways ?? He cannot give. All he can do is to critize reservation. "

>>>

என்னங்க ஒரே நாள்ல நான் திட்டம் போட்டு சட்டமா போடணும்னு எதிர்பார்த்தா எப்படிங்க? இதற்கான சரியான வழி தெரியாமத் தானே பலர் தவித்திரூக்கிறார்கள். சிலர் தங்களால் முடிந்ததை செய்து, சென்றிருக்கிறார்கள்.

இது சரியான பாதை இல்லைன்னு என்னால சொல்ல முடியும் (இது சரியாக கூட இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை). எனக்குத் தெரிந்த சில விசயங்களை பதிவில சொல்லி இருக்கேன். சிலதை பின்னூட்டத்தில சொல்லி இருக்கேன்.

அதை ஏத்துக் கொள்ள வேண்டும் என்று நானும் உங்களை வலியுறுத்தவில்லை. நீங்களும் என்னை வலியுறுத்தவில்லை. அப்படி நடக்க போறதும் இல்லைன்னும் நடக்கறதப் பார்த்தா தோணுது. நீங்க எப்படி அந்தப் பக்கம் வந்து யோசித்து பாருங்கண்ணு சொல்லுறீங்களோ அதைத் தான் நானும் கொஞ்சம் இந்தப் பக்கம் வந்து யோசித்து பாருங்கன்னு சொல்லுறேன்.

மற்றபடி நான் ஏற்றுக் கொள்வதால் சட்டம் இயற்றப்பட போவதும் இல்லை.

நான் ஏற்றுக் கொள்ள மறுப்பதால் சட்டம் திரும்ப அழைக்கப்பட போவதும் இல்லை.

இது விவாதிக்கும் வாய்ஸ்ப் ஆஃப் விங்ஸ்-ற்கும் தெரியும். 'இதனால் ஒன்றும் ஆகப் போவதில்லை. வீண் பிடிவாதம் பிடிக்கிறோம்', என்று நினைத்தால் அனைவரும் இங்கே நிறுத்திக் கொள்ளலாம்.

பழையபடி நானும் ஏதாவது சினிமாவைப் பற்றி பதிவைப் போட்டுட்டு போய்க்கிட்டே இருக்கேன்.

மற்றபடி அனைவரும் நன்றாக வாழவேண்டும் என்ற என் கருத்தில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. அதற்கு இடஒதுக்கீடு தான் ஒரே வழி என்று நீங்கள் நினைத்தால் உங்களது கருத்தை மதிக்கிறேன்.

இப்படி நானோ, மற்றவர்களோ பேசுவதால் நீங்கள் வருத்தப்படுவதற்கு ஏதும் இல்லை.

நானும் இதோடு முடித்துக் கொள்கிறேன்.

நன்றி.

பெயரில்லா சொன்னது…

Srusal,

Everyone has their own opinion. You are trying to convince others that "RESERVATION" is a wrong-path.

There are 3 things.

a. Reservations in Private institutions (Currently in discussion)

b. Reservations in IIT/IIM (Which is going to be implemented - provided the brahmins/supreme court didnt stop it)

c. Reservations in other educational institutions

You have started your posting about point "a" and slowly moved into point "c".

It is very clear that you are agaist reservations in educational institutions. Let us assume that we remove the reservations in educational institutions.

What is going to happen??

Who is going to study in Anna university & Medical colleages??

Will an BC or SC/ST student who passed +2 in a village/town school can think of these institutions??

Then you will again say that education has to be made equal. If you cannot make it possible in the last 60 years, do you think it is going to happen in future?

RESERVATIONS may be a wrong-path for you & some people. But I feel it is the right-path for myself & lot of others.

Thank you very much for allowing my anonymous comment.

Voice on Wings சொன்னது…

Firstly, Anonymous - I have not come to change anybody's thoughts. I'm just giving the reasons why I think reservations may be a good idea (to counter this post which says why it may not be a good idea). As long as people are not trading insults, (and as long as people have the patience to continue it) a debate can go on.

Srusal, நீங்களும் கொஞ்சம் தேடல்கள் செய்திருப்பதாகத் தெரிகிறது. நீங்கள் எடுத்துப் போட்ட வரிகளைக் கொண்ட இந்தப் பக்கத்திலேயே உங்கள் கேள்விக்கான விடையும் உள்ளது. நீங்கள் quote செய்த வரிக்கு முன்னால் இருக்கும் வரியைப் படியுங்கள்: "The organization accomplishes this by advertising the job with organizations who might be able to refer qualified minorities and or females applicants." அதாவது, குறிப்பிட்ட சில வேலைகளுக்கான விளம்பரமே, சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு வேலை வாங்கித் தரும் நிறுவனங்களுக்குத்தான் அனுப்பப் படுகிறது. இவ்வாறு, மொத்த வேலையாட்களில் குறைந்தது 20% ஆவது இந்தப் பிரிவினர் இடம்பெறும் வகையில் உறுதி செய்யப்படுகிறது. இத்தகைய நிறுவனங்களுக்கே அரசு காண்டிராக்ட்களை வழங்கலாம் என்றிருக்கிறது. இதுவும் ஒரு வகையான இட ஒதுக்கீடு அல்லாமல் வேறென்ன?

ஒரு கறுப்பினத்தவரோ அல்லது ஒரு பெண்ணோ ஒரு வெள்ளையின ஆணை விட திறமைசாலியாக இருந்துவிட்டால், அங்கு எந்த actionஉம் தேவைப்படாமலேயே அவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்களல்லவா? That is not equal opportunity. That is meritocracy. And they both are opposites.

உங்கள் அடுத்த கேள்வி:
//எப்படி களையமுடியும் என்று கூறுகிறீர்கள்? மொழி வாரியான இடஒதுக்கீட்டின் மூலமாகவா?//
மொழிவாரியாக அல்ல சகோதரா, சாதிவாரியாகத்தான். சமுக ஏற்ற தாழ்வுகள் மொழி அடிப்படையில் நிகழ்வதில்லை, சாதியடிப்படையிலேயே. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருக்க முடியுமென்று நினைக்கிறீர்கள்? கன்னட பிராமணர்களா? அவர்கள்் USஇல் இப்போது டாலர்களை எண்ணிக் கொண்டிருப்பார்கள்். முன்னேறும் பொருளாதாரச் சூழலிலும் வாய்ப்புகளற்று உட்கார்ந்திருப்பது கன்னட பிற்பட்டோரே. அவர்களுக்கும் இந்த முன்னேற்றத்தில் பங்கு பெறும் வாய்ப்பு கிட்டியிருந்தால், அவர்களும் அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு வலைப்பதிவு அல்லவா எழுதிக் கொண்டிருந்திருப்பார்கள்? கலவரத்திலா் ஈடுபடுவார்கள்? இப்போது பெங்களூரில் நிகழ்வது நாளை சென்னையிலும், ஹைதராபாத்திலும், புனேயிலும் நிகழாமலிருக்க என்ன வழி? பிற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு, கல்வி, இத்யாதி, இத்யாதி.

நான் கொடுத்த வலைப்பதிவின் சுட்டியிலுள்ள அனைத்து பதிவுகளுமே நன்கு எழுதப்பட்டவையே. தனியார் துறையில் இட ஒதுக்கீடு பற்றியும் ஒரு இடுகை இருக்கிறது அதில்.

பெயரில்லா சொன்னது…

VoW
in USA it includes women and minorities.here u want it only
for OBCs.Not for women or for poor irrespective of caste.OBCs want to corner everything.The have hegemony in Tamil Nadu.They want to
replicate it all over india and capture all institutions and organisations and fill them with OBCs.The elite OBC talks in terms of caste oppression but oppresses the dalits.And you folks are with such OBCs.

பெயரில்லா சொன்னது…

முன்னேறும் பொருளாதாரச் சூழலிலும் வாய்ப்புகளற்று உட்கார்ந்திருப்பது கன்னட பிற்பட்டோரே
Brilliant, dont you know that Kannada politics is dominated by three OBC castes and they are too
powerful in Karnataka in every field.Raj Kumar was from an OBC caste.VoW have some consideration for facts.

-/சுடலை மாடன்/- சொன்னது…

VoW,

I appreciate very much your facts-filled arguments on this issue and I agree with them 100%. Thank you for taking your time to put forth your thoughts in a very coherent and polite way.

Thanks,

S. Sankarapandi

பெயரில்லா சொன்னது…

இட ஒதுக்கீட்டால் வெளிநாட்டு கம்பெனிகள் ஓடிவிடுமா?

http://fairchance.civilrights.org/research_center/details.cfm?id=18076


Prior to the Supreme Court's ruling in Grutter v. Bollinger, 65 Fortune 500 companies
filed an amicus brief in "favor of " affirmative action programs in higher education.

The brief states, "The need for diversity in higher education is indeed compelling.
Because our population is diverse, and because of the increasingly global reach of
American business, the skills and training needed to succeed in business today demand
exposure to widely diverse people, cultures, ideas and viewpoints."
The brief cites
several companies that have increased minority representation, including "Microsoft
Corporation," whose minority domestic workforce increased from 16.8 percent in 1997
to 25.6 percent in February 2003. (Brief for Amici Curiae, 65 Leading American
Businesses in Support of Respondents, Grutter v. Bollinger, 2003)

arunagiri சொன்னது…

இப்பிரச்சனைக்கு சரியான அணுகுமுறையும் தீர்வும்
மதத்தையோ சாதியையோ பிடித்துகொண்டு தொங்குவதில் அல்ல, அவை தாண்டிய ஒரு விஷயத்தை -பொருளாதார நிலை, குடும்பத்தில் எத்தனை பேர் உயர்கல்வி/தொழிற்கல்வி பெற்றிருக்கிறார்கள் என்பது போன்ற சாதி மதம் தாண்டிய பொதுமைகளை- அடிப்படையாக்கி முன்னுரிமை கேட்பதிலும் போராடுவதிலுமே உள்ளது. கல்வி பொருளாதார நிலைகளில் பின்தங்கியுள்ள எல்லோருக்கும்- இஸ்லாமியர், கிராமியர், சிறு நகர்ப்புறத்தார் என்று அனைத்து தரப்பிலும் உண்மையிலேயே பாதிக்கப்பட்ட அனைவருக்கும் -இது உதவும். அதேசமயம் சல்மான்கான்களுக்கும், ஷாருக்கான்களுக்கும், ராம்தாஸ்களுக்கும், தயாநிதிகளுக்கும் இட ஒதுக்கீடு என்பது போன்ற அபத்த விளைவுகளுக்கு இட்டுச்செல்லாமலும் தடுக்கும்.
(Btw இப்படித்தான் முன்பெல்லாம் இடதுசாரிகளும் போராடினர். இன்றோ வங்கத்திலும், கேரளத்திலும், மத்தியிலும் பிஜேபி, காங்கிரஸ் என்ற இரு எதிரிகளை ஒழிக்க வெளிப்படையாகவே சாதி மற்றும் இஸ்லாமிய மத அடிப்படைவாத சக்திகளுடன் இணைந்து கொண்டு ஓட்டு வங்கி அரசியல் நடத்துகிறார்கள்).

கல்வி, பொருளாதாரத்தில் முன்னேறிய பலர் இட ஒதுக்கீட்டுக்காகக் கை நீட்டுவது உரிமை இல்லை. பிச்சையும் இல்லை. வெள்ள நிவாரணத்திலிருந்து கொள்ளையடிக்கும் கேவலம்.

Voice on Wings சொன்னது…

Anonymous (posted time - 9:22PM), 'I' do not have preferences on which sections of the underserved communities should get benefited. I'm just explaining my reasons why I think reservations might help. Since you are accusing OBCs of hegemony, some facts - the OBCs form 52% of the Indian population. So it is natural that they have political clout in a democracy, as democracy is about numbers. The more the number of people willing to vote for you, or come behind you, the more political clout you would have. That said, even Mandal has not been able to ensure justice for them, as only 27% reservations are provided for 52% of the population. (in Tamil Nadu, the figures are closer to reality). Sadder is the case of Muslims (15% of the population) who have to fight for and get denied even 5% representation in the institutions, which leave them with no other option than to go to Madrassas, where they get 100% quota. If I highlight this, people would retort with all kinds of adjectives like சட்டவிரோதம், ஜல்லியடிப்பு etc. On the question of women, they are not a separate category, but are a sub-category within each reserved category. So how about a 50% representation for women within each reserved category, and within the general category as well? I would support that without any hesitation.

Anonymous (posted time - 10PM), pls consider these facts too. OBCs dont just dominate kannada politics, but also tamil, telugu, hindi, and other language politics as well (as well as the respective film industries). That's because they form the largest chunk of 52% of the population (sorry about the repetition). Political clout has little to do with financial standing for the community at large (i'm not talking bout the few hundred politicians who are making hay at the expense of the communities they represent). To do well financially, you need to be academically accomplished. Since that is not a trait to be found among the bulk of the OBCs currently, they need special vehicles like the reservations to bridge that gap. Once there are enough engineers among them to occupy seats inside the software companies, they wouldn't take to the streets, to damage the plush glass exteriors of these companies' office buildings. That was what I was trying to convey in response to chanakyan's question.

Sankarapandi, thanks for your encouragement :)

மு. சுந்தரமூர்த்தி சொன்னது…

நீண்ட பதிவையும், ஏகப்பட்ட பின்னூட்டங்களையும் முழுவதுமாக படிக்காமல் மேலோட்டமாக மேய்ந்ததில், எனக்கு Voice of Wings கருத்துக்களோடு ஒத்துபோக முடிகிறது. அவருடைய கருத்துக்களையொட்டி சில:

1. Equal Opportunity Employer/Affirmative Action என்பதின் அர்த்தம் எல்லோரையும் ஒரே தட்டில் பார்க்க வேண்டும் என்பதில்லை. ஒரு வேலைக்கு ஒரே மாதிரியான தகுதியும், திறமையுள்ளவர்களும் போட்டியிட்டால் ஏற்கனவே குறைந்த அளவு பிரதிநிதித்துவம் பெற்ற பிரிவினருக்கு (பொதுவாக கருப்பர்கள், பெண்கள்) முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். இந்த கொள்கையைக் கடைப்பிடிக்கும் அரசு, தனியார் பல்கலைக் கழகங்களில் இதை கண்காணிக்க Office of Diversity என்று ஒரு சிறப்பு அலுவலகம் உண்டு. பெண்கள், சிறுபான்மையினர் சம்பந்தமான தகவல்களை சேகரிப்பது, அந்த விண்ணப்பதாரர்களுக்கு தேவையான மேலதிகத் தகவல்களை வழங்குவது போன்றவை இந்த அலுவலகத்தின் வேலை.

2. நம் ஊரில் திறமையிருந்தும், வாய்ப்பு கிடைக்காது கோபமடையும் முற்பட்டஜாதியைப் போல அமெரிக்காவிலும் "Angry white male" என்கிற ஓர் இனம் உண்டு.

3. தனியார் துறையில் இடஒதுக்கீடு கொடுத்தால் பன்னாட்டு நிறுவனங்கள் மூட்டை கட்டிக்கொண்டு போய்விடுவார்கள் என்று பயமுறுத்துபவர்களுக்கு:

"Microsoft's participation in the University of Michigan amicus brief reflects the company's conviction that proactive efforts are critical in cultivating racial and ethnic diversity at institutions of higher education. By upholding the university's ability to include race and other factors in the admissions process, the courts will preserve Microsoft's ability -- and that of other companies -- to recruit the diverse work force necessary for success in today's global marketplace. At Microsoft, we believe that diversity not only allows us to better meet the needs of our global customers, it enriches our performance, the communities in which we live and work, and the lives of our employees."

"Microsoft applauds the Supreme Court's decision to uphold the University's right to include race and other factors in its admissions process. We hope this ruling will help preserve the ability of our nation's institutions of higher education to develop the diverse talent many companies need to cultivate a multi-cultural workforce. At Microsoft, we believe that the ability to recruit such a diverse workforce is critical to our success in today's global marketplace, and we look forward to continuing our partnership with the University of Michigan and other institutions."

இவை, மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் இன அடிப்படையில் கல்லூரி சேர்க்கை தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில் மைக்ரோசாப்டின் Diversity Director Claudette Whiting உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த கருத்துக்கள்.
இவை தொடர்பான சுட்டிகள்:
http://www.microsoft.com/citizenship/diversity/
http://www.microsoft.com/presspass/press/2003/Jun03/06-23DiversityJudgmentStatementPR.mspx
http://www.microsoft.com/presspass/press/2003/feb03/02-17UofMichStatementPR.mspx
http://www.gmsp.org/(ph12qtmdxs4bdc55hxe2xaqc)/about.aspx

பெயரில்லா சொன்னது…

One has to point out a simple fact.In USA diversity includes gender, ethnicity and race.American Asians will get
benefit under such a diversity.
In India it has been a question of
just caste.Affirmative action, diversity, equal opportunity employer (eoe) - all this denote
that race alone will not the
deciding factor in deciding diversity. In India you all
want reservation for OBCs only.
There is not even a whisper about
including gender, economic conditions etc in this. In fact the
first Backward Classes Commission
suggested reservation for women also. In a country where there is
so much diversity in terms of langugae, ethnicity and culture
why consider caste alone.VoW and
Sundaramoorthy would like to focus
on caste only .That is fine but dont compare that with diversity
or affirmative action in USA.
Microsoft talks of diversity in
a broad sense, not just white and
african american.In other words
supporters of reservation for
OBCs are neither interested in equality or diversity.All they
want is that OBCs should be pampered and should be treated as
more equal than others.To call this
as social justice is a mockery
of the idea of justice.

சாணக்கியன் சொன்னது…

5. Voice on Wings, பன்னாட்டு நிறுவனங்கள் ஜாதி வாரியான இட ஒதுக்கீட்டை(கவனிக்கவும், ஜாதி அடிப்படையிலான ஒதுக்கீடு) ஏற்றுக் கொள்வார்கள் என நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. மைக்ரோ சாஃப்ட் அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் 500 க்கும் மேற்பட்ட மாணவர்களில் 6 பேரை மட்டும் தேர்வு செய்து மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் தருவது அம்மாணவர்கள் அதிக திறமை கொண்டிருப்பதனால்தானே? போட்டியிடும் தன்மை(competency) அதிகம் இருப்பதனால்தானே? இல்லை என்றால் வேறு என்ன காரணங்கள் என்று எனக்கு புரியும் படி விளக்குங்கள். மற்ற மாணவர்களுக்கு ஏன் 20 ஆயிரம் முதல் அதிகபட்சம் 50 ஆயிரம் வரை மட்டுமே சம்பளம் கிடைக்கிறது? நீங்கள் சொல்லும் ஒதுக்கீட்டின்படி தேர்வு செய்தால் அந்த 6 பேர் மட்டியல் மாறுபடும்.

6. கன்னடிகள் திறமைசாலிகளா இல்லையா என்பதை ஒதுக்கிவைத்து விடலாம். ஆனால் அவர்கள் தகுதியை வளர்த்துக்கொள்வதில் பின்தங்கி விட்டனர் என்பதுதான் உண்மை. ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் இருப்பதுபோல் அங்கு ஏகப்பட்ட பொறியியல் கல்லூரிகளும் கல்வி நிறுவனங்களும் கர்நாடகத்தில் இல்லை. இப்பொழுதுதான் விழித்துக்கொண்டு துவங்கி இருக்கிறார்கள். கேரளாவில் தனியார் பொறியியல் கல்லூரிகள் துவங்க அனுமதி வழங்கப்பட்டு ஒரு சில வருடங்கள் தான் ஆகின்றன. தமிழ்நாட்டில் 1984-லியே தொடங்கப்பட்டுவிட்டன. இதனால்தான் தமிழர்களும் தெலுங்கர்களும் கோலோச்சுகின்றனர். நீங்கள் சொல்லும் கம்பெனிகளின் எண்ணிக்கை எல்லாம் காரணம் கிடையாது. வேண்டுமானால் பம்பாயில் இருக்கும் மென்பொருள் வல்லுனர்களில் எத்தனை சதவிகிதம் தெலுங்கர்களும், தமிழர்களும், கன்னடிகளும் இருக்கிறார்கள் என்று கேட்டுப்பாருங்கள்.(அகில இந்திய அளவிலும் ஒப்பிட்டுப் பார்க்கலாம் !). நான் சொல்லும் உண்மை புரிந்தால் இங்கே வந்து ஒப்புக்கொள்ளுங்கள்.

7. மு.சுந்தரமூர்த்தி கூறியுள்ளதில் பின்வருபவை அடிக்கோடிட வேண்டியவை. "ஒரு வேலைக்கு ஒரே மாதிரியான தகுதியும், திறமையுள்ளவர்களும் போட்டியிட்டால் ஏற்கனவே குறைந்த அளவு பிரதிநிதித்துவம் பெற்ற பிரிவினருக்கு (பொதுவாக கருப்பர்கள், பெண்கள்) முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்." முதலில் தகுதிதான் பார்க்கப்படும். இருவரிடையே தகுதி சமமாக இருந்து யாரைத்தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் வந்தால்தான் நீங்கள் கூறும் ஒதுக்கீடு அங்கே கருத்தில் கொள்ளப்படும். ஆனால் இங்கே அவர் குறிப்பிட்டிருக்கும் தகுதியும் திறமையும் 'ஜல்லி' எனப்படுகிறது. முதலில் நீங்கள் அந்தப்பணி எந்த ஒதுக்கீட்டுக்கு என்று முடிவு செய்துவிட்டுத்தான் அவர்களுள் யார் திறமைசாலி,தகுதியுடையவர் என்று பார்க்கவேண்டும்.

8. நீங்கள் மக்கள் தொகையில் OBC எத்தனை சதவிகிதமோ, MUSLIMS எத்தனை சதவிகிதமோ அதற்குத் தகுந்தாற்போல் இட ஒதுக்கீடுவேண்டும் என்று சொல்கிறீர்கள். சரி அதுபோல் மேல்சாதியினருக்கும் கொடுக்கலாம் அல்லவா? இந்திய அளவில் 30% தேறுமா? பிராமணர்கள் மட்டும் இந்திய அளவில் 16% இருப்பதாக படித்த ஞாபகம். மேலும் பல சாதியினர் OC (other caste) பிரிவில் உள்ளனர். பிராமணர்கள்தான் பாதிக்கப்படுவதாக கருதுவதும் தவறு. நாயர்கள் தமிழ் நாட்டில் ஓ.சி. தான்.(கேரளாவில் எப்படி என்று தெரியவில்லை). மேலும் சில செட்டியார்கள்,பிள்ளைகள் என பலரும் ஓ.சி.தான். இதே போல் வட இந்தியாவிலும் நிறைய ஓ.சி. பிரிவில் வரும் சாதிகள் இருக்கும். 20% முதல் 30% வரும் என நான் நினைக்கிறேன். இந்த முறைப்படி 100% கூட பிரித்துக் கொள்ளலாம். இதுதான் நீங்கள் சொல்லும் முறைப்படி சம வாய்ப்பாக இருக்கும்.

தீர்வு: ஜாதி அடிப்படையில் இல்லை என்றால் வேறு எப்படி இட ஒதுக்கீடு கொடுப்பது என்று கேட்கிறார்கள் சிலர். இதோ இங்கே சொல்கிறேன்.

இன்று இலவச அரிசியிலிருந்து, வீட்டுமனைப் பட்டா, இலவச வேட்டி சேலை, சத்துணவு எல்லாம் எப்படி செயல் படுத்தப்படுகின்றன்? பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு கொடுக்கப்படுகின்றன். இலவச கலர் டீவி கூட ரேசன் அட்டையைக்கொண்டு பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்குக் கொடுக்கப்போவதாக அரசியல் கட்சிகள் கூறுகின்றன. ஜாதி வாரியாக பிரிக்காமல் குடும்ப வருமானத்தின் அடிப்படையில் முன்தங்கியுள்ளவர், பின்தங்கியுள்ளவர், மிகவும் பின்தங்கியுள்ளவர், வருமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர் என நான்கு வகையாக்ப் பிரித்து இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தலாம். உடனே யாரும் உண்மையான வருமானத்தை சொல்லமாட்டர்கள் என்று தடுக்காதீர்கள். சரியான முறையில் செயல்படுத்தவேண்டியது அரசின் கடமை. இன்றும் உண்மையில் ஒரு சாதியும், இட ஒதுக்கீட்டுக்காக ஜாதிமாற்றி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் பலர் இருப்பதை நான் காட்ட முடியும்.

என்ன நண்பர்களே,இரண்டு தீர்வுகளை முன் வைத்திருக்கிறேன். விவாதிப்போம்...

பொன்ஸ்~~Poorna சொன்னது…

நீஈஈண்ட பதிவு.. நீஈஈண்ட பின்னூட்டங்கள், ஊடாக, சின்ன எழுத்துக்களில் ஆங்கிலப் பின்னூட்டங்கள்.. முழுவதும் படிக்க முடியவில்லை

ஆனால், இப்படி எல்லாம் பேசி, நாம் ஏதோ கொஞ்சம் நஞ்சம் இந்தியாவில் வந்து வேலை கொடுத்து, பொருளாதாரத்தை உயர்த்தும் வெளிநாட்டானையும் துரத்திவிடுவோம் போலிருக்கிறது..
இப்போது தான், இத்தனை மல்டிநேஷனல்கள் வந்த பின் தான்,
"என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்
ஏன் வெளியே ஓடவேண்டும் வெளிநாட்டில்"
என்று இளைஞர்கள் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.. அதையும் கெடுப்பது நியாயமல்ல

தனியார் கம்பனிகளில் ஒதுக்கீடு இல்லாமலே நிறைய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பணிபுரிகின்றனர் என்பதை மறுக்க முடியாது.. ஒதுக்கீடு என்பது பள்ளி, கல்லூரி வரை வருவதுதான் நல்லது...

பெயரில்லா சொன்னது…

http://www.indiatogether.org/2005/dec/ivw-jadhav.htm
Reservation for jobs is not like railway reservations; please understand this. Reservation, the need for it is coming from the inability of the system as a whole to be fair. It is to guard against that. What reservation means is that if you are a Dalit and I am biased man and therefore I will not give you the job, it is to prevent the kind of injustice which is there because of the psychological problems in non-Dalits towards Dalits; that is the genesis.

நந்தன் | Nandhan சொன்னது…

I have put a separate post as an feedback for you post. check
www.mkannadi.blogspot.com

thanks,
Nandha

enRenRum-anbudan.BALA சொன்னது…

Inspirational writing and excellent presentation ! A thought provoking posting radically different from routine posts on this topic ! Thanks.
enRenRum anbudan
BALA

சாணக்கியன் சொன்னது…

where has gone Mr.voice of wings..?

பெயரில்லா சொன்னது…

பாதிக்கபட்ட ஆட்களும் அதிகம்.//

மிகச் சரியான வரிகள்.

அன்பு சகோதரரே! உங்கள் கேள்விகளிலும், கருத்துக்களிலும் நியாமிருந்தாலும் சகோதரர் தமிழினி கூறியது போல் இங்கு பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமாக உள்ளனரே அவர்களுக்கு இந்த அரசாங்கம் என்ன விதமான தீர்வு கொடுக்க முடியும் என்பதை பற்றியும் ஒரு தீர்வு சொல்லுங்களேன்.

காலங்காலமாக மலம் அள்ளுவதை மட்டுமே தன்னுடைய தகுதியாக கொண்ட நம் சகோதரர்களுக்கு அவர்களுடைய குழந்தைகளை ஐ.ஐ.டி யிலும் அண்ணா பல்கலைகழகத்திலும் படிக்க வைக்க என்ன மூல தனம் உள்ளது என்பதையும் சற்று சிந்தித்துப் பாருங்கள். மலைகளில் வாழும் இந்நாட்டின் மைந்தர்களை பள்ளிகளில் கொண்டு வர திறமை பார்த்தால் முடியுமா?

நீங்கள் வைப்பது போன்று இன்னும் நிறைய உதாரணங்களை கேள்விகளாக எழுப்ப முடியும். தன்னிறைவு பெற்ற பின் தன் நிலையிலிருந்து சிந்தித்தால் உங்களைப் போன்று தான் சிந்திக்க முடியும் என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் தேவை அதுவல்லவே! பாதிக்கப்பட்டிருப்பவனின், ஒதுக்க/ஒடுக்கப்பட்டிருப்பவனின் நிலையில் இருந்து பார்த்தாலே இதற்கு சரியான தீர்வு கிடைக்கும் என நினைக்கிறேன்.

அன்புடன்
இறை நேசன்.

Voice on Wings சொன்னது…

//where has gone Mr.voice of wings..?//

சாணக்கியன், உங்கள் விசாரிப்புக்கு நன்றி. உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தேன். நான் கூற வந்ததைக் கூறிவிட்டதால், மேற்கொண்டு வேறெதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. உங்கள் கருத்துக்களுடன் உடன்படவில்லை என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் தேசிய அளவில் உயர்சாதியினர் 30% இருப்பார்களா என்றெல்லாம் கேட்டதால் பயந்து போய் ஓடியதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஏனென்றால், ஜனத்தொகையில் தலித் மற்றும் பழங்குடியினர் 25%, பிற்பட்டோர் சுமார் 50%, மற்றும் இஸ்லாமியர்கள் 13.5% என்பதுதான் நான் அறிந்த கணக்கு. எஞ்சியிருப்பது 10-15%.
(தகவல் உதவி:
1. பிற்பட்டோர் விகிதம்
2. இஸ்லாமியர் விகிதம்
3. தலித் மற்றும் பழங்குடியினர் விகிதம்)
இதில் நீங்கள் உயர்சாதியினருக்கு 30% இட ஒதுக்கீடு கேட்கிறீர்கள் போல் தெரிகிறது :)

பெயரில்லா சொன்னது…

//மலைகளில் வாழும் இந்நாட்டின் மைந்தர்களை பள்ளிகளில் கொண்டு வர திறமை பார்த்தால் முடியுமா?//

saha (indu)madhathinaruku varatha oru anuthabam or akkarai...........

ungaleedam!!!!!!!

salam to irai nesan

-swamy red bull

சாணக்கியன் சொன்னது…

voice of wings, நீங்களும் பின்வாங்கி விட்டீர்கள். இரண்டு விதமான தீர்வுகளை முன்வைத்திருக்கிறேன். அதைப் பற்றி விவாதிக்க முன்வரவில்லை.

//நீங்கள் தேசிய அளவில் உயர்சாதியினர் 30% இருப்பார்களா என்றெல்லாம் கேட்டதால் பயந்து போய் ஓடியதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஏனென்றால், ஜனத்தொகையில் தலித் மற்றும் பழங்குடியினர் 25%, பிற்பட்டோர் சுமார் 50%, மற்றும் இஸ்லாமியர்கள் 13.5% என்பதுதான் நான் அறிந்த கணக்கு. எஞ்சியிருப்பது 10-15%.
இதில் நீங்கள் உயர்சாதியினருக்கு 30% இட ஒதுக்கீடு கேட்கிறீர்கள் போல் தெரிகிறது :)//

உயர்சாதியினர் எத்தனை சதவிகிதம் என்று எனக்குத் தெரியாததால் தான் கேள்வி எழுப்பி இருக்கிறேன். ஆனால் விவாதம் அதைப் பற்றியது அல்ல. உயர்சாதியினருக்கும் அவர்கள் சதவிகிதப்படி ஒதுக்கீடு கொடுத்து 100% இட ஒதுக்கீடு என்ற கருத்துக்கு தயாரா? என்றுதான் கேள்வி எழுப்பி இருக்கிறேன். அதுவும் நீங்கள் முன்வைத்த பிரதிநிதித்துவம் அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பதை சற்றே விரிவாக்கி, அவ்வளவுதான்.

சாணக்கியன் சொன்னது…

//மலைகளில் வாழும் இந்நாட்டின் மைந்தர்களை பள்ளிகளில் கொண்டு வர திறமை பார்த்தால் முடியுமா?//

இறைநேசன், உங்கள் கனிவு புரிகிறது. பள்ளிகளில் இட ஒதுக்கீடு என்ற பிரச்சனை இல்லை. கல்லூரிகளில் தான் இருக்கிறது. மேலும், கல்லூரிகளில் இடம் பிடிக்க தேவை தரமான அடிப்ப்டைக் கல்வி. மலைவாழ் மக்களுக்கு தரமான அடிப்படைக் கல்வி தேவை. அதை அரசாங்கம் செய்திருக்கிறதா? செய்து கொடுக்க முடியாதா? ஏன் செய்யவில்லை? காசு எவ்வளவு கொடுக்கிறாயோ அதற்குத் தகுந்தாற்போல் தான் அடிப்படைக் கல்வியின் தரம் என்ற நிலைமையை அரசாங்கம் கட்டிக்காப்பது ஏன்? ஏனென்றால் அப்போதுதான் அவர்களுக்கு ஓட்டு வங்கி நிலைக்கும். என்னால்தான் உனக்கு இட ஒதுக்கீடு, அதனால்தான் உனக்கு 3 வேளைச் சோறு என்ற என்னத்தை மக்களிடையே நிலைத்திருக்கச் செய்வதுதான் அரசியல்வாதிகளின் நோக்கம். அரசுப் பள்ளிகளின் தரம் மேன்மேலும் குறைந்து கொண்டே போவதை எதிர்த்து ராமதாஸ்களோ, வாய்ஸ் ஆப் வின்ங்ஸ்களோ, முத்து தமிழினிகளோ ஏன் போராடுவதில்லை? சென்னையிலும் மதுரையிலும் மட்டுமே நுழைவுத்தேர்வு பயிற்சி கொடுக்கும் எக்ஸல் நிறுவனத்திற்கு இணையான பயிற்சியை பட்டிதொட்டி எங்கும் இலவசமாக அரசு ஏன் வழங்கக் கூடாது? 100 மீட்டர் ஓட்டப்போட்டிக்கு தேவையான உடல் வலிமையயும் பயிற்சியையும் பெற உதவாமல் நீ 80 மீட்டர் ஓடினால் போதும் என்ற விதி எப்படி அவர்கள் சுய சார்பு அடைய உதவும்? இந்த விதியை நீக்கவேண்டும் என்று கூட யாரும் சொல்லவில்லை. 80 மீட்டராகவே இருக்கட்டும், இனியாவது அடிப்படையை கவனியுங்கள், 60 மீட்டராக குறைப்பது ஆரோக்கியமன்று என்றுதான் சொல்கிறோம்.

Doctor Bruno சொன்னது…

//ஆனால் இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட்ட பின் ஒரு நபர் பணியில் இருந்து தற்காலிகமாகவோ / நிரந்தரமாகவோ நீக்கப்பட்டால் அங்கு ஜாதியின் பெயரால் பெரிய கூத்து நடக்க வாய்ப்பிருக்கிறது.//

இது மிக முக்கியமான கருத்து

// 5. இப்போது இருப்பது போல, Skillset-ஐ அடிப்படையாக வைத்து அந்த இடத்திற்கு இன்னொருவரைப் பணியில் அமர்த்த முடியாது. சென்றவர், எந்தப் பிரிவைச் சார்ந்தவர் என்று பார்க்க வேண்டும். அதே பிரிவைச் சார்ந்த இன்னொருவரை பணியிலமர்த்த வேண்டும். நீங்களும் நினைத்த நேரத்தில் பணி மாற முடியாது. ஏனென்றால் குறிப்பிட்ட நிறுவனத்தில் உங்கள் பிரிவிற்கு வேலை காலியாக இருக்காது.//

I don't think that this is a big issue... This can be overcome with a little inspiration. No perspiration is needed