சென்னை: நகரில் நடக்கும் திருட்டு, கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் இன்று
ப.சிதம்பரம் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திருட்டு, கொலை என்பது மனித இனம் தோன்றிய நாள் முதலாக நடக்கும் சாதாரண ஒரு நிகழ்வு. ஏதோ நேற்று, இன்று நடப்பது போன்று கொலைகளைப் பார்த்து பொது மக்கள் பயப்படுவது என்பது தேவையில்லாத ஒன்று. மேலும் கொலைகள் இந்தியாவில் மட்டும் நிகழவில்லை.சர்வதேச அளவில் நடைபெறும் ஒன்று. நமது நாடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல இது. உலகம் முழுவதும் வாழும் மனிதர்களுக்கான சகிப்புத்தன்மை குறைந்து வருவதன் விளைவாக கொலைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
ஆனால் அதே சமயத்தில், நாளொன்றுக்கு 500 நபர்கள் என்பதில் இருந்து 400
நபர்கள் என்ற அளவிற்கு இழப்பு இருக்குமாறு மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நகரில் உள்ள ரவுடிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இதனால் நல்ல மாற்றத்தினை மக்கள் விரைவில் எதிர்பார்க்கலாம்.
ஆதலால் பொது மக்கள், இது போன்ற கொலைகளைப் பார்த்து பீதி அடையத் தேவையில்லை. வீட்டை விட்டு வெளியே சென்று மீண்டும் வீட்டிற்கு உயிரோடு
திரும்பி வந்தால் மகிழ்ச்சி அடையவும் கூடாது. அதே சமயத்தில் வெளியே உயிரை விடும் பட்சத்தில் பீதியடையவும் கூடாது. தமிழர்கள் தன்மானமிக்கவர்கள்; வீரம் மிகுந்தவர்கள். வீரத்துடன் மரணத்தை ஏற்க வேண்டும் என்று உணர்ச்சிப் பெருக்குடன், Gladiator படத்தில் வரும் 'Go! Die with Honor' என்ற காட்சியை மேற்கோளிட்டு குறிப்பிட்டார்.
==================== அசல் செய்தி ==========================
சென்னை: பண வீக்கம் அதிகரித்து வருவது குறித்து பொதுமக்கள் பீதி அடையத்
தேவையில்லை என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் இன்று
ப.சிதம்பரம் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பணவீக்கம் அதிகரிப்பு என்பது
சர்வதேச அளவில் நடைபெறும் ஒன்று. நமது நாடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல
இது. உலகம் முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக பண
வீக்கம் உயருகிறது.
7.4 சதவீதம் என்ற அளவிலிருந்து 7.1 சதவீதம் என்ற அளவுக்கு பண வீக்கம்
குறைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இதைப் பார்த்து நாம் யாரும் பீதி அடையத் தேவையில்லை. குறைந்தால் மகிழ்ச்சி அடையவும் கூடாது, கூடினால் பீதி அடையவும் கூடாது.
அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்க மத்திய அரசு போதுமான
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றார் சிதம்பரம்.
ஞாயிறு, ஏப்ரல் 27, 2008
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)